Powered By Blogger

Friday, February 24, 2012

சிங்கத்தின் சிறுவயதில் - 18!


நண்பர்களே,

ஒரு சரியான கால இடைவேளையில் நமது காமிக்ஸ்கள் வந்திடுவதில்லை என்பதால்.."சிங்கத்தின் சிறுவயதில்" தொடரினை கொஞ்சமாச்சும் முன்னே கொண்டு செல்லுவதற்குள் எனக்குப் பல்செட் மாட்ட வேண்டிய பருவம் வந்திடுமோ என்று தோன்றியது..! ("அதை முன்னே கொண்டு சென்று என்னத்தை சாதிக்க உத்தேசம் ?" என்று கேள்வி கேட்பவர்களுக்கு அடியேனின் பதில் "ஒரு ஞே" முழி தான் )! 

18  பாகங்களை எழுதியும் நமது ஆரம்ப காலத்து அனுபவங்கள் - முதல் வருடத்தைத் தாண்டிய பாடைக் காணோம் என்பதால், இந்த வலைப்பதிவு மூலமாகவாது வண்டியை கொஞ்சம் கொஞ்சமாய் நகற்றிடலாமே என்று நினைத்தேன்...!

வரவிருக்கும் லயன் வெளியீடான "எமனின் தூதன் Dr.7 " இதழில் இடம்பெற்றிடும் "சிங்கத்தின் சிறுவயதில்"-பாகம் 18 -ன் அட்வான்ஸ் copy இதோ..!






வழக்கமாய் சொல்லிடும் "Happy Reading Folks" என்று இந்தப் பகுதியினை முடிக்க மாட்டேன்...படித்துப் பார்த்தால் ஏன் என்று புரியும் !


Thursday, February 23, 2012

கைவசம் உள்ள முந்தைய இதழ்களின் லிஸ்ட் !


நண்பர்களே,

இதுவே நமது முந்தைய இதழ்களின் தற்சமய ஸ்டாக் நிலவரம். இவை நீங்கலாக வேறு பழைய வெளியீடுகள் நம்மிடம் இல்லை!

Stock List 2012


இவற்றைப் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்களின் வசதிக்காக payment details மீண்டும் ஒரு முறை இங்கே கொடுத்துள்ளேன்.

Our Bank Details :

Name of Account : PRAKASH PUBLISHERS

Bankers : TAMILNAD MERCHANTILE BANK Ltd., Sivakasi Branch.

Account Number : 003150050421782

IFS Code : TMBL0000003

 Rs.300.க்கு அதிகமான தொகைகளுக்கு மட்டும் வங்கி மூலமாக பணம் அனுப்பிடக் கோருகிறோம்.



அல்லது மணி ஆர்டர் ; டிராப்ட் (Prakash Publishers என்ற பெயரில்)  அனுப்பியும் புத்தகங்களைப் பெற்றிடலாம்.


பணம் அனுப்பிய கையோடு : lioncomics@yahoo.com என்ற முகவரிக்கு ஒரு இ-மெயில் மறவாமல் அனுப்பிட வேண்டும்.- உங்கள் முழு முகவரி ; செல் நம்பர்கள் குறிப்பிட்டு !


எங்கள் அலுவலக முகவரி :


8D-5, சேர்மன் PKSAA ஆறுமுக நாடார் ரோடு, அம்மன்கோவில்பட்டி, 
சிவகாசி 626189. 


phone : 04562-272649 ; 320993.  (காலை 9 -30 - மாலை 7 வரை).


Hope this helps !







Sunday, February 19, 2012

"தலைவாங்கிக் குரங்கு" -- மீண்டும் !


நண்பர்களே,

"செய்வதைச் சொல்லுவோம்" என்ற புதிய பாணியை அமலாக்கும் விதத்தில் - இதோ ஒரு குட் நியூஸ் !

முந்தைய லயன் ; திகில் ; மினி-லயன் கதைகளை மறுபதிப்பு செய்வதற்கு உங்களின் அமோக ஆதரவு இருப்பது நிதர்சனமாய்த் தெரிந்திடுவதால் இனியும் ஏன் தாமதிக்கணுமெனத் தோன்றியது !

So - தமிழில் வந்திட்ட first ever டெக்ஸ் வில்லர் சாகசமான "தலைவாங்கிக் குரங்கு" காமிக்ஸ் க்ளாசிக்ஸில் மறுபதிப்பாக வரவிருக்கிறது ! அதுவும் வெகு விரைவிலேயே...இன்றிலிருந்து 3  வாரங்களுக்குள் இதழ் தயாராகி விடும் !


1985 அக்டோபரில் இந்த இதழைத் தயாரித்த போது இதன் வெற்றி பற்றி  எனக்கு சிறிதும் சந்தேகம் இருந்திடவில்லை ! ஒரு முழு நீளக் கௌபாய் கதை என்பது இன்றைக்கு நமக்கு no big deal என்ற போதிலும் அந்தப் பிராயத்தில் கௌபாய் கதைகளை ஊறுகாய் போலே ஓரமாய் மட்டுமே பரிமாறுவது வழக்கம் ! ஆனால் என்னைப் பொருத்தவரை டெக்ஸ் வில்லர் ஒரு தோற்க முடியா அசகாய சூரர் ! என் இள வயதுக் கற்பனைகளில் உலா வந்தது முகமூடி வேதாளனும் (Phantom ) ; டெக்ஸ் வில்லரும் மட்டுமே ! எனக்குப் பிடித்த டெக்ஸ் உங்களுக்கும் பிடிக்காமல் போக மாட்டாரென்ற ஒரு அசட்டுத் தைரியத்தில் தான் டெக்ஸ் வில்லரை அறிமுகம் செய்தேன் ..இன்று வரைக்கும் தோல்வி தெரியா நாயகராய் வலம் வந்து கொண்டிருக்கிறார் ! 



சூப்பர் ஹிட் கதைகளை மட்டுமே மறுபதிப்புச் செய்யவிருப்பதால் இந்தப் புத்தகங்களை என்றைக்கும் ரசிக்கும் தரத்தில் அமைத்திட வேண்டுமென்ற ஆசை எனக்குள் !  ஆகையால் முழுக்க முழுக்க அயல்நாட்டு ஆர்ட் பேப்பரில் ; கனமான அட்டையுடன் இதழ் Rs 25 விலையில் வந்திடும் ! 

சுமாரான பேப்பரில், வழக்கமான தரத்தில் இதே இதழை வெளியிட்டால் நிச்சயம் விலையினை குறைத்தே fix செய்திட முடியும் தான் ; but இனி வரும் இளைய தலைமுறைகளை சிறிதேனும் நம் பக்கம் இழுக்க நினைத்தால், அதற்குத் தரம் ஒரு அவசியத் தேவை என்று தோன்றுகிறது. ஆகையால் தரத்தில் compromise  வேண்டாமே என்று நினைத்தேன்....எனது எண்ணம் சரி தானா guys ?

அதுமட்டும் அல்லாது, தற்சமயம் நமது விற்பனை முறை முழுக்க முழுக்கவே நேரடியாக உங்களை சந்திக்கும் பாணி என்பதால், அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கை குறைவே ! So - விலையினை இதன் காரணமாயும் சற்றே அதிகமாகவே வைத்திட வேண்டியதொரு கட்டாயம்...!  

மார்ச் 10 -ல் இதழ் விற்பனைக்குக் கிடைக்கும். 

சந்தா Rs.620 செலுத்தியுள்ள நமது வாசகர்களுக்கும் ; நமது அயல்நாட்டு வாசகர்களுக்கும் இந்த இதழ் வழக்கம் போல் அனுப்பி வைக்கப்படும். நமது planning -ல் இல்லாத இதழ் இது என்ற போதிலும் இதற்கெனத் தனியாக மீண்டும் பணம் அனுப்பச் சொல்லி இப்போது தொந்தரவு செய்யப் போவது கிடையாது ; வருஷக் கடைசியில் நினைவூட்டி தேவையான பணத்தை அனுப்பிடச் சொல்லுவோம்.

சந்தாவில் இல்லாத நண்பர்கள் Rs.25 + postage Rs 5 - ஆக மொத்தம் Rs 30 அனுப்பிட வேண்டும். 

தலைவாங்கிக் குரங்கு மறுபதிப்பில் - reprint # 2 எந்தக் கதை என்ற அறிவிப்பும் இருந்திடும். Don't  miss out folks !

இன்னொரு வேண்டுகோள் கூட....நமது இதழ்கள் இப்போது அதிகமாய் கடைகளில் கிடைப்பது கிடையாதென்பதால், இந்த இன்டர்நெட் ; வலைப்பதிவுகளில் பரிச்சயம் இல்லாத வாசக நண்பர்களுக்கு நமது வெளியீடுகள் பற்றிச் சொல்லிட அதிகம் வழி இல்லை.  So - உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள காமிக்ஸ் ஆர்வலர்களிடம் முடிந்தளவுக்கு நீங்கள் சொல்லிடலாமே - ப்ளீஸ் ? !! 

Monday, February 13, 2012

நிழலும் ஒன்றே...நிஜமும் ஒன்றே...!


போற போக்கில் தினமும் ஒரு பதிவு செய்திடும் அளவுக்கு நான் முன்னேறி விடுவேன் போல் தெரியுது !!

ஆனால் இம்முறை இது ஒரு "விளக்கம் சொல்லும் பதிவு" என்பதால் - வேறு வழி இல்லாமலே இதை போஸ்ட் செய்கிறேன் என்றே சொல்லிட வேண்டும் !

2001 -ல் நாம் வெளியிட்ட சிக் பில் கதையினை நான் "சுட்டு விட்டதாக" நண்பர் பண்ருட்டிசெந்தில் பதிவு செய்ததோடு மட்டுமல்லாது எனக்கு அது பற்றி மெயில் அனுப்பி இருப்பதாகவும் இங்கே எழுதி இருந்தார். தனிப்பட்ட முறையில் சந்தேகம் எழுப்பி இருந்தால் அதற்கான பதிலை அவருக்கு மட்டும் எழுதி இருந்திருப்பேன்....ஆனால் public forum -ல் சர்ச்சையை கிளப்பி விட்டதால் எனது பதிலையும் பொதுப் பார்வைக்குக் கொண்டு வர வேண்டியதாகிறது ! Hence this post !



"நிஜம் ஒன்று, நிழல் 2" கதை தான் அந்த சர்ச்சைக்குரிய (!!) இதழ். ஒரிஜினல் ஓவியங்கள் சிறப்பாக இருக்கும் போது நான் லோக்கல் ஓவியர்களைக் கொண்டு சஸ்தாவாக ஒரு உல்டா செய்து விட்டதாக செந்திலின் குற்றச்சாட்டு.

இந்த உல்டா வேலையினை செய்தது நானல்ல...ஒரிஜினல் பெல்ஜியப்  பதிப்பகத்தினரே என்று சொன்னால் செந்தில் நம்பிடப் போகிறாரா என்ன ?!!  So - இதோ உங்கள் முன்னே facts :

பெல்ஜியத்தில் வெளிவந்து கொண்டிருந்த TinTin என்ற காமிக்ஸ் இதழில் July 18, 1957 -ல் தான் முதல் முறையாக "Le Deux Visages De Kid Ordinn"  என்ற பெயரில் இந்தக் கதை வெளியானது. இதோ அந்த இதழின் அட்டைப்படமும் ; கதையின் முதல் பக்கமும் ! அதனைத் தொடர்ந்து இருப்பது நமது லயனில் வந்திட்ட இந்தக் கதையின் முதல் பக்கமும் கூட !




புராதன ஓவியப் பாணியில் வெளியான முந்தைய வெளியீடுகளில் சிலவற்றை - 1970 களில் மறுபதிப்பு செய்ய அந்த நிறுவனம் நினைத்த போது, சித்திரங்களை மெருகூட்டி ; கதைப் பாணியில் லேசு லேசாக improvements செய்து திரும்பவும் அதே தலைப்புடன் வெளியிட்டனர்.

இதோ புதிய அட்டைப்படம் ப்ளஸ் புதுப் பாணியிலான முதல் பக்கம் !



இந்தக் கதைக்கான ராயல்டி செலுத்தி artwork அனுப்பக் கோரிய போது, பதிப்பகத்தினர் நமக்கு அனுப்பியது ஒரிஜினலாக 1957 -ல் உருவாக்கப்பட்ட சித்திரங்களையே ! கடைசி நிமிஷத்தில் பணம் அனுப்பி விட்டு கதைக்காகக் காத்திருந்ததால் இந்தப் பழைய படங்களைத் திரும்ப அனுப்பிப் புதிய சித்திரங்களைப் பெற்றிட அவகாசம் இருக்கவில்லை. So அந்தப் பழைய பாணி ஓவியங்களோடு நமது இதழ் உருவானது !

நண்பர் செந்தில் பார்த்திருக்கும் புக் புதிய version  மட்டுமே என்பதில் சந்தேகமில்லை. So அவருக்குள் சந்தேகம் கொழுந்து விட்டதிலும்  ஆச்சர்யம் இல்லை தான் !  தொடர்ந்தது தான் நண்பரது enquiry படலம் ; 'ராயல்டி கட்டாமல் உல்டா' என்ற குற்றச்சாட்டு ; கொலைவெறி ஏன் ? என்ற கேள்வியோடு !!

எந்த ஒரு விஷயத்துக்கும் இரு பக்கங்கள் இருக்க வாய்ப்புண்டு என்ற consideration நண்பருக்கு இல்லாததும் ; என் தரப்பு நிஜங்களை முன்வைக்க  சந்தர்ப்பம் தராமலே "உண்மை என்ன ?" என்று கேள்வி எழுப்புவதும் - தீர்ப்பை முதலிலேயே எழுதி முடித்து விட்டு சம்பிரதாயத்துக்காக வாதங்களைக் கேட்பது போல் உள்ளது ! இப்போதாவது என்னை முகமூடித் திருடன் range -க்குப் பார்த்திடாமல் இருந்தால் சந்தோஷமே !

நிஜமும் ஒன்றே..நிழலும் ஒன்றே..!




Sunday, February 12, 2012

எல்லைகள் தாண்டுவோமா ?


ஒரு மார்க்கமான தலைப்பாக இருக்குதே என்று சிந்திக்கும் நண்பர்களுக்கு: No fears ...read on please !

வெளிநாடுகளுக்குப் பயணம் ஆகும் போது, கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஆங்காங்கே உள்ள காமிக்ஸ் கடைகளுக்குச் செல்வது என்பது சுவாரஸ்யமான விஷயம் எனக்கு..! But கொஞ்ச காலமாய் அதற்கு அவ்வளவாய் வாய்ப்புகள் அமைந்திடவில்லை. So சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த போது தேடித் பிடித்து பெரியதொரு காமிக்ஸ் shop -க்குப் போயிருந்தேன் ...!



"கிழிஞ்சது கிருஷ்ணகிரி  ... இன்னொரு அமெரிக்க புராணமா..?" என்று தலையைச் சொரியும் ; புருவங்களை உயர்த்தும் நண்பர்களுக்கு ஆறுதலான சேதி...! இது முழுக்க முழுக்க காமிக்ஸ் பற்றிய பதிவு மட்டுமே !!

ரொம்ப காலமாய் எனக்குள் உள்ள கேள்வி இது...! (அது என்னவென்று கேட்கிறீர்களா....? இந்தப் பதிவின் இறுதி வரைப் பொறுமையாய் படித்திட்டால் தெரிந்திடும் !)

காமிக்ஸ் எனும் ரசனைக்குப் பல முகங்கள் உள்ளன ... ! நமது ரசனை என்பது ரொம்பத் தெளிவு :

1  நமது முதல் எதிர்பார்ப்பு - ஸ்பஷ்டமான ; தெளிவான கதையோட்டம். அவ்வப்போது XIII ; மர்ம மனிதன் மார்டின் போன்ற தொடர்களுக்கு வேண்டுமானால் இந்தக் condition தளர்த்திக்கலாம் !

2 .வலுவான ஒரு ஹீரோ / ஹீரோயின் ! சில சமயம் "வலுவான" என்னும் இடத்தில "ப்ரியம் காட்டக் கூடிய " ஆசாமிகளுக்கும் இடம் உண்டு தான் ! உதாரணம் : அடிபட்டு..உதைபட்டு..சராசரி மனுஷனாய் காட்டிலும் மேட்டிலும் உலவும் நமது கேப்டன் Tiger!

3 தரமான சித்திரங்கள்..artwork ....! (இதுக்கும் விதிவிலக்குகள் இல்லாமல்  இல்லை...கேப்டன் பிரின்ஸ் கதைகளை மறக்க முடியுமா !!)

4 ஓரளவுக்காச்சும் logic !! (கரண்டில் கை விட்டு மாயமாய் மறையும் மாயாவி கதைகளையும் ; spider  கதைகளையும் அடுத்த இதழாக வெளியிடவிருக்கும் நேரத்தில் லாஜிக் பற்றிப் பேசுரதுலாம் ரொம்ப ஓவர் என்ற உங்கள் mind  voice எனக்குக் கேட்காமல் இல்லை !!)

மேற்சொன்ன எந்த ஒரு விஷயத்திலும் அடங்கிடாமல் ...எந்த ஒரு விதத்திலும் நம் ரசனைக்கு ஒத்துப் போகாத ஓராயிரம் காமிக்ஸ்களை அந்த அமெரிக்கப் புத்தகக் கடையில் பார்த்த போது பேந்தப் பேந்த முழிக்க மட்டுமே தோன்றியது எனக்கு .



"அந்த man "...."இந்த man " என்று எக்கச்சக்கமாய் சூப்பர் ஹீரோ தொடர்கள் ! அட்டகாசமான அட்டைப்படங்கள்....அமர்க்களமான விளம்பரங்கள்..promotions ...நல்ல artwork ..!ஆனால் ரெண்டு பக்கத்தைத் தாண்டி மூன்றாவது பக்கத்துக்குப் போவதற்குள் ஏதோ போன வாரத்தில் செய்த போண்டாவை சாப்பிட முயற்சிப்பது போன்ற உணர்வைத் தடுத்திட முடியவில்லை !



அந்த கணத்தில் 1990 களில் BATMAN கதைகளை நாம் வெளியிட்ட சமயம் கூட...ஒரு இதழுக்கான கதையைத் தேர்வு செய்திட நான் எத்தனை DC Comics இதழ்களைப் புரட்டி இருப்பேன் என்பது என் மண்டைக்குள் flashback ஆக ஓடியது !  சாம்பிள்கள் எத்தனை கேட்டாலும் முகம் சுளிக்காமல் அனுப்பிட்ட DC காமிக்ஸ்-ன் archives இன்-சார்ஜ் Mrs .Phillis Hume -க்கும் மானசீகமாய் ஒரு நன்றியும் சொல்லத் தோன்றியது ! கிட்டத்தட்ட 50  கதைகளைப் படித்து..அதிலிருந்து ஒன்றைத் தேற்றி..அதிலும் லேசு பாசாக எடிட்டிங் செய்து தான் வெளியிடுவோம். ("சிரித்துக் கொல்ல வேண்டும்" - ஒரு அற்புதமான விதிவிலக்கு!!)

பிற காமிக்ஸ் படைப்புகளை மட்டம் தட்டிடுவதோ ..நமது ரசனைகளை உயர்த்திப் பிடிப்பதோ எனது நோக்கமே அல்ல..நம்மால் ஏன் ஒரு வட்டத்தைத் தாண்டி பலதரப்பட்ட ரசனையினை அரவணைத்திட முடியவில்லை என்பதே என் மண்டைக்குள் ஓடிய கேள்வி !

இந்த சமாச்சாரத்தை..இந்தக் கேள்வியினை இப்போது எழுப்பிட வேண்டிய அவசியம் என்னவென்று தோன்றலாம் உங்களுக்கு...! காரணம் இல்லாமல் இல்லை...!

சமீபத்திய நமது ComeBack ஸ்பெஷல் இதழில் முழு வண்ணத்தில் அட்டகாசமாய் வந்திருந்த லக்கி லூக் கதைக்கு வந்திருந்த சில விமர்சனங்கள் eyeopener ரகம் என்றே சொல்ல வேண்டும். "அற்புதமாய்  வண்ணத்தில் வந்திருந்தாலும், இதுவரை வந்ததிலேயே படு மட்டமான லக்கி லூக் கதை இது தான்" என்று எழுதி இருந்தார்கள் நம் நண்பர்கள்.


லக்கி லூக் தொடர்களில் மிக சமீபத்திய ஆக்கம் "ஒற்றர்கள் ஓராயிரம்" என்ற பெயரில் நாம் வெளியிட்ட இந்தக் கதை ! இதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்த போதே இது "ஆஹா .ஓஹோ" ரகமல்ல என்பது தெரிந்தது. But still "சொதப்பல்..படு மட்டம்" என்று மார்க் வாங்கும் அளவுக்குப் போகும் என்பது நான் எதிர்ப்பார்த்திடா சமாசாரம். Maybe வண்ணத்திலும், தரமான அச்சிலும் நானும் மயங்கிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். அனால், நமது வாசகர்களோ எப்போதும் போலவே படு உஷார்!!


இத்தனை நுணுக்கமாய் நமது ரசனை இருப்பது ஒரு பக்கம் சந்தோஷமாய் உள்ளபோதிலும் ...மறுபக்கம் நமது discerning taste இன்னும் நிறைய விதமான காமிக்ஸ்களை ; மாறுபட்ட கதைகளை ...ரசனைகளை பரிச்சயப்படுத்திக் கொள்ளத் தடையாக இருக்குமோ என்றும் எண்ணம் எழாமல் இல்லை !

ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமெனில்..ஐரோப்பாவில் Thorgal எனும் ஒரு பிரெஞ்சுத் தொடர் ரொம்பவே பிரசித்தம். ஒவ்வொரு இதழும் ஆறு லட்சம் பிரதிகள் அச்சாகும் என்று அதன் publisher சொன்ன போது நான் "ஞே" என்று தான் முழித்தேன்..ஏனெனில் அது ஒரு வித science -fiction ; history ; மாயாஜாலம் கலந்த கலவை...நமக்குப் பொருந்தாத கதைகள் லிஸ்டில் அதற்கும் நான் இடம் கொடுத்துள்ளேன்.


பிரசித்தி பெற்ற எழுத்தாளர் Van  Hamme-ன் படைப்பு இந்த Thorgal என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும் ! அங்கே பெரும் வெற்றி பெற்ற ; ஆனால் நம் வழக்கமான ரசனைக்கு அப்பாற்பட்ட ; இன்னும் நாம் எட்டிப் பிடிக்கா கதைகள்..தொடர்கள் ஏராளம் உண்டு !  



அந்த அமெரிக்க புத்தகக் கடலில் மண்டையை சொறிந்து கொண்டு நின்ற கணத்தில் என்னுள் இந்த சிந்தனைகள்  எழுந்தன !

கௌபாய் ; detective ; கார்ட்டூன் ரசனைகளைத் தாண்டி நமது எல்லைகளை விரிக்கும் முயற்சிக்குப் பிள்ளையார் சுழி போடும் சமயம் எப்போதென்ற கேள்வி தான் இந்தப் பகுதியின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட கேள்வி !

Give it some thought guys !!

For our Sri Lankan friends....

Thanks guys for your posts and e-mails. Your passion for comics is truly very special.





Thursday, February 09, 2012

படித்ததில் பிடித்தது எது ?


நண்பர்களே,

மாயாவி ; லாரன்ஸ் / டேவிட் ; ஜானி நீரோ கதைகளைத் திரும்பத் திரும்ப மறுபதிப்புச் செய்கிறீர்களே ; நமது (பழைய ) லயன் காமிக்ஸ் ; திகில் ; மினி-லயன் வரிசையில் வந்த 'ஹிட்' கதைகளையும் reprint செய்தாலென்ன என்பது சமீபத்தில் சந்தித்த வாசக நண்பரின் கேள்வி ... ! நிதானமாய் யோசித்த போது இந்த எண்ணத்தில் merit இல்லாமல் இல்லை என்றே தோன்றியது..!

இது பற்றி உங்களது opinions என்னவென்று தெரிந்திட ஆவல்...! வரவிருக்கும் லயன் hotline பகுதியிலும் இந்தக் கேள்வியை முன்வைக்கலாமென்று நினைக்கிறன்...!

அப்படி மறுபதிப்பு செய்வதென்றால்...உங்களது Top Ten தேர்வுகள் எந்தக் கதைகளாக இருக்கும் ? காலத்தில் பின்னோக்கிப் பயணமாகி ; பழைய நினைவுகளைத் தட்டி எழுப்புங்களேன்..?





பழசை கிண்டிய போது கையில் கிடைத்த முந்தைய இதழ்களின் சில அட்டைப் படங்கள் தானே தவிர,  இவை எனது தேர்வுகள் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம் நண்பர்களே !

"கத்தி முனையில் மாடஸ்டி" புக்கை கையில் எடுக்கும் போது ஆட்டோகிராப் பட சேரன் மாதிரி ஒரு பீலிங் !