Powered By Blogger

Monday, March 05, 2012

புயலாய் ஒரு அறிமுகம் !


மீண்டும் நானே...!

மீண்டும் ஒரு முந்தையப் பதிவின் தொடர்ச்சியே இது !

மீண்டும் தலைவர் Van Hamme -வின் ஒரு அமர்க்களமான  படைப்பு நமது காமிக்ஸ்களில் அட்டகாசம் செய்திடவிருப்பது பற்றிய சேதியே இது..!


யெஸ்....அதிரடி அறிமுகமாய் லார்கோ வின்ச் தமிழுக்கு அடியெடுத்து வைக்கும் சமயம் நெருங்கி விட்டது !

விளம்பரங்களாய்..டிரைலர்களாய்....மட்டுமே பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த இந்தப் புதிய தொடரின் உரிமைகளை ஒரு வழியாகப் பெற்றாகியாச்சு !

( இனி வரும் இந்த மினி அறிமுகப் படலத்தை ஆங்கிலத்தில் லார்கோ வின்சின் சாகசங்களைப் படித்துப் பரிச்சயம் உள்ள நண்பர்கள் skip செய்திடலாமே ......)


லார்கோ வின்ச் அடிப்படையில் ஒரு கவலை இல்லா playboy ; எதையும் சாதிக்கும் உறுதியும் ஆற்றலும் கொண்ட அசகாய சூரர்..பற்றாக்குறைக்கு ஒரு மஹா மஹா கோடீஸ்வரர் ! இவரைத் தேடி வரும் பிரச்னைகளின் களங்களும் சரி..வீரியமும் சரி....பிரமிப்பை உருவாக்கும் ரகம் !


தனது கோடிக்கணக்கான செல்வச் செழிப்புகளை பராமரித்துக் கொண்டே தன்னைச் சுற்றிப் பின்னப் படும் சதி வலைகளை லார்கோ முறியடிப்பது ஒவ்வொரு சாகசத்தின் highlight ! 46 +46 = ஆக மொத்தம் 92 பக்கங்களில் ஒவ்வொரு கதையும் நிறைவுற்று, அடுத்த இதழில் புதிய சாகசம் துவங்குகிறது !

ஜெட் வேகத்தில் சென்றிடும் கதைகள் ; பிரமிக்கச் செய்யும் ஆக்க்ஷன் என்று பக்காவான இந்தக் commercial த்ரில்லர் , இதுவரை 18 அல்பம்கள் வெளி வந்துள்ள நிலையில், ஆண்டுதோறும் 500,000௦௦௦ ௦௦௦ பிரதிகள் விற்பனையாகி வருகின்றது !  லார்கோ - ஐரோப்பாவின் தற்சமய காமிக்ஸ் கிங் ; வசூல் ராஜா என்று சொல்லிட்டால் தவறில்லை தான் !



1990 -ல் ஜனித்த லார்கோ வின்ச் கதைகள் 2001 -ல் ஒரு டிவி தொடராகவும் ; 2008 ம் ஆண்டின் இறுதியில் ஒரு ஆக்க்ஷன் திரைப்படமாய் பிரெஞ்சு மொழியிலும் வந்துள்ளன !  

இது வரை மொத்தம் ஒன்பது முழுக் கதைகள் (18 பாகங்கள்)  கொண்ட இந்தத் தொடரின் துவக்கமாக - முதல் இரண்டு கதைகளும் இந்த ஆண்டு நமது முத்து காமிக்ஸில் வரவிருக்கின்றன !

வேங்கையாய் ஒரு வாரிசு


"வேங்கையாய் ஒரு வாரிசு" + "செல்வத்தின் நிறம் சிகப்பு" என்ற தலைப்புகளுடன் லார்கோ தனது ஆட்டத்தை துவக்குகிறார் !

செல்வத்தின் நிறம் சிகப்பு 

இரத்தப் படலம் போல ஒரே கதையாகப் பயணிக்காமல் தனித்தனி சாகசங்களாய் இந்தத் தொடர் இருப்பதினால், விறுவிறுப்புக்கும் ; வேகத்திற்கும் பஞ்சமே வைத்திடாமல் top gear-ல் பறக்கின்றது ! Not too long a wait now !!


இன்றைய வாக்குறுதிக் கோட்டாவை கொட்டாவிகளுக்கு மத்தியிலும்
முடித்து விட்டேன் என்ற சின்ன திருப்தியோடு கிளம்புகிறேன்...!

'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்பார்கள்..வரும் புதனில் இங்கே நமக்குக் கிடைக்கவிருக்கும் சூப்பர் சேதி என்னவாக இருக்கும் ? சிந்தித்துக் கொண்டே தூக்கத்தை அரவணைப்போமே !!  Take care folks !

   



59 comments:

  1. அற்புதமான செய்தி ஸார்.

    லார்கோ வின் சாகசங்களை உங்கள் விளம்பரங்கள் பார்த்ததும் தேடிப்பிடித்து படித்திருந்தேன். கதை+சித்திரங்கள் அசத்தல்.

    நமது காமிக்ஸ்களிலும் இவரது சாகஸங்கள் வரவிருப்பது சந்தோஷமான செய்தி. வரவேற்கிறோம்; வாழ்த்துக்கள்.

    காத்திருந்து காத்திருந்து உங்கள் பதிவைப் படித்தேன். காத்திருந்ததற்கு நல்ல பலன்.

    புதன் வரும்வரை இடையில் ஒரு நாள் முழுதாக இருக்கிறதே, என்ன செய்வது? :)

    -Theeban (SL)

    ReplyDelete
  2. இதெல்லாம் உண்மையா? வந்தால் மிகவும் சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. இதில் என்ன சந்தேகம்? எடிட்டர் சும்மா பிலிம் காட்டும் ஆள் இல்லையே!
      -Theeban (SL)

      Delete
    2. S.Essai Sankari : 'செய்வதை மட்டுமே சொல்லிடுவது' என்பதில் உறுதியாக உள்ளேன் ! பொறுத்திருந்து பாருங்களேன் !

      Delete
  3. விஜயன் சார்,
    அனைத்து "லார்கோ வினச்" கதைகளையும் பிரெஞ்சு மொழியில் படித்திருந்தாலும், நமது காமிக்ஸில் அதுவும் தங்களது தமிழ் மொழிபெயர்ப்பில் படிப்பது என்பது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி. ஆவலுடன் காத்திருக்கிறோம்.


    அன்புடன்,
    ராஜா, பிரான்ஸ்

    ReplyDelete
    Replies
    1. Radja,France : தமிழில் படித்திடும் சுகமே அலாதி தான் ! பரபரப்பான லார்கோ கதைகளை பிசிறின்றிக் கொண்டு வர வேண்டும் என்பதால் கூடுதல் கவனமாக இருக்கிறோம்..நிச்சயம் ஒரிஜினலுக்கு விடுதலின்றி நமது தமிழ் பதிப்பு இருந்திடும் !

      Delete
  4. அட்டகாசம் விரைவில் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  5. ஆசிரியரிடம் ஒரு விடயத்தைக் கேட்க தவறிவிட்டேன்.

    'டேஞ்சர் டயபாலிக்' கதைகள் போலவே லார்கோவின் சாகஸங்களிலும் (டேஞ்சர் டயபாலிக் கதைகளை ஏன் தொடரவில்லை என்று வாசகர் ஒருவர் கேட்டிருந்தபோது, இதையும் ஒரு காரணமாக நீங்கள் கூறியிருந்தீர்கள்!) சில சித்திரங்கள்/ பகுதிகள் சென்ஸார் செய்யப்படவேண்டியிருக்குமல்லவா?

    -Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. only for 18+
      By
      Largo Winch

      Delete
    2. கவலையே வேண்டாம்...அனைத்து வயதினரும் படித்திட ஏற்ற விதத்தில் கதைகளை அமைத்திட்டால் போச்சு !

      Delete
    3. அதில் எந்த சந்தேகமும் இல்லை ஸார். :)

      Delete
    4. அதில் எந்த சந்தேகமும் இல்லை ஸார். :)

      -Theeban (SL) (பெயரைப் போட மறந்துட்டேன்)

      Delete
  6. Awesome. Super.. Excellent... (Is there any other words to praise the editor?!) Largo Winch on our publication! Seems like Editor is in full swing!! Probably our subscription of Rs. 500 will get exhausted before one year! I read the first four parts in English. As someone mentioned here, the contents may not be suitable for teen audience. Who cares? Almost 90% of our readers are not teens. So no worries :-)

    On a lighter side, this is the same Largo Winch which is being made into a film (unofficial remake?!) by Gowtham Menon with Vijay! Hope Editor Sir won't file a suit against them :-)

    ReplyDelete
    Replies
    1. Prasanna.S :The soul of Largo Winch will be reflected exactly the same way the author has it visualized ...but it would be adapted to suit all our readers - no matter what their ages ! I know it is quite a challenging task, but will try and do my very best !

      And no comments on remakes ...official or unofficial !! :-)

      Delete
    2. Wish u all the best sir.

      -Theeban (SL

      Delete
  7. Replies
    1. P.Karthikeyan : சந்தேகமே வேண்டாம்...கலர் தான் !

      Delete
  8. சூப்பர் நியூஸ் விஜயன் சார்

    ReplyDelete
  9. சார், நீங்கள் ஏதாவது ஒரு வெகு ஜன பத்திரிகையில் (தினகரன் வசந்தம் நீங்கலாக) இதை பற்றி விளம்பரம் செய்யலாமே! முன்பெல்லாம் (சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பு!) நீங்கள் முத்தாரம் வார இதழில் விளம்பரம் செய்த ஞாபகம் இன்னும் பசுமையாக உள்ளது. எனக்கு என்னவோ பிரபல கார்டூனிஸ்ட் மதன் ஒரு விமர்சனம் நமது இதழ்களுக்கு அளித்தால் அது பலரை போய் சேரும் என்றொரு எண்ணம்!

    ReplyDelete
    Replies
    1. btw, not just because he is a cartoonist and might have a liking for comics. But, he is a balanced critic in my opinion!

      Delete
    2. கார்த்திக் : நீங்கள் சொல்வது உண்மை. பலருக்கு தமிழில் காமிக்ஸ் வருவதே தெரிவதில்லை

      Delete
  10. >>>சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பு!
    சுமார் 25 வருடங்களுக்கு முன்பு! :) முத்தாரம் அல்லது கல்கண்டு?

    ReplyDelete
  11. >>> "வேங்கையாய் ஒரு வாரிசு" + "செல்வத்தின் நிறம் சிகப்பு"

    நமது இதழ்களின் தனித்தன்மைகளில் ஒன்று அதன் தலைப்புக்கள். ஆனால், கதைகளில் நாம் எல்லைகள் தாண்ட தயாராகிவிட்ட வேளையில் தலைப்புக்களிலும் அதை செய்யலாமே :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் கார்த்திக்.

      நடப்பது முடியாட்சி அல்ல, காமிக்ஸ் குடியாட்சியே என்பதற்கு இன்னுமொரு சான்றாக எடிட்டர் பெயர்களை மாற்றியுள்ளார். இங்கே சென்று விவரங்களை பாருங்கள்.

      Delete
    2. பார்த்தேன், நன்றி விஸ்வா! இதற்கு பெரிய மனது வேண்டும்! புதிய தலைப்புக்கள் டக்கர்! :)

      Delete
  12. adichu dhool pannunga sir :) we are wid u ;)

    ReplyDelete
  13. //>>>சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பு!
    சுமார் 25 வருடங்களுக்கு முன்பு! :) முத்தாரம் அல்லது கல்கண்டு?//

    நண்பரே,

    அது முத்தாரம் அல்ல. முதன் முதலில் நம்முடைய குழும விளம்பரங்கள் வர ஆரம்பித்தது துக்ளக் இதழில். அதன் பின்னர் குமுதம் குழம இதழாகிய கல்கண்டு, தினசரிகளில் தினமலர் போன்றவற்றிலும், பின்னர் மற்றைய சிறுவர் இதழ்களாகிய கோகுலம், பூந்தளிர் போன்றவற்றிலும் கூட விளம்பரங்கள் வந்துள்ளன.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, ஸ்பைடர் ஒரு கால் மேலாகவும், ஒரு கால் கீழ் ஊன்ற வாகாகவும், இரு கைகளையும் தூக்கியாவாறு குதிக்கும் அந்த ப்ளாக் & வைட் விளம்பரங்கள் நினைவில் உள்ளது! :)

      Delete
  14. //>>> "வேங்கையாய் ஒரு வாரிசு" + "செல்வத்தின் நிறம் சிகப்பு"

    நமது இதழ்களின் தனித்தன்மைகளில் ஒன்று அதன் தலைப்புக்கள். ஆனால், கதைகளில் நாம் எல்லைகள் தாண்ட தயாராகிவிட்ட வேளையில் தலைப்புக்களிலும் அதை செய்யலாமே :)//

    நண்பரே, இந்த கதைகளை நீங்கள் படித்து விட்டு இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். . எனக்கு நீங்கள் இந்த தலைப்பில் என்ன தவறு என்று கொஞ்சம் கூறினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ! தவறெல்லாம் ஒன்றும் இல்லை :) நான் லார்கோ வின்ச் படித்ததும் இல்லை!

      ஒரு உதாரணதிற்கு:
      மஞ்சளாய் ஒரு அசுரன் - வெள்ளையாய் ஒரு வேதாளம் - வேங்கையாய் ஒரு வாரிசு
      மரணத்தின் நிறம் பச்சை - செல்வத்தின் நிறம் சிகப்பு -

      கொஞ்சம் மாற்றம் கொண்டு வரலாமே என்று நினைத்தேன், criticism-ஆக எடுத்துக்கொள்ள வேண்டாமே, ப்ளீஸ்!

      Delete
  15. Hello VIJAYAN SIR

    Happy to hear :)

    What abt "TAHALA VANKIYA KURANKU" .... 4 days only left for March 10.

    Regards
    Nagarajan S

    ReplyDelete
  16. Awesome Vijayan sir.....I dont know how to praise you... You the one who can make happy everybody. Why because the time I feel sad, I will start reading our comics only. Nobody can make me happy except our comics and your hotline pages.

    I have alreday sent the money order form for Thalaivangi kuranku and few of our old issues. I believe soon i will receive it.

    One more think sir, How much should i pay for the whole year subscription because I alreday have few of our 2012 issues(Lion comeback special, Vinveliyil oru kulla nari, Kolaikarakalingan and going to receive Thalaivangi Kuranku. Except these issues, how much should I pay?. Shall i send it to your account directly. Please clarify me....

    ReplyDelete
  17. Vijayan Sir,

    Really appreciating the efforts taken by you taking tamil comics to next level. At the sametime I suggest that you can advertise about our comics in all the major magazines such as Viakatan,Kukudham etc so that it will let most people know about our books and we can get a wide fan group.It will also help you both economically and I guess u deserve appreciation along with good earnings.
    Keep up yoir good work sir.

    ReplyDelete
  18. சார், சூப்பர் நியூஸ், எதாவது புது கார்ட்டூன் ஹீரோ அறிமுகம் இருக்கிறதா ? அப்புறம், வரும் புதனன்று தங்களுடைய டாபிக் "தலைவாங்கிக் குரங்கு" மற்றும் "எமனின் தூதன் Dr .7 " அப்டேட் பற்றித்தானே?

    ReplyDelete
    Replies
    1. 'மரணத்தின் நிசப்தம்' ரெடி?

      -Theeban (SL)

      Delete
  19. 1987 இ ல் உங்களையும் உங்கள் தந்தையையும் நேரில் சந்தித்த அனுபவம் இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது. உங்களின் அன்பளிப்பு புத்தகங்கள் இன்றும் எங்கள் சிறுவர் நூலகத்தில் அன்பை சுமந்து கொண்டுள்ளது .

    அணைத்து வாசகர்களையும் ஒன்று சேர்த்து ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்குமே !


    என்றும் நட்புடன்


    ம.ஸ்டாலின்
    ஒளவை சிறுவர் நூலகம் , ஈரோடு

    ReplyDelete
    Replies
    1. ஹாய் ஸ்டாலின்,

      அவ்வை சிறுவர் நுலகம் ஈரோடில் எங்கு உள்ளது ?

      நன்றி - நாகராஜன்

      Delete
  20. Paw! Paw! Paw! Welcome Largo winch, when will come Captain Blue berry sir, Paw! Paw! Paw!

    ReplyDelete
  21. என்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும்.. தமிழில் படிப்பது சுகமான ஒன்று.. விரைவில் எதிர்பார்க்கலாமா?.

    ReplyDelete
  22. waiting for your all comics attacks of Largo winch.

    ReplyDelete
  23. // "வேங்கையாய் ஒரு வாரிசு" + "செல்வத்தின் நிறம் சிகப்பு" என்ற தலைப்புகளுடன் லார்கோ தனது ஆட்டத்தை துவக்குகிறார் ! //

    நீங்களும் கலக்கலாக துவக்குகிறீர்கள்
    தொடருங்கள் உங்கள் பயணத்தை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறோம் நாங்கள் :))
    .

    ReplyDelete
  24. // ஜெட் வேகத்தில் சென்றிடும் கதைகள் ; பிரமிக்கச் செய்யும் ஆக்க்ஷன் என்று பக்காவான இந்தக் commercial த்ரில்லர் , இதுவரை 18 அல்பம்கள் வெளி வந்துள்ள நிலையில //

    இப்பொழுதே அனைத்து ஆல்பங்களையும் ஒன்றாக வெளியிட்டால் மிக அருமையாக இருக்குமே
    என்ற ஒரு எண்ணம் மனதினில் எழாமல் இல்லை ஹ்ம்ம்ம் ;-)
    .

    ReplyDelete
    Replies
    1. Cibiசிபி : வடிவேல் டயலாக் தான் நினைவுக்கு வருது !! அது எதுவாக இருக்குமென்று நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்றில்லை தானே :-)

      Delete
    2. Ippava Kanna Kattuthey :)

      Nagarajan S

      Delete
  25. // 'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்பார்கள்..வரும் புதனில் இங்கே நமக்குக் கிடைக்கவிருக்கும் சூப்பர் சேதி என்னவாக இருக்கும் ? சிந்தித்துக் கொண்டே தூக்கத்தை அரவணைப்போமே !! Take care folks ! //

    சார் இன்று தூக்கம் வருமா என்று தெரியவில்லை :))
    .

    ReplyDelete
    Replies
    1. Cibiசிபி : பதிவும் வந்தாச்சு..படித்து விட்டு கனவுகளோடு தூங்கிடலாமே ? !!

      Delete
  26. லார்கோ விஞ்ச் தமிழ் காமிக்ஸில் இன்னொரு ஸ்டார் கதாபாத்திரமாக வலம் வருவார் என்பதில் எந்த ஐயமுமில்லை. அட்டகாசம் தொடரட்டும்.

    2 பாகங்கள் நீளும் கதை தொடர் என்பதால், இரண்டும் சேர்த்து 1 இதழாக வெளியிடுவீர்களா.. இல்லை தனி தனி இதழ்களாக இருக்குமா ? கலருடன் கம்பேக் ஸ்பெஷல் சைஸு என்பது உறுதி தானே ?

    ReplyDelete
  27. Hello Sir,

    Good News..Sir also please think about any new stories of ksky and visky(Not sure that i am pronuncing correctly). Do your emember the Payankara payanam, It was an awesome story I ever read. Please try to publish the stories, If you have anything sir.

    ReplyDelete
    Replies
    1. Giri : That is "Suske & Wiske" ! Sorry, don't really have too many plans for this series at the moment !

      Delete
    2. Oh "Suske & Wiske" :), Thanks For the reply sir.. However atleast try it once, when you try to re-publish the mini lion stories. Because I believe that it will attract all age group people :).

      Delete
    3. Guys http://suskeenwiske.ophetwww.net/talen/names.php... Please go through this URL there you can see the Comment about Tamil version "Bayangara Payanam " which was published in our Mini Lion. Also You can see the front page of our comics. :)

      "A number of stories has been published in Tamil.
      The image to the right shows the Tamil-edition of Het zoemende ei. The title of this album reads Bayangarap Payanam (The terrible expedition).
      The names of Suske and Wiske aren't present on the cover. Apart from the title only the text Mulu Neela Chitharakathai is printed, which means "Full comicbook story"."

      Delete
    4. I too love "Suske & Wiske", last year bought some english version of these stories from amazon. But it didn't give half of the satisfaction that i got from the tamil version. Editor sir, please give it a try.

      thanks, Karthikeyan

      Delete
  28. தமிழில் தரமானதோர் அடுத்த அறிமுகத்துக்கு லார்கோ விஞ் சரியான தேர்வாகவே இருப்பார், நம் லயனின் மறுமலர்ச்சியில் இந்த புதிய அறிமுகம் புத்துணர்வாக இருக்கட்டும்...

    உங்களது தொடரும் முயற்சிகளுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுதலும் வாழ்த்துகளும்..!! :)

    ReplyDelete
  29. antha sani kilamai pathivai maranthu vidatheergal. we waiting for that.

    ReplyDelete
  30. சரியான சத்தியமான வார்த்தைகள் .

    லார்கோ விஞ்ச்சை எப்பொழுது பார்க்க போகிறோம் என்ற ஆவல் எமக்குள்.

    வணக்கத்துடன் நன்றிகள்..!!!

    ReplyDelete
  31. Largo begins action. New era for Tamil comics begins

    ReplyDelete
  32. So largo came in 2012 and I waited for another 12 years to get interested

    ReplyDelete