Powered By Blogger

Sunday, November 30, 2014

இரவுக் கழுகும்...ஒற்றைக் கழுகும்...!

நண்பர்களே,

வணக்கம். டிசம்பரில் மொத்தம் 5 வெளியீடுகள் எனும் போது பணிகள் இரயில்வண்டியின் பெட்டிகளைப் போல ஒன்றன் பின் ஒன்றாய்  அணிவகுத்து நிற்கின்றன !! தொடர்ச்சியாய் இது மூன்றாம் ஆண்டு - ஆண்டின் இறுதியை நமக்கு நாமே இடியாப்பமாக்கிக் கொள்ளும் நம் பாணிக்கு ! 2012-ன் கடைசி மாதம் NBS பரபரப்பில் ஒடியதெனில் ; 2013 டிசெம்பர் - சூப்பர் 6-ன் இறுதி இதழ்களுடனான   மல்லுக்கட்டோடு ஓடியது !  காலண்டர்கள் ; டயரிகள் தயாரிப்பிற்கென எங்கள் ஊரும் இந்த வேளைகளில் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு சுழல்வது வழக்கமென்பதால் இந்த "பிசியோ பிசி "routine கூட ஒரு விதத்தில் ஜாலியாகத் தானுள்ளது ! ஜாலிக்கு மத்தியினில் இதழ்கள் வெளியாகும் வரிசைக்கிரமத்தில் மட்டும் சின்னதாய் ஒரு மாற்றம் அவசியமாகிறது ! 'தல'யின் KING SPECIAL தயாராகி விட்டது ; கிராபிக் நாவலான "வானமே எங்கள் வீதி'யும் ரெடி ! மூன்றாவது இதழான டைலனின் "நள்ளிரவு நங்கை"யில் மாத்திரமே நமது டிசைனிங் பிரிவில் சின்னதாய் ஒரு குளறுபடி நடந்து போய் விட்டது ! டைலனின் வண்ணப் பக்கங்களை நமது இத்தாலிய பாணி மீடியம் சைசில் செட் பண்ணுவதற்குப் பதிலாய் தவறுதலாய் பெரிய சைசில் அமைத்து விட்டார்கள் ! So அதனை சரி செய்திட  இரண்டல்லது  மூன்று நாட்கள் ஆகுமென்பதாலும் , அதன் பின்னே பிழை திருத்தங்கள் செய்து அச்சுக்குக் கொண்டு செல்வதில் ஒரு வாரம் ஓடிப் போய் விடும் என்பதாலும் - அதற்குப் பதிலாய் கையில் தயாராகியிருந்த மேஜிக் விண்டின் "உயரே ஒரு ஒற்றைக் கழுகை" களம் இறக்கிடல் தேவலை என்று தோன்றியது ! இரண்டும் ஒரே சைஸ் ; அமைப்பு ; விலை ;அதே இத்தாலிய நாட்டு இறக்குமதிகள் என்பதால் சின்னதான இந்த இடமாற்றம் பெரிதாய் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையில் மேஜிக் விண்டின் சாகசம் # 2 அடுத்த சில நாட்களில் உங்களை சந்திக்க வரவுள்ளது ! (டைலனின் "நள்ளிரவு நங்கை" டிசம்பரின் இறுதியில் டயபாலிக்கோடு இணைந்து வெளி வந்திடும் - 2014-கொரு சுபம் போட்டிட !)

மேஜிக் விண்டின் முதல் கதையானது ஒரு mild ஆன ஆக்க்ஷன் த்ரில்லர் + லேசான ஹாரர் பாணியில் அமைந்திருந்ததென்றால் - இப்போதைய சாகசம்  - முற்றிலும் வேறுபட்டதொரு style ! கதையின் ஹீரோ தோர்கலோ  ? என்ற சந்தேகத்தை உண்டு செய்யும் விதமாய் மாந்த்ரீகம் ; பாண்டஸி என ரவுண்ட் கட்டி அடிக்கும் இந்தக் கதைக்கு அச்சாணியே அந்நாட்களது செவ்விந்தியப் பழங்குடியினரின் மாந்த்ரீக நம்பிக்கைகளே ! அதை விட முக்கியமாய் அவர்களது மதகோட்பாடுகளுக்குள் கழுகுகளுக்கு எத்தனை பிரதானமான இடமிருந்தது என்பதை இக்கதையைப் படித்து முடிக்கும் போது உணர்ந்திட முடியும் ! "உயரே ஒரு ஒற்றைக் கழுகு" - அமெரிக்க மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கைகளுக்குள் ஒரு ஜனரஞ்சகமான பார்வை என்று சொல்லலாம்! 

இதோ இந்த இதழுக்கான நமது அட்டைப்படமும் ; ஆங்கிலப் பதிப்பு + இத்தாலியப் படைப்புகளின் அட்டைப்படங்கள் ! As always - இங்கு தெரிவதை விட, இதழின் அட்டையில் வர்ணங்கள் இன்னும் அழுத்தமாய் இருந்திடும் ! இத்தாலியப் பதிப்பின் அட்டையை அப்படியே போட்டுக் கொள்ளும் வாய்ப்பிருந்த போதிலும், அவர்களது டிசைனில் அந்த beast-ன் குரூரம் கொஞ்சம் ஓவராய்த் தெரிந்ததால் அதனை பயன்படுத்தவில்லை ! Instead நமது ஓவியரைக் கொண்டு மேஜிக் விண்டுக்கும் அந்த ஜந்துவுக்கும் நடக்கும் மோதலை சற்றே க்ளோசப்பில் காட்ட முயற்சித்துள்ளோம் ! 




இதோ உள்பக்கங்களின் சில டீசர்ஸ் : 
"ஆத்மாக்கள் அடங்குவதில்லை"யில்  இருந்தது போலல்லாது அடர் வர்ணங்கள் இம்முறை அத்தனை ஜாஸ்தியில்லை என்பதால் கலரிங் பாணி கண்களுக்குக் குளிர்ச்சியாகவே உள்ளது  ! வழக்கமானதொரு கௌபாய் கதையை எதிர்பார்த்திடாமல் fantasy கலந்ததொரு action episode -க்குத் தயாராகிக் கொள்ளுங்கள் - இரவுக் கழுகாரோடு வரவிருக்கும் வரும் இந்த ஒற்றைக் கழுகார்  will not let you down ! கதை # 3 -ல் கதை பாணி திரும்பவும் கௌபாய் ஸ்டைலுக்குத் திரும்புவதால் - மேஜிக் விண்டின் முழு profile என்னவென்று நாம் அறிந்திட கொஞ்சம் அவகாசம் தேவைப்படும் தான் ! "கறுப்புக் காகிதங்கள்" மேஜிக் விண்டின் அடுத்த ஆல்பம் - 2015-ல் ! 

டிசம்பரின் முதல் ரவுண்டான 3 இதழ்களும் இங்கிருந்து டிசம்பர் 4-ம் தேதி கூரியரில் கிளம்பிடும் ! ஆண்டின் பரபரப்பான வேளையிது என்பதால் பைண்டிங்கில் கொஞ்சமே கொஞ்சமாய் பொறுமை காட்டிடத் தேவையாகிறது ! இதர பார்டிகளின் வேலைகள் குவிந்து கிடப்பினும், நமக்கென கொஞ்சம் ஆட்களை ஒதுக்கி இருப்பதால் பெரிய சுணக்கமின்றி வேலைகள் ஆகி வருகின்றன என்பது சின்னதானதொரு சந்தோஷத்துக்கு இடம் தருகிறது ! 

அப்புறம் இம்மாதம் KING SPECIAL தடியான மீடியம் சைஸ் ; "வா.எ.வீ" -பெரிய சைஸ் ; "உ.ஒ.ஒற்றைகழுகு" - சன்னமான மீடியம் சைஸ் என்று விதவிதமாய் இருப்பதால் வழக்கமான பாணியில் pack செய்து அனுப்பிடும் பட்சத்தில்  பார்சல்கள் உங்களை வந்து சேரும் போது பாழாகிட வாய்ப்புள்ளதென்பதை உணர்கிறேன் ! So இம்மாதம் முதலாய்  LMS-க்குப் பயன்படுத்தியது போலான பிரௌன் அட்டை டப்பாவையே மாதந்தோறும் உபயோகம் செய்திடவிருக்கிறோம் ! 2015-க்கான சந்தாவில் கூரியர் தொகைக்கென பெரிதாய் கட்டணத்தை வசூலிக்காத போதிலும் , packing-ன் பொருட்டு ஒரு சிறு கட்டணத்தைக் கோரியது இதற்காகத் தான்  ! So இனி வரும் நாட்களில் நம் இதழ்கள் கசங்காமல் ; முனைகள் மடங்காமல் உங்களை வந்து சேர்ந்திடும் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது !   Thanks for putting up with these issues for this long ! 

பாண்டிச்சேரி புத்தக விழாவினில் நமக்கொரு (சின்ன) ஸ்டால் உறுதியாகியுள்ளதால் சக்கரங்களின் சுழற்சி நம்மை முதன்முறையாக இந்த முன்னாள் பிரெஞ்சு காலனிக்குக் கூட்டிச் செல்லவுள்ளது ! நம்மிடம் புதிதாய் பணியில் சேர்ந்திருக்கும் கணேஷ் நம் சார்பாய் ஸ்டாலில் இருப்பார் !  மார்கெடிங் பொறுப்பிலிருக்கும் இவர் ஒரு புது வரவெனில் ; டைப்செட்டிங் பிரிவினில் மிஸ்.கமலா கடந்த 2 மாதங்களாய் நமக்காகப் பணியாற்றி வருகிறார் ! சமீபமாய் தமிழில் பிழைகள் மிகுந்திராது வண்டி ஏதோ ஒரு மார்க்கமாய் ஓடுகிறதெனில் அதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம் ! 

2015-ன் மொழிபெயர்ப்புப் பணிகள் ; டிசைனிங் ; அட்டைப்படங்கள் என அதுவொரு தனி ட்ராக்காக ஓடிவருகிறது சமீப வாரங்களில் ! சொல்லப் போனால் - இன்னமும் 5 கதைகள் மாத்திரமே பாக்கி - பிரெஞ்சு மொழிபெயர்ப்பிற்கு ! இத்தாலிய மொழிபெயர்ப்பு மாத்திரம் சிரமங்களோடு தொடர்வதால் அதனில் நிறைய கவனமும், lead time-ம் கொடுக்கத் தேவையாகிறது ! 2015-ன் முதல் மாதத்து (புது இதழ்களின்) அட்டவணை இம்மாத இதழ்களில் உள்ள போதிலும் - இதோ ஒரு அட்வான்ஸ் preview :

லயன் காமிக்ஸ் - ஒரு ஜென்டில்மேனின் கதை ! (லக்கி லூக்) - ரூ.60

முத்து காமிக்ஸ் - "சிறைக்குள் ஒரு சடுகுடு..!" (ப்ளூகோட் பட்டாளம்) -ரூ.60

லயன் காமிக்ஸ் - "ரௌத்திரம் பழகு" (பௌன்சர்) - ரூ.125

முத்து காமிக்ஸ் - "நிழலோடு நிஜ யுத்தம் " (மாடஸ்டி ) - ரூ.35  

இவை நீங்கலாய் ஜனவரியின் மத்தியினில் மறுபதிப்புகளும் எனும் போது இப்போது முதலே ஒன்றொன்றாய் அச்சிடும் முனைப்பினில் உள்ளோம் ! உங்களின் சந்தாக்களின் ரூபத்தில் வைட்டமின் டானிக் தொடர்ந்திட்டால் பெரும் உதவியாய் இருந்திடும் ! Please do remember to renew your subscriptions folks ! மீண்டும் சந்திப்போம் ! Bye for now ! 

Sunday, November 23, 2014

கதை சொல்லும் விமானங்கள் !

நண்பர்களே,

வணக்கம். 'கிராபிக் நாவலா ? ஆத்தாடீ !!' என்று (நண்பர்களில் ஒரு பகுதியினர்) தெறித்து ஓடும் பாங்கை 2014-ன் இது வரையிலான 'கி.நா.'க்கள் லேசாக செப்பனிட்டுள்ளன என்று சொல்லலாம் !  இந்தாண்டின் bestsellers பட்டியலின் பிரதான ஆக்கிரமிப்பாளர்கள் "கி.நா"க்கள் தான் ('விரியனின் விரோதி;தேவ ரகசியம் தேடலுக்கல்ல ; இரவே..இருளே..கொல்லாதே.. ; காலனின் கைக்கூலி ) எனும் போது சரியான கதைத் தேடல்கள் இருக்கும் பட்சத்தில் ரசனைகளின் மாற்றங்களும் சிறுகச் சிறுகவாவது நடந்தேறும் என்பது புரிகிறது ! அதற்காக அனைவரும் இந்த பாணிகளுக்கு overnight ரசிகர்களாகி விட்டதாகவோ ; பூரண மாற்றங்கள் நிகழ்ந்து விட்டதாகவோ நான் சொல்லப் போவதில்லை ! "நாங்கள் காமிக்ஸ் படிப்பதே பிரச்னைகளை மறக்கத் தான்; இதில் எனக்கெதற்கு இந்த "வித்தியாசமான " முயற்சிகள் ? என்ற கேள்விகளைத் தாங்கிய கடிதங்கள் அவ்வப்போது வந்து கொண்டே தான் உள்ளன ; 'போணியாகும் கதைகளாகப் போட்டு விட்டு 'சிவனே' என்று  போக வேண்டியது தானே ? கிராபிக் நாவல் ; கத்திரிக்காய்  என்று why this கொலைவெறி  ?' என்ற காரசார வினவல்களும் அடிக்கடி உண்டு !! ஆனால் காலமெல்லாம் மரத்தைச் சுற்றி டூயட் பாடும் பாணிகளுக்கும், எப்போதாவது ஒரு சின்ன லீவு விட்டால் தப்பில்லை என்ற தீர்மானத்துக்கு நான் வந்து ஏக காலமாகி விட்டதால் - கிராபிக் பயணங்கள் தொடரவே செய்யும் ! இது வறட்டுப் பிடிவாதமாய் ; கொழுப்பின் பிரதிபலிப்பாய் சில நண்பர்களின் கண்களுக்குத் தெரிந்தாலும், என்றைக்கோ ஒரு நாள் இந்தக் கதைகளும் கூட நம் ரசனைகளின் வரம்புகளுக்குள் நுழைந்திடும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன் ! ஆண்டின் இறுதி மாதத்தில் ; ஆண்டின் இறுதி கிராபிக் நாவலை அறிமுகம் செய்யும் வேளை இது என்பதால் தான் இந்த பில்டப் எல்லாம் என்பதை நீங்கள் நிச்சயம் புரிந்திருப்பீர்கள் !

இதோ - "வானமே எங்கள் வீதி - பாகம் 1 & 2"  இணைந்து வெளிவரவுள்ள டிசம்பர் இதழின் முதல் பார்வைகள் :

ஒரிஜினல் முதல் பாகத்து அட்டைப்படத்தை நம் பின்னட்டைக்கு அனுப்பியது தவிர, பெரிதாய் எவ்வித நோண்டல்களுமின்றி வெளியாகவுள்ள அட்டைப்பட டிசைன் இது ! உங்கள் கம்பியூட்டர் / செல்போன்  திரைகளில் தெரிவதை விட பின்னணி ப்ரௌன் வர்ணம் இதழின் ராப்பரில் அடர்த்தியாய்த் தெரியும் - ஒரு 'பளிச்' லுக்குடன் ! கதாசிரியர் + ஓவியர் + வர்ணங்கள் அமைத்த ஓவியரென மூவர் கூட்டணி இதழின் பின்னட்டையில் உள்ளதைக் காணலாம் ! உட்பக்கங்களின் டீசர்களும் இதோ :


டிரைலரைப் பார்த்து விட்டு -  'வழக்கம் போல் இன்னொரு உலக யுத்தக் கதையாக்கும் ?  கிராபிக் நாவல் என்பதால் கொஞ்சம் அழுகாச்சியும் இணைந்திருக்கும் !' என்பது தான் உங்களின் முதல் அபிப்ராயமாக இருக்கலாம் ; ஆனால் இது அந்தப் பட்டியலுக்குள் புகுந்திடும் கதையே அல்ல ! "வானமே எங்கள் வீதி" ஒரு நட்பின் கதை ; ஒரு யுத்தத்தின் கதை ; ஒரு மெல்லிய நேசத்தின் கதை ! இரண்டாம் உலக யுத்தம் துவங்குவதற்கு முன்பானதொரு ஜெர்மானிய பிராந்தியத்தில் வளரும் ஒரு சுட்டிப் பெண்ணும், இரு குட்டிப் பையன்களும் தான் இக்கதையின் மையங்கள் ! நான்காவது முக்கியக் கதாப்பாத்திரம் என்றால் அது இக்கதையில் ஆங்காங்கே 'பளிச்' 'பளிச்' என்று மிளிரும் விமானங்கள் ! பறக்கும்  மிஷின்கள் மீது இந்நாளே ஒரு மோகம் நம்மில் பலருக்கும் தொடரும் வேளையில் - கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பான குட்டீஸ்களுக்குக் கேட்கவா வேண்டும் ?  


நட்பெனும் புள்ளியில் துவங்கும் கதை - உலகப் போருக்குள் நுழைவதும் கூட மாமூலான "ரட்-டட்-டட்" மிஷின்கன் முழக்கத்தோடு அல்ல ! விண்வெளியில் நடந்த உச்சகட்ட hi -tech போராட்டத்தை பிரமிக்கச் செய்யும் சித்திரங்களோடு பார்க்கக் காத்துள்ளோம் ! இதில் highlight என்னவெனில் இந்த விண்கலங்களோ ; யுத்த நிகழ்வுகளில் தலைகாட்டும் கதாப்பாத்திரங்களோ ஆசிரியரின் கற்பனையின் குழந்தைகள் அல்ல ! இதோ பாருங்களேன் - கதையில் வரும் வினோத விமானங்களின் நிஜ போட்டோக்கள் ; ஓவியங்கள் !



வேய்ன் ஷெல்டன் கதைகளுக்கு ஓவியம் வரைந்தவருக்கு முரட்டு டிரக்குகள் மீதான காதலைப் போல - இக்கதையின் படைப்பாளிகளுக்கு விமானங்கள் மீதொரு மையல் நிச்சயமாய் இருந்திருக்க வேண்டும் ! அதன் பிரதிபலிப்பை கதை நெடுகிலும் பார்த்திடலாம் ! நட்பில் துவங்கி, யுத்தத்துக்குச் செல்லும் கதையில் ஒரு மெல்லிய நேசமும் இழையோடுவதை படிக்கும் போது உணர முடியும் ! காமிக்ஸில் காதல் கதைகள் வந்தாலென்னவென்று ஏங்கும் நண்பர்கள் தற்சமயத்துக்கு இதைக் கொண்டு மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான் !

இந்தக் கதையின் பக்கமாய் என் கவனம் திரும்பியதும் கூட ஒரு unique ஆன விதத்தில் தான் ! 2013-ன் எப்போதோ ஒரு வேளையில் ஸ்பெயினிலிருந்து ஒரு அதிகாலை விமானத்தைப் பிடித்து பாரிசுக்குச் சென்று கொண்டிருந்தேன் ! வழக்கமாய் அதிகாலை பயணம் எனும் போது ஜன்னலோரமாய் தலையைச் சாய்த்து - விட்டுப் போன தூக்கத்தைப் பிடிப்பது எல்லோருக்கும் வாடிக்கையாய் இருக்கும் ! ஏனோ அன்று எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை ; என்னருகே அமர்ந்திருந்தவருக்கும் அதே நிலை ! அவர் ஒரு பிரெஞ்சு புக்கில் sudoku போட்டுக் கொண்டிருக்க, நான் வழக்கம் போல் பைக்குள் வைத்திருந்த காமிக்ஸ் ஒன்றை (லார்கோ என்ற ஞாபகம்)  எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன் ! பயணங்களின் போது புது நண்பர்கள் பிடிப்பது எனக்குச் சுட்டுப் போட்டாலும் ஒத்து வராத கலையே ; உச்சா போகாத உராங்குடான் போல உர்ரென்ற முகத்தோடு தான் வலம் வருவேன் ! So அருகிலிருப்பவர் பேசுவாரென்ற எதிர்பார்ப்புகளும் என்னிடம் இருப்பதே கிடையாது ! அப்படியிருந்த நிலையில் பக்கத்து சீட் ஆசாமி என் புக்கினுள் எட்டிப் பார்ப்பதிலும்  ; நான் பேசுவேனா என்ற யோசனையில் என் முகத்தைப் பார்ப்பதிலும் செலவிட - நான் லேசாக அவர் பக்கமாய்த் திரும்பி ஒப்புக்கு ஒரு 'ஹலோ'வை சொல்லி வைத்தேன் ! மனுஷன் மறு நிமிஷம் உற்சாகமாய் கையை குலுக்கி விட்டு - தானுமொரு காமிக்ஸ் ரசிகரென்று அறிமுகப்படுத்திக் கொண்டார் ! தானும் கூட லார்கோ fan என்று சொல்லி விட்டு இன்னும் சில பெயர் புரியாத் தொடர்களையும் பற்றி பிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் சிலாகிக்க ஆரம்பிக்க , நான் கோவில் மாடு போல தலையை ஆட்டிக் கொண்டே இருந்தேன் ! பொதுவாய்  அங்குள்ள காமிக்ஸ் ரசிகர்களுக்கு கடலளவுக்கு choices இருப்பினும் - யாராவதொரு ஆதர்ஷ ஹீரோ அல்லது ஒரு ஆதர்ஷ படைப்பாளி மீது அபிமானம் பிரதானமாய் இருப்பதுண்டு ! இவரும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை அவர் BUCK BANNY என்றதொரு பெல்ஜிய தொடருக்கு உற்சாகமாய் சிபாரிசு செய்து பேசிய போது புரிந்து கொண்டேன் ! BUCK DANNY தொடர் முழுக்க முழுக்க விமானப்படை பற்றியதொரு தொடர் என்பது எனக்குத் தெரியும் ! நுணுக்கமான விமான விபரங்களோடு கூடிய அந்தத் தொடரெல்லாம் நமக்கு அவ்வளவாய் ரசிக்காது என்ற எண்ணத்தில் அதனை சீரியசாகப் பரிசீலித்ததில்லை ; ஆனாலும் எப்போதோ ஒரே ஒரு கதையைப் படித்தது மட்டும் நினைவிருந்தது ! பாரிசில் தரையிறங்கும் வரை பேசிக் கொண்டே வந்தவர் விமானங்கள் மீது அபரிமிதக் காதல் கொண்டவர் என்பதையும் , அந்தக் காதலானது  விமானங்கள் தொடர்பான காமிக்ஸ் வாசிப்பிலும்  பிரதிபலிப்பதை புரிந்து கொண்டேன் ! 'இந்தந்தக் கதைகளை எல்லாம் தவறாமல் வாசித்துப் பாரென்று' ஒரு குட்டி லிஸ்டைப் போட்டு என் கையில் திணிக்க, நானும் 'ஒ..பேஷாய் !' என்று சொல்லி விட்டு விடைபெற்றேன் ! ஊருக்குத் திரும்பிய பின்னொரு சோம்பலான நாளில் அந்த லிஸ்ட் என் கைகளில் சிக்க, பொழுது போகாமல் அந்தப் பட்டியலின் கதைகளை இணையத்தில் தேடி பார்த்த போது கிடைத்தது தான் 'வானமே எங்கள் வீதி !' சகல review களிலும் ஐந்துக்கு 4.2 மார்க்குகள் பெற்றிருந்த கதையென்ற பின்னே கூடுதலாய் தகவல் சேகரித்த கையோடு  - நமது படைப்பாளிகளிடமும் இது பற்றிக் கேட்டு வைத்தேன் ! அவர்களும் கதைச் சுருக்கம் ; முதல் ஆல்பத்தின் பைல்கள் என ஒட்டு மொத்தமாய் அனுப்பி வைக்க - ஒ.கே. சொல்ல எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை ! ஆண்டொன்று கழிந்த நிலையில் 'வா.எ.வீ ' இப்போது வெளியாகும் வேளையும் புலர்ந்து விட்டது ! இப்போதைக்கு இந்த அறிமுக ஜவ்வுமிட்டாய் போதுமென்பதால் - 'மிச்சத்தை வெள்ளித் திரையில் காண்க !' என்று சொல்லி விட்டு அடுத்த topic -க்கு நகர்கிறேன்!

டிசம்பரின் சந்தேகமில்லா top billing நம் இரவுக் கழுகாருக்கென்ற நிலையில் - இதோ அவரது KING SPECIAL -ன் அட்டைப்படம் !


இது 'தல'யின் அட்டகாசமான போஸா ? அல்லது பிசியானதொரு டிராபிக் போலீஸ்காரரின் செல்பியா ? என்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் guys ! போனெல்லியின் ஓவியர்கள் வரைந்ததொரு லைன் டிராயிங்கை நம்மவர்களின் துணையோடு develop செய்துள்ளோம் ! (பின்னணிப் பச்சையும் ராப்பரில் இதை விட அழுத்தமாய் காட்சி தரும் !) 336 பக்கங்களோடு ஒரு 3 அத்தியாய மெகா சாகசத்தோடு 'தல' வரவுள்ளார் - வெகு சீக்கிரமே !

அப்புறம் நடந்து முடிந்த சேலம் புத்தக விழாவைப் பற்றி

என்ன சொல்லுவது ? எங்கே தொடங்குவது ? என்ற தடுமாற்றம் தான் எனக்கு ! பொதுவாய்  BAPASI குடையினில் வந்திடா இது போன்ற மத்திம லெவல் புத்தக விழாக்களில் நாம் சமீப காலங்களில் நிறையவே அனுபவப்பட்டவர்கள் என்ற விதத்தில் சேலத்தின் மீது பெரியதொரு நம்பிக்கையெல்லாம் வைத்திடத் தோன்றவில்லை என்பதே நிஜம் ! இராமநாதபுரம் ; திருச்சி ; நெல்லை ; நாகர்கோவில் ; போன்ற ஊர்களில் இதே போல் அரங்கேறிய விழாக்களில் விற்பனை சுமார் தான் என்பதால் சேலத்தை ஒரு விளம்பர முயற்சியாக மாத்திரமே பார்க்கத் தோன்றியது - துவக்கத்திலாவது ! ஆனால் முதல் வார இறுதியின் போதே களைகட்டத் துவங்கிய விற்பனையும் ; நண்பர்களின் படையெடுப்பும் 'ஜிவ்'வென்று நாடித்துடிப்பை எகிறச் செய்தது ! தொடர்ந்து  வந்த வார நாட்களில் கூட not bad ரக விற்பனை ; சுவாரஸ்யம் மங்கிடா நம் நண்பர்கள் ராஜ்ஜியம் என தொடர்ந்திட - இறுதி 2 நாட்களும் icing on the cake என்று தான் சொல்ல வேண்டும் ! Decent விற்பனை ; வருகை புரியும் குடும்பங்கள் தவறாது கால் பாதிக்கும் ஸ்டால் நமதே என்ற நிலை ; புத்தகவிழாவின் அமைப்பாளர்களே நிமிர்ந்து பார்க்கும் ஒரு கௌரவம் என சகலமும் சாத்தியமானது ! 'காமிக்ஸ்' எனும் ஒரு மந்திரச் சொல்லின் மகிமைக்கு மட்டுமன்றி ; தேனீக்கள் போல் அயராது செயலாற்றிய நமது நண்பர்கள் பட்டாளத்தின் உழைப்பிற்கும் கிட்டிய வெற்றி - இந்த சேலத்து படலத்தின் வெற்றி ! 7 சந்தாத் தொகைகள் + 14 மின்னும் மரண முன்பதிவுகள் + தினசரி விற்பனை என ஒரு மொத்தமாய் ரூ.1.20 லட்சத்துக்கு collection என்பது பெரிய நிறுவனங்களுக்குப்  பொரிகடலையாய் தோன்றலாம் தான் ; ஆனால் நம்மைப் போன்ற 'பச்சாக்களுக்கு' இது பிராண வாயுவுக்கு சமானம் என்றால் மிகையாகாது ! அதிலும் ஆண்டின் இறுதிப் பகுதிகளில் முந்தய commitment களைப் பூர்த்தி செய்யவும் ; புத்தாண்டின் முதலீடுகளுக்கும் திணறிக் கொண்டிருக்கும் தருணத்தில் இது புதையலைப் போன்றதொரு மதிப்பு சார்ந்தது !! Thanks ever so much guys ...you have been simply awesome !! சகலமும் வணிகமயமாகி விட்ட இந்நாட்களில் - எவ்வித பிரதிபலன்களும் எதிர்பாராது இவ்வித உழைப்பை வழங்குவது நம் காமிக்ஸ் வாசகக் குடும்பத்துக்கு மட்டுமே சாத்தியமென்று தோன்றுகிறது ! செல்லும் ஒவ்வொரு ஊரிலும்  நம்மை திணறச் செய்யும் இந்த வாசக அன்பு மழை சேலத்தில் ஒரு உச்சத்தைத் தொட்டுள்ளது ! Take a bow folks !!

புத்தக விழாவின் சக்கரங்கள் அடுத்து நம்மை இட்டுச் செல்லக் காத்திருப்பது புதுச்சேரிக்கு ! டிசம்பர் 19-28 வரை பாண்டிச்சேரியில் நடக்கவிருக்கும் புத்தக விழாவினிலும் நமது (குட்டியான) ஸ்டால் இருந்திடும் வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன ! திருமண மண்டபம் ஒன்றில் நடக்கவிருக்கும் இவ்விழாவினில் பிரதான ஸ்டால்கள் சகலமும் புக் ஆகி விட்ட நிலையில், பாக்கியுள்ள குட்டி (8' x  8') ஸ்டால் ஒன்றை நமக்குத் தர அமைப்பாளர்கள் சம்மதித்துள்ளனர் ! So முதன்முறையாக புதுச்சேரிக்குச் செல்லும் நம் வண்டி அங்கு எவ்விதம் இயங்குகிறதென்று அடுத்த மாதம் தெரிந்து விடும் ! வழக்கம் போலவே நாம் எதிர்பார்த்திருக்கப் போவது அங்குள்ள நம் நண்பர்களின் சகாயங்களையே ! Please do guide us folks !! சமீபமாய் எந்த புத்தக விழாவிற்கும் நாம் புதிதாய் banner எதையும் தயார் செய்திருக்கவில்லை ! இம்முறை புதுவைக்கென ஒன்றிரண்டு banner கள் தயாரிப்போமா ? 8'க்கு 8 ஸ்டால் என்பதால் 6க்கு 6 banner சரியாக இருக்கும் ! அவகாசமிருப்பின் நண்பர்கள் டிசைன் செய்து அனுப்பிடலாமே ?

சந்தாக்கள் உற்சாகமாய் வரத் துவங்கியுள்ள போதிலும், இப்போது தான் எண்ணிக்கை 100-ஐத் தொட்டுள்ளது ! தொடரும் நாட்களில் / வாரங்களில் இன்னும் துரிதமாய் சந்தாக்களைத் தட்டி விட்டால் - நம் பாரம் கொஞ்சம் குறையும் என்பது நீங்கள் அறியாததா ? Please do chip in folks ! 2015-ன் சந்தா நண்பர்களுக்கு ஆண்டின் பயணத்தின் போது சின்னச் சின்ன surprises காத்துள்ளன என்பது கொசுறுச் சேதி ! அவை என்னவென்று நீங்களே அவ்வப்போது தெரிந்து கொள்வீர்கள் !  மீண்டும் சந்திப்போம்... ! அது வரையிலும் adios amigos ! Enjoy the Sunday ! 

Sunday, November 16, 2014

The Four Men Army...!

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா...! 
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு மந்திரி..! 

ஒரே ஒரு ராஜாவுக்கும் ஒரே ஒரு பிள்ளை..!
அந்தப் பிள்ளையோடு துணைக்கிருப்பதோ செவ்வேங்கை !  

நண்பர்களே, வணக்கம். பாட்டோடு (!!!)  துவங்கும் பதிவென்ற போதே எழும் கேள்விக்குறிகள் , முதல் வரியைப் பார்த்த மறுகணமே இது யாரைப் பற்றிய பதிவென்பதை உணர்ந்து ஸ்மைலிக்களாய் மாறி இருப்பது நிச்சயம் ! ஐம்பதைத் தொடும் ஒரு ஆஜானுபாகுவான மஞ்சள் சட்டைக்காரர் ; தோற்றத்தில் அறுபதையும், மனதில் இருபதையும் பிரதிபலிக்கும் ஒரு ஆட்டுத்தாடிக்காரர் ; என்றும் பதினாறாய் வலம் வரும் ஒரு இளம் வேங்கை ; வேங்கையின் பெயரையே தன பெயராகவும் கொண்டதொரு சிகப்பு ஆசாமி ! இன்றைய தமிழ் காமிக்ஸ் உலகின் அதிரடி மன்னர்களாய் உலவிடுவது இந்த நால்வர் அணியே என்றால் அது நிச்சயமாய் வெறும் சிலாகிப்பல்ல !  'டல்லடித்துப் போய் கிடக்கும் சமயங்களில் டெக்சின் கதையைப் படித்தால் பேட்டரி ரீ-சார்ஜ் ஆன உணர்வு எழுந்திடத் தவறியதே இல்லை !" என்று என்னிடம் நேரில் சொல்லியுள்ள நண்பர்களின் எண்ணிக்கை ஒரு டஜனைத் தாண்டும் ; அந்த டஜனின் அங்கத்தினர் சகலரும் 35+ வயதினர் ! ஒவ்வொரு புத்தக விழாவினிலும் நம் விற்பனையில் முதலிடப் போட்டி இருப்பது சுட்டி லக்கிக்கும் - இந்த இரவுக் கழுகின் அதகளக் குழுவுக்குமிடையே தான் !

2014-ன் இது வரையிலான நமது bestseller எதுவென்ற கேள்விக்கு ஒரு நொடி கூட யோசிக்கத் தேவையின்றி பதில் தர முடியும் - "கார்சனின் கடந்த காலம்" என்று !! வெளியான போதே கிட்டிய நண்பர்களின் உற்சாக வரவேற்பு ஒருபக்கமிருக்க - இந்த டெக்ஸ் வண்ண bonanza இதழுக்கு நம் விற்பனையாளர்களில் பெரும்பகுதியினர் இப்போதுவரை தொடர்ந்து repeat ஆர்டர்கள் தந்து வருகின்றனர் ; multiple பிரதிகள் வாங்கிக் கொண்ட வாசகர்ககளும் ஏராளம் ! இன்று நிறைவு பெரும் சேலம் புத்தக விழாவினில் கூட மேக்சிமம் விற்றுள்ளது "கா.க.கா" தான் ! சென்றாண்டின் டெக்ஸ் தீபாவளி மலர் நம் கைவசம் ஸ்டாக்கில் இருந்தது நான்கோ ஐந்து மாதங்கள் மட்டுமே ; "நிலவொளியில் ஒரு நரபலி" காலி ; "சிகப்பாய் ஒரு சொப்பனம்" கடைசி 150 பிரதிகள் என்ற நிலைக்கு வந்துள்ளது ; மொக்கை ராப்பருடனான "பூத வேட்டை" கூட 350 பிரதிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது ! 2012-ல் துவங்கிய நமது இரண்டாவது இன்னிங்க்சில் இதுவரையிலான வசூல் ராஜா ; பாக்ஸ் ஆபீஸ் கிங் சந்தேகமின்றி இந்த இத்தாலிக்காரர் தான் என்பதை கொண்டாடவே டிசம்பரில் THE KING SPECIAL !! நண்பர்களில் ஒரு பகுதியினர் இது 'டெக்ஸ்' சாகசம் தான் என்று யூகித்திருந்த போதிலும் பலருக்கு இதுவுமொரு கிராபிக் நாவலாய்க் கண்டு இருந்துவிடுமோ என்ற லேசான பீதி இருப்பதை அவ்வப்போது வரும் மின்னஞ்சல்களும், கடிதங்களும் சொல்லி வந்தன ! நவம்பரின் லார்கோ இதழில் - "கிங்" யாரென்ற இரகசியம் (!!!) உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தோஷமான வரவேற்புகள் !! இதோ - டெக்ஸ் 330 பக்க மெகா சாகசமான "வல்லவர்கள் வீழ்வதில்லை" கதையின் சில டீசர் பக்கங்கள் ! 

ஒவ்வொரு புதிய கதையின் அறிமுகப்படலத்தின் போதும் இதைச் சொல்லுவது வாடிக்கை தான் என்றாலும் - தேய்ந்த அதே பாட்டைத் திரும்பவும் ஒருவாட்டி பாடிக் கொள்ள உங்களின் அனுமதி தேவை ! "இது ரொம்பவே வித்தியாசமானதொரு டெக்ஸ் சாகசம் !" வழக்கம் போல நான்காவது பக்கத்தில் ஒரு சில்லுமூக்கு ; இருபதாவது பக்கத்தில் ரெண்டு மண்டைகள் என்று உடைபடும் மாமூலான பாணியினை இம்முறை எதிர்பார்க்காதீர்கள் ! கதை நிகழ்வது முழுக்கவே மெக்சிகோ மண்ணில் ; அங்கு அரங்கேறிய உள்நாட்டுப் போர் ; விடுதலைப் போராட்டம் ; வரலாற்று நிகழ்வுகள் என கதையோடு சகலமும் வெகு இயல்பாய்க் கோர்க்கப்பட்டிருப்பதை "வ.வீ"-ல் பார்த்திடப் போகிறீர்கள் ! ரெண்டு மொத்து வாங்கியதோடு மண்ணைக் கவ்வும் ரகத்திலான வில்லன்களும் கிடையாது ; ரேஞ்சர் குழுவுக்கு ஈடு கொடுக்கும் விதமாய் ஒரு எதிராளி அணி மல்லுக்கு நிற்கக் காத்துள்ளது ! பற்றாக்குறைக்கு அட்டகாசமான சித்திரங்களில் டெக்ஸ் & குழு இம்முறை அழகாய்க் காட்சி தர - இதுவொரு visual feast-ம் கூட ! 

சித்திரங்கள் என்ற topic -ல் உள்ள போதே குறிப்பிட்டாக  வேண்டிய விஷயமிது ! இது வரைக்கும் டெக்ஸ் வில்லர் கதைகளுக்கு சித்திரம் வரைந்துள்ள ஓவியர்களின் எண்ணிக்கை 40-ஐத் தொடும் !! 66 ஆண்டுகளாய்த் தொடர்ந்திடும் ஒரு தொடர் என்ற போதிலும் அதனில் இத்தனை பெரிய ஓவியப் பட்டாளம் பணியாற்றத் தேவைப்பட்டதை எண்ணி மலைக்காது இருக்க இயலவில்லை ! ஆரம்ப நாட்களில் கதாசிரியர் பொனெல்லியும் ; ஓவியர் காலெப்பினியும் மட்டுமே இத்தொடரில் பணியாற்றி வந்தனர் ! பின்னாட்களில் டெக்சின் பிரசித்தம் கூடக் கூட ; அவரின் புதுக் கதைகளின் தேவைகளும் கூடக் கூட - ஓவியர்கள் + கதாசிரியர்கள் அணியின் பலம் சட சடவென்று அதிகமாகத் துவங்கியது ! கொஞ்ச காலம் முன்பாய் நான் பொனெல்லி அலுவலகத்திற்குச் சென்றிருந்த பொழுது கூட இது பற்றிய பேச்சு எழுந்தது ; இத்தனை பேர் படம் வரையும் போது டெக்சின் முகம் தினுசு தினுசாய் மாறிடுகிறதே ? என்று கேட்டேன் ! 'என்ன செய்வது ? இன்றைக்கும் புது டெக்ஸ் கதைகளுக்கென ஒரு ஓயா தேடல் இங்கு தொடர்ந்திடுகிறது ; அதற்குத் தீனி போட ஒரு mass production line இல்லாது போனால் வேலைக்கு ஆகாது !' என்று பதில் சொன்னார்கள் ! 'சரி, ஒரே சமயத்தில் இத்தனை டீம்கள் புதுப் படைப்புகளில் பணியாற்றும் போது ஒரே விதமான plot -ஐ வெவ்வேறு குழுக்கள் கையாளும் ஆபத்தும் இருக்குமல்லவா ? ' என்றும் கேட்டேன் ! '650 கதைகளை நெருங்கும் ஒரு தொடரில் இன்னும் புதிதாய்...இது வரை முயற்சித்திராத பாணியாய்த் தேடித் பிடிக்க வேண்டுமென்ற வேட்கை எங்களின் டீம்களிடையே ஒரு நெருப்பாய் தகிப்பது உண்டு ! So இத்தனை காலம் ஆன பின்னும் கூட, புதுசு புதுசாய் டெக்சுக்குக் களங்கள் உருவாக்குவது சாத்தியமாகிறது !' என்று சொன்னார்கள் ! அப்போது பூம் பூம் மாடு போல் மண்டையை ஆட்டி வைத்தாலும் கூட, அன்று மாலை ரூமில் இருந்த போது இது பற்றி அசை போட்டேன் தலைக்குள் ! இது வரை நாம் வெளியுட்டுள்ள டெக்ஸ் கதைகளின் பட்டியலை எப்போதோ நண்பர் ஈரோடு ஸ்டாலின் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தது நினைவுக்கு வர, அதனைத் தேடித் பிடித்தேன் ! அத்தனை கதைகளின் கருக்களும் எனக்கு நினைவுக்கு வந்தன என்று பீலா விட மாட்டேன் ; ஆனால் கதைகளின் ரேன்ஜ் பிரமிக்கச் செய்வதை கொஞ்சம் கொஞ்சமாய் உணர முடிந்தது !  

மன வியாதியின் விளைவாய் இரவுகளில் தலை சீவும் (சீப்பைக் கொண்டு அல்ல!!) குரங்கில் துவங்கி ; மறந்து போனதொரு சுரங்கத்தினில் வசிக்கும் வேற்று கிரகப் பிறவியில் தொடர்ந்து ; பூமியின் ஒரு ஆளரவமற்ற   கோடியில் ஜீவித்து வரும் டைனோசார்கள் கொண்ட சைத்தான் சாம்ராஜ்யங்களை சித்தரித்து ; பேங்க் கொள்ளையர்கள் ; ஆயுதக் கடத்தல்காரகள் ; செவ்விந்தியப் புரட்சியாளர்கள் ; புதையல் வேட்டையர்கள் ; அராஜக சாம்ராஜ்யங்கள் என நாம் பார்த்துள்ள அதிரடிகள் தான் எத்தனை !! ஒரு கௌபாய் உலகம் பறந்து விரிந்த மண்டலம் தான் எனினும், அதனில் சாத்தியமாகக் கூடிய கதைக் களங்கள் - ஒரு கேப்டன் பிரின்சின் அளவிற்கோ ; ஒரு மர்ம மனிதன் மார்டினின் அளவிற்கோ ; உலகம் சுற்றும் ஒரு லார்கோவின் வீச்சுக்கோ இருக்க வாய்ப்பில்லை தான் ! ஆனால் அதனையும் லாவகமாய்க் கையாண்டு இத்தனை வருஷங்களாய் ; இத்தனை கதைகளில் ஒரு தேசத்தை மட்டுமன்றி உலகின் வெவ்வேறு பிராந்தியங்களிலும் தீரா ரசிகர்களை உருவாக்கி, கட்டுண்டு வைத்திருப்பது ஒரு அசாத்திய சாதனை தானே ?! அந்த சாதனையாளரை நம் மத்தியில் கொஞ்சமாகவேனும் சிலாகிப்போமே என்ற சிந்தனையில் உதித்தது தான் THE KING SPECIAL !! 

கீழே உள்ளது நண்பர் ஸ்டாலின் எனக்கு அனுப்பிய டெக்ஸ் புள்ளிவிபரங்களின் நகல் !! கிட்டத்தட்ட 8300 பக்கங்களை இந்நேரம் நாம் கடந்திருக்க மாட்டோமா - இரவுக் கழுகாரோடு ?!! ஒற்றை நாயகராய் நமது இதழ்களில் இத்தனை பக்கங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ள ஆசாமி இவரைத் தாண்டி வேறு யாரும் இருக்க வாய்ப்பே இல்லை எனும் போது - WOW ! என்று மட்டும் தான் சொல்ல முடிகிறது !! இந்தப் பட்டியலில் உள்ள சகலக் கதைகளையும் படித்துள்ளோர் நிச்சயம் நிறைய பேர் இருப்பார்கள் எனும் போது - இன்று வரையிலான முழுப் பட்டியலையும் கருத்தில் கொண்டு - best ever டெக்ஸ் கதை எதுவென்று தெர்ந்தெடுப்போமா ? 


Moving on from Tex, சில சந்தோஷ செய்திகளின் பகிர்வுகள் ! 2014-ல் இது வரையிலான நமது பொனெல்லி வெளியீடுகள் அனைத்திலும் அவர்களுக்கு அமோக சந்தோஷம் ! வண்ணமயமான அட்டைப்படங்களில் துவங்கி நமது இதழ்களின் சைஸ் ; பைண்டிங் ; இணையத்தில் நாம் செய்யும் சிலாகிப்புகள் என சகலமும் அவர்களுக்கு வித்தியாசமாய்த் தோன்றுகின்றன ! தவிரவும் அவ்வப்போது நம்மிடம் புத்தகங்களை வாங்கும் இத்தாலிய காமிக்ஸ் சேகரிப்பாளர்களும் நம் இதழ்களுக்கு thumbs up தந்து வர - தமிழ் அவர்களின் பிரியமான மொழியாக மாறி வருகிறது ! 2015-ல் துவங்கி நாம் வெளியிடும் ஒவ்வொரு இதழிலும் 20 பிரதிகள் வீதம் பொனெல்லி கோரியுள்ளது -உலகெங்கும் உள்ள அவர்களது கதைகளை வெளியிடும் பதிப்பகங்களுக்கு இதனை ஒரு மாதிரியாய்க் காட்டிட ! 20 பிரதிகளை DHL  கூரியரில் தருவிக்கவே சில ஆயிரங்கள் செலவாகும் என்றாலும் அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை !! உலகில் அவர்கள் கதைகளை வெளியிடும் நாடுகளின் பட்டியலையும் ; பதிப்பகங்களின் பெயர்களையும் வாசிக்கும் போதே எனக்கு அவர்கள் ஒவ்வொருவரது ஆற்றல்களும் புலனாகிறது ! அந்தப் பட்டியலில் துக்கடா நாம் தான் என்பதில் ஐயமே கிடையாது ; ஆனால் அவர்களுள் நாமொரு standout ஆக தெரியக் காரணமே - வாசகர்களாய் நாம் காட்டும் உற்சாகமும், அந்த எல்லைகளில்லா காமிக்ஸ் காதலும் தான் என்று நினைக்கிறேன் ! நாம் ஒவ்வொருவரும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளக் கூடியதொரு தருணம் இது folks !

தூக்கிய காலரை அவ்விதமே தொடரச் செய்ய இன்னுமொரு காரணமும் கூட ! இரஷ்யாவில் ஒரு புதுப் பதிப்பகம் டயபாலிக்கின் கதைகளை அங்கு வெளியிடும் பொருட்டு படைப்பாளிகளோடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாம் ! அவர்களுக்கு நமது "OPERATION சூறாவளி" இதழினை மாதிரியாய்க் காட்டியுள்ளனர் இத்தாலிய ஏஜண்டுகள் ; லயித்துப் போய் விட்டார்களாம் இரஷ்ய நிறுவனத்தினர் !! இதே ஸ்டைலில் இரஷ்யாவிலும் வெளியிடுவது பற்றி சிந்திப்பதாகச் சொல்லியுள்ளனராம் ! ஓரமாய் நாம் நின்று ஏக்கமாய் பெருமூச்சை விட்டு வந்த நாட்கள் போய் - இன்னமும் கடினமாய் உழைத்தால் நம்மாலும் கூட கவனங்களைக் கோர முடியலாம்  என்றதொரு சூழல் மெதுவாய் புலருகிறது !! We just need to keep at it !

சந்தோஷ சேதி # 3 : அவ்வப்போது நமக்கு அட்டைப்படங்களைப் போட்டுத் தர ஒரு ஐரோப்பிய ஓவியரோடு பேசி வருகிறோம் ! கட்டணங்கள் நம்மூர் நிலவரங்களை விட அதிகமே எனினும், முயற்சித்துப் பார்க்கத் தீர்மானித்துள்ளோம் ! தற்சமயம் ஒரு trial முயற்சி தொடங்கியுள்ளது ; அவரது ஸ்டைல் நமக்கு ஒத்துப் போகும் பட்சத்தில் நமக்கு அதிர்ஷ்டமே ! Fingers crossed!

And சேதி # 4 : புதிய பதிப்பகங்களோடு நடந்து வரும் பேச்சு வார்த்தைகளில் 2 கனிந்துள்ளன !! புதிய கதைகள் ; புதிய பாணிகள் இவை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது ! இவற்றை எப்படி - எங்கு - எப்போது புகுத்துவது என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி ! ஏற்கனவே 46 இதழ்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2015-ஐ வாத்து பிரியாணியாக்க மனதில்லை என்பதால் நாளைக்கே புது அறிவிப்புகளை நான் களம் காணச் செய்யப் போவதில்லை அசட்டுத்தனமாய் ! காண்டிராக்ட் இப்போது போட்டு விட்டு இதழ்களை வெளியிடும் வேளைகளை கொஞ்சம் தாமதப்படுத்திக் கொள்ளலாமா என்ற ஆராய்ச்சியில் தற்போது மூழ்கியுள்ளேன் ! ஏனோ தெரியவில்லை - 'வச்சாக் குடுமி..அடிச்சா மொட்டை !!'  என்பது தான் ஞாபகத்துக்கு வருகிறது !! :-)

அப்புறம், அவ்வப்போது நமக்கு நம் படைப்பாளிகளின் மார்கெட்களிலிருந்து கிட்டும் புள்ளி விபரங்கள் ரமணா ஸ்டைலில் ! 
  • சென்றாண்டு மட்டும் பிரெஞ்சில் வெளியான காமிக்ஸ் ஆல்பம்களின் எண்ணிக்கை : 5519 !! கிட்டத்தட்ட தினமும் 13 கதைகள் வெளியாவது போல் நிலவரம் !! 
  • இவற்றுள் 1500+ கதைகள் 'மங்கா' காமிக்ஸ் படைப்புகளே !! 
  • லார்கோவின் விற்பனை அரை மில்லியனுக்கு (500,000) கொஞ்சமே கொஞ்சம் கம்மி !! 
  • தோர்கல் - 250,000+ பிரதிகள் விற்பனை காண்கிறது ! 
  • டின்டின் கதைகள் விடாப்பிடியாய் இன்னமும் ஐரோப்பாவின் டாப் காமிக்ஸ் தொடரென்ற இடத்தைப் பிடித்த வண்ணம் உள்ளது ! 
  • ஆண்டுதோறும் மறுபதிப்புப் பட்டியலில் உச்ச டிமாண்ட் காணும் தொடர்களுள் கேப்டன் டைகர் கதைகளும் ஒன்று ! 
  • கிரீன் மேனரின் படைப்பாளியான பேபியன் வேஹ்ல்மான் காமிக்ஸ் உலகின் பிரபல்ய மீட்டரில் உயர்ந்து கொண்டே செல்கிறாராம் ! 
  • காமிக்ஸ் பற்றிய சேதிகளையும், படைப்பாளிகளின் பேட்டிகளையும் தாங்கி வரும் பிரத்யேக பத்திரிகைகள் 60-க்கும் அதிகம் உள்ளன பிரெஞ்சில் !! (அவற்றின் ஆயுட்காலங்கள் மாறுபடுவது வேறு விஷயம் !!)
  • சீனாவும், ஜப்பானும் தான் தற்சமயம் மிக வேகமாய் வளர்ந்து வரும் காமிக்ஸ் படைப்பாளிகளாம் !! ஐரோப்பாவில் ஆபீஸ் அமைத்து செயல்படும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளனர் ! 
  • நமது இரவுக்கழுகாருக்கென  கூகிள் ப்ளேஸ்டோரில் ஒரு Android App உள்ளது தெரியுமோ? https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_bacigalupo_andrea88.TexApp&hl=en
  • சென்ற வாரம் வெளியான டெக்ஸ் சாகசம் # 649 !! அறுநூற்றி ஐம்பது என்ற இலக்கைத் தொட சொற்ப இடைவெளியே காத்துள்ளது !! இதோ அதன் ராப்பர் : 

மீண்டும் சந்திப்போம் ; அது வரை - have a lovely sunday & a great week ahead ! Bye for now!

Wednesday, November 12, 2014

சங்கடத்தோடு ஒரு எச்சரிக்கை !

நண்பர்களே,

வணக்கம். இன்னுமொரு இடைச்செருகல் பதிவிது ; துளியும் சந்தோஷம் தராப் பதிவும் கூட  ! நம் கவனத்துக்கு வந்திருக்கும் சில விரும்பத்தகா நிகழ்வுகள் பற்றியும் நமது உறுதியான சிந்தனைகளையும்  இங்கே பகிர்ந்தாக வேண்டிய சூழலில் உள்ளேன் !

புதிதாய் நாம் திட்டமிடும் தொடர்களை அவசரம் அவசரமாய் தமிழில் மொழிபெயர்த்து - ஆங்கிலத்திலோ ; பிற மொழிகளிலோ உள்ள ஒரிஜினல்  சித்திரங்களின் மீது பதித்து - இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் விதமாய் உலவ விடும் வேலையை ஒரு சிலர் செய்து வருவது நமக்கு ஆதாரங்களோடு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது ! மொழிபெயர்ப்பின் தங்கள் புலமைகளை பறைசாற்றிக் கொள்வது நோக்கமாக இருந்தாலும் சரி  ;  'நாங்கள் தான் இந்தக் கதைக்கு முன்னோடிகளே ; இதைச் சுட்டிக் காட்டியிருக்கா பட்சத்தில் எடிட்டருக்கே இந்தக் கதை பற்றித் தெரிந்திருக்காது !' என்று பீலா விட்டுக் கொள்ளுவது தான் இலட்சியமாக இருந்தாலும் சரி - இந்த விளையாட்டுத்தனங்களை இனியும் நாம் அமைதியாய் சகித்துக் கொள்வதாக இல்லை ! ஒரு புதுத் தொடரின் பிரதான ஈர்ப்பே அதனை நீங்கள் முறையாகப் படிக்கத் துவங்கும் போது தோன்றுகின்ற அந்த freshness தான் எனும் போது - இது போல் அரையணா செலவின்றி செய்யப்படும் வேலைகள் அதற்கொரு உலை வைக்கும் சமாச்சாரம் ! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதைத்தொடருக்கும் உரிமைகள் பெற நாம் பணம் புரட்டப் படும் பாடு ஆண்டவனுக்கு மாத்திரமே தெரிந்த விஷயம் ! இந்நிலையில் இது போன்ற amateurish முயற்சிகள் நம் பொறுமையைச் சோதிக்கும் விதத்தில் அமைகின்றன !

தவிர, ஒவ்வொரு கதைத்தொடருக்குமான காண்ட்ராக்டுகளைப் போடும் போது அதனில் ஒரு முக்கிய ஷரத்து இப்போதெல்லாம் உண்டு : அது நாம் பதிப்பிடும் தமிழ் மொழியிலும், தமிழ் மார்கெட்டிலும் இது போன்ற 'உட்டாலக்கடி ' வேலைகளிலிருந்து  அவர்களது கதைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நம்மைச் சேர்ந்தது என்று !  So இது போன்ற முறையற்ற வேலைகளை அனுமதிப்பது கூட சட்டப்படித் தவறே !

புதியதொரு கதையைத் துவங்கி அதனை upload செய்து விட்டு , தன பெயரிலேயே அதற்கான லின்க்கும் கொடுத்துள்ள நண்பர் தயவு செய்து அதனை இன்றே அகற்றும்படிக் கேட்டுக் கொள்கிறேன் ! 'ஆஹ்..உனக்குத் தெரிந்ததைப் பார்த்துக் கொள் !  " என்ற அலட்சியமே இந்த எச்சரிக்கைக்குப் பதிலாய் இருக்கும் பட்சத்தில் நிலவரம் நிச்சயமாக சங்கடமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் ! இந்த வேலைகளைச் செய்திருக்கும் நண்பர் (!!) இங்கும் எப்போதாவது கலந்து கொள்பவரே  என்ற முறையில் நம் பதிவுகளைத் தவறாது படிப்பவர் என்பது நிச்சயம் ! So - இதனையே ஒரு அதிகாரபூர்வமான எச்சரிக்கையாய்க் எடுத்துக் கொள்ளலாம் ! Please - நீங்கள் செய்யத் துவங்கியிருக்கும் பணியின் நோக்கம் எதுவாக இருப்பினும், கடுமையான சிக்கல்களை விளைவுகளாய்க்  கொண்டு வரக் கூடிய காரியமிது என்பதை உணர்ந்திடுங்கள் ! We are just not going to sit back any longer & just pray for better sense to prevail !

அப்புறம் இது போன்ற வேலைகளை உற்சாகப்படுத்தி ; தவறென்று தெரிந்தும் கூடத் தொடர்ந்திட ஊக்குவிக்க வேண்டாமே ?!! தற்காலிகமாய் நீங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளும் பொருட்டு - அந்த வேலையைச் செய்யும் நபரை சிக்கலுக்குள் இறக்கி விட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்திடுவது உங்களுக்குச் சிரமம் இல்லை தானே ? தம் வேலைகளை ஓரம்கட்டி வைத்து விட்டு, விடிய விடிய நாம் செல்லும் ஊர்களிலெல்லாம் நமக்காக ; நம் விற்பனைக்காக ; அதன் மூலம் நம் சிரமங்கள் சற்றே மட்டுப்பட வேண்டுமென்ற நோக்கோடு உதவிடும் வாசக குடும்பம் ஒரு அற்புத உதாரணமாய் நிற்கும் போது - யாருக்கும் பிரயோஜனப்படா இது போன்ற முயற்சிகளை ஊக்குவிப்பதில் என்ன இலாபம் இருந்திடக்கூடும் ? இது போன்ற முறையற்ற செயல்களை நம் கவனத்துக்குக் கொண்டு வந்தால் மூச்சு விடவே திணறிக் கொண்டிருக்கும் நம் போன்ற சிறு நிறுவனங்களுக்கு  நீங்கள் செய்யும் பெரும் உதவியாக இருக்கும் !  Please let's not permit things to go out of hand !! இதனை நம் கவனத்துக்கு கொண்டு வந்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் நம் நன்றிகள் !


தகவல்கள் கோரி...!

நிறைய சந்தர்ப்பங்களில் நமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாகப் பணம் அனுப்பியதோடு நண்பர்கள் ஓய்ந்து அமர்ந்து விடுகின்றனர் ! சரியான பெயரின்றி ; reference நம்பர்களுடன் மட்டுமே வரும் தொகைகளை யார் கணக்கில் வரவு செய்வதென்று தெரியாமல் நம்மவர்கள் விழி பிதுங்கிப் போகிறார்கள் ! அருள் கூர்ந்து உங்களின் ஒவ்வொரு payment களோடும் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் மிக மிக உதவியாக இருக்கும் ! நமது சந்தாப் பட்டியலில் நீங்கள் ஏற்கனவே இருப்பினும் கூட, முகவரி ; தொலைபேசி எண்கள் போன்ற அத்தியாவசியங்களைச் சரி பார்க்க அது பெரிதும் உதவுமே..! 

கீழ்க்கண்ட தேதிகளில் பெறப்பட்டுள்ள இந்த நான்கு தொகைகளும் யாரது பட்டுவாடாக்கள் என்று எங்களால் இனம் காண முடியவில்லை ! அனுப்பிய நண்பர்கள் முழு விபரங்களோடு ஒரு மின்னஞ்சல் அனுப்பிடலாமே - ப்ளீஸ் ! 

நவம்பர் 5 : ரொக்கம் - ரூ.3000

நவம்பர் 6 : வங்கி மூலம் டிரான்ஸ்பர் : ரூ..4000

நவம்பர் 6 : வங்கி மூலம் டிரான்ஸ்பர் : ரூ.3250

நவம்பர் 10: வங்கி மூலம் டிரான்ஸ்பர் : ரூ.3850

நவம்பர் 10 : இராதாகிருஷ்ணன்           : ரூ.3850 


போனில் அழைத்து விபரங்களைச் சொல்லிடும் நண்பர்களும் நிறைய உள்ளனர் ; ஆனால் ஒரு லைனில் பேசிக் கொண்டிருக்கும் போதே அலறும் அடுத்த போன்களின் மீதும் பாதிக் கவனத்தைச் செலுத்தி நிற்கும் சந்தர்ப்பங்களில் உங்கள் தகவல்கள் விடுபட்டுப் போக வாய்ப்புண்டல்லவா ? So பணம் அனுப்பும் வேளைகளில் அதனைக் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலை சிரமம் பாராமல் அனுப்பி உதவிடலாமே   ? 

அப்புறம் நமது ஆன்லைன் விற்பனைத் தளத்திலும் (WORLDMART ) 2015-ன் சந்தாக்கள் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளன ! கிரெடிட் / டெபிட் கார்டுகள் வழியாக சந்தா செலுத்து என்னும் நண்பர்கள் அதனை பயன்படுத்திடலாம் !  Catch you on Sunday folks ! Bye for now ! 

Sunday, November 09, 2014

மார்க்கண்டேய நால்வர் !!

நண்பர்களே,

வணக்கம். ஒன்றரை மாதத்தை ஸ்வாஹா செய்த 2015-ன் அட்டவணையை ஒரு வழியாய் உங்களிடம் ஒப்படைத்து  - பெரிதாய் நெருடல்கள் ஏதுமின்றி அனைவரையும் குஷி கொள்ளச் செய்ததில் மெய்யாக பெரியதொரு relief எனக்கு ! 'இதைச் சேர்த்திருக்கலாம் ; இதை காலி பண்ணியிருக்கலாம் !" என்ற ரீதியில் நிறைய அபிப்ராயங்கள் சென்றாண்டு கூட வந்திருந்தன  ! இம்முறை இயன்றளவுக்கு அனைவரின் ரசனைகளோடும் நான் ஒத்துப் போக அடித்த பல்டிகள் பலன் தந்துள்ளதைக் கண்டு சந்தோஷமாய் உள்ளது ! தேர்வுகள் பற்றி ; புது அறிமுகங்கள் பற்றி ; சில கதைகளை நிராகரித்தது பற்றியெல்லாம் இதழ்களில் ஆங்காங்கே வண்டி வண்டியாய் எழுதிக் குவித்துள்ளதால் மீண்டுமொருமுறை அந்த மாவையே அரைக்கப் போவதில்லை !


'குறைகள்' - என நண்பர்களில் சிலர் சுட்டிக் காட்டியுள்ளது  :டேஞ்சர் டயபாலிக் இடம் பிடிக்காது போனதையும்  ; டெக்ஸ் கதைகள் சற்றே ஜாஸ்தி என்றதையுமே! 2014-ன் அட்டவணையிலேயே இத்தாலியக் கூர்மண்டையருக்கு இடம் இல்லை எனும் போது - தொடரும் ஆண்டினில் அவருக்கு வாய்ப்புக் கிட்டுமென்ற  எதிர்பார்ப்பு  சற்றே optimistic என்று தான் சொல்லத் தோன்றுகிறது ! 300+ கதைகள் கொண்ட இத்தொடரில் நிறைய episodes ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து  கிடப்பதும், நிமிஷத்தில் தினுசு தினுசாய் முகமூடி செய்து முகத்தில் ஒட்டிக் கொண்டு சுற்றியுள்ளோருக்கு அல்வா கொடுக்கும் அந்தப் பாணிகளும் கொஞ்சம் நெருடலாய் தோன்றுவதே இவர் ஓரமாய் அமர நேர்ந்ததன் பின்னணி ! Anyways - நம்மிடம் இன்னமும் ஒரு டயபாலிக் சாகசம் துயில் பயின்று வருவதால் அதனை இடையில் ஒரு தருணத்தில் களம் இறக்கிடுவோம் !

TEX ஓவர்டோஸ் என்பதை நான் மட்டுமன்றி நண்பர்கள் அனைவருமே பெரியதொரு பிரச்னையாகக் கருதப் போவதில்லை என்பது நிச்சயம் ! 46 இதழ்களைக் காணவிருக்கும் ஓராண்டில் - லயன் # 250-ஐத் தாண்டி மொத்தமே 2 இதழ்கள் தான் TEX-க்கு எனும் போது இதனில் அயர்ச்சி நேரும் ஆபத்துக்கள் கிடையாது என்றே நினைக்கிறேன் ! அது மட்டுமன்றி இம்முறை நாம் தேர்வு செய்ய முனைந்திருக்கும் TEX கதைக்களங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவைகளாய் இருக்கும் ! So ஒரே ஸ்டீரியோடைப் அடிதடிக் கதைகளாய் இராது என்பது நிச்சயம். தவிர, விற்பனைக்குத் துளியும் சிரமம் தரா ஒரு box office நாயகரை கொஞ்சம் தாராளமாகவே பயன்படுத்திக் கொள்வதில் தப்பில்லை தானே ?  இப்போது சேலத்தில் நடைபெறும் புத்தக விழாவினில் கூட நம் ஸ்டாலில் முதலில் காலியாகியுள்ளது - "கார்சனின் கடந்தகாலம்" தான் !! நேற்றைக்கே TEX பிரதிகள் அத்தனையிலும் இரண்டாவது ரவுண்ட் pack பண்ணி அனுப்பியுள்ளோம் ! 

இங்கே சின்னதாய் ஒரு விஷயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன் ! "எனக்குப் பிடிக்காத கதைகளை நீங்கள் தலையில் தூக்கிக் கொண்டு சிலாகிப்பதால் உங்களையும் பிடிக்கவில்லை !" என்ற ரீதியில் அவ்வப்போது கடிதங்கள் பக்கம் பக்கமாய் வந்து சேர்வதும் தற்போதைய நடைமுறையில் உள்ளது ! எல்லாரிடமும் நல்ல பிள்ளையாவது  அந்த ஈசனுக்கே இயலாக் காரியமென்ற நிலையில் - சுண்டைக்காய் நானெல்லாம் எம்மாத்திரம் ? என்பது புரியாமலில்லை !   ஆனால் - சில வேளைகளில் இந்த டெக்ஸ் - டைகர் ; மும்மூர்த்திகள் - புதியவர்கள் தொடர்பான  உராய்வுகளை ஒரு சில வாசகர்கள் ஓவராய் தலைக்குக் கொண்டு செல்கின்றனரோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது ! தவிர, "மூத்த வாசகர்கள் ; நெடுநாள் வாசகர்கள் - எங்கள் பேச்சுக்கு பெரியதொரு மதிப்பில்லை ; புதுசாய் வந்தவர்கள் இன்று சொல்லும் கருத்துக்களுக்குத் தான் காரியம் ஆகிறது !" என்ற புகார்களையும் இது போன்ற கடிதங்களில் பார்க்க முடிகிறது ! சொல்லப்போனால் சமீபமாய் வந்திருக்கும் ஒரு கடிதத்தில் : "புதிய வாசகர்களுக்கு அறிவுரை" என்றதொரு பக்கமே உள்ளது !! எனக்குக் கேள்விக்குறியாய் நிற்பது ஒன்றே ஒன்று மட்டுமே !  True - அபிப்ராயங்களைக் கோரிப் பெறுகிறேன் தான் ; அவற்றைப் பரிசீலிக்கவும் செய்கிறேன் தான் ; சொல்லப்படும் கருத்தில் பொருள் இருப்பதாய்த் தோன்றும் பட்சங்களில் எனது சிந்தனைகளை மாற்றிக் கொள்வதும் உண்டு தான் ! ஆனால் ஒருபோதும் கருத்து வெளிப்படும் வாசகரின் தொன்மையை (!!) கணக்கில் கொள்பவனல்லவே நான் ! தவிரவும் அடிப்படையில் கோவேறு கழுதையைப் போன்ற பிடிவாத சிந்தனைக்காரன் நான் என்பதையோ ;  எனக்கென்று ஒரு முடிவெடுக்கும் ஆற்றல் உண்டென்பதையோ புகார் கடிதங்களை பக்கம் பக்கமாய்  அனுப்பும் நண்பர்கள் மறந்து விடுவதாய்த் தோன்றுகிறது ! தங்கள் சிந்தனைகளோடு ஒத்துப் போகும் வேளைகளில் நானொரு மதியூகியாகவும் ; உடன்பாடில்லா தருணங்களில் வில்லனாகவும் நான் காட்சி தருவது  புரிகிறது ! மாறுவது பார்வைகளின் கோணங்களே தவிர, நானல்ல என்பதை என்றோ ஒரு நாள் நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புவதைத் தாண்டி நான் செய்யக் கூடியதாக  வேறென்ன இருக்க இயலும் ? Anyways ஒரு அவசியத்துக்குக் கூட கடிதம் எழுத மறந்திருக்கும் இந்நாட்களில் நம் பொருட்டு இத்தனை சிரமம் மேற்கொள்ளும் நண்பர்களை பாராட்டவும் தேவை தான் ! 

Moving on to lighter things : நமது 2015-ன் அட்டவனையை ஓரளவிற்கு யூகிக்கும் நண்பருக்கு 2015-ன் சந்தா நம் அன்பளிப்பு என்று எப்போதோ நான் இங்கே பதிவு செய்திருந்தது நினைவுள்ளது ! பல நண்பர்கள் தங்கள் தேர்வுகளை எழுதியிருந்த போதிலும், closest & the earliest was பெங்களூரு பரணி ! வாழ்த்துக்கள் நண்பரே ! சந்தா உங்களுக்கு நமது பரிசு என்பதால் - நீங்கள் அனுப்பியிருக்கும் தொகையை திங்களன்று திரும்ப அனுப்பிடுகிறோம் !!

புதன் முதலாய் உங்களின் சந்தாக்கள் உற்சாகமாய் வரத் தொடங்கியுள்ளது சந்தோஷச் சேதி ! அதிலும் கிட்டத்தட்ட அனைவருமே சந்தாக்கள் ABC என மூன்றையும் தேர்வு செய்திருப்பது icing on the cake ! So இம்முறை இந்த reprint படலம் மண்ணைக் கவ்வாது என்பது நிச்சயம் ! இந்த இதழ்களுக்கு உங்களின் பங்களிப்பாய் ஏதேனும் இருக்க முடிந்தால்  -  we would be delighted ! 128 பக்க புக்கில் - 120 பக்கக் கதைகள் நீங்கலாய் 8 பக்கங்கள் காலி இருக்கும் ! அவற்றினில் 4 பக்கங்கள் விச்சு & கிச்சு ஜோடிக்கு ஒதுக்கியான பின்னே பாக்கியுள்ள 4 பக்கங்களில் உங்களின் 'மலரும் நினைவுகளைப்' பகிர்ந்திட ஆசையா ?  அந்தக் கதைகள் வெளியான ஒரிஜினல் நாட்களில் உங்கள் பால்ய சந்தோஷங்களைப் பகிர்ந்திட இப்பக்கங்களை ஒதுக்குவோமா ?


மறுபதிப்புகள் என்ற பேச்சு ஓடிக் கொண்டிருக்கும் சமயத்திலேயே இன்னுமொரு சேதியும் கூட ! ஜனவரி 2015-ன் சென்னைப் புத்தக விழாவின் போது 2012-ல் வெளியாகி  ; இன்று நம்மிடம் ஸ்டாக் இல்லாது போன நிறைய இதழ்களும் கிடைத்திடும் ! அந்தந்த இதழ்களோடு பின்னால் இருந்த black & white பக்கங்களுக்குக் கல்தா கொடுக்கப்பட்ட நிலையில் "என் பெயர் லார்கோ " ; டபுள் த்ரில் ஸ்பெஷல் ; தங்கக் கல்லறை : WILD WEST SPECIAL ஆகியன January'15-ல் தயாராகி இருக்கும் ! And before  forget : ஜனவரி புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில் - துவக்க 2 நாட்களின் மாலைகளிலும் (ஜனவரி 9 & 10) ; தொடரும் வார இறுதியினிலும் நானும், ஜூ.எ.வும் நமது ஸ்டாலில் ஆஜராகி இருப்போம் உங்களை சந்திக்கும் பொருட்டு ! So இப்போதே ரயில் டிக்கெட்டுகளைத் தயார் செய்திட நினைக்கும் நண்பர்கள் can do so !  "மின்னும் மரணம்" மொத்த collection-ன் வெளியீட்டை  நண்பர்கள் அபிப்ராயப்படுவது போல 2015 ஏப்ரலில் சென்னையில் நடக்கும் (இரண்டாவது) புத்தக விழா சமயத்தில் வெளியே எங்கேனும் ஒரு சின்ன ஹாலில்  வைத்துக் கொள்ளலாம் ! பெரிய பந்தாக்கள் ஏதுமின்றி - நண்பர்களை சந்திக்க இதுவொரு வாய்ப்பாகிடும் பட்சத்தில் - புத்தக விழாக்களுக்குள் யாரையும் தொந்தரவு செய்யாமலே நம் பாட்டைப் பார்த்தது போலவும் ஆகிடும் ! மாலை வேளையில் சந்திப்பை வைத்துக் கொண்டால்  ஒரு டின்னரோடு மின்னும் மரணத்தைச் சுவைக்க சாத்தியமாகும் ! What say all ?  

2015-ன் கதைகளைத் தேர்வு செய்வதை விட அவற்றிற்குப் பெயர் வைக்கும் படலம் தான் டப்பா டான்ஸ் ஆடச் செய்யும் வேலையாக அமைந்தது ! 'பளிச்' என்று தலைக்குள் உதிக்கும் முதல் பெயரானது - தெலுங்கு டப்பிங் படத்தின் டைட்டில் போல காரசாரமாய் இருந்து நிறைய கடுப்பேத்திய நாட்களும் கணிசமாய் உண்டு !"மரணம்" என்ற சொல்லை முடிந்தளவு ஓரம் கட்ட முயற்சித்தாலும் 2 இதழ்களின் பெயர்களின் ஓரங்களில் அது தொற்றிக் கொள்வதைத் தவிர்க்க இயலவில்லை ! வண்டி வண்டியாய்க் கதைச் சுருக்கங்களை எத்தனை தான் படித்தாலும் - வெறுமனே கதைகளின் outline -ஐ மாத்திரமே பிடித்துக் கொண்டு ஒரு decent பெயரைத் தேர்வு செய்வது சுலபமாகவே இருப்பதில்லை  ! "விடிய விடிய விஞ்ஞானி " ; "ஒற்றை நொடி ஒன்பது தோட்டா.." போல சில பெயர்கள் நொடியில் உதித்த போதும், ஒரு சிலவற்றிற்கு மொக்கை தான் போட வேண்டியிருந்தது ! தொடரும் மாதங்களில் அந்தந்த கதைகளின் மீது பணியாற்றும் சமயத்தில் இன்னமும் பொருத்தமாய்க் கதைகளுக்குப் பெயர்கள் சிக்கிடும் பட்சத்தில் - "பூ"வுக்குப் பதிலாய் "புய்ப்பம்" இடம் பிடிக்கக் கூடும் ! (அது சரி...இம்மாத லார்கோவின் கதைக்கு இன்னொரு பெயர் வைப்பதாக இருப்பின் - நீங்கள் தேர்வு செய்யும் பெயர் என்னவாக இருக்கும் ? Alternate Name Game ஒன்றினை அவ்வப்போது செயல்படுத்திப் பார்ப்போமே ?  )

 சரி, சந்தா குறித்தான சில வினாக்களுக்கு இனி என் பதில்கள் :

அயல்நாட்டுச் சந்தாக்கள் பற்றி : ஒவ்வொரு முறையும் நமது இதழ்களின்  எடைகள் மாறி வருவதால் ; சரியான தபால் கட்டணங்களை முன்கூட்டியே கணிக்க சாத்தியமாவதில்லை ! நேற்றுக் கூட நவம்பரின் 3 இதழ்களையும் தபாலில் அனுப்ப என்னென்னமோ கட்டணக் குளறுபடிகள் நேர்ந்து இறுதியில் ரூ.920 கட்டிடத் தேவையானது ! So 2015-ன் சந்தாவுக்கு மொத்தமாய் ஒரு தொகை வசூலித்து விட்டு - அதனிலிருந்து கணக்கு வைத்துக் கொள்வதே சுலபம் என்று தீர்மானித்துள்ளோம் ! இந்தியப் பணத்துக்கு ரூ.10,000 கிடைக்கும் விதமாய் பணம் அனுப்பிடுங்களேன் ப்ளீஸ் ! 
------------------------------------------------------------------------------------------------------------
ப்ரொபசனல் கொரியர் - தமிழகத்துக்கு வெளியே - 4400/- (A+B+C)
ப்ரொபசனல் கொரியர் - தமிழகத்துக்குள் (A+B+C) - ???

தமிழக ST கூரியர் கட்டணங்களை விட ரூ.225 ஜாஸ்தியாய் !
----------------------------------------------------------------------------------------------------------------------------------

அதே போல சந்தாக்களில் அல்ஜீப்ரா பார்முலாக்கள் பணிகளில் AB : AB  ; ABC என்றெல்லாம் இருக்கும் நிலையில் - தனியாக C மட்டும் போதும் என்ற தேர்வுகள் நம்மவர்களின் பணிகளை சிக்கலாக்கி விடும் ! தவிரவும், மெயின் சந்தா A இல்லாத பட்சத்தில் - கூரியர் கட்டண சலுகைகள் சாத்தியமாகாது ! So மறுபதிப்பு மட்டுமே போதுமென்று நினைக்கும் நண்பர்கள் அவற்றை அவ்வப்போது நமது ஆன்லைன் தளத்தில் வாங்கிக் கொள்ளலாம் ! 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

சந்தா C -ன் பாக்கி 8 மறுபதிப்புக் கதைகள் எவை ? 

அடுத்த batch of 4 books வெளியாகும் வேளை நெருங்கும் போது அறிவிப்புகள் வந்திடும் ! அது வரை களம் யூகங்களின் வசம் ! 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒற்றை நொடி ஒன்பது தோட்டா.!

சார் ரொம்ப நீநீநீளமா தொடர வேண்டாம் சார்.!
பயம்மா இருக்கு.!!
க்ரைம் த்ரில்லர்., ரொம்ப gap விட்டா புஸ்ஸுன்னு போயிடும்.!
அடுத்தடுத்து போட்டு முடிச்சிட்டா நல்லாருக்கும் சார்.!//

No fears...! .இதுவொரு 3 பாகத் தொடர் மாத்திரமே ! வரும் மார்ச்சில் இரண்டாம் பாகமும் ; 2015-ன் இறுதிக்குள் இறுதிப் பாகமும் உருவாகிடும் பிரெஞ்சில் ! நாம் இதனைக் கையாளப் போவதே 2015-ன் செப்டெம்பர் வாக்கில் என்பதால் 2016-ன் துவக்க மாதங்களில் பாக்கி 2 பாகங்களையும் போட்டு சூட்டோடு சூடாய் முடித்து விடலாம் !

---------------------------------------------------------------------------------------------------------------------------------
//ஒரு திடீர் திருப்பமாய் - 2 புதிய படைப்பாளிகள் நமது பல நாள் கோரிக்கைகளுக்கு ஒரு மார்க்கமாய் தலை அசைக்கத் தயாராகும் ஒரு சூழல் உருவாகி வருகிறது !!//
புதிய படைப்பாளிகள் என்பதால், கதைகளும் இதுவரை நமக்கு தமிழில் பரிச்சயமில்லாதவையாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது. //

நமக்குத் தான் இரண்டே கியர்கள் தானே..? "தொற தொற" வென உதறும் முதல் கியர் - அல்லது நேரடியாக டாப் கியர் !! நானும் இதற்கு இடைப்பட்டதொரு கியரில் செட்டில் ஆக வேண்டுமென என்ன தான் முயற்சித்தாலும் சபலங்கள் பல ரூபங்களில் தோன்றத் தான் செய்கின்றன  ! அவற்றுள் லேட்டஸ்ட் தான் இந்தப் புது பதிப்பகங்களின் - புதுக் கரிசனப் பார்வைகள் ! என்றோ ஒரு காலத்தில் நான் விக்கிரமாதித்தனைப் போல விடா முயற்சியாய் போட்டு வைத்த துண்டுகளின் பலன் தாமதமாய் துளிர் விடுவது போலொரு சூழ்நிலை ! ஒன்றுக்கு மூன்றாய் புதிய படைப்பாளிகள் நம் பக்கமாய் காதல் கணைகளை வீசிட - அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் உறுதியாகிடும் பட்சத்தில் இந்த அட்டவணையிலேயே புதியவர்களைப் புகுத்தி விடுவதென ஓசையின்றிக் காத்திருந்தேன் ! But நம் அவசரத்தின் பொருட்டு - அவர்களை 'நை-நை' என்று அரிக்க மனமின்றி பேச்சு வார்த்தைகளை அதன் போக்கிலேயே செல்ல விட்டு விட்டேன் ! மூன்றில் ஒன்று click ஆனால் கூட ஒரு சந்தோஷமான சங்கடம் நமக்குக் காத்துள்ளது என்பது மட்டும் உறுதி !! Fingers...toes...all crossed !! 
---------------------------------------------------------------------------------------------------------------------------------

காமிக்ஸ் புதையலா...? அலிபாபா வின் புத்தக சுரங்கமா ...? காலயந்திரம் ஒன்று இருந்தால்
அதில் ஏறி 2015 டிசம்பர் சென்று எல்லா கதைகளையும் இந்நேரம் படித்து முடித்திருப்பேன்
ABC மட்டும் போதாது D ஒன்றும் வேண்டும் பழைய மினி லயன் ,JUNIOR LION புத்தகங்களின்
தொகுப்புக்காக ..எடிட்டர் மனம் வைப்பாரா .....?
English-ல் உள்ள சகல எழுத்துக்களையும் ஆக்கிரமிக்க சரக்கெல்லாம் உண்டு தான் ; ஆனால் முட்டையிடும் வாத்தை 'யெவ்வ்வ் '' என்று ஏப்பம் விட்ட கதையாகிடக் கூடாது என்பதும் முக்கியம் தானே ? கோடிகளில் உள்ள ஜனத்தொகையின் மத்தியில் நான்கிலக்க எண்ணிக்கையாய் மாத்திரமே உலவி வரும் இந்த காமிக்ஸ் காதலர் குழுவின் எண்ணிக்கை மேன்படும் நாளில் வானமே எல்லை !    
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்புறம் நமது சேலம் புத்தக விழாவின் News : முதல் இரு நாட்களிலுமே உற்சாகம் தரும் விற்பனை + சந்தா முன்பதிவுகள் நடந்து வந்துள்ளன ! பெரியதொரு எற்பாடுகளின்றி தனியார் நிறுவனம் நடத்தும் விழா - எவ்விதம் இருக்குமோ ? என்ற லேசான தயக்கம் எனக்குள் இருந்தது ; ஆனால் சேலம் மக்களின் ஆர்வம் + நமது நண்பர்களின் அதி உற்சாக உதவிகள் ஒன்றிணைந்து இந்த விழாவை  நமக்கொரு புது விற்பனை outlet -ஐ உருவாக்கியுள்ளது என்று நினைக்கத் தோன்றுகிறது ! Thanks ever so much all !!!






இந்தப் பதிவை நிறைவு செய்யும் முன்பாக சின்னதொரு snippet -ம் கூட :  :

சென்ற ஞாயிறின் மறுபதிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து இங்கு நாம் கண்ட அதகள response-ஐ லார்கோ + புது அட்டவணை கூட ஈட்டவில்லை எனும் போது OLD IS STILL VERY MUCH THE GOLD TO CRAVE FOR  - என்பது புரிகிறது !! இந்த பிரிட்டிஷ் படைப்புகளை அவர்கள் தேசத்தில் கூட இத்தனை கொண்டாடியிருக்க மாட்டார்களென்பது நிச்சயம் !! 'கூடிய சீக்கிரமே சட்டித் தலையன் அர்ச்சியையும் உள்ளே நுழைத்து விடுவோமே !' என்று ஜூனியர் வலுவாய் சிபாரிசு செய்து வரும் நிலையில்  - அந்தப் புண்ணியவானையும் 2016-ன் பட்டியலுக்குள்ளே இழுத்து வந்தால் ஆச்சர்யம் கொள்ளாதீர்கள் !! 



நம் பால்யங்களை பெருமளவில் வசீகரித்த இந்த 3 பிரிட்டிஷ் சூப்பர் ஹீரோக்கள் இன்றைய சூழலில் அவர்களுக்குள் பேசிக் கொண்டால் என்ன மொக்கை போட்டிருப்பார்களோ ? அந்தக் கற்பனைக் குதிரைகளைத் தறி கெட்டு ஓட விடலாமே ?! 



திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போன சிறு பிள்ளைகளாய் லார்கோவும், ரிப்போர்டர் ஜானியும் கடந்த பதிவினில் ஓரம் கட்டப்பட நேர்ந்ததால் - இந்நேரத்திற்குக் கதைகளைப் படித்திருக்க நேரம் கிடைத்திருக்கும் பட்சத்தில் உங்களின்  விமர்சனங்களைக் கொஞ்சமாய் பதிவிடலாமே ? see you around next week folks ! Bye for now !

P.S: உடல்நலமின்றி இருப்பினும், காமிக்ஸ் காதலைக் கைவிடாது நம் பதிவுகளை போனில் தொடர்ந்து பார்த்து வரும் நம் நண்பர் பிரான்சைச் சார்ந்த திருச்செல்வம் ப்ரபானந்த் நலம் பெற வேண்டிக் கொள்வோமே !! GET WELL SOON !! WE ARE ALL WITH YOU !! 

Wednesday, November 05, 2014

புதுசு கண்ணா..புதுசு..!

நண்பர்களே,

வணக்கம். மழை பெய்து ஓய்ந்தது போன்றதொரு உணர்வு !! பதிவிட்ட ஞாயிறில் 4100 page views (நம்மைப் பொருத்த வரை இதுவொரு உச்சம் !!) ; அன்றைக்கு மாத்திரம் 360 பின்னூட்டங்கள் (என்னதையும் சேர்த்தே ) ; குறைந்த பட்சம் 45 மின்னஞ்சல்கள் - என்று மறுபதிப்புகளின் அறிவிப்பை ஒரு திருவிழாவாய் உருமாற்றி விட்டீர்கள் !! இம்முயற்சிக்கு வரவேற்பிருக்கும் என்பதை நான் உணர்ந்திருந்தேன் தான் ; ஆனால் அதன் பரிமாணத்தை இத்தனை பெரிதாய் visualise செய்து பார்க்கும் பேராசை எனக்கிருக்கவில்லை தான் ! பின்னூட்டங்கள் குவியும் வேகத்துக்கே வீட்டுக்குள் ஜூனியரின் புன்முறுவலின் அகலமும் விசாலமாகிக் கொண்டே போவதை கவனிக்க முடிந்தது ; 'நாங்க தான் சொன்னோம்லே..! ' என்பதாய் அதற்குப் பொருள் எடுத்துக் கொண்டேன் ! எது எப்படி இருப்பினும், ஒன்று தெளிவாய்ப் புரிகிறது ! சகல துறைகளிலும் மாற்றங்களை துரிதமாய் அரவணைத்துக் கொள்கிறோம் !! நேற்று வரை உடுப்பியில் வடையும், பஜ்ஜியும் சாப்பிட்டு வந்த நமக்கு இன்று KFC -க்களும், McDONALDS க்களும் ஒ.கே.வாகிப் போய் விட்டன ; தடி தடியான கறுப்பு நிற போன்களின் ரிசீவரைத் தூக்கிக் காதில் வைத்துக் கொண்டு மறு முனையில் யாராவதொரு புண்ணியவான் "நம்பர் ப்ளீஸ் ?" என்று கேட்க மாட்டாரா என்று ஏங்கிய நாட்கள் மாறிப் போய் இன்றைக்கு ஆப்பிள் ; ஆரஞ்சு என்றெல்லாம் பாக்கெட்டுக்குள்ளேயே தொலைதொடர்பு சகலமும் அடங்கிவிட்டுள்ள காலங்களும் பிறந்து விட்டன !  மைக் செட் கட்டிக் கொண்டு காது ஜவ்வு கிழிய நடந்த தேர்தல் பிரச்சாரங்கள் - இன்றைக்கு ஹை-டெக்காகி FACEBOOK-லும் ; இணையத்திலும் நம் வீட்டுக்குள் ஓசையின்றிப் பிரவேசிப்பதும் இயல்பாகிப் போய் விட்டது ! ஆனால் நம் பால்யங்கள் சம்பந்தப்பட்ட சங்கதிகளில் மட்டுமே ஒரு வித சாஸ்வதம் ; ஒரு மாற்றமின்மை ; ஒரு ஸ்திரத்தன்மை தேவைப்படுகின்றது நமக்கு ! நேற்றைக்கு நண்பர் அனுப்பிய இந்தப் படம் வயிற்றைப் பதம் பார்த்தது ஒருபக்கமிருக்க, நம் நிலையை நிஜமாய்ப் பிரதிபலிப்பதாகவும் நினைத்தேன் !! பாருங்களேன்..! 


Maybe இந்த டயலாக்கை நான் பேசுவதாய் இருப்பதை விட, எனக்குச் சொல்லப்படுவதாய் சித்தரிக்கப்பட்டிருந்தால் இன்னமும் பொருத்தமாய் இருந்திருக்குமென்று நினைத்தேன் !! புதுக் களங்களுக்குள் பயணம் செல்லும் முயற்சிகளை ரசிப்பது நிஜம் தான் என்றாலும், நிறையப் பேரின் மனங்களின் ஒரு ஓரத்தில் குடி கொண்டிருக்கும் அந்த குழந்தைத்தனம் துள்ளிக் குதித்து வெளிவர ஒரு வாய்ப்புக்குத் துடிப்பது நிதர்சனமாய்த் தெரிகிறது ! 12 இதழ்களின் பணிகளுக்குப் பிரதிபலனாய் நிறைய நண்பர்களுக்கு இத்தனை துள்ளல்கள் சாத்தியமே என்றால் - we'd be more than happy to oblige !! 

ஆனால் இந்த உற்சாகம் ; உத்வேகம் நம்மை திசை மாற்றிடும் விஷயமாக வளர்ந்திடக் கூடாதென்பதிலும் நான் தெளிவாகவே உள்ளேன் ! "ஆர்ச்சி மறுபதிப்பு" ; "காரிகன் மறுபதிப்பு" ; "வேதாளர் மறுபதிப்பு" என்று விதவிதமாய்க் கோரிக்கைகள் எழுந்தாலும் - இப்போதைக்கு இந்தப் 12 கதைகளைத் தவிர்த்த திட்டமிடல் எதற்கும் நம்மிடம் நேரம் இருக்கப் போவதில்லை ! விற்பனை எனும் அக்னிப்பரீட்சையை இவை தாண்டிடும் பட்சத்தில் கூட எனது prime focus புதுக் கதைகளிலும், களங்களிலும் மாத்திரமே இருந்திடப் போவது உறுதி ! வெற்றி-தோல்வி ; விற்பனைகள்  - வரவு-செலவுகள் என்பதையெல்லாம் தாண்டி என்னைத் தற்போது இயக்கி வருவது - புதிதான முயற்சிகளுக்குள் புகுந்திடும் சமயங்களில் நாம் உணரும் ஒரு த்ரில்லும்  ; அவற்றை ரசிக்கும் ஆர்வமும் மட்டுமே ! ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன்பாக ஒரு கிராபிக் நாவலின் பணிகளுக்குள்ளும் ; விடிந்த வேளைகளில் ஒரு கார்ட்டூன் கதையின் வேலைகளுக்குள்ளும் மூழ்கிக் கிடந்து பழகி விட்டு - இனி வரும் நாட்களில் "சட்டித் தலையா ; சாக்கடைப் புழுவே.." என்றெல்லாம் ஆர்ச்சிக்கும், ஸ்பைடருக்கும் வசனம் எழுத பேனாவைத் தூக்கினால் கொட்டாவியைத் தாண்டி வேறு எதுவும் வந்திடுமென்று தோன்றவில்லை ! So மறுபதிப்பு எனும் இந்தப் பாயாசம் - இலை மூடுவதற்கு முன்பானதொரு இனிப்பாய் ; ஆசைப்பட்டால் இன்னொரு கரண்டி மட்டுமே போட்டு சாப்பிட்டுப் பார்த்துக் கொள்ளக் கூடிய விஷயமாய்த் தான் இருக்க முடியும் ! 'இனிக்கிறதே !' என்பதற்காக செம கும்மு கும்மி விட்டு - 'திகட்டுகிறதே !!' என்று 'ஞே' முழிக்கு இடம் தருவானேன் ?!!  

இந்த அமளி துமளியில் இம்மாதம் வரக் காத்திருக்கும் ரிப்போர்டர் ஜானியின் "சைத்தான் வீடு" மறுபதிப்பு - கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாக விழிப்பதும் அப்பட்டம் ! 27 ஆண்டுகளுக்கு முன்பாக திகில் காமிக்ஸில் வெளியான இந்த ஜானி சாகசத்தின் அட்டைப்படம் இதோ :  


ஒரிஜினலாய் 1987-ல் நாம் பயன்படுத்தியிருந்த அட்டைப்படமும் இதழின் உள்ளே இடம் பிடிக்கிறது ! So - nostalgia பிரியர்களுக்கென பழைய அட்டைப் படம்  ; புது நண்பர்களுக்காகப் புதியதொரு டிசைன் என்ற பாணி இம்முறை ! கதையைப் புதிதாய்ப் படிக்கப் போகும் வாசகர்களுக்கும் சரி ; ஆரம்ப நாட்களில் படித்து விட்டு மறந்து போயிருக்கும் வாசகர்களுக்கும் சரி - வண்ணத்தில் இதனை இன்று ரசிக்கும் அனுபவம் எவ்விதமிருந்தது என்று அறிந்திட ஆவல் ! As always, we would love to hear from you !!

ஜானியின் சைத்தான் வீடோடு - லார்கோவின் "ஒரு நிழல் நிஜமாகிறது" இதழும் இணைந்து நேற்று  மாலை கூரியர்களில் இங்கிருந்து புறப்பட்டுள்ளது..! Proffessional கூரயரில் வழக்கம் போல இன்று பட்டுவாடாக்கள் ஆகிடும்  ; ஆனால் ST கூரியரில் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளும் வாசகர்கள் தம் இஷ்ட தேவதைகளை ஒருமுறை வணங்கிக் கொண்டே கூரியரை எதிர்பார்ப்பது நலம் ! தொடரும் அடைமழை நிறைய ஜூரங்களையும், சுகவீனங்களையும் உண்டாக்க - இங்குள்ள ST-ன் பணியாளர்களில் பலர் நேற்றைக்கு லீவில் இருந்ததால் எவ்வளவு பிரதிகளை டெஸ்பாட்ச் செய்தார்கள் ; எவ்வளவை அவர்களது ஆபீசில் துயில் பயில விட்டார்களோ - தெரியவில்லை ! So இன்று இரவு அல்லது நாளைய பகலில் அவர்கள் கூரியர் ரசீதுகளை நமக்கு வழங்கும் போது தான் நிலவரம் வெளிச்சமாகும் ! Tracking நம்பர் கேட்டு போன் செய்யும் நண்பர்கள் இன்று மட்டும் பொறுமை காத்தல் நலம் என்பேன் ! Sorry in  advance folks !

நான் இன்னுமொரு sorry சொல்லவும் அவசியமாகிடும் - லார்கோவின் அட்டைப்படக் காகிதத்தின் பொருட்டு ! "இரவே..இருளே..கொல்லாதே" இதழுக்கும், லார்கோவின் இந்த இதழுக்கும் ராப்பர்கள் அச்சிட ஒரே மில்லின் அட்டையைத் தான் வாங்கியிருந்தோம் - எப்போதும் போல ! ஆனால் இடையில் ஏதோ சின்ன கோல்மால் நடந்து - சற்றே கனம் குறைவான அட்டையை அந்த ஏஜென்ட் அனுப்பி வைத்திருக்கிறார் ! வழக்கமான கனம் இல்லாத காரணத்தால் தான் "இரவே.. இருளே.. கொல்லாதே .." இதழின் அட்டை தூக்கிக் கொண்டே நின்றது !  அதனோடு அச்சான லார்கோவிலும் அதே நிலை தானிருக்கும் என்பதற்கு முன்கூட்டியே apologies ! 'எப்போதும் நாம் கொள்முதல் செய்யும்  நிறுவனம் தானே !' என்று கொஞ்சம் அசட்டையாக இருந்து விட்டதற்கான பலன் இது ! தொடரும் நாட்களில் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி இவ்விஷயங்களை சரி பார்க்க ஏற்பாடுகள் செய்துள்ளேன் !

ஏற்பாடுகள் எனும் போதே - இன்னுமொரு விஷயம் ! இம்மாதம் லார்கோவின் உட்பக்கங்களை அச்சிட பிரத்யேக ink ரகங்களைத் தருவித்துள்ளோம் ! லார்கோவின் வர்ணச் சேர்க்கைகள் எப்போதுமே அடர்த்தியான கலர்களில் இருப்பதால் அவற்றை ஆர்ட் பேப்பரில் பார்க்கும் போது கூடுதல் depth தெரிவது வழக்கம் ! "வர்ணங்களை அப்பியது போலுள்ளது ; ஓவர் மை " என்றெல்லாம் நண்பர்கள் சிலர் சென்ற லார்கோவிற்கு இன்ஸ்டன்ட் தீர்ப்புகள் எழுதியது நினைவிருந்ததால் - முடிந்தளவு அவர்களுக்கும் நெருடல்கள் தோன்றாதிருக்க முயற்சித்துள்ளோம் ! ஆனால் basic ஆக லார்கோவின் கலரிங் ஸ்டைல் பக்கமாய் உங்கள் கவனங்களைக் கொஞ்சமே கொஞ்சமாய் இட்டுச் சென்றால் நான் சப்பைக்கட்டு கட்டவில்லை என்பது புலனாகும் ! இதோ - கீழே உள்ளது லார்கோவின் 4 வர்ணங்களும் ஒன்றிணைந்ததொரு வண்ணப் பக்கம் ! அதனைத் தொடர்வது அந்த 4 வர்ணங்களின் தனித் தனியான digital பைல்கள் - தலா மஞ்சள் ; ப்ளூ ; சிகப்பு & கறுப்பில் ! ப்ளூ & சிகப்பில் உள்ள கலரிங் அடர்த்தியை சற்றே பார்த்தீர்களானால் நான் சொல்ல வரும் விஷயம் புரிந்திடும் !

கறுப்பு நீங்கலாய் பாக்கி அனைத்து கலர்களிலும் இத்தனை density இருக்கும் போது அதனை ஆர்ட் பேப்பரில் அச்சிடும் சமயம் - முகங்கள் ; பின்னணிகள் சகலமும் dark ஆகக் காட்சி தருவது இயல்பு ! அவற்றை மட்டுப்படுத்த இம்முறை கொஞ்சம் வித்தியாசமான ஜப்பான் மைகளை பயன்படுத்தியுள்ளோம் ! Fingers crossed !

அப்புறம் 'புலி வருது..புலி வருது..' கதையாய் கடந்த 2 மாதங்களாய் நான் அலப்பரை கொடுத்து வரும் 2015-ன் அட்டவணையும் ஒரு குட்டி பாக்கட் நோட் பாணியில் ஆர்ட் பேபரில் இம்மாத இதழ்களோடு பயணமாகியுள்ளது  ! இதன் பொருட்டு முந்தைய இரவு 4 மணி வரை எங்கள் அச்சகமே விழித்திருந்தது தனிக் கதை !! கடந்த நான்கு வாரங்களாய் கதைகளை இணைப்பது ; அடிப்பது ; புதிதாய் எதையாவது சேர்ப்பது ; அப்புறம் திரும்ப மண்டையைச் சொரிவது என்று  நானும் குழம்பி, நமது டிசைனர் ரமேஷையும் கிறுக்காய்படுத்திய அனுபவம் தான் நித்தமும் !  இறுதியாக ஒரு உலக மகா அட்டவணையைத் தயார் செய்து விட்டேன் என்றெல்லாம் நான் பீலா விடப் போவதில்லை ! but  முடிந்தளவுக்கு உருப்படியான கதைகளாய் ; சுவாரஸ்யமான புது அறிமுகங்களாய்க் கொணர நிறைய பிரயத்தனங்கள் மேற்கொண்டுள்ளேன் என்பது மட்டும் நிஜம் ! இந்தப் பட்டியல் இன்று நம்மிடையே ஒரு 'பளிச்' ஆர்வத்தையும் ; 12 மாதங்கள் கழிந்ததொரு பொழுதில் மிகுந்த மனநிறைவையும் தர வல்லதாய் இருந்திட வேண்டுமென்ற பிரார்த்தனை என் உதடுகளில்..!

கதைகளைப் பற்றி ; அவற்றின் தேர்வுப் பின்னணிகளைப் பற்றி எழுதியுள்ளேன் - வண்டி வண்டியாய் !! In fact அடுத்த ஒரு மாதத்துக்கு நீங்கள் என் எழுத்துக்களைக் கண்டாலே தெறித்து ஓடப் போகும் அளவுக்கு இங்கும், இம்மாத இதழ்களிலும் எழுதோ - எழுதென்று எழுதியுள்ளேன் ! காமிக்ஸ் டைம் - 2 பக்கங்கள் ; காமிக்ஸ் டைம் II - 6 பக்கங்கள் ; சிங்கத்தின் சிறு வயதில் - 3 பக்கங்கள் ; சிங்கத்தின் சிறுவலையில் - 2 பக்கங்கள் ; காமிக்ஸ்.com -1 பக்கம் என்று சிக்கிய சகல காலி இடங்களிலும் எனது பட்டா தான் !!

தொடரும் நாட்களில் டெக்ஸ் ரசிகர்கள் ஏராளமாய் ஆனந்தம் கொள்ள நிறையவே முகாந்திரங்கள் இருந்திடப் போவது உறுதி ! புத்தாண்டின் அட்டவணையில் மட்டுமல்லாது - இந்தாண்டிலுமே அவர்களுக்கு ஒரு அதிரடி பாக்கியுள்ளது ! சில நண்பர்கள் யூகித்திருக்க ; பலர் யூகங்களில் ஆழ்ந்திருக்க - இதோ KING SPECIAL -ன் நிஜ முகம் !!

வழக்கமான "டமால் ; டுமீல் ; ணங்...சத்..க்ஹும்.."படலமாய் இந்தக் கதை இராதென்பது நிச்சயம் ! கொஞ்சம் வரலாறு ; கொஞ்சம் டெக்ஸ் பாணி ; கொஞ்சம் கிளாசிக் கௌபாய் கதைச் சாயல்கள் என இது ஒரு வித்தியாசமான attempt ! அழகான artwork ; டெக்ஸ் குழுவில் நால்வரும் இணைந்தே செல்லும் கதையோட்டம் ; வலிமையான சக பாத்திரங்கள் - என்று KING SPECIAL -ன் 336 பக்கங்களிலும்  டெக்ஸ் ரசிகர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்குமே ரசிக்க சரக்கிருக்கும் !! வல்லவர்களை வரவேற்கக் காத்திருங்கள் ....டிசம்பரில் மட்டுமென்றில்லை - தொடரும் ஆண்டிலும் கூட !! ஏற்கனவே நான் ஈரோட்டில் அறிவித்திருந்த லயன் இதழ் # 250 -ன் டீசர் இதோ ! சித்திரங்களே கதை பேசட்டும் இம்முறை என்று  நான் ஒதுங்கிக் கொள்கிறேன் !







இப்போதைக்கு இது போதும் - இதழும், அட்டவணையும் உங்கள் கைகளுக்குக் கிடைக்கும் வரையிலும் அமைதி காக்கிறேன் ! அப்புறம் இன்னுமொரு சேதியும் கூட : சேலம் நகரில் நாளை மறு நாள் துவங்கவிருக்கும் புத்தக விழாவினில் நாமும் பங்கேற்கிறோம் ! நவம்பர் 7 -16 தேதிகளில்  நகர பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள போஸ் மைதானத்தில் நடக்கவிருக்கும்  இந்த நிகழ்ச்சியில் நமது ஸ்டாலில் நம் ஆபீசுக்கு சமீப வரவான கதிரேசன் இருப்பார் ! முதன்முறையாக சேலம் நகரில் நடக்கும் விழா என்ற வகையில் இதற்கான வரவேற்பு எவ்விதம் இருக்குமோ - தெரியவில்லை தான் ; ஆனால் அப்பகுதிகளில் நமக்கொரு விளம்பரமாய் இந்தப் 10 நாட்கள்  அமைந்தாலும் கூட சந்தோஷமே ! சேலம் நண்பர்கள் நமக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி - புதியவரான கதிரேசனுக்கு உதவிட்டால் அவர் தாக்குப் பிடித்துக் கொள்வார் !  So please do make some time for us folks !

And - வாபஸ் வந்த சமீபத்திய இதழ்களின் பட்டியலும் இம்மாத இதழினில் அச்சாகியுள்ளது ! ஆனால் அவசரத்தில் இதழ்களின் விலைகளைக் குறிப்பிட மறந்து விட்டோம் !! அசடு வழிவதைத் தாண்டி - இன்றைய பகல் பொழுதில் இந்தப் பட்டியலில் விலைகளையும் இணைத்து அப்டேட் செய்திடுவேன் ! இருப்பு உள்ள வரைக்கும் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம் ! இங்கே சின்னதாய் ஒரு வேண்டுகோளும் கூட : அருள் கூர்ந்து - இந்தக் கதையில் ஹீரோ யார் ? ; இதில் எத்தனை கதைகள் உள்ளன ? " என்ற ரீதியிலான கேள்விகளோடு நீங்கள் போன் செய்யும் சமயங்களில் நமது front office பெண்கள் நிறையவே நெளிய நேரிடுகிறது ! இவர்களில் யாரும் காமிக்ஸ் ரசிகர்களல்ல ; so பணிக்கு அவசியமான விஷயங்களைத் தாண்டி இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல அவர்களுக்கு சாத்தியமாகப் போவதில்லை ! சமீப இதழ்களுக்கே அவர்கள் திண்டாடும் போது -  இந்த மறுபதிப்பு  இதழ்களின் ஆதியோ -அந்தமோ அவர்களுக்குத் தெரிந்திராது ! ஆகையால் இதழின் விலைகள் ; பெயர்கள் ; உங்கள் ஆர்டர்கள் என்று crisp ஆன உரையாடல்களை அமைத்துக் கொள்ளலாமே - ப்ளீஸ் ?

இன்றைய பகல் பொழுதில் நமது 2015-ன் வெவ்வேறு சந்தா packages  பற்றிய விபரங்களையும் ; சந்தா படிவத்தையும் இங்கே upload செய்கிறேன் ! உங்கள் தேர்வுகளைச் செய்து விட்டு - சந்தாக்களை அனுப்பத் தொடங்கலாம் folks ! சந்தாக் கணக்குகள் சகலமும் இனி நமது "SUNSHINE LIBRARY " கணக்கில் தான் இருந்திடப் போகின்றன என்பதால் உங்கள் payments-களை புதிய இந்தக் கணக்கிற்கு அனுப்பிடல் அவசியம் ! அதே தமிழ்நாட் மெர்கண்டைல் வங்கி ; அதே முகவரி  - கணக்கு மட்டுமே மாறுபடும் !  

கிளம்பும் முன்பாக - 2015-க்கென ஜூனியரின் தேடல்கள் தந்ததொரு கதையின் டீசர் மட்டும் !!

And before I sign off - ஒரு கடைசி நிமிட சேதியும் கூட !! இத்தனை அவகாசம் எடுத்து ஒரு அட்டவணையை நான் தயாரித்து முடிக்கும் வேளையில் ஒரு திடீர் திருப்பமாய் - 2 புதிய படைப்பாளிகள்  நமது பல நாள் கோரிக்கைகளுக்கு ஒரு மார்க்கமாய் தலை அசைக்கத் தயாராகும் ஒரு சூழல் உருவாகி வருகிறது !! இந்த மாதத்தின் இறுதிக்கு முன்பாய் அதற்கொரு வடிவம் கிடைக்கும் பட்சத்தில் என் கேசத்துக்கு செம ஆபத்தாகப் போகிறது ! :-)))

Adios all ! See you around soon !