Sunday, August 28, 2016

நமக்கு நாமே !

நண்பர்களே,
            
வணக்கம். "இவன் ரொம்பப் பேசுவானே...!!" என்ற தயக்கத்தோடு நமது ஞாயிறுப் பதிவுகளை அணுகுவது உங்கள் வழக்கமெனில் - இவ்வாரத்துக்கொரு 'டாட்டா' காட்டிவிடுவது சாலச் சிறந்தது என்று துவக்கத்திலேயே சொல்லி விடுகிறேனே !  நிறையவே  பேச / எழுத / டைப்படிக்க உள்ளேன்தான் இம்முறை ! And அவற்றுள் நிறைய விஷயங்கள் "மறு ஒளிபரப்பு"ப் போலவும் தோன்றிடலாம் தான் - but  கோர்வையாய் சில நிகழ்வுகளை முன்வைக்கும் பொருட்டே இந்த "ம.ஓ".!! 

சில நேரங்களில் பெரிதாய் நம் பக்கத்தினில் முயற்சிகளின்றியும் கூடப் பயணதிசை சரியாக அமைந்திடுவதுண்டு ! சமீபத்தைய சில பல நிகழ்வுகள் – பதிவுகள் – பின்னூட்டங்கள் எல்லாமே தற்செயலாய் ஒன்றன்பின் ஒன்றாய்க் கோர்வையாக அமைந்திட- சில முக்கிய 'செய் & செய்யாதேக்கள்' ஸ்பஷ்டமாய் நம் முன்நிற்கின்றன ! நிகழ்வு # 1 – ஈரோட்டுப் புத்தக விழாவும் அது சமயம் அரங்கேறிய வாசகர் சந்திப்பும் ! இதுவரை நாம் பார்த்திரா ஒரு அசாத்திய உற்சாகத்தோடு நடந்த நேர்முகச் சந்திப்பு ஏகப்பட்ட நூலான்படைகளை மூளைக்குள்ளிலிருந்து விலக்கியுள்ளது என்று சொல்வேன் ! காமிக்ஸ் வாசிப்பு ; காதல் என்பதெல்லாம் கருகிடவில்லை ; செழிப்பாய் ; ஆரோக்கியமாய் தொடர்கிறதென்பது அன்றைய தினத்தின் முதல் பாடம் ! அந்த காமிக்ஸ் காதலானது - சக வாசகர்களின் நட்போடு கைகோர்க்கும் போது ஒரு விவரிக்க இயலாப் புதுப்பரிமாணத்தை எட்டுகிறது என்பதை அன்றைய தினம் மட்டுமன்றி, தொடர்ந்த வாரங்களது பின்னூட்டங்களின் உற்சாகங்களும் பிடரியில் சாத்திச் சொல்லியதுதான் பாடம் # 2 ! அந்தப் பாசிட்டிவ் எனர்ஜியின் பிரவாகம் அட்டகாசமான புத்தக விமர்சனங்களாய் ஒரு கட்டத்தில் உருவெடுக்க – அவை கண்ணில்காட்டிய சூப்பர்- டூப்பர் பலன்களே நமது பாடம் # 3 ! Yes – ஆகஸ்ட் 6 முதல் இன்று வரைக்குமான நமது ஆன்லைன் ஸ்டோரின் வியாபாரம் – வழக்கத்தை விட இரு மடங்கு அதிகமாகியுள்ளது ! ரெகுலர் வாசகர்கள் என்றில்லாத விளிம்புநிலை நண்பர்கள் இணையத்தில் பொங்கும் உற்சாகத்தினால் ஈர்க்கப்பட்டு இம்மாத இதழ்களை மாத்திரமின்றி - முந்தைய இதழ்களையும் சேர்த்தே  வாங்கியுள்ளனர் என்பதே என் புத்திக்கு எட்டிய inference ! Of course - இந்த விற்பனை இரட்டிப்புக்கு வேறு காரணங்கள் இருக்கலாம்தான் ; குருவி டேரா போட - பனம்பழம் ட்ராப் ஆன கதையாகவும் இருக்கலாம்தான் ! ஆனால் - எனது உள்ளுணர்வு சொல்வதோ - இம்மாத மேளாவின் நேரடிப் பலனே இது என்று !! 

ரொம்ப காலமாகவே நான் சொல்ல நினைத்து; தயங்கி நின்று விடும் சமாச்சாரம் இது தொடர்பானதே ! பொதுவாய் ஒவ்வொரு இதழின் வருகையினைத் தொடர்ந்தும் நமது பதிவிலும், இன்னபிற சமூகவலைத்தள / வாட்சப் தகவல் பரிமாற்றங்களிலும் – பாராட்டுக்களும், குட்டுக்களும் ஒருசேர அரங்கேறுவதில் இரகசியங்கள் ஏதுமில்லை. சில தருணங்களில் பதிவாகிடும் அந்த நெகடிவ் விமர்சனங்களுக்கு நிறையவே முகாந்திரங்கள் இருப்பதுண்டு ! “கதை மொக்கை; அட்டைப்படம் சரியில்லை; மொழிபெயர்ப்பு சரியில்லை” என்று ஏதேனும் உருப்படியான காரணங்கள் இருக்கும் போது அவற்றைச் சரி செய்யும் உத்வேகத்தை எனக்குள் விதைத்துக் கொண்டு நகர்ந்து விடுவேன் ! வேறு சில வேளைகளிலோ - நண்பர்கள் நடத்திடும் நையாண்டி தர்பார்களின் நோக்கம் - ஜாலியான கலாய்ப்ஸ் அல்லது என்னை மண்டையில் தட்டி வைப்பதாக மாத்திரமே இருப்பதுண்டு ! அத்தகைய நிகழ்வுகள் அவர்களைப் பொறுத்தவரையிலும் ஒருத்தற்காலிக ‘புகை வெளியேற்றமாக‘ இருந்திடலாம் தான் ; ஆனால் ஒரு தொடர்விளைவாய் அவை உண்டாக்கக்கூடிய  வியாபாரச் சுணக்கங்களின் அளவுகளை நாம் யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது இன்றைக்கு லேசாய் சிந்திக்கச் செய்கிறது ! ! 

ஒரு உதாரணம் சொல்லுகிறேனே ! சின்னதொரு எண்ணிக்கையே நமது பிரிண்ட்ரன் எனும் போது- அச்சின் ஆரம்பகட்டத்துப் பேப்பர்களில் துல்லியம் குறைவாக இருக்கும் ! அவற்றை நாம் தூக்கிக் கடாசிவிட்டாலும் ஏதேனும் சில ஜோதியில் கலந்து, பைண்டிங்கிலும் பிரிக்கப்படாது உங்களை வந்து எட்டிடக்கூடும் ! அத்தகைய தருணங்களிலோ ; பைண்டிங்கில் பிழைகளுள்ள பிரதிகள் உங்களை சென்றடைந்திடும் சமயங்களிலோ- மறு கேள்வியின்றி மாற்றுப் புத்தகங்களை நம் செலவிலேயே அனுப்பியிருக்கிறோம். So அது போன்ற சிரமங்கள் நேரும் சமயங்களில் ஒரேயொரு பொறுமையான ஈ-மெயிலைத் தட்டி விட்டால் ஓசையின்றிப் பிரச்சனை தீர்ந்து விடும் ! மாறாக அந்தப் புத்தகத்தை போட்டோ எடுத்து, தத்தம் வாட்சப் / FB க்ரூப்களில் போட்டுக் கழுவிக் கழுவி காக்காய்க்கு ஊற்றும்போது அடங்கிடக்கூடியது நண்பர்களது எரிச்சலாக மாத்திரம் தானே  இருக்கக் கூடும் ?! ‘எடிட்டரை சும்மா பிரிச்சு மேய்ஞ்சுட்டேன்லே !!‘ என்ற உற்சாகமும் உங்களதாகலாம் ! ஆனால் அந்தத் தற்காலிகச் சந்தோஷத்தையும், அவை ஈட்டித் தரக்கூடிய "லைக்"களையும்  தாண்டி காரியார்த்தமாய் சாதித்திருக்கக் கூடியது என்னவென்று யோசிக்க அவர்கள் நேரம் எடுத்துக் கொண்டிருப்பின்- ‘பலன் பூஜ்யமே‘ என்பது புரிந்திருக்கும் ! ஸ்டேஷனுக்குள்ளேயே புகுந்து ஏட்டையாவை 'நச்'சென்று நடுமூக்கில் குத்தியதால் நீங்கள் ‘world famous’ ஆகப் போவதில்லையே - simply becos இந்த ஏட்டையா ஒரு சாதாரண சிரிப்புப் போலீஸ் மட்டும்தானே? இவரைச் சாத்தி நீங்கள் பிரசித்தி அடைவதை விட- ஒரு தவறை முறையான வழியில் சுட்டிக்காட்டி அதனைத் தொடர்ந்திடாதிருக்க உதவிய சிறு மௌனக் காரணியாக இருந்து விட்டுப் போவது – ‘காமிக்ஸ்‘ எனும் ரசனைக்கான long term உபகாரமாக இருந்திடாதா ?

ஆக விமர்சிக்கவே கூடாதாக்கும் ? ; நீ என்னத்தைப் போட்டாலும் பேஷ்-பேஷ் என்று பாராட்ட மட்டும்தான் செய்யணுமாக்கும் ?‘ என்ற கேள்வி உங்களுக்குள் ததும்புவது புரிகிறது ! என் நோக்கம் விமர்சனங்களில்லா இணையமல்ல ! கதைகளின் நிறை-குறைகளைத் தாராளமாய் விமர்சித்திடலாம் ! சொல்லப் போனால் - நாம் செல்வது முறையான பாதையில்தானா ? என்ற ஊர்ஜிதத்துக்கு உங்களின் விமர்சனங்கள் சர்வ நிச்சயமாய் அவசியம் ! "விடுதலையே - உன் விலை என்ன ? " ; "வானமே எங்கள் வீதி"  ; "விண்ணில் ஒரு வேங்கை" போன்ற கதைகளின் சுமாரான அம்சங்களை நீங்கள் எனக்குச் சுட்டிக் காட்டியிராவிடின் அவற்றின் ரோதனை நிச்சயமாய்த் தொடர்ந்திருக்கும் ! நீங்கள்  எனக்கொரு கோடி காட்டும் போதே நான் அத்தொடர்களின் எஞ்சிய கதைகளை பரணுக்கு பார்சல் பண்ணிவிட்டேன் - அவற்றுள் பல்லாயிரங்கள் முடங்கிக் கிடந்தாலும் !! So "விமர்சிக்க வேண்டாமே" - என்பதல்ல எனது கோரிக்கை ! 

ஆரோக்கியமான விமர்சனங்கள் ; ரசிக்கக் கூடிய நையாண்டி கொண்ட வரிகள் ; ஒப்பீடுகள் என்றைக்குமே படிக்கும் எவரையும் புன்னகைக்கச் செய்யும்தானே ? மாறாக - என்மீதான கோபங்களை இறக்கி வைக்குமொரு முகாந்திரமாய் அந்த அபிப்பிராயப் பகிரல் உருமாறும் போது  - விமர்சனங்களின் நோக்கமே திசைமாறிடுகிறது  என்பது மட்டும்தான் எனது ஆதங்கம் ! பாராட்டுக்களெனில் அவை கதைகளுக்கும், தயாரிப்புப் பணிகளுக்கும் உரியவை என்பதில் எனக்குள் எவ்விதக் குழப்பமுமில்லை ! அதே மூச்சில் - மண்டையில் குட்டெனில் அது எனது கதைத் தேர்வுக்கும், தயாரிப்பின் குறைகளுக்குமே - இதனில் தனிப்பட்ட எனது பாக்களிப்புகள் ஏதும் கிடையாது என்பதிலும் நான் தெளிவாக உள்ளேன் ! So – “இந்த இதழைப் பாராட்டித் தொலைத்தால் இந்தச் சொட்டைத்தலையனை ஏற்றி விட்டது போலல்லவா ஆகிவிடுமே ?” என்ற தயக்கங்களின் பொருட்டு நீங்கள் மௌனம் சாதிக்கத் தேவைகளே கிடையாது !! அதே போல  "வசமாய் முதுகில் நெய் தோசைகள் வார்த்துவிட்டோம் - தொல்லை தீர்ந்தது !" என்ற நிம்மதிப் பெருமூச்சுக்கும் வழியிராது - ஏனெனில் அடுத்த முப்பதாவது நாளே புதுசாய்  எதையேனும் ஏந்திக் கொண்டு உங்கள் முகங்களுக்குள் நான் நிற்கத்தான் போகிறேன் அல்லவா ?!  

படைப்பாளிகளுக்கும் - உங்களுக்குமிடையிலான போஸ்ட்மேன் மட்டுமே நான் என்பதில் துளியும் குழப்பங்களில்லை என்னுள் ! So ஒவ்வொரு படைப்பையும் அவற்றின் நிறை-குறைகள் சார்ந்த கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்திட்டால்- நெட்டைக்கொக்காய் இடையில் நான் நிற்பதை சுலபமாக மறந்திட முடியும் ! நிறைகளை நிறைவாய்ப் பாராட்டினீர்களெனில் – நீங்கள் உற்பத்தி செய்து தரும் உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் நிறையப் புது வாசகர்களை வசீகரித்திட உதவுமே ! After all – இந்த 4 ஆண்டுப் பயணத்தில் சந்தோஷப்படும் சமாச்சாரங்கள் நிச்சயமாய் உண்டுதானே ? 

- லார்கோ வின்ச் (கிட்டத்தட்ட) முழுத்தொடர்
- வேய்ன் ஷெல்டன் (கிட்டத்தட்ட) முழுத்தொடர்
- கமான்சே அறிமுகம்
- மின்னும் மரணம் தொகுப்பு
- LMS
- க்ரீன் மேனர்
-தலையில்லா போராளி 
- லயன் 250 
- XIII Spin Offs
- தோர்கல்
- பௌன்சர்
- கார்ட்டூன் தடம்

என்று சுவாரஸ்ய அனுபவங்களுக்குப் பஞ்சமிலாப் பயணமல்லவா இதுவரையிலாவது  ? ‘பேப்பர் சரியில்லை‘; ‘அச்சு சரியில்லை‘ என் பொத்தாம் பொதுவாய் இடப்படும் புகார்களையும் கூடக் களைய தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்து வருகிறோம். இந்தாண்டின் அச்சுத்தரம் நிச்சயமாய் குறைசொல்லும் விதங்களில்லை என்பது உங்குளுக்கும் தெரியும் – எனக்கும் தெரியும் ! அதே போல இந்தாண்டில் - "மரண மொக்கை" என்ற ரேஞ்சில் அமைந்துபோன இதழாய் எதுவும் இருந்ததுபோலவும் எனக்கு நினைவில்லை ! ஆக முந்தைய நாட்களில் செய்த தவறுகளிலிருந்து பாடம் படிக்க நமக்குத் தயக்கங்கள் இல்லை  என்று எடுத்துக் கொள்ளலாமே ? 'தொடர்ச்சியாய்த் தலையில் தட்டிக் கொண்டேயிராவிடின் மெத்தனம் குடிபுகுந்து விடுமோ ?' என்ற முன்ஜாக்கிரதைகளுக்கு அவசியமில்லை என்ற நம்பிக்கையில் சற்றே  ரிலாக்ஸ் செய்திடலாமன்றோ ? 

உங்கள் ஒவ்வொருவரின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளுமே - காமிக்ஸ்களுக்கான அசாத்தியமான தூதர்கள் என்பதை ஈரோடு நிரூபித்து விட்டது ! உங்களிடம் உறையும் அந்த ஆற்றலை முன்வைத்து, தொடரும் காலங்களில் இந்தப் பயண வேகத்தை இன்னுமொரு உச்சத்துக்கு எடுத்துச் சென்றால் ‘விற்பனைச் சுணக்கம்‘ என்ற பேய் நம்மைப் பீடிக்காது! அல்லவா ? உங்களிடம் நான் வைக்கும் கோரிக்கைதனில்  எங்களது சுயநலம் நிச்சயமாய்க் கலந்துள்ளது தான் ! ஆனால் உங்கள் ஒவ்வொருவரின் சகாயமும்தானே இந்த வண்டியின் பெட்ரோலே - ஆரம்ப நாள் முதலாய் ? FB -ல் எழுதுங்கள் ; உங்களது காமிக்ஸ் வலைப்பதிவில் எழுதுங்கள் ; ஏதோவொரு ஆக்கபூர்வமான ரூபத்தில் காமிக்ஸ் பற்றிய சுவாரஸ்ய ஜுவாலை உயிர்ப்போடு தொடரட்டுமே ? 

 ஈரோட்டில் நாங்கள் கற்ற பாடங்களின் அத்தியாயம் 2 பற்றி இனி ! For that matter – கோவையிலும் அதே பாடத்தின் சாயல்களே என்றும் சொல்லலாம் ! இந்தாண்டின் ஜனவரியில் சென்னையில் மாமூலான புத்தக விழா நடந்திடாது போய் - இறுதி நிமிடத்தில் மாற்றாய் இன்னொரு விழா நடந்தது ; அப்புறமாய் ஜுனில் மறுபடியும் சென்னையில் ; ஆகஸ்ட் துவக்கத்தில் ஈரோட்டில் & இறுதியில கோவையில் புத்தகவிழாக்கள் என்று இந்தாண்டின் நமது விற்பனை pattern ரொம்பவே இப்படியும்-அப்படியுமானது ! முறையாகப் பார்த்தால் 50 title-கள் கைவசமுள்ள சமயம் கிட்டும் விற்பனைக்கும், 130+ title-கள் கைவசமுள்ள நேரங்களில் சாத்தியமாகிடக் கூடிய விற்பனைக்கும் நிச்சயமாய் ஒரு கணிசமான வேறுபாடு இருந்திட வேண்டுமல்லவா ? அத்தகைய கனவே எங்களிடமும் இருந்தது இந்தாண்டு ! நிறைய டெக்ஸ் கதைகள் ; சில பல ஸ்பெஷல் இதழ்கள் ; ஏகமாய் கார்ட்டூன்ஸ் ; கணிசமாய் மறுபதிப்புகள் என all round ரசனைகளுக்கு இதழ்கள் நம்மிடம் உள்ளன எனும்போது- விற்பனை நிச்சயமாய் முந்தைய நம்பர்களைத் தூக்கிச் சாப்பிடும் விதமாய் இருக்குமென்று எதிர்பார்த்தோம் ! ஆனால் அவை வெறும் கனவுகளாகவே இருந்து விட்டன ! ஒரு casual walk-in வாசகருக்கு உள்ளது ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் மாத்திரமே போலும் ; So நம்மிடம் எத்தனை ரகங்கள் குவிந்திருப்பினும் அவர் செலவிடப் போவது அந்த முன்தீர்மானிக்கப்பட்ட தொகையினை மட்டுமே தான் ! 10 டெக்ஸ் வில்லர் இதழ்கள்  உள்ளனவா ? அவற்றுள் முதல் பார்வைக்கு அவரைக் கவரும் இதழ் எதுவோ- அதுவே அவரது அந்நேரத்தையக் கொள்முதலாக இருந்திடுகிறது ! ஆக நமது கையிருப்பு ரகங்களின் எண்ணிக்கை உயர்வு - விற்பனை எண்ணிக்கையின் உயர்வாக உருமாற்றம் காண்பதில்லை என்பதே இந்த ஆண்டின் bookfair அனுபவ பாடம் ! ‘அட... இது தான் எனக்குத் தெரியுமே! இதை நான் முன்கூட்டியே யூகித்திருந்தேனே!‘ என்று நீங்கள் தடாலடி அடித்தால் நீங்களொரு அசாத்திய தீர்க்கதரிசியே ! ஆனால் ஒரு 20% விற்பனை உயர்வு கூட இராது, வழக்கமான அதே விற்பனைகள் மட்டும் தான் சாத்தியமாகும் என்று யூகம் நிச்சயமாய் எங்களிடம் இருந்திருக்கவில்லை ! அந்த மட்டிற்கு 2017-ன் அட்டவணைத் திட்டமிடலின் இறுதிக் கட்டத்திலுள்ள வேளையிலாவது இந்த விடியல் புலர்ந்ததே என்ற சந்தோஷம் எனக்கு ! ஆண்டின் “புத்தக விழா விற்பனைத் தொகை” என்று இனியொரு realistic பட்ஜெட்டைப் போட்டு விட்டு எனது திட்டமிடல்களை நான் முன்கொண்டு சென்றால் - அடுத்தாண்டிலாவது கையிருப்புக் குவியலின் கஷ்டங்கள் மட்டுப்படுமல்லவா?

கையிருப்புகள் பற்றிய topic தான் அத்தியாயம் # 3 – சமீபத்தையத் தற்செயலான நிகழ்வுகளில் ! நண்பர் காமிக் லவர் சமீபமாய் முன்வைத்திருந்த ஸ்டாக் நிலவரப் பட்டியல் துல்லியமானதல்ல ; சில இதழ்களில் 300 / 400 என்ற ரீதியிலேயே ஸ்டாக் உள்ளது & பலவற்றில் கூடுதலாக  ! So மொத்த எண்ணம் அத்தனை மெகா சைஸல்ல என்றாலும்- நிச்சயமாய் ஒரு கணிசமான / மிகக் கணிசமான ஸ்டாக் நம்மிடமுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை ! மொத்த மார்கெட்டில் வாங்கும் போது ஒரு கிலோ மாம்பழம் ரூ.225 ; அதே நேரம் 3 கிலோவாக வாங்கினால் கிலோ ரூ.150 என்று விலைகள் அமைவதுண்டு தானே ? நமது இதழ்களின் pricing–ல் உள்ள தத்துவமும் (!!!) அதுவே ! முறையான தேவைக்கு மட்டுமே உற்பத்தி செய்தால் ஸ்டாக் சேராது ; ஆனால் இதழ்களின் விலை உயரத்தில் நிற்கும் ! அந்த விலையை எட்டும் தூரத்திற்கும் கொணர வேண்டுமெனில் உற்பத்தி எண்ணிக்கையைக் கூடுதலாக்கி விட்டு - மிஞ்சிடும் கையிருப்பை ஓராண்டுக்குள் விற்றுக் கொள்ளலாமென்ற நம்பிக்கை கொண்டாக வேண்டும் ! நாம் செய்து வருவது option # 2 தான் ! இந்தாண்டின் புத்தக விழா விற்பனைகள் நாம் எதிர்பார்த்தபடிக்குக் கூடியிருப்பின் இதே பாணியைக் கண தயக்கமுமின்றித் தொடர்ந்திடுவோம் ! ஆனால் யதார்த்தம் அதுவல்ல எனும் போது - பிரிண்ட் ரன்னைக் குறைப்பது எனது தலை காக்கத் தலையாயப் பணியாகிறது ! அதற்காக இனிமேல் விலை ரூ.100 ; ரூ. 90 என்றிருக்கும் என்ற அச்சம் தேவையில்லை. தொடரும் 2017-ல் ரூ.75/- என்ற விலையில் – குறைவான பிரிண்ட்ரன்னில் தொடரவுள்ளோம் ! இது ஸ்டாக் சேரவிடாது தவிர்க்குமே தவிர - சத்தியமாய் தம்புடி இலாபம் ஈட்ட வழிதராது என்பது நிதரிசனம் ! (விலை கூடுதல் ; இதே வேலையை நான் செய்தால் சஸ்தாவாக வழங்கிடுவேன் ! என்று ஏற்கனவே வாட்சப்களில் முழங்கிடும் நண்பர்கள் மன்னிப்பார்களாக ! ஆனால்  எனது சீட்டில் ஒரு மாதம் அமர்ந்து விழிபிதுங்கச் செய்யும் செலவுகளை நிர்வாகம் செய்து பார்த்தால் வீர முழக்கங்கள் mute mode-க்குப் போய்விடும் சாத்தியங்கள் ஏகம் !) ஒட்டுமொத்தமாய் விலையை ஏற்றுகிறேன் என்று நமது வாசக வட்டத்தை இன்னமும் குறுகலாக்கிடுவதை விடவும்- இப்போதைக்கு லாபம் இல்லை- நஷ்டமுமில்லை என்ற நிலை தொடர்ந்தால் போதுமென்று தீர்மானித்துள்ளோம் ! இது நிச்சயமொரு தற்காலிகத் தீர்வே ; எப்பாடுபட்டேனும் 2017-ல் நமது விற்பனையினை உயர்த்த வழி தேடியாகவேண்டும் என்பது புரிகிறது ! So இங்கே உங்களது புரிதலும், கரிசனமும் எங்களுக்குக் கிட்டின் - நம்பிக்கையோடு பணியாற்றுவோம் ! இங்கே ஒரு கொசுறுச் சேதி ! இதுவரையிலான சந்தா ஆண்டுகளில் நடப்பாண்டே THE BEST என்று சொல்லலாம் - சந்தாக்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையினில் ! ஜனவரி - பிப்ரவரி என சோர்வாகவே சந்தாச் சேர்க்கை நடந்தது போல் தோற்றம் தந்தாலும் - இறுதி நம்பரானது இதுவரைக்கும் நாம் பார்த்துள்ளதில் டாப் !! 2017-ன் சந்தாவினில் இன்னமுமொரு சிறு அதிகரிப்பாவது நிகழும் பட்சத்தில் - துவக்கமே டாப் கியரில் இருந்திடும் ! Fingers seriously crossed !!

தவிர, ஒரு எதிர்பாரா திக்கிலிருந்து கிட்டியுள்ளதொரு சன்னமான- ஆனால் அசாத்தியமான ஊக்குவிப்பு நமக்குப் பெரும் பலம் தந்துள்ளது - மனதளவிலாவது ! அது என்னவென்பதை உரிய வேளையில் தெரிவிக்கிறேன் ! ஆக 2017-ன் நமது திட்டமிடலின் ஒரு மேலோட்டமான, பூர்வாங்க அறிவிப்பு இதுவே ! ‘இது தேறாது... இதை அப்படிச் செய்திருக்க வேண்டும் ; விலை கூட்டினால் அடுத்த தலைமுறையை எட்டாது ;  எதிர்கால வாசகர்கள் மீது அக்கறை அவசியம்!‘ இத்யாதி... இத்யாதி என்ற விமர்சனங்களை இதற்குப் பின்தொடர்வாக அமைத்திடாது நண்பர்கள் எனக்குப் பணியாற்ற சுதந்திரம் நல்கினால் நிச்சயமாய் அழுத்தங்களின்றிப் பணியாற்றுவேன் ! தொடரும் தலைமுறை மீதும், காமிக்ஸ் எனும் ரசனை தொடர வேண்டியதன் அவசியம் மீதும் மிகுந்த அக்கறை நம்மிடமுள்ளது. ஆனால் ‘சுவர் இருந்தால் மட்டுமே சித்திரங்கள் சாத்தியம்‘ என்பதையும் ; இந்தக் கிழட்டுச் சுவரின் வலிமை என்னவென்பது பற்றியும் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பதால் சில கட்டாயத் தீர்மானங்கள் நிறைவேற்றும் அவசியங்கள் எழுகின்றன !

பிள்ளைகளுக்கு இது எட்டாது‘; ‘நிறைய வாசகர்களைப் போய்ச் சேர்ந்திட நடவடிக்கை எடுக்கத் தெரியாதா ?‘என்று  உங்களுக்குத் தோன்றலாம் தான் ! கண்ணில்படும் வினாக்களுக்கு என்னால் இயன்ற பதில்களைச் சொல்லிவிட்டு - நானுமே நகர்ந்திடுவேன் தான் ;  ஆனால் ஆங்காங்கே பதிவாகிக் கிடக்கும் உங்கள் சிந்தனைகள் - புது வாசகர்களின் மனதுகளில் ஏற்படுத்தக் கூடிய சலனங்கள் long term ! குட்டிக் கரணமே அடித்தாலும் கூட ; உலகின் தலையாய காமிக்ஸ் கதைகளைக் கொணர்ந்தால் கூட- மேலோட்டமான பராக்குப் பார்வைகளைத் தாண்டிய சுவாரஸ்யத்தை பொதுமக்களிடையே உண்டாக்க முடிவதில்லை என்பதைக் கடந்த சில நாட்களில் கண்கூடாய்ப் பார்த்து வருகிறோம் !! 

கோவைப் புத்தகவிழா நடைபெற்று வரும் கொடிசியா அரங்கின் இன்னொரு பாகத்தில் தினமலர் நடத்தும் வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி கடந்த வியாழன் முதல் நடைபெற்று வருகிறது. So அங்கே வருகை புரியும் மக்கள் குடும்பங்களோடு புத்தகவிழா அரங்கிற்குள்ளும் வலம் வருவதால் வியாழன் முதலே புத்தக அரங்கு நிரம்பி வழிகிறது. நமது ஸ்டாலிலும் சொல்லி மாளாக் கூட்டம்! ஆனால் இரவு 9 மணிக்கு அன்றன்றைய விற்பனைத் தொகைகளைக் கேட்கும் போது காதை ஒன்றுக்கு இரு முறைகள் குத்திவிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டி வருகிறது - காதில் விழுந்தது சரியான தொகை தானா ? என்ற சந்தேகத்தில்  ! ‘காமிக்ஸ்‘ எனும் ரசனை தயக்கத்தோடு அணுகப்பட வேண்டியதொரு ஜீவனாய் மட்டுமே இன்னமும், பெரும்பாலானோர்க்குத்  தொடர்வதால் - கண்முன்னே ஒரு வண்டிக் காமிக்ஸ் புத்தகங்கள் கலர் கலராய்த் தட்டுப்படும் போது கூட அவற்றை மெதுமெதுவாய்  முயற்சிக்க மட்டுமே மக்கள்  முனைப்புக் காட்டுகிறார்கள் ! கடந்த 4 நாட்களில் கோவையில் நமது ஸ்டாலுக்கு வந்து சென்ற மக்கள் எண்ணிக்கை ஒரு மெகா பட்ஜெட்டிலான விளம்பர campaign-ல் கிடைத்திருக்கக் கூடிய கவனத்தை விடவும் ஜாஸ்தியாக ஈர்த்துள்ளது ! அற்புதமானதொரு விளம்பரமாய் அது அமைந்துள்ள போதிலும், அந்த ஜனத்திரளானது 10% விற்பனைகளாகக் கூட உருமாற்றம் காணவில்லை ! அதே போல - FB -ல் நமது விளம்பரப் போஸ்ட்களை பூஸ்ட் செய்திட  ஓசையின்றி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவிட்டு வருகிறோம் -ஒரு வருஷமாய்  ! இதன் பலனாய் நமது பக்கத்துக்கு கிட்டியுள்ள லைக்ஸ் ஓராண்டினில் இருமடங்காகியுள்ளது ! ஆனால் அவை விற்பனையாக உருமாற்றம் கண்டபாடைக் காணோம் ! ஆன்லைன் விற்பனையில் இந்த ஓராண்டில் சொல்லிக்கொள்ளும் விதமாய் எந்தவொரு உயர்வும் இருந்திருக்கவில்லை - "தலையில்லாப் போராளி" யின் ஏப்ரலில், இந்த ஆகஸ்டில் நீங்கலாக ! 

So ‘காமிக்ஸ்‘ எனும் ரசனை ஒரு வெகுஜனத் தேர்வாகிட நிறையவே நேரமும் ; முயற்சியும் தேவைப்படும் போலும்! சிறு தயக்கத்தோடு மேலோட்டமாய் மாயாவி, லக்கி லூக் என்று வாங்கிச் சென்றுள்ள அனைவருமே நமது ஆன்லைன் ஸ்டோர்கள் பற்றியும்; சந்தாக்கள் பற்றியும் கேட்டுத் தெரிந்து சென்றுள்ளனர் ! ஒரே ராத்திரியில் நிகழாது போயினும்- சிறுகச் சிறுகப் புது இரத்தம் உட்புகுவதற்கு கதவுகள் மெல்லத் திறந்து வருகின்றன என்பது தான் கோவையில் பார்க்க முடிந்துள்ள silver lining. இவர்களுள் பெரும்பாலானோர் இன்றைய தலைமுறையினர் என்பதால், இயல்பான  அடுத்தகட்ட நிகழ்வாக FB-ல் ; இணையத்தில் ; பதிவுகளில் என காமிக்ஸ் தொடர்பான தேடல்களுக்குள் ஈடுபடுவர் என்று  எதிர்பார்க்கலாம் ! அவர்களை வரவேற்பது காமிக்ஸ் சார்ந்த அழகான விமர்சனங்கள் ; ஆரோக்கியமான விவாதங்கள் என்றிருக்கக் கூடிய பட்சத்தில் நிச்சமாய் ஆயுட்கால காமிக்ஸ் ஆர்வலர்களாய் அவர்கள் உருமாற்றம் காணும் சாத்தியங்கள் பிரகாசம் ! அதற்குப் பதிலாய் நையாண்டிகள் ; சிலபல ரௌத்திரங்களின் பலனாய் முன்வைக்கப்படும் சீற்றங்கள் ; நிறைகள் நூறு கண்ணில் பட்டாலும் - குறைகளை மட்டுமே பறைசாற்றுவேன் என்ற வைராக்கியங்கள் ; க்ரே மார்கெட் கூத்துகள் ; நமக்கிடையிலான ஈகோ மோதல்கள் என்ற சமாச்சாரங்கள் தாண்டவமாடின் - அதன் பலன் எவ்விதம் இருக்குமென்பதை யூகிக்கச் சிரமமிராது தானே ? நூறு பேரது கருத்துக்களும் ரசனைகளும் எல்லாத் தருணங்களிலும் ஒரே சாலையில் பயணிக்க வேண்டியது கட்டாயமல்ல ; ஆனால் அதன் பொருட்டு உருவாகும் கருத்து வேறுபாடுகளை ஒரு தொடர்கதையாகக் கொண்டு செல்லாது - நமது focus காமிக்ஸ் ரசனைகள் மீது மட்டுமே என்ற உறுதியோடு தொடர்ந்திட்டால் இங்கே உதயமாகும் வெளிச்சமும், பாசிட்டிவ் எனர்ஜியும் நமது பயணத்தை புல்லட் ரயில் வேகத்துக்குக் கொண்டு சென்றிடாதா?

4½ ஆண்டுகளுக்கு முன்பாய் நான் இந்தப் பதிவுகள் படலத்தைத் தொடங்கிய போது இரு விஷயங்களை எனக்குள் இருத்திக் கொண்டேன் ! எந்தவொரு சந்தர்ப்பத்திலும் (நமது) காமிக்ஸ் சார்ந்த விஷயங்களைத் தவிர்த்து வேறு சமாச்சாரங்கள் எதன் மீதிலும் இங்கே மையல் காட்டிட மாட்டேனென்பது விஷயம் # 1. அதே போல எந்தவொரு சூழலிலும் ‘கருத்து கந்தசாமியாக‘ மாறி அட்வைஸ் மழை பொழியும் அபத்தங்களைச் செய்திடக் கூடாதென்பது தீர்மானம் # 2 ஆக இருந்தது ! முதன் முறையாக ‘அட்வைஸ்‘ ஜாடையில் இந்தப் பதிவு அமைந்திருப்பதாய் உங்களுக்குத் தோன்றினால் - மன்னியுங்கள் நண்பர்களே, எனது நோக்கம் அதுவல்ல ! எப்போதும் போலவே உங்கள் தோள்களில் கைபோடும் உரிமையை எனதாக்கிக் கொள்ளும் ஆர்வத்தோடு என் மனதில் பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள மட்டுமே நினைத்திருக்கிறேன் ! திறந்த மனதோடு இதனைப் படித்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் உங்களுக்குள் இறுக்கங்கள் ஏதும் நேர்ந்திருக்க வாய்ப்பிராது ; அதே நேரம் என் மீதான ஏதோவொரு எரிச்சலைப் பின்புலத்தில் தக்க வைத்துக் கொண்டே வாசித்திருப்பின் – ‘இவனென்ன பெரிய புண்ணாக்கா? காமிக்ஸைக் காப்பாற்ற வந்த தேவமகனா - எனக்கு யோசனை சொல்ல??!‘ என்ற உஷ்ணம் உற்பத்தியாகலாம் ! இரண்டாம் ரகத்தவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் - இந்தப் பதிவின் துவக்க வரிகளை மட்டுமே மறுபடியும் என்னால் நினைவுகூர்ந்திடச் சொல்லிட முடியும்  - with my apologies of course ! 

காமிக்ஸ் வட்டமென்பது சிறுகச் சிறுக நாமாய்ப் பராமரித்து; நாமாய் நீரூற்றி ; களையெடுத்து ; உரமிட்டு வளர்த்திட வேண்டியதொரு செடி - நமது மார்க்கெட்டிலாவது ! அந்தச் செடிக்கு நம்மாலான பணிவிடைகளைச் செய்வோமே, ஏதோவொரு ரூபத்தில்  ? என்பது மட்டுமே  எனது கோரிக்கை ! இந்தச் சின்ன உலகில் நாம் வளர- தெரிந்தோ, தெரியாமலோ நாமே நமக்குத் தடை போட்டுக் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ? 

For sure - நமக்கு நாமே  !!

இங்கே நான் எழுதியுள்ள சமாச்சாரங்களில் கலாய்ப்சுக்கு ஏகமாய் மேட்டர் கிட்டிடலாம் தான் ; ஆனால் அதனில் கிடைக்கக்கூடிய அப்போதைய நகைப்புகளைத் தாண்டியும், நையாண்டி செய்த திருப்திகளைத் தாண்டியும் ஆத்மார்த்தமாய் ஏதேனும் செய்யும் அவா உங்களுக்கு எழுந்திட வாய்ப்புகள் எக்கச்சக்கம்  என்ற நம்பிக்கையிலேயே நிறைய எழுதியுள்ளேன் ! அந்த நம்பிக்கை மெய்யானால் - இனியெல்லாம் சுகமே ! பொய்யானால் - ஞாயிறு டிபனுக்கு மணக்க மணக்க தோசைகள் வார்க்கவொரு முதுகு தயார் - வழக்கம் போலவே ! மனதில் பட்டதை எழுதிட முனைந்துள்ளேன் ! வழியில் சிலபல கால்சுட்டுவிரல்களின்மீது நான் இடறியிருக்கக் கூடும் ; நாளைக்கு காலையில் எழுந்து இதே பதிவை இன்னொருமுறை வாசித்தால் - இன்னும் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கலாமோ ? என்ற எண்ணம் தோன்றவும் கூடும் தான் ! ஆனால் மனதில்பட்டதை உங்களிடம் நகாசுகளின்றி இறக்கி வைத்த சின்னதொரு திருப்தி இப்போதைக்கு மிஞ்சுகிறது !  சொன்ன சமாச்சாரங்களிலோ ; சொன்ன விதத்திலோ குறைபாடுகள் இருப்பின் - முன்கூட்டிய கைகூப்பல் படங்கள் சிலபல ! புலரவுள்ள  பொழுதும், காத்துள்ள நாட்களும் 'ஒரு தோசைத் திருவிழாவாக' இல்லாது போக புனித மனிடோ அருள்புரிவாராக !! 

நீ-ண்-ட-தொ-ரு பதிவுக்கு இத்தோடு மங்களம் பாடி விட்டு ஒற்றை ரன்னில் (கிரிக்கெட்டில்) தோற்ற சோகத்தை விழுங்கச் சிரமப்பட்டுக் கொண்டே தூங்கப் செல்கிறேன்  ! ஜாலியான சிலபல புள்ளி விபரங்ககள் கைவசமுள்ளன - தொடரவிருக்கும் அடுத்த சில நாட்களின் உப பதிவினில் எழுதிட  ! Adios until then ! 

P.S : இம்மாத இதழ்கள் வரும் 31-ஆம் தேதி இங்கிருந்து கிளம்பிடும் - முதல் தேதியன்று உங்களுக்குச் சலாம் சொல்லிட ! 

And சந்தாவின் இரண்டாம் (இறுதியும்) தவணை செலுத்தியிருக்கா நண்பர்களுக்கு மீண்டுமொரு அவசர நினைவூட்டல் !! ப்ளீஸ் - இம்மாத இதழ்களை சுணக்கமின்றிப் பெற்றுக் கொள்ள உங்களின் பாக்கித் தொகைகளை உடனே அனுப்பிடலாமே ? 


364 comments:

 1. Replies
  1. பூனையார் மதில் மேலேயே காத்திட்டிருந்திருந்தார் போல :)

   Delete
  2. பூனையார் எப்போதும் தூங்குவதில்லை.

   Delete
 2. எல்லாருக்கும் இந்த தாதத்தாவின் வணக்கமுங்க.
  நான் முதல் பதிவு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சூரியன்சார்...
   நண்பர்களே இந்த கிருஷ்ண ஜெயந்தி அன்று நம்முடைய காமிக்ஸ் ன் மூத்த வாசகர்களில் ஒருவரான, பழகுவதில் இலகுவான சூரியன் சாருக்கு பேரன் பிறந்துள்ளார். வாழ்த்துக்கள் சூரியன் சார், விரைவில் பேரனுக்கு கதை சொல்லி சந்தோசமாக பொழுது போக்க (வயதில் சிறியவர்களானாலும்) வாழ்த்துக்கள் சார்...

   Delete
  2. வாழ்த்துக்கள் சந்த் சார்

   Delete
  3. தாத்தாவுக்கு இந்த பேரனின் பதில் வணக்கங்கள்.

   Delete
  4. நன்றிகள் நண்பர்களே.
   இத்தனை நாள் வயதான குழந்தையாக இருந்தேன்.
   இனி நான் உன்மையிலேயே வயதானவாக ஒரு உனர்வு ஏற்பட்டு விட்டது.
   மீண்டும் நன்றி தோழர்களே.

   Delete
  5. தாத்தா ப்ளஸ் தாதாவுக்கு என் வாழ்த்துக்கள் ஐயா.

   Delete
  6. வாழ்த்க்கள் சார்

   Delete
  7. சூரியன் சார். உங்கள் பெயரின் பக்கத்தில் டெக்ஸ் படத்தை போட்டுக் கொண்டு உங்களையே தாத்தா என்று கூறிக்கொள்கிறீர்களே.இது நியாயமா? காமிக்ஸ் படிக்கும் நாமெல்லாம்!!! என்றுமே யூத் தான்!!! உங்கள் பேரன் டெக்ஸ் போல் பேரும், புகழும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

   Delete
  8. வணக்கம் சுரேஷ்சந்த் சார்...!
   வாழ்த்துகள்...உங்களுக்கும் உங்கள் பேரனுக்கும்....!

   Delete
  9. தாத்தாவற்கும் பேரனிற்கும் எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

   Delete
  10. நன்றிகள்.
   ஒரே நாளில் 10 வயது அதிகமாகிவிட்ட உனர்வு.ANY WAYS THANKS.

   Delete
  11. வணக்கம் சுரேஷ்சந்த் சார்...!
   வாழ்த்துகள்...உங்களுக்கும் உங்கள் பேரனுக்கும்....!

   Delete
  12. வணக்கம் சுரேஷ்சந்த் சார்...!
   வாழ்த்துகள்...உங்களுக்கும் உங்கள் பேரனுக்கும்....!

   Delete
 3. மூன்றாவதாக நான்!!

  ReplyDelete
 4. அத அப்படி செஞ்சா நல்லாருக்கும்.
  இத இப்படி செஞ்சா
  அதவிட நல்லாருக்கும். அதயும் இதயும் சேர்ந்து செஞ்சா அல்லாத்தையும் விட ரொம்ப நல்லாருக்கும்.
  இப்படி எல்லாம் உங்களுக்கு ரோசன சொல்ற அளவுக்கு என்க்கு ஞானம் பத்தாதுங்கோ!!
  ஆனா-
  நீங்க நம்ம காமிக்ஸ்ல எத செஞ்சாலும்
  அதுல ஒரு நியாயம் இருக்கும்.
  அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.
  அத்தோட நேர்மையும் சேர்ந்து இருக்கும்னு புரிஞ்சுக்குற அளவுக்கு என்னோட புத்தி தெளிவா இருக்கு எடிட்டரய்யா.
  நீங்க அடுத்த வருச வெளியீடுகளுக்கு ஒங்கள நஷ்டப்படுத்தாத எந்த
  முடிவ எடுத்தாலும் எனக்கு சந்தோஷந்தேன்.
  ஆனா எடுக்கற முடிவ கொஞ்சம் ஜல்தியா எடுத்து அடுத்த வருச கதைங்களோட ட்ரைலர சீக்கிரமா கண்ணுல காட்டுங்கய்யா!
  ட்ரைலர பாக்கையில வயித்துல பட்டாம்பூச்சி பறக்குமே!
  அந்த சந்தோசத்துக்கு ஈடா எத்த சொல்றது!!

  ReplyDelete
  Replies
  1. AT Rajan : அக்டொபரில்....!

   Delete
  2. மிக்க நன்றி சார். காத்திருக்கிறேன்.

   Delete
 5. அருமையான யதார்தமான பதிவு. இம்மாதத்து புத்தகங்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. இதே மாதிரி தொடர ஆசிரியருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். நன்றி ஆசிரியர் அவர்களே.

  ReplyDelete
  Replies
  1. Suryantex Suresh Chand : அதற்குள் முழுசையும் படித்து விட்டீர்களா சார் ? எனக்கு இதனைத் தயார் செய்ய அரை நாளுக்கு கிட்டே அவசியமானது !! Uff !!

   Delete
  2. இதை படிப்பதற்கு அதிகபட்சம் நான்கு நிமிடங்களே போதுமானது சார்.

   Delete
  3. சூரிய ஒளி பூமியை அடைவதற்கு ஜஸ்ட் எட்டே நிமிடம்தான் பிடிக்கும் ஐயா. ஹிஹி ஒரு தகவலுக்கு.

   Delete
  4. //130 + டைட்டில்கள் இருந்து 20% கூட விற்பனை கூடவில்லை.!//

   உண்மை சார்.! ஈரோடு விஜய் கூறிய மாதிரி 6 மாதங்களுக்கு பிறகு இதழ்கள் கிடைக்கக்கூடாது என்பது சரியாண யோசனை சார்.குறைந்த பட்சம் ஒரு புத்தக கண்காட்சியில் கிடைக்கும் புத்தகம் அடுத்த புத்தக கண்காட்சியில் கிடைக்கக் கூடாது. அப்படி இருந்தால்தான் புத்தகங்கள் வாங்குவதில் ஒரு விறுவிறுப்பு இருக்கும்.! இந்த விஷயம் பதுக்கல்காரர்களுக்கு. சந்தோசமான விஷமாக இருந்தாலும்.,எங்களைப்போன்ற கலெக்டர்ஸ்களுக்கும் சந்தோசமான விஷயம்.ஏனென்றால் வீட்டில் கணிசமான இடத்தை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் புத்தக பெட்டிகளை புதையலைக் காக்கும் பூதம்போல் நாங்கள் காத்துவந்தாலும்.வீடடில் உள்ளவர்கள் அது கிலோ கணக்குதான். பழைய புத்தகத்திற்கு மதிப்பு இருந்தால் வீட்டில் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்.!

   // எண்ணிக்கையை குறைத்து விலையில் ஏற்றம் //

   Delete
 6. இந்த (2016) ஆண்டின் சந்தா எண்ணிக்கை உங்களுக்கு திருப்தி என்றால் மாதம் 4 புத்தகங்கள் என்பதால் எங்களுக்கும் திருப்தி என்பதையே காட்டுகிறது.
  2017 ல் அநாவசிய மறுபதிப்புகள் இல்லையென்றால் மட்டுமே சந்தா எண்ணிக்கை கூடும்.

  ReplyDelete
  Replies
  1. Blizy Babu : "அனாவசிய மறுபதிப்புகள் " எவை என்பதை நானறியேன் - ஆனால் இந்தாண்டின் ஈரோடு + கோவைப் புத்தக விழாக்களின் விற்பனையில் 50% மறுபதிப்புகளே !

   Delete
  2. விற்பனையில் சாதனை படைக்கும் மறுபதிப்புகளை நான் நான் "அநாவசிய மறுபதிப்புகள்" என்று குறிப்பிடவில்லை.
   சில குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின்பு வந்த இதழ்களை மறுபதிப்பு செய்ய வேண்டாம் என்று வேண்டிக்கொண்டேன் உங்களை!
   2017 அட்டவணை புதிய சந்தாதாரர் களை சேர்க்கும் வண்ணம் அமையும் என நம்புகிறேன்.
   கடவுள் ஆசிர்வதிப்பார்!

   Delete
 7. Hi Edi, we are COMIC lovers. We will support your decisions whole heartedly

  ReplyDelete
 8. சிந்தித்து செயல்படவைக்கும் பதிவு!

  ReplyDelete
 9. cinebook புத்தகங்கள் online விற்பனை இல்லை என்றால் comics4all website நீக்கிவிடலாமே !

  ReplyDelete
 10. "மனம் ஒப்பவில்லைதான் .... ஆனாலும் வேறு வழியில்லை"

  இந்த வசனம் டெக்ஸுக்கு மட்டும் பொருந்துவதாக தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. உண்மை மீரான் நண்பரே

   Delete
  2. // "மனம் ஒப்பவில்லைதான் .... ஆனாலும் வேறு வழியில்லை"

   இந்த வசனம் டெக்ஸுக்கு மட்டும் பொருந்துவதாக தெரியவில்லை. //

   இதைப்படித்ததும் Chuck Norris ஜோக்ஸ்தான் நினைவுக்கு வருகிறது. டெக்ஸ் வில்லரின் திறன்களை "அவரால் இயலாதது எதுவுமில்லை" லெவலுக்கு நாம் இப்படியே உசுப்பிவிட்டுக் கொண்டிருந்தால் கூடிய சீக்கிரத்தில் அவர் Chuck Norries'ன் இடத்தைப் பிடித்துவிடும் அபாயம் உள்ளது! :D

   Jokes apart கதைக்குள்ளே டெக்ஸுக்கு என்ன சிக்கலோ, அது கதை படித்தபின்னேதானே புரியும்?!

   Delete

 11. அர்த்தமுள்ள பதிவு

  அடுத்த வருடத்தில் மாதம் நான்கு புத்தகங்களுக்கு மேல் வராமல் பார்த்துக்கொள்ளுமா ? எடி சார்

  அதிகப்படியான புத்தகங்களால் காமிக்ஸ் மேல் இருக்கும் காதல் குறைவது போல் எனக்கு தோன்றுகிறது

  அடுத்த வருட ட்ரைலரை விரைவில் எதிர்பார்க்கிறேன் சார்

  ReplyDelete
  Replies
  1. அதிகப்படியான புத்தகங்களால் காமிக்ஸ் மேல் இருக்கும் காதல் குறைவது போல் எனக்கு தோன்றுகிறது/////

   -12345

   Delete
  2. அதிகப்படியான டெக்ஸ் வரவு டெக்ஸ் காமிக்ஸ் மேல் இருக்கும் காதல் குறைவது போல் இருக்குமா?
   இருக்காது தானே
   எனக்கு எல்லா காமிக்ஸ் ஸூம் டெக்ஸ் மாதிரி தான்(டெக்ஸ்ஸை தவிர).

   So -1222211

   Delete
  3. எனக்கு இந்த மாதா மாதம் வரும் காமிக்ஸ் புத்தகங்கள் நான்கும் நான்கே நாளில் முடிந்து மீண்டும் மறுபதிப்பு இதழ்களை நாடும் சூழல் நிழவுவுதால்

   காமிக்ஸ் ஆர்வம் குறைகிறது என்ற கருத்திற்கு மைனஸ் மதிப்பை அளிக்கிறேன் ..:-)

   Delete
  4. அதிகப்படியான புத்தகங்களால் காமிக்ஸ் மேல் காதல் குறைகிறதா!! தவறு தோழரே. எல்லாமே நமது மனம் செய்யும் வேலைதான். கிடைக்கும்போது அலட்சியப்படுத்திவிட்டு கிடைக்காத போது ஏங்கும். அதனால் தான் மனம் ஒரு குரங்கு என்றனர்!!

   Delete
  5. நான் இன்னமும் இவ்வருட கதைகள் பலவும் இன்னும் படிக்கவே இல்லை (என் வேலை காரணமும் நேரமின்மையும் அதில் ஒன்று)
   வெறும் கலக்ஸனுக்காக மட்டும் இவ்வளவு புத்தகங்கள் வாங்குகிறோமோ என்ற எண்ணம் தலைதூக்குவதுண்டு
   மாதம்
   நான்கு புத்தகங்களுக்கே இந்த கதி என்றால் அதிகப்படியான இதழ்கள் வரும் போது காமிக்ஸ் காதல் குறைவது போல் தோன்றுகிறது

   (என் எண்ணம் போலவும் பலருக்கும் இருக்கலாம்)

   நான் புத்தகங்கள் வாங்கியதும் முதலில் படிப்பது டெக்ஸ் கதையைத்தான்
   அதுவும் எனக்கு நேரம் கிடைக்கும் போது மட்டுமே

   யாரையும் நான் குறை கூறவில்லை என் எண்ணத்தை கூறினேன் தட்ஸ்ஆல்

   Delete
 12. 2017ல் முத்துகாமிக்ஸ் சிறப்பிதழ் வெகு சிறப்பாக வர வாழ்த்துகள்.
  அதேநேரம் முத்துகாமிக்ஸ் ன் ஆரம்பகால வளர்ச்சிக்கு உதவிய நாயகர்களுக்கு உரிய மரியாதை(வேறு என்ன? அவர்களது கதைகளை வெளியிடுவதைத்தான் சொல்கிறேன்) செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Blizy Babu : முத்து காமிக்சின் மெய்யான ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு உதவியவர்கள் மாயாவி + லாரன்ஸ் -டேவிட் + ஜானிநீரோ கூட்டணியே ! இந்த மூவரணிதான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாய் மாதா மாதம் களமிறங்கி வருகிறார்களே !

   நீங்கள் மனதில் கொண்டிருக்கக் கூடிய வேதாளன் ; ரிப் கிர்பி ; காரிகன் போன்றோர் இந்திரஜால் காமிக்ஸ் ; மாலைமதி என வெவ்வேறு இதழ்களிலும் தலைகாட்டியவர்கள் ! முத்து காமிக்சின் பிரேத்யேகப் பிரதிநிதிகளெனில் அது FLEETWAY -ன் மும்மூர்திகளே !

   இவர்களது முதல்சுற்றை பூர்த்தி செய்து கொள்வோம் சார் ; அப்புறமாய் அடுத்தநிலை நாயகர்கள் பக்கமாய்ப் பார்வைகளைத் திருப்புவோமே ?

   Delete
  2. Ok
   We are waiting
   But
   ஏதாவது ஒன்று,
   உங்களால் முடிந்த,
   நிறைவேற்ற சாத்தியமுள்ள
   ஆரம்ப முத்துகாமிக்ஸ் ஐ நினைவுபடுத்தும் விதமாக,
   பொருத்தமான ஏதேனும் ஒன்று
   இடம்பெற வேண்டும் என வேண்டுகிறேன்.

   Delete
  3. நான் மற்ற நாயகர்களையோ? கதைகளையோ? குறிப்பிடவில்லை.
   என் எதிர்பார்ப்பு என்னவென்றால்
   முத்து காமிக்ஸ் ன் முதல் இதழ் பற்றி
   முதல் வாசகர் பற்றி
   உங்களை வந்தடைந்த முதல் வாசகர்கடிதம் பற்றி
   முதல் சந்தாதாரர் பற்றி
   முதல் முகவர் பற்றி
   முத்துகாமிக்ஸ் ல் உங்களின் முதல் பங்களிப்பு பற்றி
   இப்படி ஏதாவது சில விஷயங்கள்
   இடம்பெற வேண்டும் என வேண்டுகிறேன்!

   Delete
 13. சிறுவயதிலிருந்தே எத்தனையோ கஷ்டமான தருணங்களில் நம்மை தொடர்ந்து குதூகலப்படுத்திக் கொண்டிருக்கும் இக் காமிக்ஸ் உலகை, இன்றைக்கு அவசியமாய் தேவைப்படும் நம்முடைய சிறு பங்களிப்பின் மூலம் நாமும் குஷிப்படுத்திட ஏற்ற தருணமாக இதைக் கொள்வோம் நண்பர்களே! நமக்குக் கிடைத்த குதூகலங்கள் இன்றைய தலைமுறைக்கும் சென்று சேரட்டும்! நிறைந்து வழியும் நேர்மறை எண்ணங்களோடு நம்முடைய இந்த சின்னஞ்சிறு உலகம் தொடர்ந்து தழைத்திருக்க நாமும் தொடர்ந்து தோள் கொடுப்போம்!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக அண்ணா!

   Delete
 14. அவசியமான நல்ல பதிப்பு ஆசிரியர் சார்!!
  நல்ல ஆரோக்கியமான கருத்துகளை இங்கே பேசுவோம், காமிக்ஸ் வட்டத்தை பெருக்குவோம்.. மாசம் 8 புக் போடும்படி பண்ணுவோம்!!

  P.S: லியோனார்டோ காமிக்ஸ் ஐ புக் fair வாங்கி இப்போது தான் படித்தேன். கதை அருமை.. குறிப்பாக சித்திரங்களை கவனித்தால் அதிலும் நகைச்சுவைக்கு உத்திரவாதம் உள்ளது!! அடுத்த வருடம் கண்டிப்பாக இவர் வேண்டும் சார் :)

  ReplyDelete
 15. //படைப்பாளிகளுக்கும் - உங்களுக்குமிடையிலான போஸ்ட்மேன் மட்டுமே நான் என்பதில் துளியும் குழப்பங்களில்லை என்னுள் ! //

  போன பதிவுல 'நான் ட்ரைவர்'னு சொன்னிங்க; வண்டியில கடைசி சீட்ல இடம் பிடிச்சு காத்துக்கிட்டிருந்தா இப்ப திடீர்னு 'நான் போஸ்ட்மேன்'னு சொல்லிட்டீங்க! அடுத்தபதிவுல "ஐயாம் இன்ஸ்பெக்டர் விஜயன்"?!! :P

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : அட ....பகலில் போஸ்ட்மேனாகவும் ; ராவில் டாக்சி டிரைவராகவும் வேலைபார்க்கும் ஆசாமி என்று வைத்துக் கொள்ளுங்களேன் !

   Delete
 16. சார் உங்கள் தரப்பு விஷயங்கள் அத்தனையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல.இதைப் பற்றிய கேலியோ கிண்டலோ மனசாட்சி உள்ள எந்த மனிதரிடமிருந்தும் எழ வாய்ப்பில்லை. இதனை கேலிக்கு உள்ளாக்கும் நபர்கள் உங்களது தரப்பு நியாயங்களை ஒரு நிமிடம் உங்களிடத்தில் தங்களை பொருத்திப் பார்த்தால்தான் அந்த வலி தெரியும்.
  இந்த துறையில் உள்ள சிரமங்கள், லாபத்துக்கான எந்தவிஉத்திரவாதமல்லாத சூழ்நிலை, மிகக்குறைவான வாசகர் வட்டம், இன்னும் பலவித சங்கடங்களை புரிந்துதான் பெரிய பத்திரிக்கை ஜாம்பவன்கள்கூட கையில் எடுக்காத துறையாக காமிக்ஸ் இன்று இருக்கிறது.
  ஆனால் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இவ்வளவு குறைந்த விலையில் இவ்வளவு அருமையான தரத்தில் நமது காமிக்ஸை வெளியிடும் உங்களது மனவலிமை இந்தியாவில் வேறு எந்த நிறுவனத்திற்கும் இல்லை என உறுதியாக கூறமுடியும்.
  இந்த மனவலிமையையும்,தன்னம்பிக்கையையும் மனமிருந்தால் பாராட்டலாம்.
  இல்லையென்றால் பாராட்ட வேண்டாம். ஆனால் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்குகிறார்கள் என்றால்....
  அவர்கள் மனிதர்களேயல்ல.

  ReplyDelete
  Replies
  1. வாவ்! நச்!! +123445566677889

   Delete
  2. ஏடிஆர் சார் அழகாக சொன்னீர்கள் ....அருமை ...சிலர் இது எடி ப்ளாக் ...அவரை தானே கேட்கிறோம் ...யாரும் குறுக்கே வராதீர்கள் என அறிவித்து விட்டு இதழ்களை பற்றி விமர்சிப்பதை விட்டு விட்டு ஆசிரியர் மற்றவர் கண்களுக்கு எதிரியாக தோன்ற எப்படி எல்லாம் விமர்சிக்க வேண்டுமோ அப்படி வருகிறார்கள் ...

   ஆனால் ஆசிரியரை பற்றி இங்கே அனைவருமே அறிந்து தான் உள்ளனர் ..ஆனால் ..எவ்வளவு கேலி ..சீண்டல்கள் செய்தாலும் ஆசிரியர் பற்றிய மதிப்பும் மரியாதையும் என்றுமே நண்பர்களின் மனதில் குறையாது என்பது அவர்கள் அறிந்தும் அறியா உண்மை ....

   Delete
  3. பரணிதரன் சார் புத்தகங்களை விமர்சிப்பதை விட்டு விட்டு ஆசிரியரை பிறர் பார்வைக்கு எதிரியாக சித்தரிக்கவும், அவர் பெயரை கெடுத்து அவர் வேலையையும் நிம்மதியாக செய்ய விடக்கூடாதென்ற எண்ணத்துடன் சில மனிதர்கள் இங்கு வருகின்றனர் என்பது உண்மையே.
   ஆசிரியரை சுற்றி பாதுகாக்க ஆயிரம் கரங்களுக்கு மேல் இருக்கையில் ஒன்றிரண்டு கரங்களால் என்ன செய்ய முடியும்?
   தளம் அமைதியாக இருப்பது பொறுக்கவில்லை சிலருக்கு.
   ஈரோடு புத்தகவிழா பலர் முகத்தில் கரியை பூசியிருப்பதை உணரமுடிகிறது.
   விற்பனை சற்று மந்தமாக இருந்தாலும் விழா அனைவருக்கும் இடையில் இருந்த சிறிய இடைவெளியையும் குறைத்திருக்கிறது. ஆசிரியர் தனது தாய் தந்தையுடன் வருகை புரிந்ததிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாய் புரிகிறது. இதனை ஒரு குடும்ப விழாவாகத்தான் ஆசிரியர் எண்ணியிருக்கிறார். விற்பனையென்பது இரண்டாம் பட்சம்தான். அனைவரின் உற்சாகமும் ஆசிரியருக்குள் ஊட்ட சக்தியாய் ஊடுருவியுள்ளதை அவரது விழாவிற்கு பிந்தைய பதிவே உணர்த்துகிறது.
   இதெல்லாம் சிலர் கண்ணுக்கு தெரியவில்லை. அங்கு விற்பனை சற்று குறைவு என்ற விஷயம்தான் கண்ணில் படுகிறது. வார்த்தைகளிலும் (சந்தோஷமாக)வெளிப்படுகிறது. குறை கண்டு பிடித்து எத்தனை நாளுக்கு பேர் வாங்க முடியும்?
   "கெடுவான் கேடு நினைப்பான்."

   Delete
  4. Atr sir@ உண்மையை உரக்க சொன்னீர்கள்...
   அருமை...
   இன்றைய உண்மையான நிலையை தெளிவான விளக்கத்துடன் சாட்டையடி போல தெரிவித்து விட்டீர்கள்...அருமை...
   ஆயிரம்தான் இருந்தாலும் உங்கள் அனுபவத்தால் சிலரின் பொறாமை கொண்ட வஞ்சக எண்ணத்தை அனைவரும் புரிந்து கொள்ள செய்து விட்டீர்கள்...
   ஓவ்வொரு கருத்தும் பட்டாசு சரம்...
   மீண்டும் நன்றிகள்...

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
 17. //இதுவரையிலான சந்தா ஆண்டுகளில் நடப்பாண்டே THE BEST என்று சொல்லலாம் ///

  ரொம்பவே மகிழ்ச்சியான செய்தி எடிட்டர் சார்! உண்மையில், இப்படியொரு செய்தியைக் கேட்க ஒவ்வொரு வருடமும் ஏங்கிக் கிடந்தோம் என்பதே உண்மை!

  சந்தாதாரர்களுக்கு நீங்கள் வழங்கிடும் சலுகைகளை எல்லோரும் அறியச் செய்ய இம்முறை இன்னும் கூடுதல் முயற்சி எடுத்திட வேண்டுகிறேன். இன்றைக்கும் பலர் சந்தா தொகையையும், புத்தகத் திருவிழா தள்ளுபடிகளையும் ஒப்பீடு செய்து கொண்டிருப்பதை இனியாவது தவிர்க்க முயற்சிக்கலாம்! எப்படித்தான் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், சந்தா செலுத்துவதை விட சேமிப்பு வழி வேறெதுவுமில்லை என்பதை அனைவருக்கும் புரியச் செய்திட வேண்டும் - ஆணித்தரமாக!

  ReplyDelete
  Replies
  1. // எப்படித்தான் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், சந்தா செலுத்துவதை விட சேமிப்பு வழி வேறெதுவுமில்லை என்பதை அனைவருக்கும் புரியச் செய்திட வேண்டும் - ஆணித்தரமாக!// உண்மை.

   Delete
  2. ஈரோடு விஜய்,
   அது என்ன சந்தா சலுகை ?

   Delete
 18. Vijayan Sir,
  Please make subscriptions easy for readers outside of India.
  For example, Price + Postal (per region - USA/North America, UK/Europe, Middle East, Asia Pacific (Sri Lanka/Singapore/Malaysia/HK/Australia)

  We support you wholeheartedly and be evangelist to popularize Tamil comics to our community and next generation. Thanks.

  Prabu UK

  ReplyDelete
  Replies
  1. Super Prabu brother ,
   இந்த இதய பூர்வ வார்த்தைகளுக்கு நன்றி. வெளிநாடு வாழ் வாசகர்களும் லயன் காமிக்ஸ் வளர்ச்சிக்கு தங்களாலான முயற்சியை கொடுத்தால் தமிழ் பேசும் காமிக்ஸ் உலகம் எங்கும் பயணிக்கும். நன்றி.

   Delete
 19. ///தொடரும் 2017-ல் ரூ.75/- என்ற விலையில் – குறைவான பிரிண்ட்ரன்னில் தொடரவுள்ளோம் !///

  நண்பர்கள் பலரும் எதிர்பார்த்த முடிவே என்பதால் நிச்சயம் ஆதரவளிப்பார்கள்!

  ReplyDelete
  Replies
  1. +1111111

   அதானே .? முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போட முடியுமா.?

   Delete
  2. +123456789 நிச்சயமாக சார் ! கண்டிப்பாக நண்பர்கள் நியாமான இந்த, உங்கள் முடிவை ஏற்று கொள்ளுவார்கள் சார் .

   Delete
 20. 2012, 2013 இதழ்களில் அயல் நாட்டு சந்தா என்று தெளிவாக போட்டு இருந்தீர்களே.. மறுபடியும் போடுங்க சார்!
  Postal Fee நாட்டுக்கு நாடு வேறுபாடு உங்களுக்கு கட்டுபடியாகவில்லை என்று எங்களுக்கு புரிகிறது. Flat Rate-ம் கொஞ்சம் வாசகர்களை தயங்க வைக்கிறது (ஊட்டுகாரம்மாவுக்கு பதில் சொல்லனுமே :-(. ஏனென்றால் Tamil comic fans NRI எல்லோரும் Google/Microsoft Software Engineers இல்லையே! :-( அதனால் regional subscription model பற்றி கொஞ்சம் யோசிங்க சார் ... நன்றி.

  ReplyDelete
 21. அதிகாலை வணக்கம் ஆசிரியரே & நண்பர்களே

  ReplyDelete
 22. வணக்கம் நண்பர்களே...
  வணக்கம் சார்...

  யதார்த்தமான பதிவு, எங்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவோம் சார்...

  எந்தவொரு பதிப்பகமும் வாசகர்களிடம் பகிராத விசயங்களை எங்களோட கலந்தாலோசிக்கும் உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடியாகவே நடந்தேறும் சார்...

  ReplyDelete
 23. அதிகாலை வணக்கம் ஆசிரியரே & நண்பர்களே

  ReplyDelete
 24. ஆசிரியர் அவர்களுக்கு,
  பல வருடங்களுக்கு முன்பிருந்தே நான் எழுதி கொண்டு வருவது(கடிதம்) .காமிக்ஸ் என்பது 2ம்.3ம் உலகம் போன்றது. அது ஒரு நல்ல அழகிய கனவு உலகம்.எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் அடிக்கும் குட்டிகரணத்தை விட்டு விட்டு கால் கட்டை விரலை வாயில் வைத்து கதைகளை குறைக்காமல் விலையை பற்றி கவலைப் படாமல் காமிக்ஸ் அடைமழை யை பிரிண்ட் ரன் முறையில் கொடுப்பதே சிறந்தது என்பது எனது எண்ணம்.நன்றி. வணக்கம்
  I Love லயன்,முத்து

  ReplyDelete
  Replies
  1. நன்றி இதையே ஒவ்வொரு. வாசகருமே நினைத்தால் ஜாலிதான்

   Delete
 25. அன்புள்ள ஆசிரியர்க்கு,
  நல்ல, நேர்மறையான, மனந்திறந்த பதிவு. உங்கள் உழைப்புக்கு ஊதியம் கொடுக்காவிட்டாலும், மனதுக்கு ஆறுதலையும், நிம்மதியையாவது தரலாம் நம் சக காமிக்ஸ் நண்பர்கள்.
  ஆனால் சிலர் சோசியல் மீடியா நாட்டாமைகளாக காட்டிக்கிராங்களேயோழிய, உண்மையான தமிழ் காமிக்ஸ் ரசிகர்களாக நடப்பதில்லை என்பதுதான் நிதர்சணம்.வருந்தகூடியதும்.
  ஏனென்றால் ஒரு ரசிகன் தனது ரசிப்பையே முதலில் சிலாகிப்பான். பிறகே மற்றதெல்லாம்.

  யார் என்ன சொன்னாலும், தமிழ் காமிக்ஸையும் அதன்மூலம் தமிழையும் வளர்ப்பது உங்கள் டீமே.

  உங்களுக்கு சரியென்பதை தொடர்ந்து செய்து எங்கள் பொழுதை சிறப்பாக ஆக்கவும். நன்றிகள் கோடி.
  நாளை நிச்சயம் மாறும்.

  ReplyDelete
 26. ஆசிரியர் அவர்களுக்கு,
  பல வருடங்களுக்கு முன்பிருந்தே நான் எழுதி கொண்டு வருவது(கடிதம்) .காமிக்ஸ் என்பது 2ம்.3ம் உலகம் போன்றது. அது ஒரு நல்ல அழகிய கனவு உலகம்.எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் அடிக்கும் குட்டிகரணத்தை விட்டு விட்டு கால் கட்டை விரலை வாயில் வைத்து கதைகளை குறைக்காமல் விலையை பற்றி கவலைப் படாமல் காமிக்ஸ் அடைமழை யை பிரிண்ட் ரன் முறையில் கொடுப்பதே சிறந்தது என்பது எனது எண்ணம்.நன்றி. வணக்கம்
  I Love லயன்,முத்து

  ReplyDelete
 27. என்ன ஆசிரியரே இது சொட்டைத்தலையன். போஸ்ட்மேன்.நெட்டைகொக்கு.கிழட்டு சுவர்.புண்ணாக்கு என உங்களை நீங்களே மட்டம் தாங்கிக்கொள்ளும் கடைசிப்பதிவாக இது இருக்கட்டும் எங்களுக்கு என்றுமே நீங்கள் சிங்கம் தான் யார் எப்படி நினைத்தாலும் எனக்கு நீங்கள் காமிக்ஸை காப்பாற்ற வந்த கடவுள் தான் இதில் மாற்று கருத்தில்லை தயவுசெய்து உங்களை மட்டும் தட்டிக்கொள்ளும் கடைசிப்பதிவாக இது இருக்க வேண்டும் ஆசிரியரே நீங்கள் உற்சாகமாக இருக்கும் வரை காமிக்ஸ் வாழும் வளரும் உயரும் இதில் எள்ளளவும் சந்தேகமில்லை முன்பிருந்த கம்பீரத்துடனே வலம் வாருங்கள் வெற்றி நமதே

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப சரியா சொன்னிங்க செந்தில் சத்யா.

   Delete
  2. புரிந்து கொண்டதற்கு நன்றி நண்பரே

   Delete
  3. உங்களை நீங்கள் தரம் தாழ்த்தி கொள்ள அவசியமா???.
   பெரிய பெரிய விளம்பரம் செய்து 50000 முன்பதிவு பெற்று வரலாறு பின்னனி கொண்ட புத்தகத்தை வாங்கிய பிறகு தான் தெரிகின்றது தரம் எவ்வளவு குறைவு என்பது. Lionmuthu தரத்தில் பாதி கூட இல்லை.

   இன்றும் குறைந்த விலையில் காமிக்ஸ் கொடுக்கும் நீங்கள் HERO தான்.

   Delete
  4. எடிட்டருக்கு,
   உங்களை பற்றி பலர் எதிர் மறையான கருத்துக்களை பேசுகிறார்கள், பரப்புகிறார்கள். அதை பற்றி கவலை படுவது உங்களுக்கு இருக்கும் வேலை பளுவுக்கு தேவை இல்லாத ஒன்று. நீங்கள் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இங்கு எழவில்லை.

   Delete
  5. செந்தில் சத்யா நன்றாக சொன்னீர்கள் ....

   Delete
  6. செந்தில் சத்யா.! சரியாக சொன்ணீங்க .!நம் எடிட்டர் உண்மையிலே சிங்கம் தான்.

   தென்னாட்டு நெல்லை பாணியில்.......

   நம் எடிட்டர்., " சிங்கம்லே .! "

   Delete
 28. உங்களுக்கு நஷ்டம் வராத அளவிற்கு புத்தகங்களின் விலையை உயர்த்துங்கள் ஆசிரியரே

  ReplyDelete
 29. விலை குறைப்பு, கூட்டுதல் மற்றும் புத்தகங்களின் சைஸ், பிரிண்ட் ரண் என்பதெல்லாம் பதிப்பகத்தார் உரிமை.

  முன்னறிவிப்பு மட்டுமே கடமை என்பதே என் கருத்து.

  ReplyDelete
 30. விஜயன் சார்,
  Indian comics உலகத்தில் உங்கள் பெயரே "The Last Man Standing". பெரிய பெரிய comics publishing கொம்பன்களெல்லாம் "களத்திலும்,காலத்தினாலும்" தோற்றார்கள். Survival of the fittest-க்கு நீங்கள் தான் உதாரணம்.
  Please keep going, we will support you.

  ReplyDelete
  Replies
  1. Yes sir. Long standing is certainly difficult.you are an achiever on this field. Please keep going.விமர்சனங்கள் எழும் வீழும். தடைகளைத் தகர்த்து சரித்திரம் படைத்து இந்த சிங்கம் பாயும்.

   Delete
  2. என்றும் சிங்கம் கர்ஜிக்கும்.
   அதன் குரல் அதன் நாட்டை ஆளும்.

   Delete
 31. நண்பர்களே சில வருடங்களுக்கு முன்பு நான் சிவகாசிக்கு ஆசிரியரை சந்திக்க சென்றேன் அது இரத்தப்படலம் கலெக்டர்ஸ் ஸ்பெஷல் ரெடியாகி கொண்டிருந்த சமயம் என்னை நல்ல படியாக வரவேற்றார்கள் இரத்தப்படலம் அட்டைப் படத்தை காட்டினார்கள் சந்தோஷமாக தலையாட்டி விட்டு ஆசிரியரை சந்திக்க வேண்டும் என்று சொன்னேன் அப்போது என்னிடம் அங்கிருந்த ஊழியர்கள் ஆசிரியர் டென்ஷனாக இருக்கிறார் இப்போது அவரை சந்திக்க முடியாது என்றார்கள் நானும் கண்ணாடி கதவின் ஊடே எட்டிப்பார்த்தேன் உண்மையிலேயே ஆசிரியரின் முகம் இருகிக்கிடந்தது அதனால் அவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தேன் அன்று டென்ஷனாக இருந்த ஆசிரியர் தான் இன்று நாம் தோளில் கை போட்டு உறவாடுகிறார் ஏனென்றால் அவர் நம்மை புரிந்து கொண்டார் ஆனால் நம்மில் சிலர் அவரை புரிந்துகொள்ளாமல் அவரை மட்டும் தட்டுகிறார்கள் வேண்டாம் நண்பர்களே அவர் நம்மை புரிந்துகொண்டு நம்மிடையே நண்பராக வலம் வருகிறார் சிலர் அவரை புரிந்து கொள்ளாமல் எதிரியாய் கற்பனை செய்து கொள்கிறார்கள் நண்பர்களே புரிந்துகொள்ளுங்கள் அவர் என்றும் நம்மவரே நம் நலம் விரும்பியே

  ReplyDelete
  Replies

  1. உண்மை.
   நான் எனது சிறு வயது முதலாய் நான் பார்த்து வருகிறேன். ஒவ்வொரு மாதமும் நான் புத்தகம் வாங்க செல்லும் பொழுதும் அடிக்கடி அவரை அங்கு காண்பேன்.துவக்ககாலத்தில் அவரிடம் பேசவேண்டும் என்ற எண்ணம் எழுந்ததே இல்லை. காமிக்ஸ் பெரும் பேரழிவை சந்தித்த போது, சந்தையில் வந்த அனைத்து காமிக்ஸ்-உம் தங்களது பதிப்பை நிறுத்திகொண்டபோது அவர் ஒருவர் மட்டுமே தனது பணியை காமிக்ஸை நடத்தி வந்தார்,அவர் சந்தித்த அனைத்து ப்ரட்சனைகளையும் தாண்டி.அவரது இந்த நெடும் பயணம் புடம் இடப்பட்ட தங்க சாலைக்கு இணையானது. அப்பொழுது தான் அவரிடம் பேச வேண்டும் என்று விரும்பினேன்.அவர் அங்கு உள் அறையில் இருக்கும் போது ,அவர் பிஸியாக இருப்பதாக சொல்வார்கள்.நான் காமிக்ஸ் வாங்கும் வேளையில் அங்கு இருந்தாலும் கூட அவர் அமைதியாக தான் இருப்பார்,அவர் புன்னைகை செய்தால் தானே நாம் பேசுவது. அவருக்கு இருக்கும் தயக்கம் கூச்சம் நமக்கும் இருக்காதா என்ன. அந்த நாட்களில் நான் என் கூச்சத்தையும் துறந்து வரவேற்பறையில் அவருடன் பேசினேன். இன்றைய நாட்களில் அவரிடம் இருக்கும் மாற்றங்கள் பிரமிக்கதக்கவை.
   இந்த அன்பு முன்பே கிட்டி இருந்தால்...மலரை சுற்றும் பொன்வண்டாய் அன்றே நாம் மாறி இருப்போம்.

   Delete
  2. சத்யா சார்.& சகாயம் சார்.!

   எடிட்டர் ஆரம்ப காலம் முதலே என்றுமே காமிக்ஸ் ரசிகரகளை சந்திக்கும்போது குதூகலமாகிவிடுவார் என்று ஆரம்பகால நண்பர்கள் கூற கேட்டுள்ளேன்.!

   எடிட்டரின் இன்னொரு முகம் ஒரு கண்டிப்பான சிறந்த நிர்வாகி என்றே உணர்கின்றேன். அவரது தந்தையும் தந்தையின் சகோதரர்களும் நடத்திய தொழில்கள் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்துவிட்டு பின்னர் பலத்த நஷ்டமடைந்து அதில் இருந்த கடன்களை வட்டிகட்டி மீட்டு வெற்றி நடை போட வைத்துள்ளார் என்பது சாதாரணமானவர்கள் செய்யக்கூடிய சாதனை யில்லை.கடன்காரர்கள் தொந்தரவு என்பது மனிதர்களை உண்மையாக புரிந்கொள்ளக் கூடிய ஒரு கசப்பான அனுபவம் என்பதை கடன்பட்டவர்கள் அனைவரும் உணர்ந்தது..(ஏனென்றால் அவரக்கு ஏற்பட்ட அனுபவம் ஏறக்குறைய எனக்கும் ஏற்பட்டது .)

   மேலும் ஒரு தொழில் நிர்வாகியின் அடையாளம் அவர் அங்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் வேலை பக்காவாக நடைபெறுவது.அதை நான் அங்கு சென்றபோது அதை உணர்ந்தேன்.! (மற்ற செய்திகள் உபயம் சிங்கத்தின் சிறு வயதில்...)

   Delete
 32. பழைய இதழ்களின் மறுபதிப்பு, ஒரு காலத்தில் ஸ்பைடர், ஆர்ச்சி, மாயவி பைத்தியமாயிருந்த எனக்கே இப்போது பார்க்க சகிக்கவில்லை. Sorry Friends!. ஆசிரியர் நம் ரசனையை தொர்கல், லார்கோ, வேய்ன் ஷெல்டன், கமான்சே, பௌன்சர் ரேஞ்சுக்கு கொண்டு போய்விட்டார். So I am not keen on those reprints :-))

  ReplyDelete
  Replies
  1. //ஆசிரியர் நம் ரசனையை தொர்கல், லார்கோ, வேய்ன் ஷெல்டன், கமான்சே, பௌன்சர் ரேஞ்சுக்கு கொண்டு போய்விட்டார்.///...இது இன்னும் அடுத்தடுத்து நகரனும்.
   எங்கே விடாப்பிடியா இன்னும்..சரி வேணாம்...நாம புதுசு கேட்பதோடு விடுவோம்.

   Delete
  2. நண்பரே அந்த பழைய இதழ் இருந்தால் கொடுத்து உதவுங்கள். நன்றி

   Delete
 33. இங்கிலாந்தில் மரித்து பல மாமாங்கமன Fleetway கிராக்கிகள் இன்னும் நம்மூர் புத்தக விழாக்களில் சக்கை போடு போடுவதாக ஆசிரியர் போன பதிவில் எழுதியிருந்தார்.. Arrrghhh !!! P.S.வீரப்பாவின் வசனம்தான் ஞாபகத்துக்கு வருது...

  ReplyDelete
 34. காலை வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
 35. அன்பான ஆசிரியர் அவர்களுக்கு,

  நிரம்பவும் உணர்ச்சிகரமான ஒரு பதிவை ஏற்படுத்தியுள்ளீர்கள்.

  114 புத்தகங்களை இத்தனை நாளாக வெறும் ஸ்டாக்குகளாக வைத்திருக்கும் முதலீட்டாளராக உங்களின் வேதனையின் வெளிப்பாடாகத் தான் இந்த பதிவை பார்க்கிறோம். ஒரு பதிப்பகத்தார் அல்லாது வேறு ஒருவர் உங்கள் நிலை புரிந்து கொள்வது கடினம் தான்.

  கருத்து சுதந்திர சமூக வலைப்பதிவுகள் என்கிற பெயரில் சில பலர் சற்று உற்சாகத்தில் குறைகளை பிரித்து மேய்ந்து ஆராய்ந்து நமது காமிக்ஸ் குறித்து ஒரு தவறானப் பாதிப்பினை ஏற்படுத்திவிட்டனர் என்பதில் ஐயமில்லை.

  வருத்தம் வேண்டாம் சார், இனி நல்லதே நடக்கும். உங்கள் உழைப்பின் பலன் உங்களுக்கு கிட்ட மனமார வாழ்த்துகிறோம்.

  நமது காமிக்ஸ் பொறுத்தவரையில் நான் இன்னமும் 1988ம் வருடத்தை விட்டு வர இயலாமல் தவிக்கிறேன்... அப்போது மாதம் நீங்கள் வெளியிட்ட 4 காமிக்ஸ்களில் ஒன்றை கூட வாங்க முடியாத சூழ்நிலை இருந்தது. தாமதமானாலும் எப்படியும் செகண்ட் காபியாவது வாங்கி அத்தனையும் படித்து மகிழ்ந்தோம்.

  இன்றைக்கும் 4 புத்தகம் வெளிவந்தும் அந்த golden comics era மட்டுமே என்னைப் பரவசப்படுத்துகிறது, புதிய முயற்சி வேண்டாமென சொல்ல வில்லை, அந்த அற்புத சிந்தனையை தூண்டும் 60s, 70s, 80s கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள் என்று தான் சொல்ல விழைகிறேன். புதுமை விரும்பிகள் இதனை சகித்தால் எல்லாருக்கும் நலம்.
  நான் சம்பாதிக்கும் வரையில் நிச்சயம் நீங்கள் எந்த கதை வெளியிட்டாலும் வாங்குவேன்.

  ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் சார், காமிக்ஸ் ஹீரோக்கள் பலர் இருக்கலாம். காமிக்ஸ் தலைவர் எங்களுக்கு நீங்கள் தான். உங்களால் மட்டுமே நம் தமிழ் காமிக்ஸ் தழைக்க வைக்க முடியும். மதங்களால், சமுகங்களால் பிரிந்திருக்கும் நாங்களெல்லாம் ஓன்று படுவது உங்கள் காமிக்ஸ் பதிப்பு மூலமாக தானே.

  இருப்பது ஓரிரு ஆயிரம் பேர் இதில் பலப்பிரிவுகள் ஏன் நாம் ஏற்படுத்தி கொள்ளவேண்டும் என்ற வேதனை எனக்கும் அடிக்கடி வருவது உண்டு.
  அவ்வளவு ஏன் இந்த பிளாக்கில், "என் ஹீரோ தான் பெஸ்ட், மத்தவன் எல்லாம் வேஸ்ட்" என்று மற்றவர் ரசனை, உணர்வு புரியாமல் பதிந்திடும் உட்பூசலுக்காவே என்னைப் போன்றவர்கள் இந்த பிளாக்கை விட்டு விலகியிருக்கிறோம் .
  நாமெல்லாம் ஒன்று படவேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் காமிக்ஸ் நட்பின் பண்பு மீண்டும் நம்மெல்லோருக்குள்ளும் குடிக்கொள்ளவேண்டும்.

  விஜயன் சார், இதற்கு ஒரு வழியிருக்கிறது... அனைத்து வாசகர்களுக்கும் அழைப்பு விடுத்து ஒரு வாசகர் சந்திப்பு ஒன்றை அனைவருக்கும் பொதுவான ஒரு இடத்தில் நீங்கள் நடத்திட வேண்டும்... அதில் முழுக்க முழுக்க வாசகர் கருத்து க்கள் சேகரித்து ஓர் நேரடி கலந்தாலோசனை செய்ய முடிந்தால், ஒரு மாற்றம் வருமென எனக்கு தோன்றுகிறது.

  பொறுமையாய் வாசித்தமைக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
  Replies
  1. உதய்@ஈரோட்டில் இதானே நண்பரே நடந்தது. அந்த பதிவையும், நண்பர்கள் கமெண்ட் களையும் இன்னொரு முறை மீள் வாசிப்பு செய்யுங்கள். உங்கள் ஐடியா ஏற்கனவே தொடக்கம் கண்டுவிட்டது புரியும் நண்பரே...

   Delete
  2. உண்மைதான்....
   நூற்றுக்கணக்கில் நண்பர்களைப் பெற்றுத் தந்தது
   காமிக்ஸ் தான்....
   எந்த ஊர் சென்றாலும் ஒரு பாதுகாப்பு உணர்வு தருவது அங்கு உள்ள நமது காமிக்ஸ் நண்பர்கள்தான்....

   Delete
  3. உதய் சார் அழகாக சொல்லியுள்ளீர்கள் ...பாராட்டுக்கள் ...

   Delete
 36. நல்ல பதிவு.....
  வினலயில் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்துள்ளது மகுழ்ச்சி.....
  நின்றய இதழ்கள் வேண்டும்.....
  இந்த பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.....
  என்றால் முயற்சி நான் தவறாது சந்தா கட்டுவேன்....
  கூடுதலாக எனது நண்பர்களுக்கு இதழ் வாங்கி பரிசளிப்பேன்......
  நமது காமிக்ஸ் இதனழ எனது மாணவர் களுக்கு காட்டுவேன்.....
  இந்தவருடம் ஈரோடு புத்தகவிழாவிற்கு எனது இரண்டுமாணவிகனள வரச்செய்து நமது காமிக்‌ஸ் தல, தளபதிகனள, இளவரசி, தாதாக்கள், முத்து மினிகாமிக்ஸ் போன்றவற்றை அறிமுபடுத்தினேன்....
  அவர்கள் முத்துமினிகாமிக்ஸ் ஒரு செட் வாங்கிசென்றனர்.....
  இது எண்ணாலான முயற்சி....
  இந்தநிகழ்வின்போது திருப்பூர்குமார்,சரவணன் இருந்தனர்.... நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டோம்......
  அப்படியே இம்மாத லார்கோ,செங்குரெதுசானல, சிப்பாயின் சுவடுகள், மேசிக் விண்ட் அறிமுக கனத நண்பர்களுக்கு வாங்கி வந்தேன்......
  நமது பயணம் தொடரட்டும்....
  நாங்கள் துனண இருப்போம்.....
  Super six க்கு சென்ற மாதமே பணம் கட்டிவிட்டேன் எதோ என்னால் முயன்ற சிறு உதவி அவ்வளவே.....
  இம்மாத தலயின் அதிரடிக்கு வெய்டிங் பார் மீ......

  ReplyDelete
  Replies
  1. இளைய தலைமுறையினரிடம் காமிக்ஸ் ஐ அறிமுகப் படுத்தியதற்கு நன்றி அண்ணா!
   இளவரசி யை அறிமுகப் படுத்தியதற்கு SPECIAL நன்றிகள் அண்ணா!

   Delete
  2. என்னிடம் பயிலும் சில மாணவிகள் மாடஸ்டியை விரும்புபவர்கள். மாடஸ்டியிடம் இருக்கும் மன உறுதி, போராடும் குணம், எதற்கும் சளைக்காத மனம் என அவளின் குணாதிசியங்களினால் கவரப்பட்டவர்கள்.

   Delete
 37. சூப்பர் சார் . அருமயான பதிவு . ஸ்மர்ஃப் அட்டகாசம் . அதிக ுற்சாகமாய் மொழி பெயர்ப்பு செய்ததாய் படுகிறது . அந்த டெக்ஸ் பக்கம் அசத்தல்....பவளச்சிலை மர்மம் வந்து போகிறது மனக்கண்ணில்.... அடுத்த மாதம் அமர்கள மாதமாய் அமயவிருக்கிறது....எங்கோ ஏக்கங்களை கூட்டிடும் வாய்ப்புள்ள ஸ்மர்ஃப் ....முப்பது ஆண்டுகளாய் தோளில் கைபோட்டு தன்னைத் தேடி நம்மையும் எதிர்பார்ப்போடு அழைத்துச் செல்லும் இப நண்பன் , அட்டகாச அதிரடியோடு காத்திருக்கும் டெக்ஸ் ஜானி நீரோ.....அடி தூள் ..😊

  ReplyDelete
 38. Dear Esitor
  ‘காமிக்ஸ்‘ எனும் ரசனை தயக்கத்தோடு அணுகப்பட வேண்டியதொரு ஜீவனாய் மட்டுமே இன்னமும், பெரும்பாலானோர்க்குத் தொடர்கிறது - கண்முன்னே ஒரு வண்டிக் காமிக்ஸ் புத்தகங்கள் கலர் கலராய்த் தட்டுப்படும் போது கூட அவற்றை மெதுமெதுவாய் முயற்சிக்க மட்டுமே மக்கள் முனைப்புக் காட்டுகிறார்கள் ! வாசக வட்டத்தை இன்னமும் குறுகலாக்கிடுவதில் மாற்றம் வருமென எனக்கு தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. காமிக்ஸ் costlyஆகி கொண்டு வருவதற்கு ஆசிரியர் மட்டும் காரணம் கிடையாது. உலக அளவில் வாசகர் வட்டம் குறைந்து வருவதால் காமிக்ஸ் மட்டுமல்லாது அனைத்து புத்தகங்கள் நிலையும் இதுதான்.

   Delete
 39. வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

  ReplyDelete
 40. Tex பவளச்சிசிலை மர்மம் நயபகம் வருகிறது. விலை roundக 70 நிர்ன்ண்யயத்து இருக்கலாம். அல்லது இதழ்களின் பக்கங்கள் தரத்தை கொண்டு 50,55,60,65,70,75,80 என இருக்காலம்.

  ReplyDelete
 41. ஸ்பைடர் படை 17 லில் சேர்த்துடுங்க.....சார்

  ReplyDelete
 42. சைத்தான் சாம்ராஜ்யம்....17 லில் மறந்துடாதீங்ங்ங்ங்

  ReplyDelete
  Replies
  1. ஏற்கெனவே லிஸ்ட் போட்டாச்சு. இனிமே கேட்டு கிடைக்குமா?

   Delete
 43. இந்த டெக்ஸ் டீசர் பார்க்கும்போது செப்டம்பரில் அசத்தல் யார்னு தெரிந்து விட்டது சார்...
  இதே சாயலில் முன்பு வந்த பவளசிலை மர்மம் மற்றும் மந்திர மண்டலம் மெஹா ஹிட்கள், ஆக்சன் அதரடியில் முதல் பக்கம் முதல் ஆர்ப்பாட்டம் பண்ணியவை...
  இதுவும் அவ்வாறே பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை சார்...
  1ம் தேதிக்காக வெயிட்டிங் சார்...

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் விஜய !


   நானும் டெக்ஸ் டீஸரை பார்த்தவுடன் பவள சிலை மர்மம் கதையின் கிளைமாக்ஸ் கதையோ என்று நினைத்தேன்.!


   பவளச் சிலை மர்மம் கதையில் எல்லோரையும் பாலத்தை கடக்க வைத்துவிட்டு பாலத்தை துண்டிக்க முற்படுவதும் ,அதற்கு கார்ஸன் கோபமுற்று பேசும் வசனமும் நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தி கார்சன் பேசும் வசனம் மாடஸ்டி கதைகளைப் போல் கண்களில் நீர் வரவழைத்தது.!

   Delete
  2. MV sir@
   101%உண்மை . அந்த க்ளைமாக்ஸ் தான் உண்மையில் டெக்ஸ் மற்றும் கார்சன் இடையேயான உறவை தெளிவாக விளக்கும்.
   அந்த அற்புத நட்பை வைர வார்த்தைகளால் விவரித்துள்ள ஆசிரியர் மேல் நான்பற்று கொண்டது இதை படித்த பின் தான்.

   Delete
 44. உங்கள் பதிவு உங்களை பற்றி நாங்கள் புரிந்து கொண்டதை விட வாசகர்களை பற்றி தாங்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளதை உணர முடிகிறது ....சில நண்பர்கள் இங்கே சொல்வதும் இதை தானே ...நண்பர்கள் அனைவரும் .குறைகளை தாராளமாக இங்கே பகிரலாம் ... ஆனால் அதை குறைகள் இல்லாமல் பகிர பாருங்களேன் நண்பர்களே என்பது தானே ....அதை சில நண்பர்கள் இந்த பதிவை கண்டாவது உணர்வார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன் ....காரணம் அவர்களும் காமிக்ஸ் நேசர்களே ....என்பதை இங்கே வருகை புரியும் அனைவரும் உணர்ந்தே உள்ளனர் ....

  இந்த பதினைந்து ரூபாய் விலையேற்றம் உங்கள் குடோனை நிரப்பாமலும் ...இழப்பை ஈடுகட்டுவதால் மட்டும அல்ல. வாசகர்களுக்கு நீங்கள் சரியான விலையை தான் என்றும் நிர்ணயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு பலமாகவே உண்டு சார் ....

  தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன் சார் ...

  உங்கள் கரங்களை பிடித்து தான் நாங்கள் வருகிறோம் சார் ....ஆனால் உங்கள் துனைக்கு பல கரங்கள் தேவை என்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரங்கள் உங்கள் கரங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறது ...

  ReplyDelete
  Replies
  1. பரணி நல்லா நச்னு சொன்னிங்க.

   Delete
  2. //வாசகர்களுக்கு நீங்கள் சரியான விலையை தான் என்றும் நிர்ணயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு பலமாகவே உண்டு சார் ....//
   //உங்கள் கரங்களை பிடித்து தான் நாங்கள் வருகிறோம் சார் ....ஆனால் உங்கள் துனைக்கு பல கரங்கள் தேவை என்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரங்கள் உங்கள் கரங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறது ...//
   +1

   Delete
  3. தலைவரே.நம் காமிக் வாசகர்களின் குரலை முன்னிறுத்தியுள்ளீர்கள்.நன்றி.

   Delete
 45. சார் ஒரே ஒரு விண்ணப்பம்.இது தவறாக்கூட இருக்கலாம். ஆனால் சொல்லத்தோன்றியது.
  உங்களது படைப்புகளோ அல்லது அவற்றின் விலை பற்றிய விவாதங்களோ, தாளின் தரம், வண்ணம், அச்சுத்தரம் போன்றவை விமர்சனத்திற்கு உள்ளானாலும் உங்களை கேலி பண்ணுவது என்பதின் தொடக்கமே நீங்கள் உங்களின் சங்கடங்களை பொதுவில் எங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான்.
  தேள் என்றால் கொட்ட வேண்டும்.
  பாம்பு என்றால் கொத்த வேண்டும்.
  நெருப்பென்றால் சுட வேண்டும்.
  ஒரு புத்தக பதிப்பாளராக இருந்தால் அவரை சுற்றி ஒரு (மாயத்)திரை தொங்கவேண்டும்.
  அவர் தன் சங்கடங்களை இப்படி "தன்னையே தாழ்த்திக் கொண்டு பொதுவில் பகிரக்கூடாது."
  எங்களை பொறுத்தவரை இது தவறாக தெரியவில்லை. ஆனால் கேலி பண்ணுவதையே பிழைப்பாக கொண்டவர்களுக்கு நீங்களே அவர்களுக்கான வாய்ப்பை இதன் வாயிலாக ஏற்படுத்தி கொடுக்கிறீர்கள். அதிலும் உங்களுக்கு நீங்களே சூட்டிக் கொள்ளும் பெயர்கள்!!!! இருக்கிறதே. அதனை எங்களால் ஜீரணிக்கவே இயலவில்லை. "எங்களுக்கு நீங்கள் எப்போதுமே சிங்கம்தான். (அ)சிங்கம் அல்ல. (வீர) விஜயனாக வலம் வாருங்கள்.இப்படி 23 ம் புலிகேசி அளவுக்கு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்." தன்னையே தாழ்த்திக் கொள்பவன் உயர்த்தப் படுவான் என்று இயேசுநாதர் கூறியதற்கு அர்த்தம் இதுவா? எங்களுடன் பொதுவில் பகிர எவ்வளவோ சந்தோஷமான விஷயங்கள் இருக்கிறது. அதையெல்லாம் இணைய பதிவுகளில் எழுதுங்கள்.படிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் சங்கடங்களை பகிர்ந்து கொள்ளத் தோன்றினால் சந்தா புத்தகங்களை அனுப்புகையில் அவற்றை தனியே (தாளின் தரமெல்லாம் முக்கியமில்லை) அச்சடித்து அனுப்பிவிடுங்கள். அதையும் ஒரு பொக்கிஷமாக எண்ணி பாதுகாப்போம்.(இதையும் கேலி பண்ண வாய்ப்பு இருந்தாலும் கேலி பண்ணுபவர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது) உங்களுக்கும் எங்களுடன் பகிர்ந்து கொண்ட மனதிருப்தியும் உண்டாகும்.
  இதுவும் தவறானால் அதையும் செய்யாதீர்கள். திறமையிலோ, அனுபவத்திலோ, பழகும் விதத்திலோ இன்னும் பல விஷயங்களில் நானெல்லாம் உங்களுக்கு புத்தி சொல்லும் தகுதி இல்லாதவன்தான்.ஆனால் ஒரே தகுதி.உங்களை விட வயதில் மூத்தவன் என்பதுதான்.

  ReplyDelete
 46. // நமக்கு நாமே ! //
  +1

  ReplyDelete
 47. //Blizy Babu : "அனாவசிய மறுபதிப்புகள் " எவை என்பதை நானறியேன் - ஆனால் இந்தாண்டின் ஈரோடு + கோவைப் புத்தக விழாக்களின் விற்பனையில் 50% மறுபதிப்புகளே ! //

  REASON NEEDS TO BE RETROSPECTED EDIT SIR

  I feel one of major reason familiarity for reprint heroes, another big reason could be magic price.

  " why dont we conduct survey from our stall to find what made them buy that product. it should give clear idea. still book show going on in cbe try it today."

  ReplyDelete
 48. அன்பு ஆசிரியரே...!
  இரு முறை வாசிக்க வைத்த நீண்ட பதிவு.
  நமது காமிக்ஸ் பயணம் சரியான பாதையில் தான் செல்கிறது.நிறைய வாசிப்புகள் தான் என்றாலும்,அதனை சோர்வடையாமல் அமையச்செய்வது உங்கள் எழுத்தாக்கமே...!அதனை நிலைக்கச்செய்வது உங்கள் முதன்மை பொறுப்பு. இன்றைய கால செலவுகளை முன்னிறுத்தி பார்க்கையில் நமது காமிக்ஸ் விலைகள் அப்படியொன்றும் பயங்கரமானவை அல்ல என்பேன்.
  தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதன் தரத்தை மேலும் மேம்படுத்த வேண்டியதே.மற்றபடி உங்கள் தேர்வுகள்/பாணியிலேயே தொடருங்கள்.
  பின் தொடர நாங்கள் இருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. விலைகள் அப்படியொன்றும் பயங்கரமானவை அல்ல என்பேன்.தங்களக்கு மட்டும் என சொல்லிக்கொகொள்ள வேன்ண்டுடும் என்பது என் தாழ்மையான கருத்து.

   Delete
  2. பாட்சா சார்.!

   +111111111111111111111111

   Delete
  3. //இன்றைய கால செலவுகளை முன்னிறுத்தி பார்க்கையில் நமது காமிக்ஸ் விலைகள் அப்படியொன்றும் பயங்கரமானவை அல்ல என்பேன்.//
   +1

   Delete
 49. dear editor sir. please arrange a sales point in theni dt. it must create new readers and we can buy what we like. i hope , you will do this soon.

  ReplyDelete
 50. sir.already you said that in absolute classics books issue, if anyone ordered for all 6 books , the courier charge is nil but if we try to order the books in our website ,it shows shipping charges also. please correct it sir,

  ReplyDelete
 51. To: Editor,
  // அதற்காக இனிமேல் விலை ரூ.100 ; ரூ. 90 என்றிருக்கும் என்ற அச்சம் தேவையில்லை. தொடரும் 2017-ல் ரூ.75/- என்ற விலையில் – குறைவான பிரிண்ட்ரன்னில் தொடரவுள்ளோம் !//
  இந்த விலை மாற்றம் எந்த விலை அல்லது எந்த சந்தா பிரிவில் வரும் புத்தகங்கங்களுக்கு என்பதை தெளிவுபடுத்த இயலுமா சார்? ஏனைய விலையிலான புத்தகங்களுக்கும் இதே விகிதத்தில் விலை அதிகரிப்பு இருக்குமா?

  ReplyDelete
 52. டியர் விஜயன் சார்,

  //இவர் ரொம்பப் பேசுவாரே...!!" என்ற தயக்கத்தோடு நமது ஞாயிறுப் பதிவுகளை அணுகுவது உங்கள் வழக்கமெனில்//
  :) "பணவீக்கத்தைச் சமாளிக்க, அடுத்த ஆண்டு முதல் புத்தகங்களின் விலையை 15% அதிகரிக்க முடிவெடுத்துள்ளோம்" என்று 1 வரியில் முடித்திருக்கலாம். வலைப்பூக்களில் முழுநீள விமர்சனம் எழுதுவது கிட்டத்தட்ட வழக்கொழிந்து போய் விட்டது; லயன் ப்ளாக் / ஃபேஸ்புக் / வாட்சப்பில் பகிரப் படும் உருப்படியான விமர்சனங்கள் மற்ற கமெண்டுகளினூடே நிமிடங்களில் புதைந்து போய் விடுகிறது. புதிய வழிமுறைகளை(யும்) தேட / தொடர வேண்டிய தருணமிது.

  ReplyDelete
  Replies
  1. +1

   BETTER TO CONSOLIDATE REVIEWS IN SALES SITE "http://lioncomics.in" under each book. i remember your old site had option for comment. if review appears against each product, it will be easy for online shoppers too.

   Delete
  2. :) good to see your comment Karthik.

   Delete
  3. @ காசோ...உங்க பேரை எழுதறதுக்குள்ள-ஏன் காப்பி பேஸ்ட் பண்றதுக்குள்ள-அடுத்த கமெண்ட் வந்துருமோன்னு பயமா இருக்கு...பேரை ரெண்டே வார்த்தையில் மாற்றவும்...

   இப்படிக்கு
   உங்கள் ஐடியாவை எடிட்டருக்கு முன் பின்பற்ற நினைக்கும் வாசகன்..:D

   Delete
  4. வார்த்தை>>>>> எழுத்து(ஹி..ஹி)

   Delete
  5. //"பணவீக்கத்தைச் சமாளிக்க, அடுத்த ஆண்டு முதல் புத்தகங்களின் விலையை 15% அதிகரிக்க முடிவெடுத்துள்ளோம்" என்று 1 வரியில் முடித்திருக்கலாம்.//

   +1

   Delete
  6. // 1 வரியில் முடித்திருக்கலாம் //

   பதிவுக்குமேலே ஒற்றைவரி TL;DR போட்டுவிடலாம்!

   Delete
  7. @Satishkumar S:
   ஹலோ நண்பரே! :) நல்ல யோசனை.. இதை முன்பு கூட நீங்கள் இங்கே சொன்னதாக ஞாபகம்...

   @செ.அ.:
   கா சோ எ பெ 3ல் 2 ப தா! :) இ ம போ கொ எ பெ சுருக்கமானதே - SSK! :) அதற்காக இதே வழிமுறையைப் உங்கள் ஆராய்ச்சிப் பதிவுகளிலும் முன்பற்ற வேண்டாம்... சும்மாவே புரியாது! :P(oor) jokes apart, நா சொ வ எ எ, ஒவ்வொரு முறையும் எடிட்டர் இந்த அளவுக்கு விளக்கமான விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்பதே! :)

   Mahendran Paramasivam:
   நன்றி நண்பரே!

   @Ramesh Kumar:
   //TL;DR/
   TL;ST - too long; scanned through! :)

   Delete
  8. ///கா சோ எ பெ 3ல் 2 ப தா! :) இ ம போ கொ எ பெ சுருக்கமானதே - SSK! :) ////

   என்னா ஒரு கவுண்டர்...:-)

   ////சும்மாவே புரியாது! :////

   .....ஹி...ஹி.....

   ///வலைப்பூக்களில் முழுநீள விமர்சனம் எழுதுவது கிட்டத்தட்ட வழக்கொழிந்து போய் விட்டது; ///


   இப்படி சொல்லி உங்களை போன்றவர்கள் எழுதுவதை விட்டு விடுவதால் இழப்பு எங்களை போன்றோர்க்குதான்....

   ஸ்மர்ப் வருவதற்கு முன்பே நீங்கள் அது குறித்து எழுதிய கட்டுரையை காமிக் லவர் ராகவன் ஞாபகம் வைத்து இருந்து இங்கு அதுபற்றி குறிப்பிட்டார்.....

   ரோனின் பற்றிய உங்கள் கட்டுரை அதை என்னை வாங்க தூண்டியதாக இரண்டு நாள் முன்புதான் ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் நான் எழுதி இருந்தேன்....

   நகைச்சுவையாக, எளிமையாக எழுத வல்ல நீங்களே இப்படி சொல்லி ஒதுங்கினால் எப்படி????


   Delete
 53. அன்புள்ள ஆசிரியருக்கு,
  கண்காட்சியில் இருந்த கூட்டம் அளவுக்கு விற்பனை இல்லை என்கிறீர்கள். எனக்கு தெரிந்த காரணம் கண்ணைக் கட்டிக் கொண்டு இதான் ஓடுற குதிரைனு சொல்லி டமால் டுமீல் டிஷ்யூம் கும் கதைகளை வெளியிட்டு ஆண் விசிறிகளையும் பித்த வெறி கொண்டவர்களையும் உருவாக்கி உள்ளீர்கள். கண்காட்சிக்கு வரும் பெண்கள் நாவலே ஆனாலும் பெண் கதாசிரியர் எழுதிய கதையைத் தான் விரும்புபுவர். அங்கு வரும் தந்தை தன் மகளுக்கு பெண் கதாநாயகிகளை கொண்ட புத்தகத்தையும், கணவன் மனைவிக்கும், அண்ணன் தன் அன்பு தங் கைக்கும் கல்லூரி , பள்ளியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் தோழிக்காக மாடஸ்டி
  போன்ற கதைகளை கண்காட்சியில் தேடும் போது அவை கிடைக்காததால் வெறுத்து வாங்காமல் செல்கிறார்கள். மாடஸ்டியின் ஆரம்ப கால கதைகள் 2 (அ) 3 சேர்த்து வண்னத்தில் ரூ 100 விலையில் வெளியிட்டால் பெண் வாசகர்களின் வரவேற்பும், சந்தாவும் கிடைக்கும்.

  இப்பபடிக்கு,
  கலரில் வரப்போகும் கழுகுமலைக்கோட்டைக்காக காத்திருப்பவன்

  ReplyDelete
  Replies
  1. ravanan iniyan : சார், உங்கள் மாடஸ்டி காதல் யதார்த்தத்தை மறைக்காதவரையிலும் சரி தான் ! உங்களின் புரிதலின் பொருட்டு சின்னதொரு புள்ளி விபரம் : கடந்த 2 ஆண்டுகளின் மொத்த விற்பனையில் கடைசிக்கு 1 இடம் மேலே உள்ளவர் இளவரசிதான் !

   இத்தனைக்கும் முத்துமினி காமிக்ஸ் நீங்கலாக நம்மிடம் உள்ள கதைகளுள் விலை குறைவானவை மாடஸ்டி கதைகளே ! வாங்க ஆள் இருந்தால் போட மாட்டேனென்றா சொல்லப் போகிறேன் ??

   Delete
  2. // வாங்க ஆள் இருந்தால் போட மாட்டேன் என்ற சொல்லப்போறேன்.!//

   " என்ன கொடுமை சார்.! "

   போகின்ற போக்கை பாத்த 2017 ல் நாமக்கு நாமே.! மாடஸ்டிக்கு பட்டை நாமம்.! மனதில் மட்டுமே இடம் என்று அரசியல்வாதி மாதிரி ஆகிவிடுவாரோ.?

   Delete
 54. //சார், உங்கள் மாடஸ்டி காதல் யதார்த்தத்தை மறைக்காதவரையிலும் சரி தான் ! உங்களின் புரிதலின் பொருட்டு சின்னதொரு புள்ளி விபரம் : கடந்த 2 ஆண்டுகளின் மொத்த விற்பனையில் கடைசிக்கு 1 இடம் மேலே உள்ளவர் இளவரசிதான் !

  இத்தனைக்கும் முத்துமினி காமிக்ஸ் நீங்கலாக நம்மிடம் உள்ள கதைகளுள் விலை குறைவானவை மாடஸ்டி கதைகளே ! வாங்க ஆள் இருந்தால் போட மாட்டேனென்றா சொல்லப் போகிறேன் ?//

  எடி சார். இப்போதுதான் சரியாக நீங்கள் சரியான முடிவெடுத்துள்ளதாக படுகிறது.

  மாடஸ்டி டைஜஸ்ட் வரும் காலம் வரும் வரை காத்திருப்பேன்.

  ReplyDelete
 55. எடிட்டர் சார்... மனதை பாதித்த பதிவு...

  விற்பனை அதிகரிக்க என் வரையில் எனக்கு தோன்றியதை பதிகிறேன்...

  ஐடியா - 1

  சரக்கு முறுக்காயிருந்தால் மட்டும் போதாது... செட்டியாரும் முறுக்காயிருக்க வேண்டும். வெளியீடுகள் எல்லாம் பிரமாதமாய் இருக்கிறது. ஆனால் நீங்கள்தான் உங்களை இன்னும் சரியான முறையில் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள். நானெல்லாம் காமிக்ஸ் படிப்பதற்கு முதற் காரணம் உங்களுடைய வசன நடைதான். கதை, ஓவியம் மற்ற சமாச்சாரம் எல்லாம் அதற்கு அப்புறம் தான். (இதனை நிறைய பேர் ஒப்புக் கொள்ளப் போவதில்லை எனறாலும், என் வரையிலும் இதுவே உண்மை.) இதன் காரணமாகத்தான் உங்களின் சிசிவ-ஐ இதழில் காணவில்லை என்றால் கடுப்பாகிறேன்.

  சரி மேட்டருக்கு வரலாம்... நீங்கள் ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளர். ஹாஸ்யம் வெகு சரளமாய் வருகிறது உங்களுக்கு. (தேவன், எஸ்.வி.வி. ஆகியோரின் நகைநடைக்குப் பிறகு இந்த சரளத்தை நான் உங்கள் எழுத்து நடையில் காண்கிறேன்.) ஏன் உங்கள் தொடர்புகள் மற்றும் நம் காமிக்ஸ் (விஐபி) நண்பர்களின் தொடர்பை பயன்படுத்தி வெளி இதழ்களில் (இந்து, குமுதம், ஆ.வி., மற்றும் சில நாளிதழ்களின் இணைப்புகளில்...) ஏன் சில பல கட்டுரைகளை எழுத / வெளியிட முயற்சிக்கக் கூடாது? அதன் காரணமாக மெது மெதுவாக விற்பனை வட்டம் அதிகரிக்கக் கூடும்தானே?

  ஐடியா - 2

  ஓரிரு வருடங்களுக்கு முன்பே நான் வலியுறுத்தியதுதான். ஆனால் நீங்கள் அப்போது பதில் சொல்லவில்லை ஏதும்.
  அதாவது ஸ்பான்சர் விளம்பரங்களை இதழ்களில் அச்சிட முயற்சிக்கலாமே? 500 காப்பிகள் மட்டுமே அச்சிடும் சிற்றிதழ்களில் கூட விளம்பரங்கள் வருகின்றன எனும் போது, ஓரளவிற்கு அனைத்துத் தரப்பினரையும் எட்டும் வாய்ப்புள்ள நீங்கள் ஏன் இதழ்களில் விளம்பரங்களை ◌வெளியிடக் கூடாது?

  ReplyDelete
  Replies
  1. நல்ல யோசனைதான் நண்பரே. ஆனால் இதில் உள்ள சாதக,பாதகங்கள் எடிட்டருக்கே வெளிச்சம்.

   Delete
  2. வெல்கம் பேக்S.V.V. sir....
   கழுகு மலை வந்தால் தான் வருவீங்களோ என சந்தேகமே வந்துட்டது.
   நலமா???
   நீங்கள் இல்லாமல் இளவரசி கட்சி சற்றே சோர்ந்து காணப்படுது...
   அவுங்களை தெம்பூட்டி புதிய இலக்கை நோக்கி நடைபோடுங்கள்...

   Delete
  3. வெல்கம் பேக்S.V.V. sir....ரொம்ப நாளா ஆளைக் காணோம்

   Delete
 56. போலி ஐடிக்களுடைய இடையூறுகள் தொடர்பாக கடும் எதிர்ப்பை பதிவுசெய்தவன் நான். ஆனால், அதை வைத்து ஆசிரியரை மிரட்டும் வகையில் டமாண்ட் செய்யும் சில பதிவுகளை இங்கே வழமையாக பதிவிடும் வாசகர்கள் இடுவதைப் பார்க்கும்போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. ஒவ்வொருவருக்குமான முக்கியத்துவத்தை ஆசிரியர் தாராளமாகவே வழங்கிவருகிறார். அதைவிட மேலும் மேலும் எதிர்பார்ப்பதும் - அவரை மிரட்டும் பாணியில் பதிவிடுவதும் எந்தவகையில் நியாயமாகும்? எது உண்மை, எது பொய், யார் போலி ஐடி என்பதெல்லாம் ப்ளாக்கில் சில கட்டுப்பாடுகளைச் செய்வதன்மூலம் ஆசிரியரால் அடையாளப்படுத்தி நிறுத்திவிடமுடியும். அவரது பெருந்தன்மையிலும், பண்பிலும் - அவரது எழுத்துக்களை வாசித்து நேசிப்பதாகச் சொல்லிக்கொண்டு திரியும் நமக்கு - ஒரு சில சதவீதமாவது இருக்கவேண்டாமா? இது ஒரு பொது வெளி என்பதை மறந்து எழுதும் வார்த்தைகள் எமது முகத்தை அப்படியே காண்பிக்கின்றன என்பதை எப்போதும் மறக்கக்கூடாது!

  ReplyDelete
  Replies
  1. Exactly. Glad that someone came forward and touches this issue.

   Delete
  2. @பொடியன்
   //இது ஒரு பொது வெளி என்பதை மறந்து எழுதும் வார்த்தைகள் எமது முகத்தை அப்படியே காண்பிக்கின்றன என்பதை எப்போதும் மறக்கக்கூடாது//

   நீங்கள் சொல்வது சரியே. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட நபர் ஆசிரியர் மற்றும் நண்பர்கள் பலரை தொடர்ந்து தாக்கியும், நக்கல் அடித்தும், மட்டமான வார்த்தைகளால் திட்டியும் பதிவிட்டு வருகிறார். கல்யாண வீடு போல் சந்தோசமாக இருக்கும் சூழ்நிலையில் எல்லாம் ஏதாவது ஒன்று பதிவிட்டு தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார். இதை தடுக்க ஏதாவது செய்தால் நன்றாக இருக்குமே? போலி IDகளை களை எடுப்பதோ அல்லது moderation செய்வதோ இல்லை என்றால் இந்த தளம் பிரச்சனைகளை கண்டு கொண்டு தான் இருக்கும்.

   Delete
 57. எவளோ பெரிய்ய பதிவு, எடி அவர்களே, வர வர ஓவர் செண்டிமெண்ட் ஆ போயிட்டு இருக்கு...

  புத்தகங்கள் மேலும் தேங்க வேண்டாம், அதற்கான அனைத்து விதமான நடவடிக்கை எடுக்க தங்களுக்கு முழு உரிமை உண்டு.

  இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் வெறும் பாட புத்தக புழுவாக மட்டுமே இருக்கிறார்கள். இதற்கு எனது தம்பியே ஒரு உதாரணம். பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் அவருக்கு, இன்று வரை ஒரு தினசரியை கூட கையில் எடுத்து படித்து பார்த்ததில்லை. எனது அறையில் பாதிக்கும் மேலே அடைந்துள்ள புத்தகங்களை ஒரு முறை கூட அவர் தொட்டு பார்த்ததில்லை.

  விளம்பரங்கள், புத்தக கண்காட்சி , விற்பனையாளர்கள் என்ற முயற்சி உடனடி பலன் அளிக்கவில்லை. இனி வேகமாக ஓட வேண்டியதில்லை , மெதுவாக நடக்கலாம் என்ற முடிவு வரவேற்க கூடிய ஒன்று.

  வருங்காலத்தில் இவ்வகையான முயற்சிகளுக்கு பலன் அமையும் , வாசகர் வட்டம் பெருகும் என்ற நம்பிக்கையில், அசாதாரண முயற்சிகள் எதுவும் செய்யாமல் , எளிமையான முயற்சிகளுடன் தொடர்வதே சிறந்தது.

  //உலகின் தலையாய காமிக்ஸ் கதைகளைக் கொணர்ந்தால் கூட- மேலோட்டமான பராக்குப் பார்வைகளைத் தாண்டிய சுவாரஸ்யத்தை பொதுமக்களிடையே உண்டாக்க முடிவதில்லை என்பதைக் கடந்த சில நாட்களில் கண்கூடாய்ப் பார்த்து வருகிறோம் !! //

  உண்மை உண்மை...மதிப்பெண்களை மட்டுமே இலக்காக கொண்டுள்ள இன்றைய கல்வி முறையில், படிப்பது புத்தகமல்ல, பல எழுத்துகளின் கோர்வை மட்டுமே என்ற கண்ணோட்டம் மேலோங்கி இருக்கிறது.

  ReplyDelete
 58. எடி.ஸாருக்கு வணக்கம்.
  உங்களைப்பற்றி நீங்களே இந்த அளவிற்கு புகழ்ந்து(!)பேசியது ரொம்ப அதிகம்.
  நமது விற்பனைப்பற்றி நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் சற்றுமட்டும் என்மனம் எற்கவில்லை.காமிக்ஸ் வந்து கொண்டிருப்பது சிறிய ஊர்களில் வசிக்கும் இன்னும் நிறைய பேருக்கு தெரியவில்லை என்பது உண்மை எவ்வழியாவது அனைவருக்கும் கொண்டு செல்லலாமே.புக் ஃபேர் போன்ற இத்யாதிகள் நகரத்தவர்க்கும் ரெகுலர் வாசகர்கும் மட்டுமே பயனளிக்கிறது.

  ReplyDelete
 59. இம்மாத,
  மர்ம மனிதன் மார்ட்டின் ;நன்றாக இருந்தது தற்போது மார்டின் ஏறுமுகத்தில் உள்ளார்.
  சுட்டி பெண்ணி;இன்னும் சுட்டிதனம் கூட்ட வேண்டும்.
  ஒ.க.கதை;டெக்ஸின் இந்த கதை சற்று போர் (ஸ்பெஷலுக்கு இது ஏற்புடையதல்ல)
  பூ.பிரளயம்;இதுவும் சுமார்தான்
  கா.எ.கொலை;வழக்கத்தை விட விறுவிறுப்பாக சென்றது நன்று.
  கா.க.காதலி;ராபின் இதில் வழக்கம்போல் ஜமாய்த்துவிட்டார்.ராபின் பிரச்சனைக்கு தீர்வுகாணும் விதம் சூப்பர்.

  ReplyDelete
 60. @ஆசிரியர்
  //இந்த 4 ஆண்டுப் பயணத்தில் சந்தோஷப்படும் சமாச்சாரங்கள் நிச்சயமாய் உண்டுதானே ? //

  என்னைப் பொறுத்தவரை கதைகளில் மிக சிறிய எண்ணிக்கையே நன்றாக இல்லை. 2016ல் எல்லாமே சூப்பர். நிறைய கதைகள் எனக்கு திருப்தி அளிக்கும் வண்ணமே இருந்தன. இந்த விலை ஏற்றம் ஓகே சார். நீங்கள் இவ்வளவு விளக்கம் குடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

  சந்தோஷப்படும் சமாச்சாரங்கள்நிறையவே இருக்கு சார். என்னை பொறுத்தவரை இந்த வலைப்பூவே ஒரு மிகப் பெரிய சந்தோஷமான விஷயம் மற்றும் சாதனை. வருடாந்திர சந்திப்புகளும் அருமையான விசயம். இந்த வலைப்பூவின் மூலம் நிறைய வெள்ளந்தி மனிதர்களின் நட்பு கிடைத்துள்ளது.வருடாந்திர சந்திப்புகளின் போது நண்பர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் ஏற்படுத்தி தந்து உள்ளீர்கள். வருடம் தோறும் வர ஆண்டவன் வாய்ப்பளிப்பார் என நினைக்கிறேன்.

  யாரயுமே தெரியாமல் ஈரோடு வந்த என்னை சேந்தம்பட்டி குழு வாரி அனைத்துக் கொண்டது. இந்தக் குழுவில் உலகின் பல்வேறு மூலையில் இருந்தும் உள்ள காமிக்ஸ் நண்பர்கள் வந்திருந்தது ஆச்சரியமான விஷயம். நான் என்னவோ சேலத்தில் இருந்து ஒரு ஓட்டைக் கார்ல தவிலும் நாதஸ்வரத்தோட ஒரு நாலு பேர் வருவாங்கன்னு நினைச்சேன். காமிக்ஸ் நிறைய, இலக்கியம் கொஞ்சம் மற்றும் சாப்பாடு நிறையவேன்னு நல்லாவே பொழுது போச்சு...

  மனிதனால் மட்டுமே எவ்வளவு உயர்வான விஷயத்தயும் தாழ்வாகவும் பேச முடியும். கூடிக் களிப்பது என்பது அனைவருக்கும் முடிவதில்லை. குறை மட்டுமே கண்டு முறை சொல்லமால் இருக்க முடிவதில்லை. உங்களின் நேரத்தை வீணடிக்கும் வெற்று/வெறுப்புப் பதிவுகளை புறந்தள்ளி முன்னேறுவோம் சார்.

  ReplyDelete