Thursday, October 19, 2017

நல்லதொரு துவக்கம் !

நண்பர்களே,

வணக்கம். 'உண்ட மயக்கம் தொண்டருக்கு' என்று கட்டையைக் கிடத்திக் கொண்டே கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இஞ்சிமிட்டாய் ஜாடைக்கு ஏதாவது தென்படுகிறதாவென்று நோட்டம் விடும்   உள்ளூராருக்கும் ; விடுமுறை முடிந்து பெருநகரங்களுக்கு கஷாயம் குடித்த முகங்களோடு திரும்பத் துவங்கியிருக்கும் அசலூராருக்கும் மாலை வணக்கங்கள் ! அட்டவணையை உங்களிடம் ஒப்படைத்த பின்பாக நேற்றைக்கு நிம்மதியாய் அடுத்தகட்டப் பணிகளுக்குள் இறங்கி விட்டேன் ! கடந்த 60 + நாட்களாய் இந்த "அட்டவணை விளையாட்டை" நான் ஆடிப் பார்த்து வந்து நோட்டை -  பத்திரமாய்த் தூக்கி பீரோவுக்குள் போட்ட போதுஒரு நண்பனுக்கு விடைதந்தது போலிருந்தது - becos என்னோடே அந்த நோட்டும் ஊர், உலகெல்லாம் சுற்றி வந்திருந்தது -கடந்த 2 மாதங்களாய் ! இந்த அட்டவணைப் படலத்தில்  இங்கே முக்கியமாய் நானொரு பெயரைக் குறிப்பிட்டாக வேண்டும் ; in fact - நேற்றைய பதிவிலேயே அதனைச் சேர்க்க எண்ணி, மறந்து தொலைத்திருந்தேன் ! 

எனது திட்டமிடல் 60+ நாட்களுக்கு முன்பாய்த் துவங்கியதெனில், கடந்த 30+ நாட்களாய் இந்த கேட்லாக்கின் தயாரிப்பில் ஆழ்ந்து கிடந்தது நமது DTP அணியின் கோகிலா. "ஜேம்ஸ் பாண்ட் விளம்பரத்தைப் போடுமா ; ஊஹும்......வேணாம்..வேணாம்...அது இதிலே வரலே  ; டெக்ஸ் - டைனமைட் ஸ்பெஷல் விளம்பரம் இந்தப் படத்தோட வரணும் ; ஜில் ஜோர்டன் விளம்பரம் ரெடியா இருக்கட்டும், யோசிச்சிட்டு நாளைக்கு சொல்றேன் ; தோர்கல் 2 புக்..!! .இல்லே..இல்லே...ஒரே புக்- 4  கதை !! ; ஆங் ...."காலனின் கூரியர்" ; இல்லே..இல்லே...அது இந்தச் சந்தாவிலே இல்லே ; ஜம்போ விளம்பரமா ? ம்ம்ம்ம்ம்.....இப்போ போடுறதா...இல்லையான்னு அப்புறமா சொல்றேன் !" - என்று தினம் தினம் நான் கொலையாய்க் கொன்றாலுமே, சகலத்துக்கும் துளியும் சலனம் காட்டாது பணியில் அக்கறை காட்டிய கோகிலாவுக்கு ஒரு ஷொட்டு உரித்தாகிட வேண்டும் ! 

Moving on,  புதிய  அட்டவணைக்குக் கிட்டியுள்ள ஆரம்பம் அமர்க்களம் என்பேன் ; அதற்குள்ளாக 20+ சந்தாக்கள் ஆன்லைனில் மாத்திரம் கிட்டியுள்ளன ; வங்கி கணக்குக்குப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை நாளை தான் பார்த்திட வேண்டும் ! பண வரவுகள் ஒருபக்கமிருக்க - நமது தேர்வுகள் பற்றியும், கல்தாக்கள் பற்றியும் 95% ஒருமித்த கருத்துக்கள் (இதுவரையிலாவது) இருந்து வருவது தான் மிகப் பெரிய relief எனக்கு ! "ஆங்...இவருக்கு VRS கொடுத்ததில் தப்பில்லை ; இவர் உள்ளே இருப்பது ஓ.கே. தான் !" என்ற ரீதியில் இந்த Big Boss ஆட்டம்  உங்கள் ரசனைகளோடு ஒத்துப் போயிருப்பது நிஜமாக மகிழ்ந்திடவோரு காரணம் ! End of the day - இணைதடங்கள் இரண்டும் ஒரே திசையில் ஓடுவது தானே முக்கியம் ? 
கதைகளுக்கு ஆர்டர் தரும் வேலைகள் ; பிரெஞ்சு ; இத்தாலிய மொழிபெயர்ப்புகளுக்கான முஸ்தீபுகள் என்று 2018 சார்ந்த பணிகள் எப்போதோ துவங்கி விட்டன ! அட்டவணை official ஆக ரிலீஸ் ஆகி விட்டுள்ளதைத் தொடர்ந்து  - எந்த இதழ்கள் / எந்த மாதங்களுக்கு ? என்ற ரோசனைகளுக்குள் இனி ஆழ்ந்தாக வேண்டும் ! Keep writing folks & சந்தாப் புதுப்பித்தல்களையும் செய்திடத் துவங்கிடலாமே - ப்ளீஸ் ? ஒரு அற்புத வாசக வட்டமாய் இருந்து வந்து ; எங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் மூச்சுக் காற்றாய் இருந்து வரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மானசீகப் பூங்கொத்தை வழங்கிய கையோடு கிளம்புகிறேன் - இம்மாத LADY S எடிட்டிங்கினுள் புகுந்திட ! Bye all ! See you around !  

Wednesday, October 18, 2017

உள்ளங்கையில் பிரபஞ்சம்...!!

நண்பர்களே,

வணக்கம். கொஞ்சம் நிறையவே நேரத்தையும், கணிசமானதொரு நெட் pack-ஐயும் கைவசம் வைத்துக் கொண்டு தொடரும் வரிகளுக்குள் புகுந்திடல் தேவலாம் என்பேன் guys - ஒரு பாகுபலி நீளத்துப் பதிவு தொடரவுள்ளது !  Without much ado - இதோ - தொடரவிருக்கும் புத்தாண்டிற்கான நமது காமிக்ஸ் ப்ளூபிரிண்ட்  ! இதன் பொருட்டு ஏழு கடல் தாண்டினேன் ; ஏழெட்டு மலைகள் தாண்டினேன் என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை - ஆனால் அரை டன் காகிதமும், சில பல லிட்டர்கள் நள்ளிரவு எண்ணெய்யும் இதற்கு அவசியமானதென்னவோ உண்மை தான் ! பணிகளை முடித்த கையோடு சோம்பல் முறித்த கணத்தில்  - "இதுக்கு தானா சிண்டை இத்தனை பிய்த்துக் கொண்டாய் சாமி ?" என்று தோன்றியது நிஜம் தான் ; ஆனால் "எல்லா முகங்களிலும் ஒரு சந்தோஷப புன்னகை" என்பதை இயன்றமட்டிலும் நிஜமாக்கிடும் பொருட்டு - எந்தவொரு மார்க்கத்தையும் அலசாது விட்டு விடக்கூடாதே என்ற ஆதங்கமும், ஆர்வக் கோளாறும் தான்நிறையவே நேரத்தை விழுங்கின ! இந்தாண்டினில் என்முன்னே இருந்த சவால்களின் பரிமாணங்கள் வழக்கத்தை விட ஓரிரு படிகள் ஜாஸ்தி என்பதும் இன்னொரு காரணம் ! அப்படி என்னடாப்பா சமாச்சாரங்கள் ? என்று கேட்கிறீர்களா ? இதோ :

Factor # 1 : எப்போதும் போலவே பட்ஜெட் தான் எங்களது துவக்கப் புள்ளி ! "காமிக்ஸ் வாசிப்பானது - சீமான்களின் பொழுதுபோக்கு என்றாகிவிட்டது" என்ற மாதிரியான விமர்சனங்களின் பின்னணி, முன்னணி, சைடணி பற்றி பெரிதாய் ஆராய்ச்சி செய்திட நான் முனைவதே இல்லை ; simply becos விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தேவையினை  பிரதானமாய்க் கருதும் முதல் ஆசாமி நானே என்பதால்  ! தரத்தில் குறை வைக்காது, விலையில் சமரசம் செய்திடக் கூடிய மாயாஜாலத்துக்கு ஈடாய் எனது அகவைகளில் ஒரு பங்கை பண்டமாற்று செய்திட ஜேசன் ப்ரைஸ் கதையின் கிளைமாக்ஸைப் போல் சாத்தியம் இருப்பின், நிச்சயமாய் அந்த ஒப்பந்தத்துக்குத் தயங்கிடவே மாட்டேன் ! So பட்ஜெட் எகிறிடக் கூடாது என்பதே எப்போதும் போல் சவால் பட்டியலின் உச்சத்தில் இருந்தது இம்முறையுமே  !

Factor # 2 : நடப்பாண்டில் 2 முக்கிய நிகழ்வுகளை நமது பயணம் சந்தித்துள்ளது ! அவற்றின் பொருட்டு 2018-ல் மட்டுமல்ல ; தொடரவிருக்கும் காலங்களிலுமே  நாம் நிறையவே கவனம் தந்திட அவசியப்படும் என்பதில் எனக்கு ஐயமில்லை ! 
 • நிகழ்வு # 1 - சூப்பர் 6 சந்தாவில் மறுபதிப்புகள் கண்டுள்ள வெற்றிகள் !  வண்ணத்தில் ; ஹார்ட்கவரில் , வந்துள்ள லக்கி கிளாசிக்ஸ் ; சிக் பில் கிளாஸிக்ஸ் ; மாடஸ்டி (கலர் பதிப்பு) have all been smash hits ! காத்திருக்கும் டெக்சின் டிராகன் நகரம் & பிரின்ஸ் ஸ்பெஷலுமே இந்தப் பட்டியலும் ஐக்கியமாகிடப் போவது உறுதி என்பதை ஆரூடம் சொல்ல ஜோதிட நிபுணத்துவம் தேவையில்லை தானே ? So இந்தாண்டின் இந்த வெள்ளோட்ட முயற்சியானது ஒவ்வொரு ஆண்டுமே அவசியப்படுமென்று மனதில் தோன்றியது ! 
 • நிகழ்வு # 2 : இதுவரையிலுமாவது சந்தா E பெற்று வந்துள்ள வரவேற்பும் ; ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும் ! சென்றாண்டினில் இந்த exclusive கிராபிக் நாவல் சந்தாவொன்றைத் திட்டமிடத் தீர்மானித்த தருணத்தில் ஒரு விஷயம் எனக்குள் தீர்க்கமாய் பதிவாகியிருந்தது ! இம்முறை சொதப்பின் - "கி.நா" என்ற சொற்றொடர் என் ஆயுசுக்காவது ஒரு தீண்டத்தகா சமாச்சாரமாகவே தொடர்ந்திடுமென்பதில் எனக்கு சந்தேகம் இருக்கவில்லை ! So இந்தாண்டினில் அவை ஒவ்வொன்றாய் களமிறங்கி, ஒவ்வொரு விதத்தினில் உங்கள் அபிமானத்தை ஈட்டத் துவங்கிய போது என்னுள்ளே மேலோங்கிய முதல் உணர்வு ஒருவித நிம்மதியே ! "ஹா ...சாதித்து விட்டோம் ! என்ற மிதப்பை விட - "சாமி..கடவுளே...கிராபிக் நாவல்கள் மீதொரு தீரா வெறுப்பு நம் புண்ணியத்தில் உருவாகிப் போனதென்ற கரும்புள்ளியிலிருந்து தப்பிச்சோமே !" என்ற எண்ணமே ததும்பியது ! தொடர்ந்த நாட்களில் இந்த "கதையே நாயகன்" பாணிக்குமொரு எதிர்காலம் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை சிறுகச் சிறுக பிறந்த கணங்களில், அவை சார்ந்த தேடல்களும் வீரியம் கண்டன - சமீபத்தைய ஜெர்மானியப் புத்தகவிழா வரைக்கும் ! ஒரு ஹிட் நாயகரின் கதையையே இரண்டாம் இடத்துக்குத் தள்ளுகின்றன இந்தப் புதுவரவுகள் எனும் பொழுது இவற்றை ஓராண்டின் பரிசோதனைகளாக மட்டுமே பார்த்திட இயலாதென்று படுகிறது ! Of course - இவை இன்னமும் நம் வட்டத்தின் 100% அபிமானங்களை பெற்றிடவில்லை தான் ; ஆனால் ஒரு சரியான இலக்கில் தான் travel உள்ளதென்று தோன்றும் போது, சிறுகச் சிறுகவாவது உடன் நடப்போர் அதிகரிப்பர் என்ற நம்பிக்கையுள்ளது ! So இந்த கிராபிக் நாவல் ரசனையின் துளிர்விடலையுமே  2017-ன் ஒரு முக்கிய நிகழ்வாய்ப் பார்க்கிறேன் ! 
Factor # 3 : நமது பெல்ஜியத்து சஞ்சய் ராமசாமி ! ஓராண்டின் சந்தாத் தொகையில் பாதிக்கு நெருங்கியதொரு தொகையினை நாம் திட்டமிட்டுள்ள இவரது வண்ணத் தொகுப்பு கபளீகரம் செய்திட உள்ளது  ! பணம் ஒருபக்கமிருக்க, இந்தக் கனவை நனவாக்கிட அவசியமாகிடப் போகும் உழைப்பின் பரிமாணத்தை நாம் குறைவாய் எடை போட்டோமென்றால், முகம் முழுக்க வழிந்திடக்கூடிய ஒரு டன் அசடை துடைக்க ஈரோட்டுச் சந்தையின் டர்கி டவல்களை ஒட்டுமொத்தமாய் விலை பேச வேண்டி வரலாம் ! Is going to be a humongous task !! ஆக அதன் பொருட்டு நமது ரெகுலர் பணிகளிலும் ஒரு தெளிவும், திட்டமிடலும் இந்தாண்டு சற்றே கூடுதலானது தேவை என்பேன் ! 

Factor # 4 : 'தல'யின் 70 -வது பிறந்தநாளும் காத்திருக்கும் 2018-ல் தான் எனும் பொழுது, அதற்கென ஏதாவது தெறிக்கும் ஸ்பெஷல் ஒன்று நம் திட்டமிடலில் இருத்தல் அவசியம் என்பது மண்டையின் ஒரு மூலையில் குடிகொண்டே நின்றது ! பத்தோடு பதினொன்றாய், ஏப்பைசாப்பையாய் எதையேனும்  அறிவித்தால் நிறைய நண்பர்கள் வாடிப் போவார்கள் என்பதும் அப்பட்டம் ! So அவரது ஸ்பெஷல் ஒரு மெகா பட்ஜெட் முயற்சியாகிடல் தவிர்க்க இயலா சங்கதி எனும் போது - எங்கே குறைத்து, இங்கே கூட்டுவது ? என்ற கேள்வி என் முன்னே துள்ளிக் குதித்து நின்றது ! 

Factor # 5 : GST !!!! இயல்பான விலைவாசி உயர்வுகள் ஒருபக்கமெனில், GST திடுமென நம் பிடரியில் இறக்கியுள்ள ஜூடோ டேவிட் பாணியிலான சாத்து - ஒரு pile driver ! உள்ளீட்டு வரிகள் என 12 % ; 18 % என்று ஆங்காங்கே எகிறிடும் செலவினங்களை - இந்தச் சின்ன சர்குலேஷனுக்குள் balance செய்திடும் சாத்தியங்களை கண்டிடும் பொருட்டு ஜூனியர் எடிட்டரும் நானுமாய் ஒரு நூறுமுறைகள் costing போட்டுப் பார்த்திருப்போம் ! ஆனால் எத்தனை முறை ; எத்தனை பேர் ; எத்தனை சூத்திரங்களைப் போட்டு கணக்குகளைப் போட்டாலும் ரெண்டையும் ,ரெண்டையும் கூட்டினால் நாலு தானே வரும் - விடையாய் ? So இந்தாண்டின் ஒரு கணிசமான மண்டைநோவு - மாறியுள்ள சூழலுக்குள் பிழைக்க மார்க்கம் தேடுவதே ! 

Factor # 6 : கண்ணுக்குப் புலப்படா இன்னமுமொரு சமாச்சாரம் உள்ளது ஒவ்வொரு ஆண்டின் திட்டமிடலிலும்  ! இருக்கும் போதே, இல்லாததைத் தேடுவதே மனித இயல்பு ! And காமிக்ஸ் காதலர்களான நாம் மட்டுமென்ன விதிவிலக்கா - இந்த எழுதப்படா நியதிக்கு ? காமிக்ஸ் இதழ்கள் குறிஞ்சிப் பூக்களாய் இருந்த நாட்களில் அவற்றைத் தேடியும், நாடியும் ஓடிய வேகமே வேறு ! இன்றைக்கோ  கேட்டால்-கிடைக்கும் என்றாகிய சூழலில், "அந்த நாட்களை போல் வருமா ?" என்ற ஒரு சன்னமான (காரணமிலா) ஏக்கம் நம்மையும் அறியாது உட்புகுதல் இயல்பே ! ஆண்டுகள் ஓட ஓட - நமது பீரோக்களுள் காமிக்ஸ் இருப்புகள் கூடக் கூட - அங்கே வெற்றிடமும், ஒன்றிரண்டு இதழ்களுமே குந்திக் கிடந்த அந்த good old நாட்களை (!!!) எண்ணியும் ஏங்கிடும் தருணங்கள் துளிர்விடலாம் ! இது போன்ற வெளிச்சொல்ல இயலாச் சங்கடங்கள் உங்களுக்கு நேர்ந்திடக் கூடாதெனில்  இயன்றமட்டுக்கு அட்டவணையின் ஒவ்வொரு அத்தியாயமும் ஏதேனுமொரு விதத்தில் தெறிக்கும் தோட்டாவாய் அமைந்திடல் அவசியம் ! 50 இதழ்களுள் ஒரு நாலைந்து சோடை போனால் கூட - "அந்தக் காலத்தில் கதை ஒவ்வொண்ணும் எப்படி இருக்கும் தெரியுமா ?" என்ற விமர்சனம் ஜனிக்கும் என்பது யதார்த்தம் ! So நாட்களின் ஓட்டத்துக்கு ஏற்ப, கதைத் தரங்களும் வீரியமாய் இருத்தல் அவசியம் ! "ஷப்பா...காமிக்ஸ் திரும்பவும் வர ஆரம்பிச்சிடுச்சே !! அந்த மட்டுக்குபோதும்டா சாமி !" என்ற ஏற்பு துவக்க நாட்களின் சராசரிக் கதைகளுக்கு தாக்குத் தந்திடலாம் ; ஆனால் 6 ஆண்டுகள் கழிந்த நிலையிலும்  - அதே கனிவை நீங்கள் நல்கிடத் தயாராக இருப்பினும், நான் அதனை தொடர்ந்தொரு கேடயமாகவே பார்த்து வந்தால் சுகப்படாதே ! நமக்குத் தேவை சென்டம் தான் ! நூற்றுக்கு நூறு ! சர்வமும் ஹிட்ஸ் ! ஒவ்வொரு இன்னிங்சிலும் சதம் !! ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் !! நடைமுறைக்கு இதெல்லாம் சாத்தியம் தானா ? என்று நினைக்கத் தோன்றிடலாம் ; ஆனால் ஓராண்டுக்கான  தேர்வுகளைத் திட்டமிடும் தருணத்தில் - நான் விரேந்தர் சேவாகாக மாறிட  விழைவது - அவரது மின்னும் முன்மண்டையை விஞ்சிட மட்டுமல்ல - அவரைப் போலவே ஒவ்வொரு  பந்தையும் எல்லைக்கோட்டுக்கு உசக்கே அனுப்பிடவுமே ! And this year has been no different ! அதற்காக அத்தனை கதைகளும் சூப்பர் ஹிட்களாகி விடுமென்று நான் சொல்லப் போவதில்லை ; ஆனால் வானத்தை நோக்கினால் தானே குடிசையின் கூரைக்காவது ஏணி எட்டும் ?!  So ஒவ்வொரு ஆண்டின் "அட்டவணை தருணங்களும்" ஓராயிரம் சிந்தனைத் தருணங்களே நமக்கு! 

ஷப்பா...பில்டப்பிலேயே கண்ணைக் கட்டுதே ?! என்கிறீர்களா ? இதோ குதித்து விடலாம் அட்டவணைக்குள் ! 

As usual - கதைகளை genre வாரியாகப் பிரித்து, சந்தாக்களை அதற்கேற்பவும் அமைத்துள்ளோம் ! சந்தா A-வில் வழக்கம் போல ஆக்ஷன் கதைகள் ! இங்கே சில பல அசைக்க இயலா ஜாம்பவான்கள் உண்டென்பதால் - அவர்களுக்குத் தொகுதிகள் ஒதுக்குவதில் முச்சூடும் சிரமம் இருக்கவில்லை ! அவர்கள் யாரென்று பார்த்து விடுவோமே ?
 • லார்கோ வின்ச்
 • வெய்ன் ஷெல்டன்
 • தோர்கல்
 • ரிப்போர்ட்டர் ஜானி 
 • ட்யுராங்கோ
 • Lady S 
So ஆறு பெயர்கள் முன்மொழியப்பட்டான பிற்பாடு - ஆறு துண்டுகளை அவர்களது சீட்களில் போட்டு வைப்பதில் தயக்கம் துளியும் இருக்கவில்லை ! லார்கோவின் தேர்விலோ ; ஷெல்டனின் தொடர்ச்சியிலோ ஆக்ஷன் ரசிகர்களுக்கு எவ்வித இரண்டாம் சிந்தனைகளும் இராதென்பது உறுதி ! And இவர்களது தொடர்களின் சமீபக் கதைகள் வரையிலும் நாம் எட்டிப் பிடித்து நிற்பதால் - படைப்பாளிகளின் லேட்டஸ்ட் கதை சொல்லும் யுக்திகளோடும், சித்திரத் தரங்களோடும் தோளோடு தோள் உரசி நிற்கிறோம் என்பது கூடுதல் ப்ளஸ் பாய்ண்ட் ! 

Fantasy நாயகன் தோர்கலைப் பொறுத்தவரையிலும் - "ஒரு ஊர்லே ஒரு ராஜாவாம் ; அப்புறம் ஒரு மந்திரவாதியாம் ; மலை மேலே உள்ள கூண்டிலே கிளியிடம் அவன் உசிர் இருந்துச்சாம் !!" என்ற ரீதியில் கதையோட்டம் இருந்த காலமெல்லாம் மலையேறி விட்டது ! காத்திருக்கும் தோர்கல் சாகசமானது ஒரு அடுத்த லெவெலுக்குச் செல்லும் பயணத்துக்கு நம்மை தயார் செய்திடவுள்ளதென்பேன் ! "கனவு மெய்ப்பட வேண்டும்" இதழினில் நாம் சந்தித்த அந்த வில்லங்க அழகியோடு தொடரும் அடுத்த பக்கமானது 4 பாகங்கள் கொண்டதொரு கதைச் சுற்று ! வழக்கம் போல் தோர்களுக்கொரு டபுள் ஆல்பம் என்றே எனது துவக்கத் திட்டமிடல் இருந்தது ! ஆனால் கதைகளைப் பரிசீலனை செய்யத் துவங்கும் வேளையில் தான் இதுவொரு நீ-ண்-ட saga என்பது புலனானது ! இதனையும் 2018-ல் பாதி ; 2019-ல் மீதி என நான் திட்டமிட்டால் - செமத்தியான டின்கட்டல் காத்திருக்குமென மாயாஜாலக் கண்ணாடியில் ஆரூடம் ஓடியதால் ஒற்றை ஆல்பம் - 4 பாகங்கள் என்று டிக் செய்தென் ! அது மாத்திரமின்றி - இது "கனவு மெய்ப்பட வேண்டும்" இதழுக்கு மெலிதாய் தொடர்பு கொண்டு பயணிக்கும் கதை  என்பதால் இரண்டுக்கும் இடையினில் பெரியதொரு gap வேண்டாமே என்று மனத்துக்குப் பட்டது ! So ட்யுராங்கோவை வைத்து 2017-ஐத் துவக்கியது போல காத்திருக்கும் புத்தாண்டை தோர்கலின் சாகசத்தோடு வரவேற்க நினைத்தேன் ! "கடவுளரின் தேசம்" முத்து காமிக்ஸின் 46-வது ஆண்டுமலரும்  கூட ! இன்னொரு முக்கிய தகவலுமே : நடப்பாண்டு - தோர்கலின் 40-வது வெற்றியாண்டு !  அதனை miss செய்ததற்கு தொடரும் வருஷத்திலாவது கொஞ்சமாய் ஈடு செய்வோமே ?

Lady S - சமீப வரவே என்றாலும், இதுவரையிலும் தூள் கிளப்பியுள்ளார் என்பதால் அவரது தொடர்விலும் சிக்கல்கள் இருக்கவில்லை ! And உங்கள் மத்தியினில் ரிப்போர்ட்டர் ஜானியின் கெத்தை சமீபமாய்ப் பார்த்தான பின்பும் அவரது எதிர்காலம் பற்றிக் கேள்விக்குறி எழுப்ப நான் நிச்சயமாய் டோங்கிரி இல்லை !! So அவருமே ஆட்டோமேட்டிக் செலெக்ஷன் ! கதைத் தேர்வினில் தான் நண்பர் ராட்ஜா முன்மொழிந்திருந்த புது பாணி ஜானியினைக் களமிறக்க 2019-ஐத் தேர்வு செய்வோமே என்று தீர்மானித்தேன் - simply  becos அவரது நடப்புத் தொடரிலேயே ஒரு பரபரப்பான த்ரில்லர் கிட்டியுள்ளது ! "மரணம் சொல்ல வந்தேன்" சித்திரம் ; வர்ணம் ; கதையோட்டம் - என மூன்று பிரிவுகளிலுமே பின்னிப் பெடல் எடுக்கிறது ! 

சத்தமின்றி யுத்தம் செய்பவருமே நம் மனங்களில், வாசிப்பினில் ஒரு உறுதியான இடத்தைப் பிடித்துப் போட்டிருக்கும் போது - அங்கே வேறு யாரேனும் பட்டா போடுவது ஆகிற காரியமல்ல தானே ? So "மௌனமாயொரு இடிமுழக்கம்" நமது காமிக்ஸ் உலகின் கிளின்ட் ஈஸ்ட்உட்டொடு உலா வரக் காத்துள்ளது ! Durango is here to stay ! And ட்யுராங்கோ - 2018-ன் கோடை மலராக இருந்திடும் என்பது கொசுறுச் சேதி ! 

ஆக அரை டஜன் சுலபத் தேர்வுகள் முடிந்த பிற்பாடு - இந்தச் சந்தாவுக்கு புது இரத்தம் பாய்ச்ச  புதுசாய் யாரேனும் இருந்தால் தேவலையே என்று நினைத்தேன் ! ஒவ்வொரு அட்டவணையிலும், புதியவர்(கள்) யாரென்றே தேடல் உங்கள் சுவாரஸ்யத்தில் முக்கியமானது என்பதில் ரகசியமேது ? So இந்தாண்டு அந்த கோட்டாவைப் பூர்த்தி செய்திட வருபவர் ஒரு செஞ்சட்டை சாகஸ வீரர் ! "ஓங்கி அடித்தால் ஒண்ணேமுக்கால் டன் ; ஒதுங்கி அடிச்சா மூணெமுக்கால் டன்" என்றெல்லாம் சவுண்ட் விடும் பார்ட்டியல்ல இவர் ! கனடாவின் பரந்து விரிந்த பிராந்தியங்களில் சட்டத்தைப் பரிபாலனம் செய்திடும் Royal Mounted போலீஸ் பிரிவின் அதிகாரி ! நம்பிக்கையானதொரு குதிரை ; விசுவாசமானதொரு நாய் என அந்தப் பனிப்பிரதேசத்தில் சுற்றி வரும் இந்த நாயகரின் பெயர் ட்ரெண்ட் ! வசீகரிக்கும் சித்திரங்கள் ; வித்தியாசமான கதைக் களங்கள் ; ரகளையான வர்ணங்கள் என்று இந்தத் தொடர் கண்ணுக்கும், சிதைக்கும் இதமானதொரு புது வருவாய் இருக்குமென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! மொத்தமே 10 one shots கொண்ட தொடர் என்பதால் ஆண்டாண்டு காலமாய் ஜவ்வு இழுக்கவும் சாத்தியமாகாது இங்கே ! புதியவருக்கு 2 சீட் என்றவுடன் மொத்தம் 8 இதழ்களின் slots பூர்த்தி காண்கின்றன ! 

2018-ல் ஒவ்வொரு சந்தாப் பிரிவிலும் 9 இதழ்களே இடம்பெறும் - இரு காரணங்களின் பொருட்டு ! நடப்பாண்டில் 4 சந்தாப் பிரிவுகள் x தலா 10 இதழ்கள் = 40 இதழ்கள்  + சந்தா E - 6 இதழ்கள் : ஆக Grand  Total  : 46 இதழ்கள் என்றிருந்தது ! தொடரும் ஆண்டிலோ - 5 சந்தாப் பிரிவுகள் x தலா 9 இதழ்கள் = ஆக மொத்தம் 45 என்ற கணக்கு ! கிராபிக் நாவல்களுக்கு சற்றே கூடுதலாய் slots வழங்கிடும் பொருட்டு இந்த அடஜஸ்ட்மென்ட் ! காரணம்  # 2 - "இரத்தப் படலம்" - 18 அத்தியாயங்களின் தயாரிப்புக்கென கொஞ்சமேனும் மூச்சு வீட்டுக் கொள்ள எங்களுக்கு நாங்களே வழங்கிக் கொள்ளும் வாய்ப்பு ! 

So சந்தாக்களில் இதழ்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாய் விசனம் கொள்ளல் வேண்டாமே - ப்ளீஸ் ?! இரத்தப் படலம் முடிந்தான பிற்பாடு - இதுபோல் டண்டணக்கா டணக்குடக்கா படலங்கள் இராதென்பதால் 2019 முதல் மீண்டும் ஒவ்வொன்றிலும் 10-க்குப் போய் விடலாம் ! ஆகையால் "இதை மறுபரிசீலனை செய்யுங்கள் ; etc etc " என்ற பின்னூட்டங்கள் வேண்டாமே ? 

ஆக 9 ஸ்லாட்கள் கொண்ட சந்தாப் பிரிவின் இறுதி இதழுக்கான தேர்வை செய்திட கொஞ்சம் தடுமாறவே செய்தேன்  ! மாமூலாய்ப் பார்த்தால் - "கமான்சே" அந்த இடத்தை இட்டு நிரப்பிடுவார் ! ஆனால் கடந்த 2 + ஆண்டுகளாகவே ரெட் டஸ்ட் & சகாக்களின் sales performance ரொம்பவே சுமார் ரகம் ! ஒவ்வொரு புத்தக விழாவையும் வேடிக்கை பார்த்து விட்டு மட்டும் வீடு திரும்பும் ஒழுக்க சிகாமணிகளாய் இவரது சாகசங்கள் அமைந்து வருகின்றன ! ஆன்லைனில் தேர்வு செய்து வாங்கும் வாசகர்களுமே  இவர் திசைக்கு ஒரு நமஸ்காரம் போடுவதைக் கவனிக்க முடிகிறது ! கேப்டன் பிரின்ஸ் கதைகளுக்கும் அதே கீச்சல் பாணி ஓவியங்கள் தானென்றாலும், அங்கே கதைகள் ஸ்கோர் செய்துவிடுவதால் வண்டி ஓடிவிட்டது ! ஆனால் கமான்சே ரொம்பவே யதார்த்தம் ; இயல்பு என்று நிதான நடை போடுவதாலோ என்னமோ - நம் மனங்களை முழுமையாய்க் கொள்ளை கொள்ளவில்லை இன்னமும் ! So "விற்பனை" என்ற நீட் தேர்வில் சொதப்பும் மாணாக்கர் யாராக இருப்பினும், தாற்காலிகமாகவாவது ஓய்வில் இருத்தல் அவசியம் என்ற விதி அமலுக்கு வருகிறது ! "'போச்சா ? உருப்படியா இருந்த ஒரு தொடரையும் போட்டுத் தள்ளியாச்சா ?" என்ற ஆதங்கக் குரல்கள் நிச்சயம் எழுமென்று புரிகிறது ! ஆனால்  கைவசமுள்ள இவரது இதழ்களை எப்பாடுபட்டேனும் விற்க முயற்சிக்க இந்த மினி பிரேக் உதவிட்டால் தேவலை தானே ? அஜிங்க்ய ரஹானேக்குமே அவ்வப்போது இடமில்லையே நம் அணியில்...?

Last slot -க்கென இவரா ? அவரா ? என்றெல்லாம் நிறைய ரோசனைகளுக்குள் ஆழ்ந்தேன் ! உருப்படியாய் கதை ஏதேனும் சிக்கினாலும் - பக்க நீளங்கள் ; தொடரின் விஸ்தீரணம் என்று ஏதாவதொரு வகையில் இடர்கள் தென்பட்டன ! டிடெக்டிவ் கதை ரகங்கள் மருந்துக்கும் இல்லையே என்ற கவலை இந்தாண்டும் இடம்பிடித்ததால் - துப்பறிவாளப் பெருமக்களையாய் தேடித் தேடித் திரிந்தேன் ! அப்போது தான் சமீபத்தில் வாசித்ததொரு ஜில்லாரின் த்ரில்லர் நினைவுக்கு வந்தது ! ஒரு மிதமான கதை ; ஒரு மொக்கையான அல்லக்கை அசிஸ்டண்ட் ; டின்டின் பாணியிலான ஓவியங்கள் என்பதே நாமிதுவரையிலும் அறிந்து வைத்துள்ள ஜில் ஜோர்டன் முத்திரை ! ஆனால் பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் படைப்புகளின் alltime top 20 பட்டியலுக்குள் இந்தத் தொடருக்கு இடம் கிட்டியது எவ்விதம் என்பதை உணர்ந்திட வாய்ப்பொன்று வாய்த்தது சில மாதங்களுக்கு முன்பாய் ! ஓய்வாய் இருக்கும் தருணங்களில் முன்கூட்டிய french மொழிபெயர்ப்புகளை செய்து வைப்பது நமது வாடிக்கை தானே ? அந்த விதத்தில் 'எதற்கும் இருக்கட்டுமே' என்ற எண்ணத்தில் ஒரு GJ கதையினை மொழியாக்கம் செய்து வாங்கியிருந்தோம். அதே கதையினை சமீபமாய் ஆங்கிலத்திலும் பார்க்க நேரிட்ட போது பட்டென்று வாங்கி, சட்டென்று படித்தேன் ! WOW என்று மாத்திரமே சொல்ல முடிந்தது அதனைப் படித்து முடித்த பிற்பாடு !! பிரமாதமானதொரு டிடெக்டிவ் த்ரில்லர் ; ஜாலியான பாணியில் என்றிருக்கும் இந்தக் கதையினை சந்தா A -வின் இறுதி slot க்கு ஊர்ஜிதம் செய்வதென்று தீர்மானித்தேன் - சிலபல புருவ உயர்தல்களுக்கு இவை வழி வகுக்கக்கூடும் என்பது தெரிந்திருந்துமே ! கதையின் வலுவும், அது சொல்லப்பட்டிருக்கும் விதத்தினில் நாம் செய்திடக்கூடிய நகாசு வேலைகளுக்கான வாய்ப்புகளும் இது நிச்சயம் ஒரு சுவாரஸ்ய அனுபவமாய் அமைந்திடுமென்ற நம்பிக்கையூட்டியது ! So GJ மறுவருகை செய்திடுகிறார் - ஒரு கிளாசிக் டிடெக்டிவாக !!

ஆக சந்தா A பூர்த்தி கண்டது இவ்வதமாய் ! இதோ - அதன் கதை டிரைலர்கள் !

Moving on, வழக்கம் போல சந்தா B - போனெல்லியின் black & white அதகளங்களோடு ! மேம்போக்காய்ப் பார்க்கையில் இதுவே சந்தாப் பிரிவுகளுள் மிகச் சுலபமானதாக இருந்திட வேண்டியது - எனது தேர்வுகளை பொறுத்தவரையிலும் ! ஆனால் no freebies இங்கேயுமே !!

முதல் & முக்கிய கேள்வியானது TEX-ன் 70-வது ஆண்டின் கொண்டாட்டத்துக்கு என்ன திட்டமிடலாம் என்பதே ! ஒவ்வொரு ஆண்டிலும், நம் முன்னிருக்கும் தாண்டு உயரங்களை நாமாகவே உயர்த்திக்  கொண்டே இருப்பதில் ஒரு சிரமம் இல்லாதில்லை ! அது தான் உங்களின் எகிறும் எதிர்பார்ப்புகள் என்பது ! ரூம் போட்டு யோசிக்க வேண்டியுள்ளது இப்போதெல்லாம் - உங்களைத் திகைக்கச் செய்ய வேண்டுமெனில் ! So சில பல ரூம் போடல்களும், சிண்டைப் பிய்த்தல்களும் அரங்கேறிய பின்னே TEX - The Dynamite Special-ன் திட்டமிடலுக்கு வடிவம் தர சாத்தியமானது ! ரூ.700 விலை ; 777 பக்கங்கள் ; வண்ணமும் உண்டு ; black & white -ம் உண்டு என்பதே இது சார்ந்த தகவல்கள் இப்போதைக்கு ! கதைகளை ஈரோட்டின் ரிலீஸ் வரைக்கும் under wraps வைத்திருப்போமே - கொஞ்சமேனும் சஸ்பென்ஸ் தொடர்ந்திட ? Rest assured - ஒரு அசாத்திய விருந்து காத்துள்ளது என்ற மட்டிற்கு !! அப்புறம் - இந்த இதழுக்கான பெயர் சூட்டும் போட்டியினை அறிவித்தது மாத்திரம் ஞாபகம் உள்ளது - ஆனால் DYNAMITE Special என்ற இந்தப் பெயரை முன்மொழிந்த நண்பர்கள் பற்றிய தகவல் மண்டையில் லேது ! ப்ளீஸ்..மேடைக்கு வந்து நம் மரியாதைகளை ஏற்றுக் கொள்ளுங்களேன் ? எடுத்த எடுப்பிலேயே இந்த இதழுக்கு இத்தனை பெரிய விலையோ ; பட்ஜெட்டோ ஒதுக்க மனம் ஒப்பவில்லை தான் ! ஆனால் நம்முள் உள்ள TEX காதலுக்கு  சப்பையாய் ஒரு இதழை, இது போன்றொரு முக்கிய தருணத்தில் அறிவித்து, ஒட்டு மொத்த மூட்-அவுட்டை சந்திக்க பயம் தலைதூக்கியதால் - வேறெங்கேயாவது வெட்டிக் கொள்ளலாம் இங்கே ஒட்டி விட என்று தீர்மானித்தேன் !

டெக்சின் மெகா இதழுக்கென கதை பரிசீலனை செயதேன் ஒரு மாமாங்கத்துக்கு !! வழக்கம் போல இணையத்தில் ஆராய்ச்சி ; இத்தாலிய ஆர்வலர்களிடம் விசாரிப்புகள் ; நம் கைவசமுள்ள இதழ்களில் அலசல் ; மிலன் நகரில் சென்றாண்டு நான் எடுத்துக் கொண்ட குறிப்புகள் - என ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ரேஞ்சுக்கு தோண்டிப் பார்க்க முனைந்தேன் ! "அட்டைப்படங்களை மாற்றினால் போதும் - மற்றபடிக்குக் கதைகளுள் வேற்றுமை லேது !" என்று டெக்ஸை விமர்சிக்கும் நண்பர்களை ஓராண்டின் எனது TEX தேடலின் பொழுது உடனிருக்கச் செய்தால் அவர்களது எண்ணங்கள் சடுதியில்  மாறிப் போகும் என்பது சர்வ நிச்சயம் ! எத்தனை அசுரத்தனமானதொரு  கதைக் குவியல் நம்முன்னே வீற்றிருக்கிறதென்பதை ஒவ்வொரு ஆண்டும் பார்த்துப் பார்த்து மலைக்கத் தான் முடிகிறது ! அதனுள்ளிருந்து தேர்வுகளைச் செய்வது  - நாக்கைத் தொங்கச் செய்யும் பணி என்பதை அனுபவத்தில் சொல்ல முடிகிறது !

ஒரு மாதிரியாய் மெகா இதழுக்கு மாத்திரமன்றி - ரெகுலர் இதழ்களுக்குமே தேர்வுகளைச் செய்து முடித்தேன் ! சித்திரத் தரம் ; கதைகளில் சுவாரஸ்யம் ; பக்க நீளங்களில் ஏற்பு ; புராதனம் மிளிரா படைப்புகள் - என ஏதேதோ எனக்குத் தெரிந்த அளவுகோல்களை இங்கே செயல்படுத்தியிருக்கிறேன் ! End of the day - எனது தேர்வுகள் மிதமோ, சூப்பரோ - 'தல' மிச்சத்தைப் பார்த்துக் கொள்வாரென்ற நம்பிக்கையில் வண்டி ஓடுகிறது ! 2018-ன் தீபாவளி மலராய் வரவிருக்கும் இதழ் - டெக்ஸ் வரிசையில் ஒரு ஸ்பெஷல் படைப்பு - டைகர் ஜாக்கின் (காதல்) கதையைச் சொல்லும் விதத்தில் ! இதுநாள் வரைக்கும் "வோ" ; "வோ" என்றே வண்டியை  ஒட்டி வந்திருக்கும் இந்த செவ்விந்திய சகாவின் saga - தலையில்லா போராளி சைசில் வர காத்துள்ளது ! 

போனெல்லின் black & white அணியினில் இம்முறை கணிசமான கல்தாக்களுமே உண்டு ! பென்சில் இடையழகி ஜூலியா இதுவரையிலான வாய்ப்புகளில் அத்தனை அட்டகாசமாய் மிளிர்ந்திருக்கவில்லை என்பதோடு - விற்பனைகளிலுமே சாதிக்கக் காணோம் - இதுவரையிலாவது ! Maybe எனது கதைத் தேர்வுகள் இந்த flop show-க்கொரு காரணமாய் இருக்கக் கூடும் தான் ; so ஒரு சின்ன இடைவெளியினில் நல்ல கதைகளைத் தேட முயற்சிப்போமே என்று நினைத்தேன் ! நீட் தேர்வில் உதை வாங்கிடும் இன்னொரு போனெல்லிக்காரர் - டைலன் டாக்  ! வித்தியாசமான கதைகள் தான் ; ஆனால் பொதுவான ரசனைகளுக்கு ஒத்து போகவில்லை என்பது விற்பனை ஈனஸ்வரத்தில் தெரிகிறது ! ஆன்லைன் ஆர்டர்களிலும்  இவர் ரொம்பவே பின்தங்கிய வேட்பாளர் ! So இந்த அமானுஷ்ய வேட்டையரை கொஞ்ச நாட்களுக்கு ஓய்வில் அனுப்பிட நினைத்தேன் !

வெளியே போவோர் இருவர் எனில் - உள்ளிருப்போர் CID ராபின் & மர்ம மனிதன் மார்ட்டின் ! இருவருமே - தத்தம் பொறுப்புகளை அழகாய் பார்த்துக் கொள்வதால் - அவர்களின் தேர்வின் பொருட்டு எவ்விதக் குழப்பங்களும் எழவில்லை ! As usual - இரவுக் கழுகார் maximum தொகுதிகளைத் தனதாக்கிக் கொண்டுவிட்டதால் - எஞ்சியிருக்கும் சொற்பத்தையே மற்றவர்கள் பங்கு பிரித்துக் கொள்ள முடிகிறது ! So ராபின் & மார்ட்டின் தலா ஒரு slot மாத்திரமே !

கறுப்பு-வெள்ளைக் கோட்டாவினைக்  கடை மூடும் முன்பாய் நம் இளவரசியை பரிசீலனை செய்திட வேண்டுமன்றோ ? இன்றைய காலகட்டத்தில் not a brilliant performer  ; ஆனால் நிச்சயமாய் சொதப்பலும்  அல்ல என்பதே இந்தத் தொடரின் ரேட்டிங் ! அழுத்தமான ஆல்பங்களாய் இன்றைக்குப் பார்த்துப் பழகியான பின்னே, இந்த தினசரி strip களின் தொகுப்புகள் ஒரு வித ஆழமின்மையோடு இருப்பதாய் தோன்றுகிறதோ - என்னவோ ?! எது எப்படியோ - இம்முறையும் ஒரு கூட்டணி இதழில் இளவரசிக்கு  ஒற்றை சீட் ஒதுக்குவதில் தவறு இராது என்று நினைத்தேன் ! Just makes it in !!

ஆக - சந்தா B திடமான கதை இதுவே & இதோ - டிரைலர்கள் :
தொடர்வது சந்தா C - எனது favorite !! And எப்போதும் போலவே இங்கே கார்ட்டூன் நாயகர்களின் அணிவகுப்பே - மிளிரும் வண்ணத்தில் ! "தவிர்க்க இயலா ஹீரோக்கள்" என இங்கேயுமொரு பட்டியல் உள்ளதால் அவர்களுக்கு நேராக டிக் அடித்து வைத்தேன் :

 • லக்கி லூக்
 • டாக் புல் & கிட் ஆர்டின்
 • சுட்டிப் புயல் பென்னி 

இவர்கள் மூவருமே - கார்ட்டூன் சந்தாக்களின் தூண்கள் என்பதால் ஆளுக்கொரு இடம் - ஆட்டோமேட்டிக்காக ! And lucky gets lucky - ஒரு டபுள் ஆல்ப ஆண்டுமலர் வாய்ப்போடு !

பாக்கி கிச்சு கிச்சு பார்ட்டிகள் அனைவருமே - good for a slot என்பதில் துளியும் சந்தேகம் நஹி என்பதால் கட கடவென அவர்களது பெயர்களையும் எழுதி வைத்தேன் :

 • ப்ளூ கோட் பட்டாளம்
 • கர்னல் க்ளிப்டன்
 • ரின்டின் கேன்
 • மதியிலா மந்திரி
 • SMURFS 

இவர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதத்தில் ப்ளஸ் & மைனஸ் கொண்டிருப்பதில் ரகசியங்கள் கிடையாது !

ப்ளூகோட் பட்டாளம் - மேலோட்டமாய் கார்ட்டூனாய்த் தோன்றினாலும், உள்ளுக்குள் போரின் அர்த்தமின்மையைச் சாடும் ஒரு தொடர் ! So மாறுபட்டதொரு கதை canvas க்கு டிக் அடிப்போம் என்று நினைத்தேன் !

கர்னல்ஜியுமே ஒரு மாமூலான சிரிப்பு நாயகராக வலம் வராது - ஸ்காட்லாண்டு யார்டின் சிறப்புப் போலீசாய்ச் சுற்றி வந்து, அந்த பிரிட்டிஷ் கலாச்சாரங்களை பகடி செய்யும் கேரட் மீசைக்காரர் !  மறுபடியும் டிக் !

ரின்டின் கேன் !! என்ன சொல்லுவது நமது ஆதர்ஷ நாலுகால் ஞானசூன்யத்தைப் பற்றி ? ஒரே நொடியில் அம்மாஞ்சியாகவும், அட்டகாச சிந்தனைவாதியாகவும் காட்சி தரக்கூடிய இந்த செல்லப் பிள்ளையை இந்தாண்டு நாமெல்லாமே உச்சி முகரப் போவது  உறுதி - கிட்டியிருக்கும் கதையின் தன்மையின்காரணத்தால் ! ஒட்டகம் ஒன்றோடு நம்மாள் தோஸ்தாகிப் போக - இருவரும் அடிக்கும் லூட்டிகள் அட்டகாஷ்!

மந்திரிகாருவைப் பொறுத்தவரையிலும் - முழுநீளத்தில் கதைகள் இல்லையே என்ற ஆதங்கம் ஒரு பக்கம் இருந்தாலுமே, அந்த செம ஒரிஜினலான கதை concept -க்கு நாமொரு சலாம் போடாது போவது மகாப் பிழையாகிப் போகுமென்பதால் - இங்குமொரு டிக் ! ஒரு slot !

நமது நீலக் குட்டி மனுஷர்கள் பற்றிய mixed reactions நாம் அறிந்ததே ! So மறுபடியும் அதனுள் புகுந்து உங்கள் கழுத்தில் ரம்பத்தை அணைகட்டுவானேன் என்று பார்த்தேன் ! ஒரு நீளமான கதையைச் சுருக்குவதானால் - கூடுதலான  இடங்களை வழங்காது - இவர்களுடனான தொகுதி உடன்பாட்டை ஒன்றோடு நிறுத்திக் கொள்வோமெனத் தீர்மானித்தேன்! So இங்குமொரு டிக் !

8 தேர்வுகள் ஆச்சு ; இறுதி இடம் யாருக்கோ ? என்ற கேள்விக்கு - நிறையவே யோசித்தேன் ! இங்குமே ஒரு புதுமுகம் கிட்டிடும் பட்சத்தில் உற்சாக மீட்டர்கள் உயரக்கூடுமே என்று பட்டது ! 'டக்'கென்று நினைவுக்கு வந்தது ஒரு குள்ள வாத்து ஹீரோ ! அது என்னவோ தெரியலை - பென்னியில் துவங்கி, மந்திரியார், SMURFS என சிரிப்புப் பார்ட்டிகளில் பலரும் குள்ள வாத்துக்களாகவே உள்ளனர் ! காத்திருக்கும் புதுவரவின் ஒரிஜினல் பெயர் SAMMY ! ஆனால் அந்தப் பெயரை தமிழுக்கு மாற்றம் செய்திடும் போது "சாமி"  ; "சேம்மி" என்று வருவது அத்தனை சுகப்பட்டது போல் தோன்றவில்லை ! So மேக் & ஜாக் என்ற பெயர்களோடு இந்தக் கதையின் சிரிப்பு நாயகர்கள் அறிமுகம் காணவுள்ளனர் ! 1920-களின் அமெரிக்காவே கதையின் பின்னணி ! மாஃபியாக் கும்பல்கள் சிகாகோவை உலுக்கி வந்த கால கட்டத்தில் - பாடிகார்டுகளாக தங்களையே வாடகைக்கு விடும் நிறுவனமொன்றின் முதலாளிகள் இவர்கள் இருவரும் ! சில காலமாகவே இவர்களைக் களமிறக்க எண்ணி இருந்தேன் ; 2018 அதற்கொரு வாய்ப்பளித்த தந்துள்ளதில் அண்ணாச்சி ஹேப்பி ! So நாயகர்கள் 9 பேரைத் தேர்வு செய்ததன் பின்னே, அவர்களது தொடர்களிலிருந்து உருப்படியான  கதைகளைத் தேர்வு செய்யும் வேலை மட்டுமே பாக்கி நின்றது ! எப்போதுமே இது அத்தனை கடினப் பணியாக இருந்ததில்லை ; and சமீப காலங்களில் கிளிப்டன் ; ப்ளூ கோட் பட்டாளம் ; லக்கி லூக் ; பென்னி ; smurfs ; மந்திரியார் என அநேகரின் கதைகள் ஆங்கிலத்திலும் கிடைப்பதால் எனது selection process ரொம்பவே சுலபமாகிப் போய் விட்டது ! Here you go :

காத்திருந்ததோ - சந்தா D ! துவங்கிய ஆண்டிலும், தொடர்ந்த பொழுதிலும் மின்னல் தோற்றது இந்த மறுபதிப்புச் சாந்தாவின் வேகத்தின் முன்னே ! நயாகராவில் மாயாவிக்களும் ;கொள்ளைக்கார மாயாவிகளும் செய்த விற்பனை அதகளங்கள் அசாத்திய ரேஞ் ! ஆனால் அதன் பின்பாய் மெது மெதுவாய் தொய்வு தெரியத் துவங்கிட, நடப்பாண்டில் உங்களில் பலருக்கும் தூக்க மாத்திரைகளாக சந்தா D செயல்பட்டு வருவதை உணர முடிந்தது ! மறுபதிப்புகளின் பொருட்டு நாம் மொத்தமாய் நிறைய முதலீடு செய்துள்ளது நிஜம் தான் ; ஆனால் அவற்றை முழுமையாய் காலி செய்திட இன்னமும் 2 ஆண்டுகளாவது பிடிக்கும் ; and  அதற்குள்ளாக உங்களில் பலர் இமயமலை அடிவாரங்களில் தவம் மேற்கொண்டிருக்கும் வாய்ப்புகள் பிரகாசமாய்க் கண்ணில் பட்டது ! ஜுனியர் குப்பாண்ணாக்களை போட்டுத் தாக்குவோரை ஜடாமுடியோடும், கமண்டலங்களோடும்  கற்பனை செய்வதே கஷ்டமாக இருப்பதால் - தொடரும் ஆண்டிலாவது உங்களுக்கு கொஞ்சமேனும் நிவாரணம் தர நினைத்தேன் ! So அந்த உறுதியில் தான் ஈரோட்டின் சந்திப்பின் போதும் கூட, காத்திருக்கும் சந்தா D - பர பரப்பாக இருக்கப் போவது உறுதி என்று சொன்னேன் !

முதல் வேலையாக  மும்மூர்த்திகளுக்கும், இஸ்பய்டர் சாருக்கும் ஆளுக்கொரு slot கூட வேண்டாம் - மூன்றே தொகுதிகளை அவர்களுக்குள்ளாக்கப் பிரித்துக் கொள்ளட்டும் என்று தீர்மானித்தேன் ! So SECRET AGENT ஸ்பெஷல் என்ற பெயரில் CID லாரன்ஸ் & டேவிட் சாகசமும், ஜானி நீரோ சாகசமும் இணைந்து வர ; மாயாவியும், ஸ்பைடரும் ஆளுக்கொரு இதழில் !  What next ? என்ற போது தான்   சூப்பர் 6-ன் "இன்றியமையா மறுபதிப்புத் தொகுப்புகளை" உள்நுழைக்கும் மகாசிந்தனை உதித்தது ! Fleetway மறுபதிப்புகள் காலி செய்து தந்திருந்த  இடங்களில் லக்கி க்ளாசிக்ஸ் 2 ; சிக் பில் க்ளாசிக்ஸ் 2 & TEX கலர் கிளாசிக் எனப் புகுத்தினால் - நடப்பாண்டின் smash hits சிக்கலின்றித் தொடர்ந்தது போலவும் ஆச்சு ; இதற்கென இன்னொரு சந்தாத் தடத்தை உருவாக்கும் மெனெக்கெடலும் கிடையாதென்று பட்டது ! இது சரியான தீர்மானமா ? இல்லையா ? என்ற கேள்விக்கு  லேட்டஸ்ட்டான பாய் பிறாண்டும் விஞ்ஞான வழிமுறைகளை நடைமுறைப்படுத்திய பின்னே தீர்மானித்தேன் YES என்று !

ஈரோட்டில் TEX மறுபதிப்புக்கெனத் தேர்வான "பளிங்குச் சிலை மர்மம்" - வண்ணத்தில் வருகிறது ! Of course - "வைகிங் தீவு மர்மம்" கதையையும் இதனோடு இணைத்திருக்க ஆசை தான் ; ஆனால் தற்போதே பட்ஜெட் உதைக்கிறதென்ற சிகப்பு லைட் கண் முன்னே டாலடிக்க  - TEX ஒற்றை சாகசம் மாத்திரமே எனத் தீர்மானித்தேன் ! கிடைக்கும் அடுத்த முதல் சந்தர்ப்பத்தில் "வை.தீ.ம" தான் TEX மறுபதிப்பு என்பதில் சந்தேகம் வேண்டாம் folks !

லக்கி கிளாஸிக்ஸ் 2-க்கென "மேடையில் ஒரு மன்மதன்" + "அதிரடிப் பொடியன்" கதைகளைத் தேர்வு செயதேன் ! இரண்டுமே classics என்பதால் - நிச்சயம் ஒரு விருந்து காத்துள்ளது என்பேன் ! And hard cover too !!

நமது வுட் சிட்டி பார்ட்டிக்களின் கிளாசிக்சில் "கொலைகாரக் காதலி" & "தேவை ஒரு மொட்டை" இடம்பிடிக்கின்றன ! மறுபடியும் hard cover இங்கும் !

இந்த 3 ஸ்பெஷல் இதழ்களையும்  டிக் அடித்ததன் பின்னே, மனதுக்கு வந்த முதல் பெயர் - "தோட்டா தலைநகரம்" ! "இரத்தக் கோட்டை" தொகுப்பினில் இத்னை இணைக்க இயலாது போன சமயமே promise செய்திருந்தேன் - இது தனி இதழாய் விரைவிலேயே வந்திடுமென்று ! ஆகையால் மறுபதிப்பு # 7 ஆக இடம்பிடித்த இதழிது !

And அது போலவே இன்னமுமொரு பிராமிஸ் செய்த நினைவும் இருந்தது   - நமது சாகச வீரர் ரோஜரின் "மர்மக் கத்தி"  தொடர்பாய் ! 1986-ல் வெளியான இதழிது என்ற முறையில் நமது புது வாசகர்களும் பெரும்பகுதியினர் இதனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவே மாட்டார்கள் என்பது நிச்சயம். So "மர்மக் கத்தி" slot 8-ல் ! ரெகுலர் சந்தாக்களில் இம்முறை கேப்டன் டைகரும், ரோஜரும் இடம்பெற்றிருக்கவில்லை எனும் சூழலில், இவர்களை மறுபதிப்பிலாவது பார்த்த திருப்தி கிட்டட்டுமே என்று நினைத்தேன் !

அந்த சிந்தனையின் கிளையே - சந்தா D -வின் இறுதி slot-ஐ கேப்டன் பிரின்ஸ் பிடிக்க நேர்ந்ததன் பின்னணி ! கேப்டனா ? ரிப்போர்ட்டரா ? என்ற அனல் பறக்கும் போட்டி சமீபமாய் இங்கே  அரங்கேறிய வேளையில் - "பிரின்ஸை மறுபதிப்பில் பார்த்தால் மட்டும் தானே ஆச்சு ?" என்று முன்வைக்கப்பட்ட வாதம் எனக்கு லாஜிக்கலாகத் தோன்றியது ! So விட்டேனா -பார் என்று இங்கே திருமங்கலமும், RK நகரும் அரங்கேறிய டுபாக்கூர் வேளையில் - "எரிமலைத்தீவில் பிரின்ஸ்" என்று டிக் அடித்திருந்தேன் ! So ஒரு சவ சவ சந்தா D - சற்றே சுறு சுறுப்பாய்க் காட்சி தருவது போல் எனக்குள் தோன்றிய விதம் இதுவே ! And here are the trailers :


 

ஒரு பெருமூச்சோடு பேனாவை மூடி வைத்துவிட்டு -இதுவரையிலுமான இதழ்களின் கிரயங்களை டோட்டல் போடும் படலத்தினுள் இறங்கினேன் ! கூரியர் கட்டணங்கள் ஏற்கனவே எகிறிப் போய்க் கிடைக்கும் சூழலில் - அதனை balance செய்திடுவது எவ்விதம் ? சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு  நடப்பாண்டைப் போலவே எவ்விதம் ஊக்கம் வழங்குவது ?என்றெல்லாம்  யோசிக்கத் துவங்கினேன் !

அந்த நொடியில் பிறந்தது தான் TEX in ColoR !! இது நம்மவரின் 70-வது ஆண்டுக் கொண்டாட்டங்களெனும் போது - இன்னும் கூடுதலாய் எமோஷன்ஸ் இருப்பின் நலமே என்று மனதுக்குப்பட்டது ! So கொஞ்சகாலமாகவே நான் மனதுக்குள் அசை போட்டு வரும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும் வேளை இது  என்று தீர்மானித்தேன். TEX கதைகள் நார்மலாய் கறுப்பு -வெள்ளையில் வரையப்பட்டு ; அவ்விதமே வெளியிடவும்பட்டு ;பின்னர் வர்ணம் பூசப்பட்டு - கலர் பதிப்புகளாக சுற்றி வருவது வழக்கம். ஆனால் COLOR TEX என்ற தொடரின் பொருட்டு, முழு வண்ணத்திலேயே, பெயின்டிங் போடுவது போல TEX கதைகளுக்கு ஓவியங்கள் தீட்டும் முயற்சியிலும் போனெல்லி இறங்கியுள்ளனர் ! அந்த தொடரின் வரிசையில் - அரை டஜன் 32 பக்க சிறுகதைகள் உள்ளன ! அவை ஒவ்வொன்றையுமே, பிரத்யேக இதழ்களாக்கி - இரு மாதங்களுக்கு ஒருமுறை சந்தா நண்பர்களுக்கு நமது அன்பளிப்பாய்க் கொடுக்க திட்டமிட்டேன் ! So திரும்பிய திக்கெல்லாம் TEX 2018-ல் உலா வர போவது உறுதி !

And அயல்நாட்டு வாசகர்கள் ; சந்தா செலுத்தப் பிரியம் கொள்ளா வாசகர்கள் கூட இந்த COLOR TEX இதழ்களை பெற்றிடலாம் - but ஆண்டுக்கு 2 தருணங்களில் மட்டும் - அதற்கான விலைகளைக் கொடுத்து ! விபரமாய் - தொடரும் பக்கங்களில் எழுதியுள்ளேன் ; please அதை படிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் ? சந்தாவில் இணையாதோரும் இந்த இதழ்களை பெற்றிடல் சாத்தியமே என்பதால் - "பாரபட்சம் ; இத்யாதி..இத்யாதி" என்ற புகார்களுக்கு இங்கே முகாந்திரங்களில்லை ! Please do read carefully !"சரி...மொட்டையும் போட்டாச்சு ; காதும் குதியாச்சு ; யானைகிட்டே ஆசீர்வாதமும் வாங்கியாச்சு ; கடா எங்கேப்பா ?" என்ற சில மௌனக் கதறல்கள் எனக்கு கேட்காதில்லை ! சந்தா E பற்றிய சேதி என்னவோ ? என்பது தானே உங்கள் கேள்வி ?

இதோ பதில் : கிராபிக் நாவல் சந்தா ஏப்ரலில் அறிவிக்கப்பட்டு, ஜூன் 2018 முதல் துவங்கிடும் ! இங்குமே 9 இதழ்கள் - அவற்றுள் கலர் ஐந்தா ? b & w ஐந்தா ? என்பதே உங்களுக்கான யூகப் பயிற்சி ! So 5 + 4 என வரக் காத்திருக்கும் கிராபிக் நாவல் சந்தாவிற்கு "the five & four " சந்தா எனப் பெயரிட்டுள்ளோம் ! பாருங்களேன் :
உங்களுக்குப் பரிச்சயமான கதைகள் ; முற்றிலும் பார்த்திராப் புதுசுகள் ; வண்ணத்தில் ; கறுப்பு-வெள்ளையில் ; இருண்ட கதைகள் ; தெறிக்கும் புது பாணிகள் ; தொடரும் பழையோர் ; தழைக்கப் போகும் புதியோர் - என இங்கு எல்லாமே இருந்திடும் ; நல்லாவும் இருந்திடும் ! "அதெல்லாம் சரி தான் ; ஆனால் இதையும் இப்போதே அறிவித்து விட்டால் - ஒரே வேலையாய் முடிந்திடுமே ?" என்று கேட்போரும் இருப்பார்கள் என்பது புரிகிறது ! 3 காரணங்கள் - அதனை செய்யாதிருப்பதற்கு :

1.பட்ஜெட் : ஏற்கனவே சென்றாண்டின் அளவைத் தாண்டி விட்ட நிலையில் - மேற்கொண்டு எகிறச் செய்ய இது நேரமல்ல என்று எண்ணினேன் !

2:தற்போதைய பிராங்பர்ட் சந்திப்பினைத் தொடர்ந்து புதிதாய்த் திறந்துள்ள சில கதவுகளையும் முழுமையாய் ஆராய்ந்து - ஒரு கலக்கலான திட்டமிடலை மறுபடியும் உருவாக்க கணிசமான அவகாசம் தேவை !

3.இந்தாண்டின் எஞ்சியுள்ள கிராபிக் நாவலும் வெளியாகிவிட்ட பின்பாக  - ஒரு consolidated பார்வை அவசியமென்று நினைக்கிறேன் ! கதைத்தேர்வுகளில் அதீத கவனம் அவசியமாகிடும் களமிது என்பதால் - தட தட ஓட்டத்தை விடவும், நிதான ஓட்டம் நல்லதென்று நினைத்தேன் !

So  back to the drawing board சென்றிடல் அவசியம் எனும் நிலையில் - என்னளவில் மனதுக்குள் ஒரு திருத்தப்பட்ட ப்ளூ பிரிண்ட் ரெடி செய்திருக்கிறேன்  !! அதனை நடைமுறையாக்க  ஒரு time gap அத்தியாவசியம் ! அதுவரையிலும் "அண்டர்டேக்கர் உண்டா ? ஜெரேமியா ? பராகுடா ? யார் உள்ளே - யார் வெளியே ?" என்று ஆராயத் தொடங்கினீர்களெனில் நாட்கள் ஓட்டமாய் ஓடியே போய் விடும் ! So சந்தா E - சந்தா F & F ஆக உருமாறுகிறதென்ற சேதியோடு - இதோ 2018-ன் சந்தா தொகையினை உங்கள் பார்வைக்கு வழங்கிடுகிறேன் :
ஆண்டுதோறும் பட்ஜெட்டை சட்டசபையில் சமர்ப்பிக்க வரும் நிதி மந்திரிகள்  ஒரு தம்மாத்துண்டு பிரீஃப் கேஸோடு வாயெல்லாம் பல்லாக போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதை பார்த்திருப்போம் ! அதனுள் என்னதான் இருக்குமோ ? என்று நான் நிறைய தடவைகள் யோசித்திருக்குப்பேன் ! என்னையும் இப்போது அப்படியொரு "ஈ ஈ ஈ " moment-ல் கற்பனை செய்வதாக இருப்பின், என் கையில் இருக்கக் கூடிய பொட்டிக்குள் - கொஞ்சம் அதிரசம் ; சீவல் ; முறுக்கு  என்று பட்சணங்கள் தானிருக்கும் ; இதனையே டைப் முடிப்பதற்குள் பேயாய் பசிக்கிறதே ?!!
அப்புறம் எப்போதோ செய்திருக்க வேண்டியதொரு திட்டம் இப்போதேனும் நடைமுறை காணவிருக்கிறதே என்ற மகிழ்ச்சி எனக்கு ! பாருங்களேன் :

ஆன்லைனிலும் வழக்கம் போல சந்தாக்களை செலுத்தலாம் guys ; ஆனால் இன்றைய பொழுது விடுமுறை என்பதால் ஜுனியரைக் கொண்டு A + B + C +D சந்தாவினை மட்டும் லிஸ்டிங் செய்துள்ளேன் : http://lioncomics.in/15-2018-subscription

இதர பிரிவுகளை வெள்ளிக்கிழமை ஆன்லைனில் பார்த்திடலாம் !

இம்முறை பிடித்ததைத் தேர்வு செய்யும் சுதந்திரம் முழுமையாய் உங்கள் வசம் ! "TEX திகட்டுகிறது" என்று சொல்லும் சிறுபான்மையா நீங்கள் ? No worries - சந்தா B-ஐ நீங்கள் தேர்வு செய்திடும் அவசியமில்லை ! கார்ட்டூன் வேண்டாமா ? - ஒன்றும் பிரச்சனையே இல்லை ; பை-பாசில் வண்டியை வீட்டுக் கொள்ளுங்கள் ! மறுபதிப்புகளுக்கு NO சொல்வோரா நீங்கள் ? சுதந்திரமாய் சந்தா D-க்கும் NO சொல்லிடலாம் ! So இயன்றமட்டுக்கு எல்லாக் கூட்டணிகளிலும் சந்தாப் பிரிவுகளை இம்முறை உங்களுக்கென உருவாக்கியுள்ளோம் ! Please note : இவை தவிர்த்து வேறு எவ்வித சந்தாத் திட்டமிடல்களும் கிடையாது ! So வேறெவ்வித கூட்டணி குறித்தும் நம்மவர்களிடம் விசாரித்திட வேண்டாமே - ப்ளீஸ் ?

இனி பந்து உங்கள் தரப்பில் folks ! எப்போதும் போல அதே உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும் நமது சந்தாச் சக்கரங்களைச் சுழலச் செய்யும்  பொறுப்பு உங்களிடம் ! கடவுள் துணையோடு இந்தாண்டும் ஒரு வெற்றி தெறிக்கும் ஆண்டாய் அமையுமென்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் !

Of course - கதைத் தேர்வுகள் ; ரசனைகள் ; தலைப்புகள் என ஒவ்வொன்றிலும் சிற்சிறு மாற்றுச் சிந்தனைகள் இருக்கக் கூடும்தான் ! ஆனால் ஒவ்வொரு தீர்மானத்திற்கு முன்பும், உங்கள் ஒவ்வொருவரின் இடங்களிலிருந்தும், ஒரு கணமேனும்  சிந்தித்துப் பார்க்க நாங்கள் முயற்சித்துள்ளது நிஜம் ! So உங்களுக்கு ஏற்புடைய தேர்வுகள் மிஸ்ஸிங் எனில் அதற்கொரு காரணம் இருக்கக்கூடுமென்ற நம்பிக்கை கொள்ளுங்களேன் ப்ளீஸ் ? இந்த நொடியின் தேவை உங்களின் ஒட்டுமொத்த பாசிட்டிவ் சிந்தனைகளே ! ஒரு சின்ன வட்டத்தினுள் பிரபஞ்சத்தையே உள்ளங்கைக்குள் கொணர்ந்து பார்க்கும் பேரவா நமக்கு என்பதால் - ஒட்டுமொத்த வாழ்த்துக்களின்றி அது சாத்தியமாகாது ! கரம் கோர்ப்போம் - மீண்டுமொருமுறை !!

பொறுமையாய் இத்தனை நேரம் வாசித்தமைக்கு நன்றிகள் ; அப்புறம் உங்களின் data packs நாளை 'பிம்பிலிக்கா-பிலாக்கி' என்றால் என்னைத் திட்டாதீர்கள் !! Bye all ! See you around !!

P.S : ஆங்......ஈரோட்டிலேயே சொல்ல நினைத்தது !!
                                    😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃 

சந்தோஷ தீபாவளி !

நண்பர்களே,

வணக்கம் ! அட்டகாசமான தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! நம் இல்லங்களில் ஒளியும் ... மகிழ்வும்.. நலமும்.. வளமும் செழிக்கட்டும் ! 
இன்றைய பொழுதை - மைசூர்பாகு போலவும்...அதிரசங்கள் போலவும்...சீடைகள் போலவும் காட்சி தரும் சில பல மர்ம வஸ்துக்களோடு கொண்டாடத்  தயாராகிக் கொள்ளுவோமே ? அப்புறம் நேரம் கிடைக்கும் போது நமது தீபாவளி மலர்களில் ஏதோவொன்றை  - நின்று கொண்டோ ; குந்திக் கொண்டோ ; ஒருக்கா சைடாய்த் திரும்பிக் கொண்டோ ; மல்லாக்கப் படுத்துக் கொண்டோ படிக்கவும் நேரம் ஒதுக்க முடிகிறதாவென்றும் பார்க்கலாமே ? 

As promised இன்று முன்னிரவு  - 2018-ன் அட்டவணையோடு ஆஜராகிடுவேன் ! அதற்கெனவும் கொஞ்சம் நேரம் ப்ளீஸ் ? 

Safety pin குறிப்பு : இன்றைய மின்னஞ்சலில் அன்பர் ஒருவரிடமிருந்தான சேதி :

டியர் சார்,

பின் வரும் சேந்தம்பட்டி நண்பர்களுக்கு தீபாவளி அன்புப் பரிசாக அவர்களின் 2018 சந்தாவிற்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வழங்குகிறேன். 

வழக்கம் போல் அனாமதேயமாக. என்னுடைய கணக்கில் இருந்து கழித்து கொள்ளவும். 

இந்த பட்டியலில் 4 பேர் விடுபட்டு உள்ளது. அவர்களுக்கு வேறு பரிசு வேறு தருணத்தில்.

Karur Saravanan
Tiruppur Prabakar
Ravi Kannan
RummiXIII (A) Ramesh
Jeyakumar
Yuva Kannan (a) Kirubakaran
Saint Satan (a) SomaSundaram
Tiruppur Blueberry
Thalivar Paranitharan
Salem Tex Vijay
Baby Smurf (a) Suseendran
Postal Phonex (a) Mayilai Raaja
Ravi (A) Arivarasu

So மேலுள்ள பட்டியலில் உள்ள நண்பர்கள் சந்தா செலுத்திடும் சமயம் ரூ.500 கழித்துக் கொண்டு அனுப்பினால் போதுமானது !! 

பின்குறிப்பு 2 : இன்றைய "குமுதம்" அரசு கேள்வி பதில் பகுதியில் நமது பெர்லின் கிராபிக் நாவலுக்குக் கிட்டியுள்ள அட்டகாச அங்கீகாரத்தைப் பார்த்தீர்களா guys ? குமுதம் ஆசிரியருக்கும், அவர்தம் குழுவுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் !! 
Bye all....see you around soon !

Saturday, October 14, 2017

கோட்டை அழியுங்க...!

நண்பர்களே,

வணக்கம். உங்களையெல்லாம் பார்த்தாக்கா நேக்கு பாவம் பாவமாத் தோணுது !! "இஸ்பைடரையும்...பூப்போட்ட அண்டராயர்காரையும்  இப்போவும்  3 வருஷமா தான் படிச்சிட்டு வர்றோமே..இதிலே புதுசா அனுதாபப்பட மேட்டர் என்னவோ ?" என்று கேட்கிறீர்களா ? விஷயம் அதுவல்ல ! 32 ஆண்டுகளுக்கு முன்னே பொட்டியைத் தூக்கிக் கொண்டு சுள்ளானாய்ப் பிராங்க்பர்ட் புத்தகவிழாவுக்குப் போன கதையையே காதிலே இரத்தம் கசியும் அளவுக்கு சொல்லி வருகிறவன் -  ஜுனியரையும் உடனழைத்துக் கொண்டு இப்போது அங்கே மறுக்கா பயணமானால் உங்கள் கதி தான் என்னவாகும் ? இந்தக் கூத்தை கொண்டே இன்னமும் எத்தனை ஆண்டுகளை ஓட்டப் போகிறேனோ ? என்பதை நினைத்தால் எனக்கே கண்ணைக் கட்டிக்கொண்டு வருகிறதே - உங்கள்பாடைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா ? கடவுள் காப்பாற்றுவாராக ! 

ஒவ்வொரு வருடத்து அக்டோபர் புலரும் போதும் மண்டைக்குள் ஒரு ஓரமாய் விசனமும் குடிகொள்ளும் - "ஹக்கூம்...புத்தகவிழா அங்கே ஜெர்மனியில் துவங்கும் நேரமிது....எது எதுக்கோ தெருத் தெருவாய் சுற்றும் உனக்கு - இந்தவாட்டியும் அங்கே தலைகாட்டத் தீரலியாக்கும் ?" என்று !! சிக்கல் என்னவெனில் - பிரத்யேகமாய் இதற்கென திட்டமிட்டு, இதெற்கென செலவழித்துப் போவதாயின் குறைந்த பட்சம் ஒரு லட்சத்தி சொச்சம் பழுத்து விடும் ! நம்மூர் மங்கம்மாள் சத்திரம் கிரேடில் உள்ள ஹோட்டல்கள் கூட "புக்பேர் ரேட்ஸ்" என்று புத்தகவிழா நடக்கும் அந்த ஐந்து நாட்களுக்கு கட்டணங்களை ரெண்டு மடங்கு  உசத்தி விடுவது வாடிக்கை ! ஒரு லட்சத்தை அங்கே போய் சூறை போடுவதற்குப் பதிலாய் இங்கிருந்தபடிக்கே நமது "கே-மெயில் பாணியை" கடைபிடித்தால் அந்தப் பணத்தை மிச்சம் செய்தது போலாகுமே என்பது தான் அடியேனின் சித்தாந்தமாய் இருந்துவரும் ! அது சரி..அது என்ன "கே-மெயில்" என்கிறீர்களா ? வேறென்ன - "குடலை உருவிடும் மெயில் " தான் ! நமக்குத் தேவைப்படும் தகவல்கள் கிட்டிடத் தாமதமாகிடும் தருணங்களில் இங்கிருந்தபடிக்கே படைப்பாளிகளின் சிறுகுடல் ; பெருங்குடல்களோடு பரிச்சயம் வளர்த்துக் கொள்ளும் யுக்தி ! நிச்சயமாய் பிரான்சிலும், பெல்ஜியத்திலும், இன்ன பிற ஐரோப்பிய காமிக்ஸ் தலைநகரங்களிலும்  - 'இந்தக் கொசுத் தொல்லை தாங்கலைடா நாராயணா !' என்று சிலபல அலுத்துக் கொள்ளும் படலங்கள் நடைபெறும் என்பதில் இரகசியமில்லை என்ற போதிலும், எனக்கு வேறு மார்க்கங்கள் இருப்பதில்லை ! வேறு பணிகளின் நிமித்தம் ஐரோப்பாவில் கால் பதிக்க சமயம் கிட்டும் தருணங்களில் - படைப்பாளிகளில் முக்கியமானோரை பார்த்து ஒரு வணக்கத்தைப் போட்டு வைப்பது வாடிக்கையே எனினும், சகலரையும் பார்த்திடுவது சாத்தியமாவதில்லை !  

So இந்தாண்டு கள்ளத்தோணியில் எறியாவது ஜெர்மனிக்குப் போய் சேர்ந்திட வேண்டுமென்ற உத்வேகம் சில பல மாதங்களுக்கு  முன்கூட்டியே குடி வந்திருந்தது என்னுள் ! முன்பணம் எதுவும் செலுத்தத் தேவையின்றி முன்கூட்டியே ரூம் புக் செய்யும் இன்டர்நெட் தளங்கள் இப்போது ஏகம் என்பதால் ஒன்றரையணாவுக்கு அதனுள் ஏதாச்சும் ரூம் சிக்குகிறதா ? என்று பார்க்கத் துவங்கினேன் ! ஓலப்பாய் விரித்து ஓரமாய்ப் படுத்துக் கொள்வதானால் கூட நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் செலவாகும் போல் தெரிந்தது ! 'அடேய் ..பாவிப் பயல்களா...எங்க ஊரிலே இந்தப் பணத்துக்கு ஜனாதிபதி மாளிகைக்கு கிட்டக்கே கூட ரூம் கிடைக்குமே !!" என்று உள்ளுக்குள் பொங்கினாலும், செய்வதற்கு வேறெதுவும் இல்லையென்பதால் ரூமை மட்டும் புக் செய்து வைத்திருந்தேன். ஒன்றரை மாதங்களுக்கு முன்னே விமானக் கட்டணங்களை ஒரக் கண்ணால் அவ்வப்போது நோட்டம் விடும் போதெல்லாம் - போய் வர ரூ.34,000 சுமாருக்கு டிக்கெட்கள் கண்ணில் பட்டன ! 'அடடே .....இந்த டீலிங் ரொம்ப நல்ல இருக்கே ; டிக்கெட் முப்பத்தி நாலாயிரம் ப்ளஸ் ரூமுக்கு இருபதாயிரம் என்றால் 54-ல் முடிந்து விடுகிறது ! அப்புறமாய் சாப்பாட்டுச் செலவுதான் ! இங்கிருந்தே கொஞ்சம் புளியோதரையை பொட்டலம் கட்டிப் போனால், ரெண்டே நாள் தாக்குப் பிடிக்க முடியாமலா போய்டப் போகுது ? ஏற்கனவே இது புரட்டாசி வேற..!" என்று திவ்யமாய் மனக்கணக்குகள் ஓடியவண்ணமிருந்தன ! ஆனால் கணக்குகள் வேறு ; பைக்குள் நிஜத்தில் கைவிடுவது வேறு தானே ? "நாளைக்குப் பார்த்துக்கலாம் ; இந்த மாச ஏஜெண்ட் வசூல் வந்த உடனே பார்த்துக்கலாம் !" என்று நாட்களைக் கரைத்துக் கொண்டே போக, இடைப்பட்ட தருணத்தில் ஜுனியரின் திருமணமும் நிச்சயமானது ! வழக்கம் போல் ஒரு காலையில் விமான கட்டணப் பரிசோதனையில் ஆழ்ந்த போது - பிட்டத்துக்கு அடியில் டைம் பாம் வெடித்தது போலொரு உணர்வு ! கட்டணம் அறுபதாயிரத்துச் சொச்சம் என்று கம்பியூட்டர் காட்டிய மறு கணமே கலாமிட்டி ஜேனை நல்ல பிள்ளையாக்கும் விதமாய்த் தான் மனசுக்குள் வார்த்தைகள் @#%*&^"=@!!  ஓடின !! முப்பத்தி ஐந்துக்கே முக்கு முக்கென்று முக்கியவன் அறுபதை பார்த்தவுடன் சுத்தமாய் off ! இந்தாண்டுமே மறுபடியும் ஒரு கானல் நீர் தான் என்றபடிக்கே - மனதைத் தேற்றிக் கொள்ளத் தொடங்கினேன் - "அட..என்ன பொல்லாத புக் பேர் ! அது தான் எல்லாரையும் நமக்குத் தெரியுமே ! புதுசா என்ன ஆணி பிடுங்கப் போறேன் ?" என்றபடிக்கே ! நொடிப் பொழுதில்தான் பழங்கள் என்னமாய் சுவை மாறித் தோன்றுகின்றன மனுஷனின் மனக்கண்ணில் ?!! 

"சரி..இது ஆகுறதில்லே !" என்றபடிக்கு அன்றாட வேலைகளுக்குள் புகுந்த போது தான் நமது காமிக்ஸ் தேவர் புனித மணிடோ கண்ணைத் திறந்தார் !! நமது மிஷினரி வாடிக்கையாளர்  - அவசரமாய் ஒரு மிஷின் தேவையென்று கோரிக்கையை வைத்திட, அதன் தேடலில் நாட்கள் நகர்ந்தன ! ஜுனியருக்குமே அந்தப் பணிகள் அத்துப்படி என்பதால் அவருமே தேடிட, "ஜெர்மனியில் உள்ள இது ஆகுமா - பாருங்களேன் ?" என்றபடிக்கு என்னிடம் ஒரு மின்னஞ்சலைக் காட்டிய போது நானொரு 'ஜிமிக்கி கம்மல் ' டான்ஸ் ஆடாத குறைதான் ! ஆபீசில் உள்ள பெண்பிள்ளைகளை தெறித்து ஓடச் செய்த பாவம் வேண்டாமே என்ற நல்லெண்ணத்தில் அடியேனுக்குள் பொங்கிப் பிரவாகமெடுத்த நடன வேட்கையை உள்ளுக்குள்ளேயே ஒருமாதிரியாக அடக்கிக் கொண்டேன் ! ஜெர்மனியில்  உள்ள விற்கும் முகவர் எனக்குத் தெரிந்த நண்பர் என்பது மட்டுமல்லாது மிஷின் இருந்ததுமே பிராங்க்பர்ட் நகரிலிருந்து 500 கி.மீ. தொலைவில் தான் என்பதால் பர பரவென்று இங்கும் அங்கும் பேச்சு வார்த்தைகள் நடத்தியதன் பலனாய் இந்த வாரத்தின் புதனிரவு சென்னை விமானநிலையத்தில் "ஈஈ" என்று ஜோக்கரின் இளிப்புக்குச் சவால்விடும் விதத்தில் ஒரு ஆந்தைவிழியனின் நடமாட்டம் சாத்தியமானது ! "புள்ளைக்கு கல்யாணத்தை வைத்துக் கொண்டு இன்னமும் ஊர் சுற்றித் திரியணுமாக்கும் ?" என்ற குரல் வீட்டில் ஒலித்தாலும், "தோ...ரெண்டே நாள் - ஓட்டமாய் ஓடிட்டு, ஓட்டமாய் திரும்பிடுவேன் !" என்றபடிக்கே மூட்டையைக் கட்டியிருந்தேன். And ஜுனியரின் தேடலில் கிட்டிய மிஷின் என்பதாலும், நமது படைப்பாளிகளை ஜூ எ-க்கு அறிமுகம் செய்து வைக்க கிட்டிய பொன்னான வாய்ப்பு என்பதாலும், ஒன்றுக்கு இரண்டாய் மூட்டைகளைக் கட்ட முடிந்திருந்தது !

கடைசியாய் ஐரோப்பாவில் அந்த வில்லங்கக் கிழவிகளிடம் வாங்கிய பல்ப் இன்னமும் ஸ்பஷ்டமாய் நினைவில் நிற்க, ஊரிலிருந்து கிளம்பும் போதே தீர்மானித்திருந்தேன் - இரண்டடி சுற்றுவட்டத்துக்குள் நெருங்கி வரும் முதல்  வெள்ளைக்காரக் கிழவியைக் குரல்வளையை நெரித்து விட்டு, அப்புறமாய் அவசியப்பட்டால்  விசாரிப்பது என்று !! அது போதாதென்று தேர் இழுக்கும் வடம் கனத்தில் ஒரு அருணாக்கொடியை சுற்றி, பாஸ்போர்ட்களை அதோடு ஒரு சுருக்குப் பையில் மாட்டி, மேம்போக்காய் கொஞ்சம் பாடி ஸ்பிரே அடித்தும் கண்ணுக்கே தெரியாதபடிக்கு பதுக்கி விட்டிருந்தேன் ! தகுந்த முன்னெச்சரிக்கைகளோடு கிளம்பியது  ; பாரிசில் தரையிறங்கி அங்கிருந்து ஜெர்மனியின் தென்கோடியில் உள்ள ம்யூனிக் நகருக்குப் போய் அந்த  மிஷினைப் பார்வையிட்டது - எல்லாமே நிழல் நிகழ்வுகளாய் ஓடின ! என் மண்டை முழுக்கவே புத்தகவிழாவில் நிலை கொண்டிருந்தன !! 

ஒரு மாதிரியாய் வியாழனிரவு பிராங்க்பர்ட் நகருக்குள் நுழைந்த போது - எனக்குமட்டும் ஊரே செண்டா மேளம் அடித்து வரவேற்புக் கொடுப்பது போலொரு உணர்வு ! அதே ரெயில்வே ஸ்டேஷன் - இம்முறை கொஞ்சம் பள பளவென்று...அதே வானளாவிய கட்டிடங்கள், துணைக்கு கூடுதலாய் சகாக்களோடு ; அதே ஜனத்திரள் - என்று பரிச்சயமான காட்சிகள் கண்முன்னே விரிய - கிடைத்த அத்தனை வாடகை சைக்கிள்களையும்  ஒட்டுமொத்தமாய் எடுத்துக் கொண்டு ஆட்டோகிராப் சேரன் பாணியில் பின்னோக்கிப் பயணிக்கத் தொடங்கினேன் ! ஆனால் இன்றைய தலைமுறையோ  சந்திர மண்டலத்துக்கே போனாலும் - "இப்போ இன்னாங்கிறே ?" எனும் nonchalant தலைமுறை என்பதை நூற்றியோராவது தடவையாக உணர்ந்தேன் -  ஜுனியர் எனது பெனாத்தல்களை சன்னமானதொரு கொட்டாவியை அடக்கிக் கொண்டே கேட்டுக் கொண்ட போது ! வெள்ளைத் தோல் ஜனங்களும், வானளாவிய கட்டிடங்களும் இன்றைய IPhone தலைமுறைக்கு எவ்விதத்திலும் ஒரு வேற்றுமையை உணர்த்துவதில்லை எனும் போது 30 ஆண்டுகளில் தான் என்னமாய் மாற்றங்கள் வேர் விட்டுள்ளன என்பதை எண்ணி வியக்காது இருக்க இயலவில்லை !! 

ஒரு மாதிரியாய் ரூமுக்குப் போய் கட்டையைக் கிடத்தி விட்டு கோழி கூவும் முன்பாய்க் குளித்துக் கிளம்பிய கையோடு  ஜுனியரை உசுப்பிட  - "ஐம்பது வயசுக்கு மேலான அப்பன்கள் எல்லாமே மறையைக் கழற்றி பாக்கெட்டுக்குள் வைத்திருப்பாங்களோ ? ஒன்பதரைக்கு ஆரம்பிக்கும் விழாவுக்கு 7 மணிக்கே பிராணனை வாங்குறாரே ?" என்ற பார்வை தெரிந்தது ! இதோ அதோவென்று ஒன்பது மணிக்கு பிராங்க்பர்ட் நகரின் மையத்தில் உள்ள புத்தக விழா மையத்துக்கு செல்லும் டிராமில் ஏறிய நொடியில் -  32 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு துக்கனூண்டு பர்மா பஜார் பிரீஃப்-கேஸை கையில் ஏந்தியபடிக்கு ஒரு சைஸ் பெரிதான கோட்டை இழுத்துப் பிடித்துக் கொண்டு, தொடரும் நாளில் மாத்திரமன்றி, தொடரவிருக்கும் வாழ்க்கையிலும்  என்ன காத்திருக்கிறதென்று துளியும் அறிந்திராது, மனது முழுவதும் வியாபித்து நின்ற பதட்டத்தையும்  பயத்தையும்  கண்களில் காட்டாதிருக்கத் தவித்த ஒரு முரட்டு மீசை டீனேஜர் என் கண்ணில் நிழலாடினான் ! வாழ்க்கை தான் எத்தனை பெரிதானதொரு ஆசான் என்று மறுபடியும் உணரச் செய்த நொடியது ! கூட்டத்தோடு கூட்டமாய் புகுந்து, கிரவுண்டின் முகப்பில் இறங்கி புத்தகவிழா வாசலில் ஜுனியரை நிற்கச் செய்து ஒரு க்ளிக் செய்த கணம் -  ஊதைக் காற்றினாலா என்று சொல்லத் தெரியவில்லை - விழியோரம் துளியூண்டு ஈரமிருந்தது ! 
உள்ளே புகுந்தோம் ! 

திரும்பிய பக்கமெல்லாம் வெவ்வேறு தேசத்துப் பதிப்பகத்தார் சர சரவென்று தத்தம் ஸ்டால்கள் பக்கமாய் வேக நடை போட்டுக் கொண்டிருக்க, எங்கள் கைகளிலோ நாம் சந்திக்க வேண்டிய படைப்பாளிகளின் பட்டியல் படபடத்தது ! உள்ளே நுழைந்த முதல் கணத்தில் எனக்குத் தோன்றிய முதல் எண்ணமானது - "ஹே...நான் பார்த்து மலைத்த புத்தகவிழா தானா இது ? அந்தப் பரபரப்பும், ஜனப்பிரவாகமும் ரொம்பவே குறைகிறதே !!" என்பதே ! 2008 அல்லது 2009 வாக்கில் ஒரு ஒற்றை நாள்குட்டி விசிட் அடித்திருந்த போது கூட ஜே ஜே வென்ற கூட்டத்தைப் பார்த்த நினைவிருந்தது ! அதற்கும் தற்போதைய நடைமுறைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு மெகா குறைபாடு அப்பட்டமாய்த் தெரிந்தது ! உலகெங்கும் வாசிப்புகள் குன்றிடுவதும், அதன் பலனாய் இத்தகைய தொய்வு நிகழ்வதும் தெரிந்த செய்தியே என்றாலுமே, அத்தனை நேருக்கு நேராய்ப் பார்ப்பதன் தாக்கமே வேறாக உள்ளது ! 'என்னமோ போடா மாதவா !' என்றபடிக்கே நமது அப்பாயிண்ட்மெண்ட் டயரியைப் பார்க்க, புதியதொரு பிரான்க்கோ-பெல்ஜியப் பதிப்பகம் முதலில் இருந்தது ! 
அவர்களைத் தேடிப் பிடித்துச் சென்ற போது அங்கே ஒரு அழகான தோட்டம் போலொரு அமைப்பில் ஸ்டால் இருப்பதைக் காண முடிந்தது ! இப்போதெல்லாம் இது போன்ற சர்வதேச விழாக்களில் ஸ்டால் வடிவமைப்புகளுக்கே ஏகமாய் ஒவ்வொரு  பதிப்பகமும் செலவிடுவதையும், இதெற்கென இப்போதெல்லாம் நிறுவனங்கள் செயல்படுவதையும் பார்க்க முடிகிறது ! "நாலு ரேக்கை பார்சல் பண்ணினோமா ; நாலு பேனரைப் போட்டோமா - ஸ்டாலுக்கான ஏற்பாடுகள் முடிஞ்சது " என்ற நமது பாலிசியை நினைத்துக் கொண்டேன் ; சிப்பு சிப்பாய் வந்தது ! கொஞ்சம் சிறுவர் இதழ்கள் ; கொஞ்சம் காமிக்ஸ் ; கொஞ்சம் activity books என்று அவர்களது ஸ்டாலின் முகப்பில் மாதிரிகள் அழகாய்க் காட்சி தர, அவற்றை புரட்டிக் கொண்டே - நாம் சந்திக்க வேண்டிய பெண்மணி யாராக இருக்குமோ ? என்று நோட்டம் விட்டேன் ! இருந்த நாலு பேருமே பிசியாக இருக்க, நானாகச் சென்று விசிட்டிங் கார்டை நீட்ட - ஒரு சின்னப் பெண் புன்னகையோடு நம்மை வரவேற்று அமரச் செய்தார் ! "ஆத்தாடியோவ்...தப்பிச்சேன்..பாட்டிம்மா யாரும்  நமது அக்கவுண்ட்டை கையாளவில்லை !" என்று உள்ளுக்குள் ஒரு ஜாக்கிரதையுணர்வு சந்தோஷப்பட்டுக் கொண்டது !

இந்த நிறுவனம் அத்தனை பெரிதுமல்ல ; புராதனமானதுமல்ல - so பெரிதாயொரு ஹிட் தொடரோ / நாயகரோ இவர்கள் வசம் இப்போதுவரையிலும் கிடையாது ! ஆனால் வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்க்கும் வேகம் இவர்களிடம் இருப்பதை இவர்களது கேட்லாக்கை பார்த்த போதே அறிந்திருந்தேன் ! In fact அவர்களாகவே நம்மைத் தொடர்பு கொண்டு கிட்டத்தட்ட ஓராண்டாய் மாதிரிகளை அனுப்பி வருகின்றனர் ! அவற்றுள் 2 ஆல்பங்களை மட்டும் இன்னும் கொஞ்சம் விரிவாய் அலசிட்டால் தேவலாம் என்ற எண்ணம் இருந்தது என்னுள் ; ஆனால் மாமூலான பணிகளுக்கு மத்தியில் மறந்தே போயிருந்தேன் ! சரி, நேரில் சந்திக்கும் சமயம் பார்த்துக் கொள்ளலாம் எனநினைத்திருந்தேன் ! பேசுவதை குறிப்பு எடுத்துக் கொள்ளச் சொல்லி ஜுனியரிடம் சொல்லிவிட்டு நம்மைப் பற்றி கொஞ்சம் விரிவாய்ச் சொல்லிய கையோடு, நமது சமீப மாதிரிகளையும் அந்த யுவதியிடம் காட்டிக் கொண்டிருந்தேன். ஜுனியர் ஜாலியாக கையைக் கட்டிக்க கொண்டு அமர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து - "நோட்ஸ் எடுக்கச் சொன்னேனிலே ?"  என்று கண்களால் ஜாடை காட்ட - சிம்பிளாய் தனது செல்போனை உயர்த்திக் காட்டினார் - அங்கே voice recorder ஓடிக் கொண்டிருந்தது ! "ச்சை..எனக்கு இந்த டெக்னாலஜியே புடிக்காது !' என்று உம்மணாமூஞ்சி smurf போல பல்ப் வாங்கிய என் முகம் போனது !! அந்தப் பெண்ணோ - இரு ஆல்பங்களையுமே எடுத்து என் முன்னே போட்டு - இரண்டுக்குமே கதைச் சுருக்கங்களை ரம்யமாய்ச் சொன்னார் ! இரண்டுமே வன்மேற்கின் களங்கள் தான் என்றாலுமே - இரண்டுமே கிராபிக் நாவல்கள் என்று சொல்லலாம் ! முதலாவதன் artwork -ஐ முழுவதுமாய்ப் பார்த்த பொழுது நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டுவிட்டது !! வர்ணங்களிலும், சித்திரங்களிலும் ஒரு ருத்ரதாண்டவமே நடத்தியுள்ளனர் அந்த டீம் ! இரண்டாவது ஆல்பமோ நமது "க்ரீன் மேனர் " யுக்தியைக் கையில் எடுத்திருப்பது போல தோன்றியது - செமி கார்ட்டூன் சித்திர பாணியோடு ஒரு வித்தியாசமான கதை சொன்ன  விதத்தில் ! இந்த ஆல்பத்தின் கிளைமாக்ஸை அந்தப் பெண் விவரித்த போதே எனக்குள் "approved " என்ற சாப்பா குத்திய உணர்வு மேலோங்கியது ! ஜுனியரும் பலமாய்த் தலையாட்ட - இந்த 2 ஆல்பங்களையும் நாங்கள் வெளியிடுகிறோம் உறுதியாய் - ஊருக்குப் போய் மேற்கொண்டு விவரங்களை மின்னஞ்சல் வாயிலாய்ப் பேசிக் கொள்ளலாம் என்றபடிக்கு விடை பெற்றேன் ! வெளியே வந்த நொடியே - "ரெண்டு கதையையும்  2018 -லே போடுறோமலே ?" என்று ஜுனியர் கேள்வி கேட்க - நான் மலங்க மலங்க முழித்தேன் ! ஏற்கனவே அட்டவணை சகலமும் தயார் என்ற நிலையில் - இவற்றை எதற்குப் பதிலாய் எங்கே நுழைப்பது என்று தெரியாமல் நான் முழிப்பதை மெதுவாய் சொல்லி வைத்தேன் ! "என்னமோ பண்ணிக்கோங்க - ஆனாக்கா இவற்றை வெளியிட்ட தீரணும்" என்றபடிக்கு நடையைக் கட்ட - "ரைட்டு...பாத்துப்போம் !" என்று சொல்லிக் கொண்டேன்  !
அடுத்த சந்திப்புக்கு 45 நிமிடங்கள் அவகாசம் இருந்ததால் புதிதாய் காமிக்ஸ் பதிப்பகங்களைத் தேடி புறப்பட்டோம் ! "அட..என்ன பொல்லாத பிரான்க்கோ-பெல்ஜிய கதைகள் ? எங்களிடம் இல்லாத திறமைகளா ?" என்றபடிக்கே ஒரு மெகா ஆசிய நாட்டு காமிக்ஸ் ஸ்டால் கண்ணில்பட - உள்ளே நுழைந்து கார்டை நீட்டினேன் ! ஆங்கிலம் பேசத் தெரியா படைப்பாளிகள் என்பதால், அவர்களது தேசத்து பதிப்பகக் கூட்டமைப்பின் குடையின் கீழ் ஒருங்கிணைந்து வந்திருந்தனர். ஆங்கிலம் / ஜெர்மானிய மொழிகள் தெரிந்த இளம் பெண்கள் -மொழிபெயர்ப்புக்கு ஒத்தாசை புரிந்திட  ; விருந்தினரை டீ ; காபி ;  கோக் என்று கொடுத்து உபசரிக்க இன்னொரு அணி -  என்று அந்த விசாலமான அரங்கிலுமே no பாட்டீஸ் ! நாலைந்து பதிப்பகங்களின்  பெயர் பலகைகள் கண்ணில்பட்டன - ஆனால் என் பார்வையோ, அங்கே ஒட்டப்பட்டிருந்ததொரு கார்ட்டூன் கதையின் போஸ்டர் மீதே லயித்து நின்றது ! அவர்களது  கிழக்காசிய ஸ்டைலில் அல்லாது - பிராங்கோ-பெல்ஜிய பாணியில் ஓவியங்கள் இருப்பது போல எனக்குத் தோன்ற - அதனை வெளியிடும் நிறுவனத்தோடு பேசிட இயலுமா ? என்று மொழிபெயர்க்கும் அழகுப் பெண்களிடம் வினவினேன் ! 'கிச்சாங்-முச்சாங்' என்று அவர்கள் பாஷையில் நீட்டி முழக்கி என்னவோ பேச, ஒரு தாத்தா இடுங்கிய விழிகளோடு நெருங்கி வந்து அமர்ந்தார் - முகம் நிறைய புன்னகையோடு ! நான் அந்த கார்ட்டூன் போஸ்டர் பற்றிக் கேட்க - அந்தப் பெண் மறுபடியும் ஒரு பாட்டம் பேசினார் ! தாத்தா - "இல்லை ; இல்லை" என்பது போல ஏதோ பதில் சொல்ல - எனக்கோ தூர்தர்ஷனில் சப்-டைட்டில்ஸ் இல்லாமல் போஜ்பூரி திரைப்படத்தைப் பார்த்தது மாதிரியே ஒரு பீலிங்கு ! இறுதியில் தான் தெரிந்தது - தாத்தாவின் படைப்பல்ல அந்த கார்ட்டூன் ; அவர் வேறு மாதிரியான சீரியஸ் படைப்பாளி என்று ! நாம் தான் கார்ட்டூன் ; லாரிடூன் ; பசுட்டூன் என்று சகல genre-களுக்குள்ளும் தலைநுழைக்க முற்படுவோராயிற்றே - "உங்களின் படைப்புகளை பார்க்கலாமா சார் ?" என்று கேட்டு வைத்தேன் ! மிகுந்த சந்தோஷத்துடன் அவரது கையிலிருந்த ஒரு கற்றைப் பக்கங்களை என்னிடம் தந்தார் ! சீன முகங்கள் ; சீன கதையோட்டம் என இருந்தாலுமே அந்தச் சித்திரங்களில் ஒரு வசீகரம் இருப்பதை உணர முடிந்தது ! "ஒரு பூ  மலர்ந்த நொடியில் ஒரு பறவை கானம் பாடியது !"  என்ற கதையின் தலைப்பைப் படித்த போது  எனது மையல் இன்னமும் அதிகமானது ! மெதுவாய் அந்தக் கதையின் பின்புலம் பற்றி, அந்தப் படைப்பின் பின்னணி பற்றி இயன்ற அளவிற்குத் தெரிந்து கொள்ள முயற்சித்தேன் ! எனது கேள்விகள், நீண்டு கொண்டே போகப் போக  - மொழிபெயர்க்கும் பெண்ணின் சிரிப்பு சுருங்கிக் கொண்டே போவதை உணர முடிந்தது ! "இவனுக்கு  மெய்யாலுமே தாத்தாவிடம் கேட்க இதனை கேள்விகள் உண்டு தானா ? - இல்லாங்காட்டி நம்ம கிட்டே  கடலை போடுவதற்காக குடலை உருவுகிறானோ ?"  என்று நினைத்ததோ என்னவோ - "மேற்கொண்டு விபரங்களை மின்னஞ்சலில் அனுப்புவாராம் !" என்று சொல்லி விட்டு எழுந்துவிட்டார் !  வேறு வழியின்றி நானும் புறப்பட - முதியவர் தந்திருந்த சித்திரங்கள் எங்களது பைக்குள் பத்திரமாய் அடைக்கலம் புகுந்திருந்தது ! பாருங்களேன் - அவரது ஜாலத்தின் ஒரு சிறு மாதிரியை !
வெளியே வந்த போது மங்கு மங்கென்று மண்டையைப் பிறாண்டிக் கொள்ளலாம் போல் தோன்றியது - தற்செயலாய் சந்தித்ததொரு படைப்பாளியின் கைவண்ணத்தை முழுமையாய் ரசிக்கும் நாளொன்று புலருமா ? என்ற ஆதங்கத்தில் ! அதற்குள் இன்னொரு மொழிபெயர்க்கும் பெண் அருகில் வந்து - "நீங்கள் விசாரித்த அந்த கார்ட்டூன் கதையின் பதிப்பகப்  பிரதிநிதி இவர் தான் " என்று ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியைச் சுட்டிக் காட்டினார் ! அவர் முன்னே போய் கடைவிரித்து - "இன்ன மாதிரி..இன்ன மாதிரி ஊர்லே இருந்து வர்றோம் ; ஏற்கனவே இன்ன மாதிரி இன்னமாதிரி கதைகள் வெளியிடுறோம்  ; உங்க கார்ட்டூன் போஸ்டர் பார்த்து இன்ன மாதிரி, இன்ன மாதிரி விபரம் தெரிஞ்சிட்டுப் போலாம்னு வந்தோம் !" என்று சொல்லி வைத்தேன் ! அவருக்கே ஆங்கிலம் தெரிந்திருந்தபடியால் - பாதியில் கழற்றிக் கொண்டு கிளம்பிய அம்மணியை மறுபடியும் கூப்பிடும் அவசியமில்லாது போனது ! நான் செய்த புண்ணியமோ ; அவர் செய்த புண்ணியமோ !!  அவரும் அந்த ஆல்பங்களை எடுத்துப் போட்டு படு ஆர்வமாய் கதை சொன்னார் ! ஒன்று மட்டும் நிச்சயம் - வெள்ளியும், சனியும் சிறுபிள்ளைகளுக்குப் போல எங்களுக்குச் சொல்லப்பட்ட கதைகள் ஒவ்வொன்றுக்கும், ஒரு கவளம் சோறை மட்டுமே விழுங்கியிருந்தாலே, இந்நேரத்துக்கு நானும், ஜுனியரும் பகாசுரர்கள் சைசுக்கு வீங்கி இருக்க வேண்டும் ! எத்தனை பொறுமையாய் ; எத்தனை நயமாய் ஒவ்வொரு ஆல்பத்துக்கும் ஒரு கதை பின்னணியும், சுருக்கமும் சொல்கிறார்களடா சாமி !!! என்னவொரு ஞாபகத் திறன் ;ஆற்றல் !!

ஆனால் அந்த கார்ட்டூன் நாயகனின் கதைக் களம் எனக்கு அத்தனை சுகப்படவில்லை  என்பதால் - "போய் யோசிச்சு கடுதாசி போடறேன் !" என்று சொல்லி விட்டு கிளம்பினோம் ! அடுத்த சந்திப்புக்கு நேரமும் ஆகியிருந்தால் ஓட்டமும், நடையாய் அந்த ஜெர்மானிய பதிப்பகத்தில் ஆஜரானோம் ! அவர்களோ ஒரு பெரும் குழுமம் ; ஏகமான வெளியீடுகளின் மத்தியில் சன்னமாய் காமிக்ஸிலும் கால்பதிக்கும்  ஈடுபாட்டோடு ! பொதுவாய் இது போன்ற "காமிக்ஸ்சும் போடுவோர்" சங்கத்தின் மீது எனக்குப் பெரிதாயொரு ஈடுபாடு எழுவதில்லை - simply becos பத்தோடு பதினொன்றாய் காமிக்ஸ் வெளியிடும் நிறுவனங்களிடம் அதற்குத் தேவையான பொறுமை பெரும்பாலும் இருப்பதில்லை ! And இந்த நிறுவனமும் எனது அபிப்பிராயத்துக்கு வலு சேர்ப்பது போலவே இருந்தது ! பள்ளிக் கல்வி சார்ந்த புக்குகள் ; CD க்கள் என்று எக்கச்சக்கமாய் அவர்கள் தயாரித்து வருவதால் - அவற்றின் விற்பனை சார்ந்த மேனேஜர்கள் மாத்திரமே அங்கே புத்தக விழாவிற்கு வருகை தந்திருந்தனர் ! காமிக்ஸ் செக்ஷனின் நிர்வாகியோ தலைமையகத்தில் தான்இருக்கிறார்  என்றும், பிராங்க்பர்ட் வர தோதுப் படவில்லை என்றும் ;   ஈ-மெயிலில் தொடர்பு கொள்ளப் பாருங்களேன்என்றும் சொன்னார்கள் !  அட..போங்க சாமிகளா ! உங்களுக்கே ஆர்வம் இல்லாத பட்சத்தில் நாங்களாய் வெறுமனே கையைக் கையை வீசி என்ன ஆகப் போகிறதென்று தீர்மானித்து நடையைக் கட்டினோம் !

நண்பகலுக்கே மக்களுக்கு பசி பிறாண்டத் துவங்கி விடுமோ - என்னவோ அதற்குள்ளாகவே பாதி பேர் வெளியரங்கிலிருந்த வெவ்வேறு உணவகங்களில் செம கட்டு கட்டிக் கொண்டிருந்தனர் ! புரட்டாசியும் அதுவுமாய் - புலாலுக்கு நோ சொல்லி நிற்பவனை எத்தனை ரூபங்களில் கொடுமைப்படுத்த முடியுமோ - அத்தனை விதங்களில் படுத்திப் பார்த்துக் கொண்டிருந்தனர்  ! பாம்பு, பல்லி , தேள் தவிர்த்து பாக்கி விலங்குகள் ; பறவைகள் ; மீனினங்கள் அங்கே படையலாகியிருக்க, நட்ட நடுவில் ஒரு ராட்சச Asterix உருவம் பலூனாகி கம்பீரமாய் நின்றது !
சிக்கிய சாப்பாட்டை விழுங்கிய கையோடு திரும்பிய போது நமது பவுன்சர் நிறுவனத்துடனான சந்திப்பு காத்திருந்தது ! ஆர்வமாய் பவுன்சரின் புது ஆல்பங்களைக் காட்டியவர் - அவற்றை முயற்சிக்க ஆர்வம் கொண்டிருப்போமா ? என்று கேட்டார் ! ஆனால் அவருக்கே அந்த புது ஆல்பங்களின் கதைக்களங்கள் ரொம்பவே அடல்ட்ஸ் ஒன்லி ரேஞ்சில் இருப்பதும் ,அதீத விரசங்களை சென்சார் செய்திட சென்றமுறையே நாம்  நிறையவே சிரமப்பட்டதும் நினைவிருந்ததால் - "இதுக்கு நீங்க செரிப்படமாடீங்க !" என்று அவரே தீர்ப்பும் சொல்லி விட்டார் ! அப்புறமாய் The Incals ; Metabarons போன்ற அவர்களது bestsellers science - fiction கதைகளுக்குள் நமக்கு ஆர்வமிருக்கிறதாவென்று கணிக்க முயன்றார் ! வழக்கம் போலவே - Maybe after awhile !" என்று மழுப்பலாய் நான் பதில் சொல்லி வைத்தேன் ! அப்போது கண்ணில் பட்டது ஒரு படு வித்தியாசமான ஹாரர் கிராபிக் நாவல் ! அட்டகாச சித்திரங்கள் ; மிரட்டலான கதை பாணி என்று ஓடும் இந்த ஆல்பத்தை பார்த்த கணமே எனக்கு கால் கட்டைவிரல் ; மட்டைவிரல் என்று சகலத்திலும் நமைச்சல் ஏற்பட துவங்கிவிட்டது ! "அட..போங்கப்பா..கோட்டை அழிச்சிட்டு முதல்லேர்ந்து புரோட்டா சாப்பிடுவோம் ! என்னாலே முடிலே !" என்று கையைத்  தூக்கி விடலாம் போலிருந்தது ! கிட்டத்தட்ட 50 நாட்களாய் நான் ஊரில் போட்ட திட்டங்களில் முக்காலே மூன்று வீசத்தை மறு பரிசீலனை செய்தாலென்னவென்று தோன்றியது !! ஒரு மாதிரியாய் அவர்களிடம் அந்த ஆல்பத்துக்கு காண்டிராக்ட் அனுப்பிடக் கோரி விட்டு அடுத்த சந்திப்புக்கு ஆயத்தமான போது - எனது இந்த மண்டை குடைச்சலுக்கு நிச்சயமாய் சீக்கிரமொரு  விடிவுகாலம் இருக்கப் போவதில்லை என்று மட்டும் புரிந்தது ! Simply becos - காத்திருந்த புதுப் பதிப்பகத்தின் கதைக் கிட்டங்கி சோழர் நெற்களஞ்சியதை விடவும் பெரிதாய்த் தென்பட்டது !

காத்திருந்த புதுப் பதிப்பகத்தோடு நிறைய மின்னஞ்சல் பரிமாற்றங்கள் நடந்திருந்தும், வண்டி இம்மி கூட அசைந்து கொடுத்திருக்கவில்லை ! செம பிஸியான அவர்கள்  -ஆடிக்கொரு பதில், அமாவாசைக்கொரு மின்னஞ்சல் என்று செயல்பட்டு வந்ததால் பரிமாற்றங்களில் ஒரு தொய்வு தொடர்ந்திடவே செய்தது ! நேரில் சந்திக்கும் போது "அய்யா...சாமி...தேவுடு....சேட்டா...ப்ரோ... ஜி...நைனாகாரு " என்று ஏதேனுமொரு பாஷையில் டோட்டலாய் சரணாகதியாகிடுவது என்று ஊரிலேயே தீர்மானித்து ரிகர்சல் பார்க்காத குறைதான் ! ஆனாலும் ஜுனியரைக் கூட வைத்துக் கொண்டு கெத்தான அந்த "சூனா.பானா." வேஷத்தை விட்டுக் கொடுக்க மனம் ஒப்பவில்லை ! ஒரு மாதிரியாய் அவர் முன்னே சந்திப்பின் நேரத்துக்கு டாணென்று போய் நிற்க - "நீர் தான் அந்த கட்டபொம்மனோ ?" என்ற மாதிரியொரு பார்வை பார்த்தார் ! ஆனால் இது மாதிரியானஜாக்சன் துரைகள் தான் நமக்கு ஏகப்பட்ட நாட்களாய்ப் பரிச்சயம் அன்றோ - சத்தமின்றி நமது சமீபத்தைய hardcover இதழ்களைத் தூக்கி அவர் முன்னே அடுக்கினேன் ! 'செங்கல்கட்டிகளைப் பெட்டிக்குள் தூக்கி அடுக்கி வந்தது போல, பிசாசாய்க் கனக்கும் இவை அவசியம் தானா ?' என்று கேள்வியை முன்வைத்திருந்த ஜுனியரை ஓரக்கண்ணால் பார்த்து "எப்பூடி ?" என்பது போலொரு லுக் விட்டேன் ! ஜாக்க்ஸன் துறையோ நமது ட்யுராங்கோ ராப்பரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தது மாத்திரமன்றி - அட்டையில் நாம் செய்திருந்த நகாசு வேலைகளைத் தடவோ தடவென்று தடவி, ரசித்துக் கொண்டிருந்தார் ! 'இது...இது..இதைத் தான் எதிர்பார்த்தேன்' என்றபடிக்கு நமது டிசைனர் பொன்னனுக்கு நமது  நிதிநிலைமை சீராகும் பொழுது, மரீனா கடற்கரையில் இல்லாவிட்டாலும், எங்கள் ஊர் ஊரணிக் கரையிலாவது ஒரு சின்ன சிலையை எழுப்புவது என்று தீர்மானித்தேன் ! "Is this Yves Swolf 's work ?" என்று கேட்டார் அவர் - ட்யுராங்கோவின் ஓவிய பாணியை அடையாளம் பார்த்தபடிக்கே ! எப்படா கோடைப் போடுவார் - நாம் ரோடைப் போடலாமென தார் சட்டிகளோடும், ரோடு ரோலர்களோடும் காத்திருந்த எனக்கு இவ்வளவு போதாதா ? Yes ..Yes ....in 1947 இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுச்சா...நாங்க 1972 -லே காமிக்ஸ் போட ஆரம்பிச்சுச்சா..." என்று நமது வரலாற்றை எடுத்து விட்டுக் கொண்டே மின்னும் மரணம் hardcover ; TEX - சர்வமும் நானே hardcover என்றுஅவர் முன்னே அடுக்கிக் கொண்டே இருந்தேன் ! "Oh Blueberry too ? My favorite hero !! "என்றபடிக்கே பிரகாசமான மனிதர் அதன் பின்னர் மொத்தமாய் மாறியே போனார் ! ஒவ்வொரு பதிப்பகப் பிரதிநிதியுமே காமிக்ஸ் சுவாசிக்கும் ஆர்வலரே என்பதை yet again உணர முடிந்தது - அந்த நொடியில் ! "ஆமாங்கோ....எங்க ஊரில் தட்டை மூக்கர் ஏக பிரபலம் எங்களது சின்ன வாசக வட்டத்தில்"  என்று சொல்லி வைத்தேன் ! அவர்பாட்டுக்கு தடி தடியான நமது புத்தகங்களைப் பார்த்துக் கொண்டு, நமது பேங்க் பேலன்ஸ்களுமே தடியாய் இருக்குமென்று நினைத்து விடக்கூடாதல்லவா ? ஒவ்வொரு ஆண்டும் பதிப்பகங்களுக்கு நாம் வழங்கிடும் ஆடிட்டரின் கையொப்பம் தாங்கிய விற்பனை படிவங்களைக் காட்டியபடிக்கே, நாசூக்காய் நமது வாசக வட்டம் பொடியன் பென்னியைப் போல அளவில் சிறிது ; ஆனால் வீரியத்தில் பெரிது   என்பதை விளக்கினேன் !   ஒரு மாதிரியாய் அவரது முகத்தில் புன்னகை தவளத் துவங்க - நாம் இத்தனை காலமாய் வீசிய கற்கள் திரும்பவும் சொட்டைத் தலையிலேயே விழுந்து வைக்காமல் - மாம்பழங்களாக  உருமாறிடும் வாய்ப்புகள் பிரகாசம் என்பது புரிந்தது ! இவரிடம் நாம் தேர்வு செய்திருந்ததோ - ஆக்ஷன் கதைகளும் ; ஒரு வித்தியாசமான கௌபாய் தொடரையும் ; சுவாரஸ் யமானதொரு one shot தனையும் !

சகலத்தையும் தொடரும் ஆண்டுக்குள் நுழைக்க நமது காமிக்ஸ் தேவர் மனிடோவுக்குக் கூட  சாத்தியமாகாது என்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது தான் ; ஆனால் மிட்டாய்க்கடைக்குள் ஒரு பச்சைப்புள்ளையை நுழைத்தால் என்ன நிகழுமோ - அதுவெல்லாமே இந்த ஏழு கழுதை வயதிலும் நிகழும் போது - நானொரு "அம்பியாய்" மாத்திரமே வேடிக்கை பார்க்க முடிகிறது - ரெமோக்களும், அன்னியன்களும் வெளிக்கிளம்பி அதகளம் செய்ய ஆரம்பிக்கும் போது ! அவரிடமிருந்து நாங்கள் விடைபெற்றுப் புறப்படும் சமயம் - ஜுனியரின் தோளைத் தட்டிக் கொடுத்து சின்னதொரு புன்னகையை பரிசாகத் தந்தார் ! எனக்கென்னவோ - "பாவமடாப்பா நீ !!" என்று சொல்லாமல் சொன்னது போல் தோன்றியது ! அதுவரையிலும் மீசையை வருடிக் கொண்டே சூனா.பானா. கெத்தை maintain செய்த எனக்கு, வெளியேறிய மறுகணம் வாயெல்லாம் பல் ; பல்லெல்லாம் வாய் !! தொடரும் நாட்களில் -  கட்டணங்கள் சார்ந்த பேச்சு வார்த்தைகள் ; அவை நமக்குக் கட்டுப்படியாகும் சாத்தியங்கள் ; அவற்றிற்குப் பணம் புரட்டும் படலங்கள் என ஏகப்பட்ட ஸ்பீடு பிரேக்கர்கள் உள்ளன என்பதை நான் உணராதில்லை ; ஆனால் அந்த நொடியில் ஆசைப்பட்ட பொம்மையை வாஞ்சையோடு தடவிப் பார்த்து, ஒரு முறை அணைத்துக் கொண்ட திருப்தி உள்ளுக்குள் விரவியது ! அந்த நொடிதான் இன்னமும் ஒரு விஷயமே உறைத்தது ! ஒவ்வொரு புதுப் படைப்பைப் பார்க்கும் அந்த நொடியிலும் மின்னலடிக்கும் iஇந்த ஜிலீர் உணர்வுகள் எனக்குள் தொடரும் வரையிலும் - இந்தத் தேடல்களும், ஓட்டங்களும் தொடர்கதையாகவே இருந்திடும் என்று !

காத்திருந்த மாலை சந்திப்போ ஒரு ஜாம்பவான் பதிப்பகத்தோடு ! இந்தாண்டின் ஏதோவொரு தருணத்தில் - ஒரு ஜாம்பவான் நாயகர் நம் அணிவகுப்பினில் இணையவிருக்கிறார் என்று இங்கே நான் பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம் ! அவர்களது பிரதிநிதியைச் சந்திக்க வேண்டியிருந்தது ! ஏற்கனவே அவர்களிடமிருந்து காண்ட்ராக்ட் கிட்டி, கையெழுத்தாகி ; பணமும் அனுப்பப்பட்டு விட்டதால் - மெய்யாகவே நெஞ்சைத் தூக்கிக் கொண்டே நடைபோட்டேன் ! வேளா வேளைக்கு அப்பன் போடும் வேஷங்களையெல்லாம் பார்த்து புள்ளையாண்டானுக்கு என்ன தோணுச்சோ ஆண்டவனுக்கே வெளிச்சம் ; ஆனால் எனது கோக்கு மாக்குத்தனங்களிலும் கொஞ்சம் லாஜிக் இல்லாதில்லை என்பதை புரிந்ததால் எவ்விதக் கேள்விகளும் எழவில்லை ! And அந்த புது ஹீரோ யாரென்று இங்கே சொல்லி விடுகிறேனே - மேற்கொண்டும் சஸ்பென்ஸை நீட்டிக் கொண்டே போகாமல் ?  அவர் நமக்கு முற்றிலும் புதியவரல்ல ; ஆனாலும் புதியவரே ! தெளிவாய்க் குழப்புகிறேனா ? காத்திருக்கும் அவரது முதல் ஆல்பத்தின் பெயரைச் சொல்கிறேன் - அப்புறம் பச்சைப் புள்ளையே அவரை அடையாளம் தெரிந்து கொள்ளும் : "என் பெயர் 007 !"

And இப்போது வெளிவர இருப்பதோ - நாம் ராணி காமிக்சிலும், நமது இதழ்களிலும் பார்த்துப் பழகிய black & வைட் புராதனைக் கதைகளல்ல ! வண்ணத்தில், செம ஹை-டெக்காக வெகு சமீபமாய் உருவாக்கப்பட்ட படைப்புகள் ! இந்தப் பதிவின் இறுதியில் கொஞ்சம் previews காட்டுகிறேன் - மெர்ஸெல் ஆகிப் போவீர்கள் !
Back to the meeting : அவர்களது பிரதிநிதி முன்சென்று நின்றால் - மாமூலான கோட்-சூட்டெல்லாம் அணியாது,  casual ஆக - நீண்ட கேசத்தைச் சுருட்டி ஒரு குட்டியான ponytail போட்டுக் கொண்டிருந்ததொரு 40 வயது மனுஷன் ஜாலியாய் கையை நீட்டினார் ! நமக்கும் இந்த கோட் சூட்டுக்குமே ஏழாம் பொருத்தம் என்பதால் நொடியில் எனக்கு அவரை ரொம்பவே பிடித்துப் போய் விட்டது ! ஏற்கனவே மின்னஞ்சலில் நல்ல புரிதல் ஏற்பட்டிருந்த போதிலும், அவரை நேரில் பார்க்கும்  போது, அவர் கண்களில் தெறித்த ஸ்நேஹம் இன்னமும் நட்பாக உணரச் செய்தது. நமது சமீபத்தைய சாம்பிள்கள் ; நமது திட்டமிடல்கள் என்று நிறைய நேரம், நிறைய பேசினோம் ! பொறுமையாய் சகலத்தையும் குறித்துக் கொண்டவர், அவ்வப்போது  ஜுனியரையும்  பேச்சு வார்த்தைகளில் இணைத்துக் கொள்ளவும் நேரம் எடுத்துக் கொண்டார் ! அவர்களது புதுப் படைப்புகள் ; காத்திருக்கும் புது இதழ்களின் previews என தனது ஐபேடில் ஒரு குட்டி பயாஸ்கோப் படத்தையே ஒட்டிக் காட்டினார் ! எத்தனையைப் பார்த்தாலும், அத்தனையையும் சாப்பிட்டு விட முடியாதா ? என்று அங்கலாய்ப்பு எடுத்துத் திரியும் பகாசுரன் போல எனது மண்டைக்குள்ளும், வயிற்றுக்குள்ளும் பசி அலாரம் ஒலிக்கத் துவங்கியிருந்தது இந்நேரத்துக்கு ! 'ரைட்டு...சைத்தான் சைக்கிள்லே ஏறப் போகுது"  என்பது போலொரு லுக்கை ஜுனியர் வீசினாலும், உள்ளுக்குள் இந்தப் புதுக் சரக்குகள் அவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது அப்பட்டமாய்த் தெரிந்தது !

ஒரு மாதிரியாய் மணி மாலை ஐந்தை நெருங்கிட, விடைபெற்றோம் - இதற்கு மேலிருந்தால் கூர்க்காவோடு தான் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும் என்பதால் ! நாள் முழுக்க நமது  முக்கிய சந்திப்புகளுக்கு இடையிடையே சிறுசிறு புதுப் பதிப்பகங்கள் ; சில காலெண்டர் தயாரிப்பாளர்கள் என நிறைய பேரின் ஸ்டால் கதவுகளையும் தட்டியிருந்தோம் என்பதால் குறுக்கெல்லாம் வலி பின்னியது ! உள்ளங்கால் விண் விண்ணென்று தெறித்தது ! ஆனால் மனசெல்லாம் மத்தாப்பூ தான் ! நில்லாமல் ஓடிக் கொண்டே செல்லும் படைப்பாளிகளின் இன்றைய ஓட்டத்தை ரசித்த சந்தோஷம் ; அவற்றுள் நமக்கு ஏற்புடைய கதைகளைத் தேர்வு செய்யக் கிட்டயிருந்த வாய்ப்புகள் ; ஜுனியரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த திருப்தி என்று ரூமுக்குச் சென்று கட்டையைக் கிடத்திய போது மனதெல்லாம் நிறைந்து கிடந்தது ! ரெண்டு வாழைப்பழத்தைப் போட்டபடிக்கே கண்ணை மூடிய போது உலகமே ஒரு அழகான இடமாய்க் காட்சி தந்தது ! நிதிச் சிரமங்கள் ; காத்திருக்கும் தீபாவளி போனஸ் ; திருமண ஏற்பாடுகள்  - என எதுவுமே அந்த வேளையின் புளகாங்கிதத்தை தொந்தரவு செய்திடவில்லை ! காமிக்ஸ் எனும் அதிசய உலகினுள் மட்டுமே சாத்தியமாகும் அந்த அசாத்திய சந்தோஷத்தை அசை போட்டபடிக்கே தூங்கிப் போனேன் - மறு நாளைய  முக்கிய சந்திப்புகளும் காத்துள்ளன என்ற புரிதலோடு ! தொடர்ந்த இன்னமுமொரு அற்புத தினத்தைப் பற்றி, அடுத்த பதிவில் !

ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம் guys ! பட்ஜெட் எனும் சிரமங்களும், அவை சார்ந்த நெகட்டிவ் விமர்சனங்களும் மட்டும் நமக்குத் தடைகளாக இல்லாதிருப்பின் - ஒரு அலிபாபா புதையல் குகைக்குள்ளே அட்டகாசமாய் ஒரு பிக்நிக் போவது சாத்தியமே ! முடிலே...கண்முன்னே நர்த்தனமாடிடும் இந்த அசாத்தியங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் நிற்கும் போது - தாரை தாரையாய் வடியும் ஜொள்ளைக் கட்டுப்படுத்தவே முடிலே ! எத்தனை கோடி இன்பம் வைத்தாயோ இறைவா ??!!!!

இன்று ஊர் திரும்பும் படலம் என்பதால் இடைப்பட்ட சந்தர்ப்பங்களில் பின்னூட்டங்களுக்குள் புகுந்திட முயற்சிப்பேன் ! So ஜாலியாய் இந்த ஞாயிறை ஒட்டிவிடலாமென்ற நம்பிக்கையோடு விடை பெறுகிறேன் ! அப்புறம்  கால் சராயை ஒட்டுமொத்தமாய் உருவி, அருணாக்கொடியை  ஆட்டையைப் போடும் யுக்திகளை இங்குள்ள வில்லங்கக் கிழவிகள் படித்தறிந்திருக்கா பட்சத்தில், நாளைய பொழுதை நம்மூரில் கழித்திடுவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது ! நம்பிக்கை தானே வாழ்க்கையே guys ? Bye for now ! Have a wonderful Sunday !