Powered By Blogger

Friday, March 31, 2017

மார்ச் மங்காத்தா !

ஏப்ரல் இதழ்களை இப்போது ஆன்லைனிலும் வாங்கிடலாம் ! இங்கே க்ளிக் பண்ணுங்களேன் - ப்ளீஸ் :http://lioncomics.in/monthly-packs/351-april-2017-pack.html

"பைண்டிங்கிலேர்ந்து புக் ஏத்திட்டு வர ஆட்டோ போயாச்சாப்பா மைதீன்  ??

"டெக்ஸ் வில்லர் புக் இப்போ தான் மடிச்சிகிட்டே இருக்காங்க அண்ணாச்சி !"

"இப்போ வரைக்கும் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாங்களாம் ?? இன்னிக்கு தான் புக் வேணும்னு தெரியும்லே ??"

"அது வந்து நாம நேத்திக்கு ராத்திரிலே தானே பிரிண்டிங்கே முடிச்சு கொடுத்தோம் ! நீங்க கரெக்ஷன் பாத்து கொடுத்ததே நேத்திக்கு சாயந்திரம் தானே ?!"

"ஆங்...ஆமால்லே ? செரி..செரி...எத்தனை மணிக்கு ரெடியாகுமாம் ?"

"12 மணிக்கு வாங்கிடலாம் அண்ணாச்சி ! "

""இந்த மாசத்து இலவச இணைப்பு ரெடியா இருக்குலே ?"

"ம்ம்...வந்து...அது ஒரு மணி நேரத்திலே ரெடியாகிடும்  ; ஆனா சின்ன சிக்கல் !"

" ஸ்ஸ்ஸ்...என்ன சிக்கல் ? "

"அது இந்த மாசக் கூரியர் டப்பாக்குள்ளே நுழைய மாட்டேங்குது !!"

"நாசமாப் போச்சு !! அதை எப்படி கவனிக்காமே விட்டீங்க ?"

"அந்த இலவச இணைப்பு என்னான்னு நேத்திக்கு தானே சொன்னீங்க அண்ணாச்சி ; டப்பா போன வாரமே செய்ய குடுத்திட்டோம் !"

"என்னத்தையாச்சும் சொல்லிக்கிட்டே இரு !! இப்போ புதுசா என்ன பண்றது ???"

"'அதையே'  ஒண்ணுக்கு ரெண்டா மடிச்சு உள்ளே நுழைச்சுடலாம் !"

"ஐயையோ...சுருக்கு விழுந்திட்டா  அசிங்கமா இருக்கும் ! பெரிய சைசுக்கு டப்பா உடனே ஏதாச்சும் கேட்டு பாக்க முடியுமா ?"

"இல்லே அண்ணாச்சி...குறைஞ்சது 3  நாளாச்சும்  டயம் கேப்பாங்க !!"

"செரி...டிசைனிங் கோகிலாவை வரச்  சொல்லு...!! "இது" தான் புது இணைப்பு ! ஒரே மணி நேரத்திலே ரெடி பண்றோம் ; பின்னாடியே பிராசஸிங் - பிரின்டிங் பண்றோம் ; மதியம் புக் வர்றதுக்குள்ளே "இது" ரெடியாகிடணும் !!"

ரைட்டு...சைத்தான் சைக்கிள்லே வருது-என்ற பீலிங்கோடு நம்மவர்கள் என்னைப் பார்த்துத் தலையாட்ட - தொடர்ந்த 3 மணி நேரங்கள் ஜெமினி சர்க்ஸுக்குப் போட்டியாக ஒரு களேபரத்தை அரங்கேற்றினோம் !!

"ஸ்டெல்லா ... வண்டி போயிடுச்சா - புக்கைத் தூக்க ?"

"வந்துக்கிட்டு இருக்கு சார் !"

"நாளைக்கு பேங்க் லீவு...சம்பளத்துக்கு பணம் டிரா பண்ணுனீங்களா ?"

"இனிமேல் தான் சார் !"

"பிரின்டிங் ரெடி பண்ணியாச்சா மைதீன் ?"

"இதோ ஷீட் உங்க டேபிள்லே இருக்கு !"

"மஞ்சள் இன்னும் கூட்டலாம்பா !! ஏன் அழுது வடியுது ??"

"ஆங் ..இப்போ தேவலை ! செரி..கொஞ்சம் லேசா காய விட்டுட்டு 'கட்' பண்ணுங்க !"

"வாசுகி...ஸ்டெல்லா...எல்லாருமே சீக்கிரமே சாப்ட்டிடுங்க...புக் வந்துட்டா அப்புறம் லேட் ஆகிடும் !"

சில பல மௌன மண்டையாட்டல்கள் !!

"ப்பாத்து.பாத்து...ஜெரெமியா புக்கைத் தனியா இருக்குங்க ! மறுப்பதிப்பை அந்த பக்கமா !!"

நமது வாடிக்கையான ஆட்டோ லோடு டீம் ஓசையின்றி சொன்னதைச் செய்கிறது !

"DTDC லே சொல்லிடீங்களா ? புக் வருதுன்னு ?!"

"சொல்லியாச்சு சார் !"

ST ஹெட் ஆபீஸ் கொண்டு வர சொன்னாங்களா ? பிராஞ்சுக்கா ? "

"ஹெட் ஆபீஸ் தான் சார் !"

"பார்சலுக்கு ரேட் கேட்டாச்சா ?"

"இனிமேல் தான் சார் !"

அலுவலக முன் அறையே கொஞ்ச நேரத்துக்கு சாரா சரக்கும் டேப் ஓட்டும் சத்தத்தோடு நிசப்தமாய்ப் பயணிக்கிறது !!

"கடைசியா வந்த சந்தா லிஸ்டை நாளைக்கு என்கிட்டே காட்டுங்க ; ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறையத் தெரியுது !"

"செரி சார் !"

"SUPER 6 சந்தா-லே ஏதும் மிஸ் ஆகிடாம பாத்துக்கோங்க !"

"பாத்தாச்சு சார் !"

"சென்னை ஆதிமூலகிருஷ்ணன் சாருக்கு "தாய விளையாட்டு" போன மாச பார்சல்லே வைக்காம விட்டுட்டீங்களாம் ! இந்தவாட்டி அதைச் சேர்த்து வைச்சிடுங்க  !"

"வைச்சாச்சு சார் !!"

"ஒரு 100 புக் சேர்ந்தாச்சுன்னா ஆட்டோவுக்கு சொல்லி கூரியர்லே கொண்டு போய் சேருங்க ! இங்கேயே பொழுதைக் கடத்திட்டு   இருக்காதீங்க !!  "

"ஆட்டோ வந்திட்டு இருக்கு அண்ணாச்சி ! இப்போ போய்டும் !"

எப்போது மதியம் கடந்து போனது ? ; எப்போது லேசான தூறல் போட்டது ? எப்போது மாலை புலர்ந்தது ? எப்போது இருள் கவிழ்ந்தது ? எதுவும் நம்மவர்களுக்கு இன்றைய பொழுதினில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன் !!

வணக்கம் நண்பர்களே, WELCOME TO YET ANOTHER EPISODE OF DESPATCH DAY MADNESS !!

ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும் நான் சூளுரைக்கத் தவறுவதில்லை ! "நாளைக்கே அடுத்த மாச புக்குகளை 'மட மட' ன்னு ரெடி பண்றோம் - 15 -ம் தேதிக்குள்ளாற முடிக்கிறோம் !! ஹாயாக காலாட்டிட்டே அடுத்த மாச டெஸ்பாட்ச் பாக்குறோம் !!" - என்று லூசுப் பயல் போல என்னிடம் நானே ஒப்பித்துக் கொள்வேன் ! ஆனால் ஏதேதோ காரணங்கள் இடையில் தலைதூக்கும் ; பணிகளில் ஏதேனும் ஒரு ஸ்பீட் பிரேக்கர் நிகழும் ;  இறுதி வாரத்தில் 'தாண்டுறா ராமா !  அட்றா ராமா ' என்று குட்டிக் கரணங்கள் மட்டுமே போடுவோம் !! அதிலும் இன்றைய கரணம் - ஷப்பா !! பாவம் நம்மவர்கள் !! 

காலையில் அரைத்தூக்கத்தில் கண்ணைத் திறக்கும் போதே - "ஆஹா...இன்னிக்கு டெஸ்பாட்ச் தினமாச்சே !!" என்ற அலாரம் தலைக்குள் ஒலித்தது ! திரும்பிப் படுத்து இன்னொரு ரவுண்ட்  சொப்பன லோகம் போகும் ஆசையை உதைத்துத் தள்ளி விட்டு ஆபீசுக்கு கிளம்பிய நேரமே மண்டைக்குள் ஒரு பட்சி சொன்னது - இன்றைய பொழுது மறை கழன்ற தினமாக இருக்குமென்று !! நாளைய தினம் உங்கள் கைகளில் புக் இல்லாது போனால் பூமி மாற்றிச் சுற்றப் போவதில்லை தான் ; விராட் கோலியும் - ஆஸ்திரேலிய ஊடகங்களும் 'பாய்-பாய்' ஆகித் தோள்களில் கை போட்டுக் கொள்ளப் போவதுமில்லை தான் !! ஆனால் மாதத்தின் முதல் தேதிக்கு உங்கள் கைகளில் புக்கை ஒப்படைக்கும் ஒரு சன்ன திருப்தியும் ; இவ்வார இறுதியை சுவாரஸ்யமாக்கும் வாய்ப்பைத் தவற விட வேண்டாமே என்ற ஆதங்கமுமே என் மண்டைக்குள் ஒரு  நட்டுவாக்காலியை நர்த்தனம் ஆடச் செய்துள்ளதென்று நினைக்கிறேன் !! And ஏதோ சஞ்சீவி  மலையைத் தோளில் சுமந்துவந்து சாகசம் செய்து விட்ட ஆஞ்சநேயராக எனக்கு நானே பில்டப் தந்து கொள்ளும் முயற்சியல்ல மேற்கண்ட வர்ணனை !! காமிக்ஸ் எனும் பித்தின் காரணமாய் நான் அடிக்கும் பல்டிகளுக்கொரு முகாந்திரமுள்ளது ! ஆனால் - "பென்னியா  ?" அது பெஞ்சமினுக்குப் பெரிப்பா பையனா  ? "என்று கேட்கும் நம்மவர்களும் இந்தக் குட்டிக் காரணங்களில் எத்தனை ஐக்கியமாகிடுகிறார்கள் ; மௌனமான அவர்களது சுழற்சி இல்லையேல் இந்தப் பயணமே லேது ! என்பதை மீண்டுமொருமுறை சிலாகிக்கவே இந்தப் பதிவு ! Trust me guys - மாதயிறுதியில் என்னிடம் பணியாற்றுபவர்களை ஆண்டவன் தான் ரட்சித்தாக வேண்டும் !! முகம் சுளிக்காது  எனது ஒவ்வொரு குரங்குக கூத்துக்கும் ஈடு கொடுக்கும் இந்த டீம் எனது அசாத்திய பலம் !! இதனில் ஒற்றைச் சிறு கண்ணி இல்லாது போனால் கூட நான் எங்கேனும் குப்புறக் கிடப்பேன் என்பது உறுதி !! 

Anyways - கூரியர் படலம் 100 % வெற்றி என்பதால் - நாளைய தினம் இதழ்கள் உங்களிடமிருக்கும் !! Happy Reading Folks !!

And தர தரவென்று காலை முதல் ஆபீசில் தரையைச் சுத்தம் செய்து வரும் நாக்காரைச் சன்னம் சன்னமாய்ச் சுருட்டி வாய்க்குள் திணித்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்படும் முன்பாக - இதோ MMS இதழின் அட்டைப்பட முதல் பார்வை !! ஓவியர் ஹெர்மன் தனது ராப்பர் டிசைனே அட்சர சுத்தமாய்ப் பயன்பாட்டில் இருந்திட வேண்டுமென்று சொல்லியிருந்ததால் - முன் & பின் அவரது டிசைனே - லேசான வர்ண மெருகூட்டலோடு  மட்டும் ! வழக்கம் போல hardcover ! வழக்கம் போல ஜிகினா வேலைகள் !! எல்லாம் வழக்கம் போலிருப்பினும், இந்தக் கதைக் களம் ரொம்பவே மாறுபட்டது ! "கவ்பாய் தொடரோ ?" என்ற எண்ணத்தில் அணுகினால் - nopes என்ற பதிலை உணர்வீர்கள் சீக்கிரமே ! "எதிர்காலத்து sci -fi ரகக் கதையோ ?"  என்ற எதிர்பார்ப்போடு பக்கங்களைப் புரட்டினால் - கழுதை மேல் சவாரி செய்யும், சவரம் காணா நாயகர்கள் - 'பிம்பிலிக்கா - பிலாக்கி ' சொல்வார்கள் !! " "செரி..ஏதோ ஒரு மெகா plot நோக்கிச் செல்லும் கதையோ ? " என்ற பில்டப்போடு புறப்பட்டால் - அந்தக் கதையோட்டம் உங்களை பார்த்து டாட்டா காட்டும் ஜாலியாக !! 

Guys : ஒற்றை வரி advice ! எது மாதிரியும் இல்லாப் புது மாதிரி இது !! 

Bye all !! See you around !!

P.S : ஏப்ரல் இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங்கும் ரெடி !! 

272 comments:

  1. சார் நன்றிகள் பல ..நண்பர்களுக்கும்...அட்டை இது வரை வந்ததிலே பெஸ்ட்டா இருக்கும் போல...கயித்தால ஸ்ட்ராங்கா கட்டியாச்சோ பக்கங்கள..

    ReplyDelete
  2. Cant wait to get my hands on Jeremiah!

    ReplyDelete
  3. இரவு வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  4. ஓவியர் ஹெர்மானின் படைப்பில் 3 பாக விருந்து, அதுவும் 'எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி கதைக்களத்தோடு'!

    அட்ராசக்கை! அட்ராசக்கை! அட்ராசக்கை!

    ReplyDelete
  5. ##"அது இந்த மாசக் கூரியர் டப்பாக்குள்ளே நுழைய மாட்டேங்குது !!"###

    ஆவல தூண்டி விடறீங்களே என்னவா இருக்கும் ???

    ReplyDelete
  6. // ஒற்றை வரி advice ! எது மாதிரியும் இல்லாப் புது மாதிரி இது !! //இவன் வேற மாதிரியா சார்?!

    ReplyDelete
  7. ////Anyways - கூரியர் படலம் 100 % வெற்றி என்பதால் - நாளைய தினம் இதழ்கள் உங்களிடமிருக்கும் !! Happy Reading Folks !!////

    மேற்கூறிய குதூகலச் செய்திக்கும், ஏப்ரல்-1ன் மகத்துவத்துக்கும் சம்மந்தம் இல்லாதவரை சரிதான்! ;)

    ReplyDelete
    Replies
    1. கிர்ர்ர்ர்ர்ர்ர். . . .!! குதூகலத்துல குண்டு வெக்கிறதே வேலையாப்போச்சு உங்களுக்கு..!!

      Delete
  8. உங்கள் பரபரப்பான அதிரடி கடைசி நேர டெஸ்பாட்ச் முறை உங்கள் அலுவலக குழுவினர் அனைவருக்கும் பழகி இருப்பது போல தோன்றினாலும் பாவம் தான் சார். அவர்கள். எனினும் எல்லாம் எங்கள் மீது எங்கள் காமிக்ஸ் நேசம் மீது கொண்ட மதிப்பு காரணம் என்பதால் நன்றி.

    ReplyDelete
  9. ###மாதத்தின் முதல் தேதிக்கு உங்கள் கைகளில் புக்கை ஒப்படைக்கும் ஒரு சன்ன திருப்தியும் ; இவ்வார இறுதியை சுவாரஸ்யமாக்கும் வாய்ப்பைத் தவற விட வேண்டாமே என்ற ஆதங்கமுமே ###

    உங்களின் இந்த அா்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாடுதான் காமிக்ஸ்சை இன்று வரை உயிா்ப்புடன் வைத்திருக்கிறது சாா்..

    ReplyDelete
  10. ஆஃபீசில் நடப்பதை நேரில் பார்த்த மாதிரியே இருந்தது சார் வசனங்கள்!! :-)

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியரின் பதிவில், பொறி பறக்கும் பதிவு இது. அற்புதம்.

      Delete
  11. ///
    "சென்னை ஆதிமூலகிருஷ்ணன் சாருக்கு "தாய விளையாட்டு" போன மாச பார்சல்லே வைக்காம விட்டுட்டீங்களாம் ! இந்தவாட்டி அதைச் சேர்த்து வைச்சிடுங்க !"///

    அப்பாடா..!! ஒருமாசமா தாயக்கட்டைகளை சட்டைப் பாக்கெட்டிலேயே வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்த நண்பர் ஆதி, ஒருவழியா நாளைக்கு விளையாடப்போறாரு..!! :-)

    ReplyDelete
    Replies
    1. @கண்ணன்,

      அதென்னவோ உண்மைதாங்க! வருடாந்திர லீவு விட்டால் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஊருக்குச் செல்வதுண்டு. குறைந்தது பத்து நாட்கள் நானும் தங்கிடுவேன். குடும்பத்தில் 3 பிள்ளைகள். (கூடுதலாக பக்கத்து வீட்டு பிள்ளைகளும் உண்டு) இந்த பிள்ளைகளை செல்போன், டேப்லட்டிலிருந்து விடுவித்து விதவிதமாய் விளையாட்டுகள் கண்டுபிடித்து ஆக்டிவாக வைத்துக்கொள்வதுதான் என் பணி. நாக்கார் தொங்கிவிடுவார்! ரெகுலரான கேரம், ஷட்டில்காக் தவிர பழங்கால பம்பரம், கோலி, ஆடுபுலி போன்றவற்றுக்கு மீள்வருகை தந்திருக்கிறேன். எட்டு வயசுதான் ஆகுது, பையன் நல்லா பம்பரம் விடுவான். இன்றைய தலைமுறை அல்லவா? இதெல்லாம் பத்தாதுனு 'நீங்களும் வெல்லலாம் ஒன் ருபீ' (விநாடிவினா), கதை சொல்லல் (நம் காமிக்ஸ் அல்லது சிறார் கதைகள்), டிரெஷர் ஹன்டிங் (வீட்டுக்குள்ளேயே ஒளித்துவைக்கப்பட்டுள்ள‌ ஒவ்வொரு குறிப்பாக வாசித்து, அடுத்த குறிப்பை எடுத்து கடைசியாக வீட்டுக்குள்ளேயே ஒளித்துவைக்கப்பட்டுள்ள ஒரு பொருளை கண்டுபிடிக்க வேண்டும். பயபுள்ளைகளை வாசிக்கச் செய்வதற்கு என்னெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. போன தடவை ஒரு வாண்டு அச்சச்சோ, நமக்கு வாசிக்கத் தெரியவில்லையே என முதல் முறையாக கவலைப்பட்டதோடில்லாமல், தீவிரமாகவும் முயன்றது) போன்ற‌ நவீன‌ விளையாட்டுகளையும் விளையாடுவதுண்டு. சென்றமுறை கிரான்டியராக ஏற்பாடுகள் செய்து பானை வாங்கிவந்து உறியடியெல்லாம் நடத்தப்பட்டது. எங்கயோ ஆரம்பித்து எங்கேயோ வந்துவிட்டேன். கொஞ்சம் சுயபுராணமாக இருந்தாலும், வாண்டுகள் நிறைய இருக்கும் நண்பர்களுக்கு உதவலாமே எனும் எண்ணத்தில் எழுதிவிட்டேன். பை தி வே, இந்த ஆண்டு லக்கி‍ ‍-டால்டன் சேஸிங் தாயவிளையாட்டும் நிகழ்ச்சி நிரலில் இருக்கும். :‍)))))))

      Delete
  12. வாத்தியாரே.! இம்புட்டு கஷ்டப்பட்டு எங்களுக்கு ஒன்னாம் தேதியே கிடைக்கிறமாதிரி செய்றீங்க ரொம்ப தாங்ஸ்பா.! என்று மெட்ராஸ் பாஸையில் சொல்லத்தோன்றுகிறது.

    அப்படியே லோக்கல் பாஸை டயலாக்கை படிப்பதற்கும் ரெடியானமாதிரியும் இருக்க.!

    ReplyDelete
  13. ///"பென்னியா ?" அது பெஞ்சமினுக்குப் பெரிப்பா பையனா ? "என்று கேட்கும் நம்மவர்களும் இந்தக் குட்டிக் காரணங்களில் எத்தனை ஐக்கியமாகிடுகிறார்கள் ; மௌனமான அவர்களது சுழற்சி இல்லையேல் இந்தப் பயணமே லேது ! என்பதை மீண்டுமொருமுறை சிலாகிக்கவே இந்தப் பதிவு !///

    வாசகர்கள் சார்பிலும் நம்மவர்களை பாராட்டுகிறோம்.

    அவர்கள் காமிக்ஸ் படிக்காததும் ஒருவகையில் நல்லதே..! ஏன்னு கேட்டிங்கன்னா, எங்களை மாதிரி ஆட்களை டெஸ்பாட்ச் பொறுப்பில் உட்கார வெச்சிங்கன்னா, உக்காந்து முழுசா படிச்சிட்டுதான் பேக்கிங்கையே ஆரம்பிப்போம். அதிலும் கதையும்ம் சித்திரங்களும் டாப்பாக இருக்கும் வேளைகளில் மறுவாசிப்பு வேற நடக்கும். அப்புறம் பேக்கிங் முடிஞ்சி, லோடு ஏத்தி ஹிஹி பிம்பிளிக்கி பிளாக்கிதான்..!! :-)

    ReplyDelete
    Replies
    1. மேச்சேரியாரே.!


      ஹாஹாஹாஹாஹா.............

      இப்படி டைமிங்க உங்களால் மட்டுமே யோசிக்க முடியும்.!!!!

      Delete
  14. எடிட்டர் சார் பதிவு அஞ்சல் தபால் மூலம் அனுப்பும் பார்சல் கிளம்பிவிட்டதா?
    எனது சந்தா பதிவு அஞ்சலில் வரும்....

    ReplyDelete
    Replies
    1. பதிவு அஞ்சல் எண் திங்கள் அன்று கிடைக்கும் என ஈமெயில் வந்துள்ளது.

      Delete
  15. Present sir..!!
    தங்களுக்கும்,மற்றும் நம் அலுவக பணியாள நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி என்கிற மிக,மிக சின்ன காணிக்கை ஏற்றுக்கொள்ளுங்கள்.
    மிகவும் லேசாகவும்,ஹாஸ்யமாகவும் தாங்கள் பதிவிட்டாலும்,நடைமுறையில் சந்திக்கும் சிரமங்கள் எப்படிப்பட்டவை என புரிகிறது.
    மீண்டும் ஒரு முறை நன்றி.

    ReplyDelete
  16. எரேமியா என்கிற பெயர் விவிலியத்தில் வரும் அழகான பெயர். அதனை ஜெரேமியா என்று கூட உச்சரிக்கலாம். ஜெரமயா என்ற பெயர் கொஞ்சம் இடிக்குது சார். மற்றபடி புதுவரவும் பூபாளம் இசைத்திடும் என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. நல்வரவு. மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. @ ஜான் சைமன் சார்!!!
      எடிட்டர் மிக கவனத்துடன் ஆராய்ந்தே இதனை கையாண்டிருக்கிறார் என தோன்றுகிறது சைமன் சார்...
      யு கே ஆங்கிலம்
      யு எஸ் ஆங்கிலம்
      ஹீப்ரூ
      ஸ்வீடிஷ்
      என அனைத்திலும் ‘’ ஜெரெமயா’’ என்றே உச்சரிக்கப்படுகிறது .

      Delete
    2. சென்னை புரசைவாக்கத்தில் ஜெரோமயா சாலை என்று உள்ளது.புகழ்பெற்றவர்கள் யாரேனும் இந்த பெயரில் உள்ளார்களா.?

      செனா அனா ! சார் உங்களுக்கு ஏதாவது தெரியுமா.????

      Delete
    3. இல்லை....மாடஸ்தி சார்.....என் பேரை பரணிதரன் தான் வச்சிருக்காங்க....:-)

      Delete
    4. @ MV SIR !!!!

      ஜான் ஜெரெமயா என்பவர் வேப்பேரி -புரசைவாக்கம் பகுதியில் 1760 -களில்வசித்து வந்த

      மிக பிரபலமான வழக்கறிஞர்...ஆம்...வழக்கறிஞரேதான்....இவர் பெயர்தான் அச்சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது...:)

      Delete
    5. அப்படீன்னா இன்னும் கொஞ்சநாள் கழிச்சு, மடிப்பாக்கத்தை மாடஸ்டிபாக்கம்னும், அங்கே ஒரு சாலைக்கு MV சாலைன்னும் பெயர் வைக்கப்போவது உறுதின்னு தெரியுது..!! :-)

      Delete
    6. தகவல்களுக்கு நன்றி செனா அனா.!


      மேச்சேரியாரே.!


      எனக்கு மாடஸ்டி மாதிரி வந்த இடம் தெரியாமல் இருந்த இடம் தெரியாம வாழனும்னு ஆசை.!

      Delete
  17. ///
    "செரி...டிசைனிங் கோகிலாவை வரச் சொல்லு...!! "இது" தான் புது இணைப்பு ! ஒரே மணி நேரத்திலே ரெடி பண்றோம் ; பின்னாடியே பிராசஸிங் - பிரின்டிங் பண்றோம் ; மதியம் புக் வர்றதுக்குள்ளே "இது" ரெடியாகிடணும் !!"///

    பொறுமையாக பார்த்து பார்த்து செய்த பலகாரத்தைவிட அவசரத்தில் கிண்டும் உப்புமா பலவேளைகளில் சுவையாக இருப்பதுண்டு.
    நாளைய சர்ப்ரைஸும் அப்படியே இருக்குமென்று தோன்றுகிறது. .!

    (உடனடி உப்புமா செய்வதில் எக்ஸ்பர்ட் என்பதால் , அனுபவத்தை வைத்து சொல்கிறேன். என் வாக்கு நிச்சயம் பலிக்கும் நண்பர்களே :-))

    ReplyDelete
  18. ராமைய்யா அட்டைப்படம் அசத்தலாக இருக்கு சார்.!
    (நீங்க ஜெரேமியா, ஜெரெமயா, எரேமியா ன்னு எப்படி வேணும்னாலும் சொல்லிக்கோங்க சார். எங்களைப் பொறுத்தவரை அவரு ராமைய்யாதான்.)

    இதுவரையிலும் நாம் பார்த்திராத புது மாதிரி கதையோட்டம் என்பதால் பொழுது எப்போது விடியும் என்று அங்கலாய்ப்பாக இருக்கிறது..!!

    ReplyDelete
    Replies
    1. எருமயா என்று வைத்து கொள்ளலாமா ஹி ஹி.

      Delete
    2. ஜெய குமார் சார்,
      உங்க அலம்பலு

      Delete
  19. ஆவலை தூண்டும் வரிகள். இன்னும் ஒரு வாரம் பத்து நாளாகுமே புக் கையில கிடைக்க. சொக்கா சொக்கா என்ன பண்ண அது வரைக்கும்.. வேறென்ன load more தான்...

    ReplyDelete
  20. Vijayan sir nalai oru birth day kondattam.Hats off to the hard despatching day.Happy readg tomoro guys.

    ReplyDelete
  21. ராமைய்யா .ரேப்புக்கு ஒஸ்த்தாவா
    பாகவுந்தி

    ReplyDelete
    Replies
    1. என்னது!!! கதையில ரேப்பிங் எல்லாம் இருக்கா ? ஆசிரியர் இதப்பத்தி ஒரு வார்த்தகூட சொல்லவே இல்ல?!
      ஆச்சரியத்துடன் மேவாயில் விரல் வைத்து யோசிக்கும் படங்கள் பத்து.

      Delete
  22. உள்ளேன் ஐயா.
    நானும் ஜெரோமயா வை எதிர் பார்க்குறேன் வெகு சிறப்பாக இருக்குமென்று.ஜேஸன்,ட்யூராங்கோ போன்ற புதிய தேடல்களுக்கு தனிசந்தாவை ஒதுக்கிவிட்டு டெக்ஸை ரெகுலரிலேயே விட்டுவிடலாம் அந்த அளவிற்க்கு புதிய தேடல்கள் அருமை.

    ReplyDelete
  23. எங்களின் மார்ச் இறுதி கணங்கள் இவையேதான்! நாளை delivery என்பது மிக்க மகிழ்ச்சி தருணம். மிக்க நன்றி !

    ReplyDelete
  24. முன் அட்டையில் ஜெர்மியா ரொம்ப சின்னப்பையனா தெரிகிறார்.

    பரவாயில்லை கோழி குருடா இருந்தாத்தான் என்ன?
    கொழம்பு ருசியா இருந்தா சரிதான் எடிட்டர் சார்

    :)

    ReplyDelete
  25. நம்மவர்கள் பாவம் இப்படியொரு மறை கழன்ற மனிதரிடம் வேலை பார்ப்பது.ஆனால் காமிக்ஸ் என்ற சங்கிலியை வேலை என்று பார்க்காமல் தேர் திருவிழா போன்று எங்கள் ஆசிரியரை அமர வைத்து எங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் அந்த சிறிய ஆனால் வலுவான அந்த அணிக்கு என் முதற்கண் நன்றிகள் &வாழ்த்துக்கள்.
    ஏப்ரல் 1 ஏமாந்த தினமாக போய்விடுமோ என்று நினைத்துயிருந்த வாசகர்களுக்கு ஒரு பெரிய ஷாக்காக அமைந்தது இந்த பதிவு.தேங்க்ஸ் லாட்.
    சிவகாசி அலுவலகத்தில் நுழைந்தது போலிருந்தது தங்களின் வார்த்தை ஜாலங்கள்.நாவல் படித்ததுபோல் இருந்தது.
    தாங்கள் ஏதேனும் கதை எழுத முயற்சி செய்யலாமே?

    ReplyDelete
  26. What a terrific yesterday for you and your team. Your team hard work never fail. Fast dicesion always fail but in this time your fast dicesion never fail. Congrats for your team for this month books.

    ReplyDelete
  27. அனைவருக்கும் நன்றிகள் பல!

    ReplyDelete
  28. புத்தகங்களுக்காக. ஐ யம் வெயிட்டிங்

    ReplyDelete
  29. இது வானவில் வேளை வாங்கியாச்சு

    ReplyDelete
  30. வழக்கம் பாேல சின்ன டப்பாதான் வந்திருக்கு நிஐமா ஏமாத்திட்டிங்களே..

    ReplyDelete
    Replies
    1. பெரிய டப்பாவை ரெடி பண்ண அவகாசம் காணாததால் இந்த மாத இணைப்பையே சிறிதாக்கியதை குறிப்பிட்டிருக்கிறாரே அழகாக, கவனிக்கலைப்போல நீங்க...

      Delete
  31. நீண்டநாள் எதிர்பார்த்த #பென்னி வந்தே விட்டான்

    #ஜெய்ராமய்யா கலர் அருமையா இருக்கு

    #டெக்ஸ் முதல் பத்து பக்கம் படிச்சாச்சு

    #ரீ_பிரிண்ட் வழக்கம்போல் மெதுவாகத்தான் படிக்கணும்

    வானவில் வேளை இது
    என்று
    #வாத்தியார் அழகான இனிமையானதொரு #ஏப்ரல்_பூல் செய்து விட்டார் ;) ;)

    அப்புறம் பெட்டி என்னமா கனக்குது
    இருந்தாலும் இது ஓவர் வெய்ட்ங்க வாத்தியார்

    ReplyDelete
  32. ஆசிரியர் பதிவில் முன்பாகவே குறிப்பிட்டுள்ளார் இந்த மாத சர்ப்ரைஸ்
    அவசர முடிவாக நேற்று மதியம்தான்
    தயாரிக்கப்பட்டது என்று.
    அன்பு பரிசுக்கு அளவுகோல் எதற்கு???

    ReplyDelete
  33. சார் இந்த மாத எல்லையில்லா இன்பத்த கைப்பற்றி விட்டேன் .காலயில போனவுடன் புன்னகையுடன் கொரியரில் தர நன்றியுடன் பெற்றுக் கொண்டேன் . கிப்ட பாக்கலாம் பரபரப்பில்லாமன்னு கவருக்குள் கைய நுழைத்து இழுத்தால் சும்மா டெக்ஸ் நேரில் இன்னும் பிரம்மாதமா அசத்த ..அடுத்துஇது சத்தியமா வரைந்ததுதான்னு ஜானி ,ஸ்டெல்லா குரல் தர எல்லையில்லா இன்பத்த 80களில் வாரி வழங்கிய அதே ஸ்டைல்ல அற்புதமாய் , வண்ணமயமாய் old is gold . அடுத்து ஜெரமயா புக்லெட் ,, பின் தொடருது அற்புத அட்டையுடன் சின்ன புக் சத்தியமா சிறுவர்களுக்காகன்ன படி புரட்டும் போது அறிந்தேன் ..பரவால்ல சுடச்சுட வந்ததல்லவா . ஆனா அடுத்து வந்த பென்னிய கடந்தால் புதயல்தான் போங்க . முதல் பக்கம் பயணத்தின் கதை மொட மொட தாள்ல அட நல்லாருக்கேன்னு கடந்தா..கடந்தா....கடந்தா..கந்தா..கந்தா.....நோ மூச்..பேச்....சும்மா வண்ணத்தின் தாண்டவம் ..இளையராஜா சொந்தபடத்துக்கு .....சாரி பிடித்தவருக்கு மாங்கு மாங்குன்னு இசயமைப்பத போல ஒவியர் ஆனந்த தாண்டவத்த காட்டிட்டார் ....இணையில்லா மற்றுமோர் மாத துவக்கம் . ஏப்ரல் ஏமாற்றமில்லா மாதம்தான் .. ஒரு பய ஏப்ரல் ஃபூல்னு சொல்ல முடியாது நம்மள...

    ReplyDelete
    Replies
    1. // இளையராஜா சொந்தபடத்துக்கு .....சாரி பிடித்தவருக்கு மாங்கு மாங்குன்னு இசயமைப்பத போல ஒவியர் ஆனந்த தாண்டவத்த காட்டிட்டார் // Sema steel

      Delete
  34. விஜயன் சார், "செரி சார் !" - இது நமது ஆபீஸ் ஸ்டெல்லா

    இந்த பதிவு மிகவும் ரசிக்கும் படி உள்ளது, அதே நேரம் உங்களின் காமிக்ஸ் காதலை புரிந்து கொள்ள முடிகிறது! நான் ஏற்கனவே சொன்னது போல் இது போன்ற ஒரு நாளில் நமது ஆபிசில் நான் நமது அலுவலக நண்பர்களுடன் பணிபுரிய வேண்டும்!

    ReplyDelete
  35. இம்மாத லயன் வெளியீடு எண் : 297

    டெக்ஸ் வில்லரின்
    #பனியில்_ஒரு_கண்ணாமூச்சி

    தூத்தேறி...
    ஆர்ட் வொர்க் உண்மையிலேயே மிக அருமையாக உள்ளது.

    வித்தியாசமான டெக்ஸ் முகபாவனைகள்
    தல க்கு இன்னும் வயசாகவில்லை என்பதையே காட்டுகிறது..!!!

    வசனங்கள் சூழ்நிலைக்கேற்ப தேவையாய் இருக்கின்றபோதும்,
    அந்த #பத்து_வசனங்களே தெரியும் எனும்போது ரசிக்கும் படியாகத்தான் இருக்கிறது.
    (ஆனால் எத்தனை பேர் இந்த மாற்றத்தை விரும்புவார்கள் எனத்தெரியவில்லை)

    சிறிய கதை என்றபோதும்
    நன்றாகவே இருக்கிறது.
    சோடை போகவில்லை.

    #வித்யாசமான_கதைகளம் !
    #வித்யாசமான_முயற்சி.!!

    ReplyDelete
  36. பேருந்தில் வரும் பொழுது இந்த பதிவை படித்து கொண்டே வர ...

    கூரியர் 100% வெற்றி என்ற வரியை சரியாக படித்து கொண்டே இருக்கும் பொழுதே...

    அலைபேசியின் அலைஓசை ....


    சார்....எஸ்டி கொரியர்....

    ஆஹா...ஆபிஸ் கிளம்பியாச்சு சார்...மாலை நானே நேரில் வந்து வாங்கிகொள்கிறேனே...

    ஓகே சார்....



    ஏப்ரல் ஒன்றாம் நாளை ஜனவரி ஒன்றாம் நாளாக மாற்றிய ஆசிரியருக்கும்....அவரது குழுவினருக்கும்....

    மனமார்ந்த பாராட்டுகளுடன் நன்றிகளும் உரித்தாகுக....

    ReplyDelete
  37. ஸ்டெல்லா ஜானி இருக்காராமா ......?

    ச்சே .......

    ஸ்டெல்லா எனக்கு புக் அனுபியாச்சாமா ...?

    ஹி ஹி ...

    ReplyDelete
  38. பார்சலைப் பிரிச்சாச்சேய். .!!

    நம்ம ராமைய்யாவைப் பாத்ததும் மிரண்டு போனேன். ஹெர்மனின் சித்திரங்கள் ஏஏஏ யப்போ வென்று சொல்லவைத்தன. (இன்றைய வேட்டை ராமைய்யாவுடன்தான்)

    டெக்ஸ் வில்லர் சிக்கென்று கெத்தாக காட்சியளிக்கிறார்.(அண்ணாச்சிய நாளைக்குதான் படிக்கணும்.)

    பென்னி, கலரிங்கில் கண்ணைப் பறிக்கிறான். (முடிந்தால் நாளைக்கு பென்னியும்)

    ஜானி நீரோ - ஸ்டெல்லா (இருக்காங்க இருக்காங்க)

    சர்ப்ரைஸ் - மத்தியானம் போய் கலர் பென்சில் பாக்ஸ் வாங்கிட்டு வந்து எங்கவீட்டு குட்டிப்பயல் கலரடிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கான். (வேற யாரு நாந்தான் வீட்டுல குட்டியூண்டு பையன்.)

    ReplyDelete
    Replies
    1. ///வேற யாரு நாந்தான் வீட்டுல குட்டியூண்டு பையன்////

      ஆகான் ....

      Delete
  39. டியர் விஜயன் சார், ஜெரெமயா ...........

    ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அட்டகாசம். சித்திரதரமும், ஹார்ட் பவுண்டும், , நம் காமிக்ஸ் ரசனையை அடுத்த தளத்திற்கு நகர்த்தி செல்கிறது.

    இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. மேலோட்டமான புரட்டலில், சென்ற வருடம் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் மேட்மேக்ஸை நினைவுபடுத்துகிறது.

    கண்டிப்பாக பரபரப்பான சூழ்நிலையில் இதனை படிக்க முடியாது. அதற்கென சூழல் அமையவேண்டும். பரபரப்பில்லாத மாலை நேரம், லேசான மண்வாசனையோடு கூடிய தூரல், பக்கத்திலேயே பிடித்த நொறுக்குதீனி, அமைந்தால் உடனே ஜெரமயாவை படிக்க துவங்கிவிடலாம்.:-)

    ReplyDelete
    Replies
    1. ///கண்டிப்பாக பரபரப்பான சூழ்நிலையில் இதனை படிக்க முடியாது////

      மளார்னு அந்தாமானுக்கு ஒரு டிக்கெட் போடுங்க கலீபா

      Delete
    2. Dr.Sundar,Salem : //மேலோட்டமான புரட்டலில், சென்ற வருடம் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் மேட்மேக்ஸை நினைவுபடுத்துகிறது. //

      படிக்கும் போதும் நிச்சயம் அந்தத் திரைப்படத்தை நினைவூட்டும் !

      Delete
  40. பரபரப்பில்லாத மாலை நேரம், லேசான மண்வாசனையோடு கூடிய தூரல், பக்கத்திலேயே பிடித்த நொறுக்குதீனி, அமைந்தால் உடனே ஜெரமயாவை படிக்க துவங்கிவிடலாம்.:-)


    #######

    ஐய்யய்யோ ...டாக்டர் சார்....அப்ப நாலைந்து மாசத்துக்கு நீங்க ஜெரமயாவை படிக்க முடியாதா...:-(

    ReplyDelete
  41. புத்தகங்களை வாங்கியாச்சி.
    ஜெரெமயா பைண்டிங் ஒர்க்,ஆர்ட் வொர்க் பிரமாதம்.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : ஹெர்மனின் டாப் படைப்புகளுள் ஒன்றாச்சே !

      Delete
  42. வானவில் வேளை இது....Simply superb sir...

    ReplyDelete
    Replies
    1. Dasu Bala : உங்கள் வீட்டுக் குட்டிகளை நமது காமிக்ஸ் நாயகர்களோடு கைகுலுக்கச் செய்ய இதுவொரு சுலப வழி என்று நினைத்தேன் !

      Delete
  43. Tex cover very superb...
    Benny, Cover coloring mesmerizing...

    ReplyDelete
  44. இந்த மாத டெக்ஸ்...
    Page no15-
    பொல்லாத்தனங்களும் ஒட்டு மொத்தமாய்க் கும்மியடிக்கும் பாடையில் போகும் அந்த நகர வாழ்க்கைக்கு திரும்ப உருப்படியாய் ஒரேயொரு காரணத்தை சொல்லேன் பாா்க்கலாம்###

    ##இங்கே சிங்கமும் நானே சிட்டுக்குருவியும் நானே##

    Page no 30
    ##பசியில் அலையும் ஒநாயை விட கொடுமையானது தங்கத்தின் மீதான ஆசை !!ஒரு வாய் சுவைத்தபின் ஒநாய் தன் இரையை விட்டதாக சரித்திரமேது ??
    தங்கத்தின் மீதான ஆசையும் அப்படித்தான்##

    காா்ஸன் இல்லாத குறையை லேம் டக் நிவர்த்தி செய்து விட்டாா்..

    ##தூத்தேறி ,
    பாடையிலே போக ,
    சமாதி கட்டிடுவேன்,
    இழவு,பன்னாடை,
    நாசமாய் போக,
    முண்டம்,
    கொள்ளை நோய் வாாிக்கொண்டு போக,
    பேமானி,களவானி##

    அருமையான வரிகள் ஒரு சில இருந்தாலும்
    மொழி பெயர்ப்பில் வரிகள் நாரசமாய் வந்த போதிலும் கதையோடு ஒன்றினைந்து படிக்கும்போது சுவராசியமாகி விடுகிறது..

    ஆனால் இவர் டெக்ஸ் என்றால் ஃபோனெலியே நம்ப மாட்டாா் போலுள்ளது..
    பனியில் ஒரு கண்ணாமூச்சி தலைப்புதான் கதையோடு பொருந்தி போகிறது..

    மொத்தத்தில் இந்த மாத டெக்ஸ் ஒரு தூத்தேறி..

    ReplyDelete
    Replies
    1. sivakumar siva : //ஆனால் இவர் டெக்ஸ் என்றால் ஃபோனெலியே நம்ப மாட்டாா் போலுள்ளது..//

      "இவர் இப்படித் தான் !" என்ற stereotypes குடியிருப்பது நமது சிந்தனைகளுக்குள் மாத்திரமே ! போனெல்லி குழுமம் அதனிலிருந்து தூர விலகி, சிறகுகளை விரிக்கத் துவங்கி காலம் நிறைய ஆச்சு ! டெக்ஸைக் கொண்டு அவர்கள் உருவாக்கியுள்ள அந்த கிராபிக் நாவல் பாணி கதையே அதற்கொரு பிரதம எடுத்துக்காட்டு !! So துப்பாக்கியைத் தூக்கி டஜன்கணக்கில் எதிராளிகளை போட்டுத் தள்ளித்தான்முத்திரை பதித்தாக வேண்டுமென்ற நிலை இரவு கழுகாருக்கு இல்லை !

      காற்றுக்கு எல்லைகள் கிடையாது சார் ; 70 + ஆண்டுகளாய் கோலோச்சிவரும் டெக்ஸுக்குமே !!

      Delete
    2. என்னமா கிளப்புராங்க பீதீயை. தெனாட்வுட்டுனாலே டெக்ஸ்தான்.
      அவராவது சுருதி குறைக்குறதாவது.காட்டு வேங்கையா,அதுக்கு இரக்கம்னா ன்னுனே தெரியாது.

      Delete
  45. ##சூதும் ,,கபடமும்###

    ReplyDelete
  46. புக்ஸ் வந்தாச்சி
    கலர் அடிக்க ஆரம்பிக்கனும்

    ReplyDelete
  47. என்னா சார் இது கச்சா முச்சா பதிவா இருக்கு.உரையாடல் வடிவத்துல புது அவதனிப்பு.அ அ அது வந்து நாளுக்கு நாள் எழுத்து நடைய மெருகேத்தர அந்த ரகசியத்த சொல்லுங்கோ.போன பதிவுலயே ஆளாளுக்கு சென்னை வட்டாரவழக்குல பொழந்து கட்னாங்க.கண்டிப்பா ஜெரமையா ஹிட்டடிக்கும்.ஸ்லாங் லாங்வேஜ்ல ஆசிரியர் இன்னாதா தெறமைய காட்டிருக்காங்கனு பார்பமே.ஆனாலும் காலம்பர நேரத்துலயே பத்து மணிக்கான்டி குரியர்னா நம்பவே மிடில.

    ReplyDelete
    Replies
    1. Sri Ram : நிதானமாய்ப் படியுங்கள் நண்பரே - ஜெரெமியாவையும் ; இம்மாத டெக்ஸையும் ! அந்த பாஷை தானாய்த் தொற்றிக் கொள்ளும் !

      Delete
  48. மாெத்தத்தில் டெக்ஸ்
    கதை நல்லாயிருக்கு சாா்..
    அசல் என்ன எழுதியிருக்கோ அது நகலில் சிறிது பிரதிபலிக்கிறது அவ்வளவே..

    ReplyDelete
    Replies
    1. sivakumar siva : நொடிக்கொருதரம் Buffalo's Blood !! என்று நீட்டி முழக்குவதே அசலில் பெரியவர் ஸீக்கின் பாணி ! அதை அப்படியே பிரதிபலிப்பது எப்படியோ ?

      Delete
  49. கஸ்மாலம் ,பன்னாடை , தூத்தேறி கிழவி சமையல் மாதிரி நல்லாத்தான் கதை இருக்கு.! இத்துனுண்டு கதை மட்டும்தான் சோமாறி மாதிரி இருக்கு ,ஒரே மூச்சில் படிச்சுட்டேன் .தூத்தேறி.! கார்சன் கிழம் இல்லாத குறையை இந்த கிழட்டு கஸ்மாலம் நிவர்த்தி செஞ்சுட்டது.! மொத்தத்தில் சூப்பர் அண்ணாத்தே.!!

    ReplyDelete
    Replies
    1. Mv சார் உங்கள் விமர்சனம் அட்டகாசம், இதற்கு மேல் நான் என்ன சொல்லி விட போகிறேன்.
      இந்த மாத டெக்ஸ் கதை சூப்பர் டூப்பர் கிட்தான்.

      Delete
  50. நண்பர்களும் உறவினர்களும் ஏப்ரல் பூல் பண்ணி கொண்டிருக்க ஆசிரியர் மட்டும் நம் அனைவருக்கும் பரிசு அனுப்பி அசத்தி விட்டார் நன்றி ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. செந்தில் சத்யா : வருஷமாய் நான் உங்களைப் பண்ணாத ஏப்ரல் பூலா ? அந்த 20 + ஆண்டுகளுக்கு இந்த 5 + ஆண்டுகள் பிராயச்சித்தங்கள் என்று வைத்துக் கொள்வோமே ?

      Delete
  51. இரண்டு தினங்களுக்கு முன் என் மனைவி பணிபுரியும் இடத்தில் இருந்து குடும்ப நண்பர்கள் என் வீட்டிற்கு வந்திருந்திருந்தனர்.! அவர்களுள் பத்தாவது பரீட்சை எழதி முடித்த இரண்டு பெண்பிள்ளைகள் தற்செயலாக என் காமிக்ஸ் கலெக்ஷன்கள் பார்த்துவிட்டார்கள்.!அவர்களும் காமிக்ஸ் ரசிகர்கள் என்பதால் என்னிடம் இருந்த புத்தகங்கள தலா பத்து வீதம் அள்க்கொண்டு சென்றுவிட்டனர்.நான் பார்த்து பார்த்து லக்கிலூக் டெக்ஸ் வில்லர் என்று பொறுக்கி கொடுத்த போதிலும்...........


    இருளே இருளே கொல்லாதே மற்றும் டைலன் டாக் கதையை விடாப்பிடியாக எடுத்துச்சென்றார்கள்.!


    ஙே!




    தலைவரே.!


    வருங்காலத்தில் சங்கத்தை கலைக்க வேண்டி வருமோ.???

    இக்கால பிள்ளைகளின் டேஸ்ட் வேறமாதிரி உள்ளதே.????

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்டி வெங்கடேஸ்வரன். : //இக்கால பிள்ளைகளின் டேஸ்ட் வேறமாதிரி உள்ளதே.????//

      'சிவனே' என்று அரைத்த மாவையே ரகம் ரகமாய் அரைப்பதை விட்டு விட்டு - கிடைக்கும் சந்தர்ப்பங்களில் 'விஷப் பரீட்சைகளாய்த்' தோன்றும் சமாச்சாரங்களுக்குள் மண்டையை நுழைப்பது எதற்காக என்று புரிந்திருக்குமே சார் ?!

      இது IPhone பிள்ளைகளின் யுகம் ; நாம் இன்னமும் 'நம்பர் ப்ளீஸ் ?' என்று கேட்கும் அந்நாட்களது கருப்பு போன்களோடே காதல் நடத்திக் கொண்டிருப்பின், ஒரு அழகான நாளில் நாம் மாத்திரமே இங்கே எஞ்சி நிற்போம் ! அவர்களது நாடித் துடிப்பை நாம் துல்லியமாய் உணர்ந்திருக்கிறோம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்சார் - ஆனால் இயன்ற variety -ஐ அவர்கள் முன்வைப்போம் ; பிடித்ததை எடுத்துக் கொள்ளட்டுமே என்பதே எண்ணம் ! கார்ட்டூன்ஸ் ; கிராபிக் நாவல் ; ஹாரர் ; ஜெரெமியா போன்ற road stories முயற்சிப்பதன் பின்னணி இது தான் !!

      அப்புறம் தலீவர் கூட இப்போல்லாம் IPhone ; IPad என்று லேட்டஸ்ட் ட்ரெண்டில் வலம் வர முயற்சிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரச் சேதிகள் சொல்கின்றன !

      Delete
    2. //வருங்காலத்தில் சங்கத்தை கலைக்க வேண்டி வருமோ?//

      சங்கமே அபராத்துல போய்கிட்டிருக்கு....

      Delete
  52. நேரம் கிடைக்கறப்பல்லாம் ஜெரெமயா படிச்சிட்டிருக்கேன்..ஆரம்பம் ஜாலியா போயிட்டிருக்கு.

    புக்கோட ஒட்டுமொத்த கட்டமைப்பு கிறுகிறுக்க வைக்கிறது..சந்தோஷ பிரமிப்பு.

    ReplyDelete
    Replies
    1. selvam abirami : //புக்கோட ஒட்டுமொத்த கட்டமைப்பு கிறுகிறுக்க வைக்கிறது..சந்தோஷ பிரமிப்பு.//

      சார், நமது இன்றைய வாசக வட்டமானது உலகின் மூலை முடுக்கிலுள்ள ஒவ்வொரு காமிக்ஸையும் நேரிலோ ; நெட்டிலோ (சு)வாசிக்கும் ஆற்றல் கொண்டது ! Seen it all ...done it all ....என்றவர்களையும் கூட 'அடடே..!' என்று ஆச்சர்யம் கொள்ளச் செய்ய எத்தனிப்பதே நமது agenda ! அதனில் வெற்றியெனில் லயன் ஹேப்பி அண்ணாச்சி !

      Delete
  53. வாத்யாருக்கு சலாம் சொல்லிக்கிறேன்.
    அப்டியே நம்ம தோஸ்துக்களுக்கும் சலாம் சொல்லிக்கிறேன்.
    பேட்ட பிஸ்தா கண்க்கா நம்ம வாத்யார் நேத்து ஆபீசுல உடன் உதாருங்கள பட்ச்சி பட்ச்சி பாசமலர் படம் பார்த்த கண்ணு கண்க்கா கொடம் கொடமா தண்ணிய கொட்டி கண்ணும், மன்சும் நொம்ப வீக்கா பூட்த்துப்பா.
    வாத்யார்தான் கால் கட்ட வெர்ல வாய்க்குள்ளார திணிச்சி சர்க்கஸ் காட்வாருன்னு நென்ச்சா பாவம் அவரண்ட வேல பாக்க்குறவுங்களுக்கும் அதே கதிதான்னு நென்ச்சா பர்தாபமாகீதுப்பா.
    பாவம் யார் பெத்த புள்ளிங்களோ...நமக்காக கஸ்டப்படும் அந்த புள்ளிங்கள்லாம் என்னிக்கும் நல்லாருக்கனும் மன்சார வாய்த்திக்குறேன்.
    வாத்யாரும் என்னிக்கும் மவராசனா இருக்கணும்.
    அதென்னமோ தெர்ல...என்ன மாயமோன்னு தெர்ல..க்கு கொனா பட்த்துல எங்க தல பாட்டுல சொல்லிவுட்டா மாதிரி ஏழு கழுத வயசாச்சு என்க்கு.
    ஆனா ஒவ்வொரு தபா கூரியர் பொட்டிய பிரிக்க சொல்ல காலேஸ் குஜிலிங்கள கண்ட மைனர் பசங்க மன்சு கண்க்கா எம் மன்சு போல பட்பட்ப்பா அட்ச்சிக்கிதுப்பா.
    நம்ம கூரியர் பொட்டிய பிரிச்சா பொஸ்த்தகமெல்லாம் ஸொம்மா ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர்.கண்க்கா தகதகன்னு மிண்ணுதுப்பா. பொஸ்த்ததகத்த பொர்ட்டி பொர்ட்டி பாக்குறதுலியே பொயிது போய்டுது.
    அதுலயும் புச்சா வுட்டிருக்காரே எருமையாரோ, பொறுமையாரோ.
    அவர் பொஸ்தகத்த தொறந்தா.....ஆத்தாடி...படமும், கலரும் சிலுக்கே கிட்ட வந்து குலுக்கின கண்க்கா ஆட்டம் காட்டுது.
    எந்த மொதல்ல படிக்கிறுதுன்னு சீட்டு குலுக்கி படிக்க போறேன்.கண்ணுங்களா வர்ட்டா.,....

    ReplyDelete
    Replies
    1. AT Rajan : //எருமையாரோ, பொறுமையாரோ....அவர் பொஸ்தகத்த தொறந்தா.....ஆத்தாடி...படமும், கலரும் சிலுக்கே கிட்ட வந்து குலுக்கின கண்க்கா ஆட்டம் காட்டுது.//

      சார்...இன்றைய தலைமுறைக்கு சிலுக்கு...கிலுக்கு லாம் யாரென்றே அடையாளம் தெரிந்திருக்க வாய்ப்புகள் கம்மி! செயலாளருக்குத் தெரிந்திருக்கலாம் தான் !!

      Delete
    2. நம்ம வாத்யாரின் ரோசனையும் கரீக்டுதான்னு பட்றதால எங்கள அந்த காலத்துல ஜொள்ளவுடவச்ச சிலுக்க!! அபீட் பண்ணிபுட்டு அந்த எடத்துல ஜன்னிலியோன குலுக்க வைக்க(குலுக்குறதுன்னா என்னான்னு ஊடால பூந்து கேக்கப்படாது) ஜொள்ளிக்கிறேன்.

      Delete
    3. செயலாளரு பாவம் வாத்யாரே.
      அவுருக்கு தெரிஞ்சதெல்லாம் குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும்தான்.

      Delete
    4. AT Rajan சார்,
      நானும் என்னோட சலாமை உங்களுக்கு வைக்கிறேன்.தப்பில்லை தானே.

      Delete
    5. Shinesmile Foundation சார்
      "சளார்" னு முகத்தில் ஒன்று வைக்காமல் " சலாம்" வைத்தால் தப்பில்லை சார்!!
      நலமாக இருக்கிறீர்களா சார்?
      அடியேனின் சலாமும் தங்களுக்கு..

      Delete
    6. ஸ்டீல்
      தோழரே நலமா?
      தங்களுக்கும் எனது சலாம்.

      Delete
  54. @ திரு விஜயன்

    குழந்தைகள் இரண்டிற்க்கும் தேர்வு முடிந்து சிலநாட்களாய் மலைகுகையில் ஒய்வு. சனிக்கிழமை காலை [இன்று] பையனின் ரிசல்ட் + 9th புத்தகவிநியோகம் என்பதால் மலை குகையில் இருந்து நேராக பள்ளிக்கு சென்று 'திக் திக்' என மார்க் சீட்பார்த்துவிட்டு [அப்பாடா] புத்தக மூட்டையை வேர்க்க விறுவிறுக்க [சுவப்பா..என்னா வெயில்..] வீட்டிற்கு ஓட்டம்..! [ "ஸார் லயன் ஆபீஸ் பார்சல் வந்தாச்சி" என ஸ்டாப் போனில் சொன்ன தகவல் 'கொய்ங்' என காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது ]

    ஒரு 'திக் திக்' முடிந்து அடுத்த 'திக் திக்' ஆரம்பிச்சது...சத்தமில்லாமல் பார்சலை வேறு ரூம்க்கு கடத்திசென்று [அந்த கலரிங் புக் என்னோட பொண்ணு பார்த்தால் போயே போச்சு..] மணக்க மணக்க பார்சலை பிரித்தேன்..!

    உஸ்ஸ்ஸ்ஸ்...ஒருநிமிஷம் மூச்சு தாறுமாறாய் ஏன்தான் பிரேக் இல்லாமல் தடுமாறியதோ...யப்பப்பா...கையில் எடுத்த முதல் புத்தகம் நம்ம ராமையா.!

    புத்தகத்தை...மன்னிக்க..ஆல்பத்தை கையில் எடுத்ததுமே கண்ணை பறித்த விஷயம், தலைமுடி..தரைதளம்..பாறை இடுக்கு..வேர்கள்...என...வித்தியாசங்களை உணர்த்தும் மாயாஜாலம் செய்யும் பிளாஸ்டிக் கோட்டிங்..!

    புத்தகத்தை..மன்னிக்க...ஆல்பத்தை திறந்ததுமே...அந்த அசத்தலான ரோமானியர்களின் தங்க நாணயம் போலவே நம்ம ராமையா.! முகம் பார்த்ததுமே..நாம் பயணிக்க போகும் சாம்ராஜ்யத்தின் நாயகன் இவனே என மனதில் 'பசக்'னு ஒட்டிக்கொண்டுவிட்டதுமில்லாமல்... ஒரு அந்தஸ்த்தை ஜெரெமயா மீது ஏற்பட்டு விட்டது.!

    எப்போதுமே ஆல்பத்தின் உள்ளே கனமானவெள்ளை முன்பின் ஓட்டப்பட்டிருக்கும்,ஆனால் இம்முறை வித்தியாசமான பிஸ்கட் கலரில், வித்தியாசமான வண்ண சேர்க்கையில் செம எடுப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

    உள்ளே படங்களின் அச்சுகள் முன் எப்போதும் இல்லாமல் கலரையும் கறுப்பு அவுட்லைனும் அநியாயத்துக்கு சார்ப்புங்க.....அநியாயத்துக்கு சார்ப்பு..! இவ்வளவு துல்லியம் எப்படின்னு பேப்பரை தொட்டு பார்த்தப்போ தான் ஏதோவொரு வித்தியாசம் உணரமுடிச்சிது.

    அச்சை துல்லியமாக உள்வாங்கும் அட்டகாசமான இந்த தாள்கள் பற்றிய கதையை நீங்கள் சொன்னால்தான் உண்டு..! பாஷா பாய்..பல பல 'அவுக்' போடப்போறார்..!

    இந்த வித்தியாசமான கதைபயணத்தின் மூன்று பாகத்தின் துவக்கத்திலும் வருடங்கள் குறிப்பிட்டு கதைபற்றிய அறிமுக உரைகள் அமைத்துள்ள விதம்...அந்த கலரிங் மிக்ஸிங்...மனசை மிக்ஸியில் போட்டு சட்னியாக அரைத்து விட்டது.

    அது என்ன குறிப்புகள் என படிக்கவில்லை..ஆனால் இப்படி ஒர்ஜினல் பதிப்பில் வந்ததா என்பது சந்தேகமாகவே உள்ளது. நெட்டில் முன்பு 'டீஷர்' செய்ய பார்த்தமட்டும் என்கண்களுக்கு இப்படியொரு டிசைன் தென்படவேயில்லை. சரியான டிஸைன்...இதற்கு ஏதும் நிச்சயம் உங்களிடம் கதை இருக்கும்..!

    இன்னும் இன்னும் பின் அட்டை...பைண்டிங்...எழுத்து பான்ட்ஸ்...என ஏராளமாய் எழுதனும்,அவ்வளவு விருதுகளை இந்த ஆல்பம் தட்டிசெல்ல தடையே இல்லை.

    மதியத்தில் இருந்து இந்த ஆல்பத்தை மடியிலேயே வைத்துக்கொண்டு அழகுபார்த்துட்டே இருக்கேன், இப்போதைக்கு நாலுபக்கம் படிக்கலைன்னா நைட் தூங்குறது கஷ்டமோ..கஷ்டம்...!

    இதை முழுசும் படிக்கமா 'வெச்சி' செய்யணும்..! நாலு பக்கம் படிச்சுட்டு வர்றேன் ஸார்...நான் கேட்டதில் ஏதும் பாயின்ட்ஸ் இருந்ததால் பகிருங்கள் ப்ளிஸ்..............................................................

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மாயாஜி சார்... காலையில் 9 மணிக்கு புத்தகம் வாங்கி அம்மா வீட்டிற்கு சென்று மாமரத்து நிழலின் சிட்டுக் குருவிகளின் தாலாட்டோடு கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு ( உண்மை தாங்க, காலை பத்து மணிக்கு ) அரை மணி நேரத்தில் டெக்ஸ் கதையை படித்து விட்டு ( ஏனோ மனதில் ஒட்டவில்லை ) ஜெரெமயா ஆல்பத்தை நெடுநேரம் புரட்டி, புரட்டி பார்த்து ரசித்துக் கொண்டே இருந்தேன்.. தற்போதைக்கு இன்னொரு நாள் படிக்கலாமென்று ஒதுக்கி வைத்துள்ளேன்....

      Delete
    2. mayavi.siva : சார்..."கதைகளுக்குப் பின்னுள்ள கதைகள்" என்றைக்குமே விறுவிறுப்பிற்குப் பஞ்சம் வைக்காதவை ! அவற்றைப் பற்றி பேச ஆரம்பித்தால் - "சிங்கத்தின் லொட லொட வயதில்" என்றொரு பகுதியும் ஆரம்பிக்க வேண்டிவரும் !

      ஜெரெமியா ஆல்பத்தைப் பொறுத்தவரையில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, நான்கல்ல....ஐந்தல்ல...மொத்தமாய் 6 பேரைத் திருப்தி செய்யும் ஒரு அரூபக் கட்டாயம் எங்கள் முன்நின்றது !

      முதலும், தலையாயவரும் - படைப்பாளி ஹெர்மென் !! தனது முக்கிய தொடர்கள் உலக மொழிகளில் பதிப்பாகும் ஒவ்வொரு முறையும் அவரே இதழை அக்குவேறு - ஆணிவேறாக அலசுவது வாடிக்கை. So அவரை impress செய்தாக வேண்டும் என்ற ஆர்வம் பூதாகரமாக என்னுள் !!

      நபர் # 2 - இந்தத் தொடரின் உரிமைகளை உலகெங்கும் விநியோகம் செய்திடும் Strip Art Features நிறுவனத்தின் உரிமையாளர் ! இவர் எனக்கு கடந்த 20 + ஆண்டு நண்பர் ! ஆனால் அது ஏனோ தெரியவில்லை ; இவர்களுடனான வியாபாரத் தொடர்புகளில் - பணம் அனுப்புவதில் ஓயாமல் தாமதம் நேர்ந்து கொண்டே இருக்கும் ! ஒரு சில நிறுவனங்கள் நம் மீது கருணைகாட்டி, இந்தத் தாமதங்களைக் கண்டும் காணாது சகித்துக் கொள்வர் ! ஆனால் இவரோ - payments விஷயத்தில் வாக்குத் தவறாது செயல்பட்டிட வேண்டும் என்று (நியாயமாக) எதிர்பார்ப்பவர் ! ஒரு இடைவெளிக்குப் பின்பாய் அவரோடு கைகோர்க்கிறோம் எனும் பொழுது இம்முறை உரிய நேரத்தில் ராயல்டி பணத்தை அனுப்புவதோடு - தரத்திலும் அவரை impress செய்ய முயற்சிக்க வேண்டுமென்ற வேகம் எனக்குள் !

      நபர்(கள்) # 3 : இந்த இதழின் தயாரிப்பில் உதவிட நமக்கொரு மான்யம் வழங்கிய பிரெஞ்சுக் கலாச்சார மையம் !! கை நீட்டிக் காசு வாங்கிய பின்னே - அதற்கு அருகதையுள்ளவர்களாய் நாம் தென்பட்டாக வேண்டுமல்லவா ? ஒரு அரசுத் துறை நமக்கிந்த ஒத்தாசை செய்ய முன்வந்திருப்பினும், அங்கொரு உயர் அதிகாரியே நம்பொருட்டு ரொம்பவே மெனக்கெட்டவர் ! So அவர் இந்த இதழைக் கையில் ஏந்தும் வேளையில் துளி கூட சங்கடப்படக் கூடாதென்று ஆசைப்பட்டோம் !!

      நபர் (கள்) # 4 : சாட்சாத் நீங்கள் ஒவ்வொருவருமே !! பாராட்ட ஒரு டஜன் விஷயங்களைத் தேடிப் பிடித்து மாதம்தோறும் சிலாகிக்கும் உங்கள் அன்புகளுக்கு எங்களால் இயன்ற செயல்முறை நன்றிகள் - இதுபோல் தரத்தில் நாங்கள் காட்டக் கூடிய முன்னேற்றங்கள் மட்டும் தானே ? ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப புன்னகை - அது மில்லிமீட்டர் அளவோ ; மைல் நீளமோ - தவழ்ந்திடச் செய்வது தானே நம் லட்சியமே ?

      நபர் # 5 : நமது சீனியர் எடிட்டர் ! ஒவ்வொரு மாதமும், முதல் செட் பிரதிகள் போவது அப்பாவுக்கே ! நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாய் நாம் அடிக்கும் குட்டிக் கரணங்கள்: காட்ட முனையும் முன்னேற்றங்கள் என சகலத்தையும் மௌனமாய் ரசிப்பவர் எனும் பொழுது - இது போன்ற சந்தர்ப்பங்கள் தானே நாங்கள் கற்று வைத்துள்ள வித்தைகளை அவரிடம் showcase செய்திடும் வாய்ப்புகள் ? விடுவோமா ?

      கட்டக் கடைசி ஆசாமி - ஆந்தைவிழி அண்ணாத்தே தான் ! கடந்த 64 மாதங்களில் நாங்கள் கற்று வரும் விஷயங்களின் தேர்வு முடிவுகளாய் இது போன்ற ஸ்பெஷல் இதழ்களை பார்த்திடுகிறேன் ! லக்கி ஸ்பெஷல் ; சத்தமின்றி யுத்தம் செய் ; மாடஸ்டி ; இப்போது ஜெரெமியா - என சிற்சிறு இடைவெளிகளில் இத்தகைய வாய்ப்புகள் கிட்டியிருக்கும் போது - ஒரு அணியாய் நாங்கள் முன்நகர்ந்து கொண்டிருக்கிறோமா - இல்லையா ? என்று எங்களுக்கு நாங்களே பரீட்சை வைத்துக் கொள்வதும் அவசியம் தானே ? மாப்பிள்ளை மொக்கைச்சாமியாய் நான் மட்டும் உங்கள்முன்னே காட்சி தந்தாலும், பின்னணியில் நிறைய "உற்றாரும்..உறவினர்களும்: இருக்கிறார்கள் ! So அந்த விதத்தில் ஒட்டுமொத்தமாய் ஒரு முக்கியத் தருணமிது எங்களுக்கும் !!

      ஆக - அரை டஜன் ஆர்வங்களுக்கு சுப பதில் அவசியமெனும் பொழுது மெனெக்கெடல்களும் அதற்கேற்ப கூடுதலாய் இருப்பது இயல்பல்லவா சார் ?

      பரீட்சைகளும் நல்லதே !!

      Delete
    3. சூப்பர் சார்.

      Delete
    4. @ திரு விஜயன்

      ஆறு காரணங்களும் ஆறு ரகம்..! ஒவ்வொருக்கும் விடை தேடும் உங்களின் பரீட்சை எழுதும் ஆர்வம்...

      இன்றைய இளைஞர்களின் தலையில் வசதியாய் வலைபின்னும் சோம்பேறி சிலந்தியை தட்டிவிட்டு, துள்ளி எழுந்து உழைக்க தூண்டும் முன்உதாரணம்.!

      முக்கியமாக அந்த ஐந்தாவது காரணம்...

      தந்தை என்னும் முதல் ஆசானை இம்மியளவும் விட்டுத்தராமல், பல உடல் உபாதைகளை தோளில் கைபோட்டுகொண்டு உற்சாகமாய் பயணிக்கும் எங்கள் காமிக்ஸ் பிதாமகரை திருப்திபடுத்தும் பரீட்சை நல்லது மட்டுமல்ல ஸார்...

      மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
      என்னோற்றான் கொல் எனுஞ்சொல்.

      Delete
    5. பலரால் அலட்சியமாக பொம்மை புத்தகம் என்று அலட்சியப்படுத்தப்படும் நமது காமிக்ஸூக்கு பின்னால் இத்தனை சவால்களை எதிர்கொண்டு வெற்றியும் பெற்று வருகிறீர்கள் சார்.
      ஒரே வருத்தம். அந்த வெற்றியினை உணர்ந்து நம்முடைய காமிக்ஸினை வாசிக்கவும், பின் நேசிக்கவும் செய்து கொண்டுள்ளவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதுதான் வேதனையளிக்கிறது சார்.
      இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர வேண்டும்.
      இன்று ஆயிரம் பேருக்கு ஆசிரியாக இருக்கும் நீங்கள் வரப்போகும் வருடங்களில் பத்தாயிரம், இருபதாயிரம் என்ற எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து ஐம்பதாயிரம் பேருக்காவது ஆசிரியராக நீங்கள் மாறினால் அந்த சமயம் உங்களைவிட சந்தோஷத்தை அதிகமாக அடையப்போவது தோழர்களுடன் சேர்ந்து நானும்தான் சார்.
      இங்கு வரும் ஒவ்வொரு தோழருக்கும் நம் காமிக்ஸ் வட்டம் அதிகமாக வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக மனதில் மையம் கொண்டிருக்கும் சார்.
      இது கண்டிப்பாக நடக்கத்தான் போகிறது சார்.
      அந்த மகிழ்ச்சியான தருணம் உருவாகும் சமயம் தோழர்கள் அனைவரும் ஒரே நாளில் தங்கள் அலுவலகத்தை நோக்கி படையெடுத்து நீங்கள், சீனியர் எடிட்டர், தங்களின் தாயார் அவர்கள் ஜூனியர் எடிட்டர் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் தோழர்கள் அனைவருடனும் இணைந்து
      வாழ்நாளில் மறக்க இயலா வெற்றி கொண்டாட்ட தினமாக கொண்டாட வேண்டும் என்பது எனது நெடுநாள் கனவு சார்.
      இன்று நிழலாக உள்ள கனவு நிஜமாக மாறவேண்டும் சார்.
      "காலம் ஒரு நாள் கை கொடுக்கும்.
      அதுவரை பொறுத்திருப்போம்."

      Delete
  55. கரூர் சரவணன்.!


    //அம்மா வீட்டிற்கு சென்று.//

    முக்கியமான பாயிண்ட்.!!!

    ReplyDelete
  56. புத்தகம் இன்று வருமா? வராதா.? என்று கையை பிசைந்துகொண்டும் அவ்வளவு லோடுமோர் பிரச்சினைகள் நடுவிலும் நேற்று கமெண்ட் போட்டவர்களை எங்கே ஆளைக்காணோமே ? இன்று இத்தளம் கஞ்சன் வீட்டு பந்தி போல் காற்றாடுகிறதே என்ற சிந்தனையுடன் இருந்துவிட்டு......


    என் மனைவி ஷாப்பிங் போன நேரத்தில் ஜெரோம்யா வை எடுத்து படித்தால் விர்ர் என்று உறிஞ்சி எடுப்பது போல் கதை உள்ளிழத்துக்கொண்டது.. கதை அவ்வளவு சுவாராசியம் பரபரப்பு.........


    அப்புறம்தான் புரிந்தது நம் நண்பர்கள் இங்கே அதிகம் வராத காரணம்.!!

    ReplyDelete
    Replies
    1. மடிப்பாக்கத்தாருக்கு பிடிச்சுருச்சுனா கதை சகல சென்டர்லயும்ஹிட்டுன்னு சொல்லலாமே.

      Delete
    2. மாடஸ்டி வெங்கடேஸ்வரன். : சார்... இதழ்கள் கைக்குக் கிடைக்கும் முன்னிருப்பது பரபரப்பு - கிடைத்த பின்னே ஒருவித மோன நிலை ; படிக்க ஆரம்பித்து, அது ரசிக்கும் பட்சத்தில் திரும்பிடும் பரபரப்பு - என்று ஒவ்வொரு மாதமுமே இந்த rollercoaster சவாரி அரங்கேறுவதை நாம் பார்க்கத் தானே செய்கிறோம் ?

      Delete
    3. Mahendran Paramasivam //மடிப்பாக்கத்தாருக்கு பிடிச்சுருச்சுனா கதை சகல சென்டர்லயும்ஹிட்டுன்னு சொல்லலாமே.//

      அட....ஆமாம்லே ?!

      Delete
  57. டியர் எடிட்,

    ஒவ்வொரு மாதமும் தவறாமல் எங்களுக்கு காமிக்ஸ் புதையல்களை சேர்ப்பித்து விட வேண்டும் என்ற எண்ணத்திற்கே, நீங்களும் உங்கள் பதிப்பக குழுவும் பாராட்டிற்கு உகர்ந்தவர்களே. ஏப்ரல் பிரதிகள் இன்னும் சேரவில்லை... நாளை கிடைத்து விடும் என்று நம்பிக்கை. தமிழில் தமிழில் ஜெரோமியா பிரம்மிக்க செய்யும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. Rafiq Raja : உலகெங்கும் சாதனை செய்துள்ள தொடர் அல்லவா சார் ; நம்மூரிலும் வெற்றிக் கொடி நாட்டிடும் பட்சத்தில் அட்டகாசமாக இருக்கும் !

      Delete
  58. excellent excellent what a excellent kind of book making.
    Holding the book gives me a feeling which couldn't be expressed by simple words
    I am feeling the book by going through the pages and couldn't start reading it.
    This series going to take us to various levels of comic reading
    Hatsoff to you sir

    ReplyDelete
    Replies
    1. senthil kumar : //Holding the book gives me a feeling which couldn't be expressed by simple words //

      :-)

      Delete
  59. இன்று எனக்கு ஏப்ரல் 1 தான்.
    புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை
    STகூரியருக்கே பெருமை .

    ReplyDelete
    Replies
    1. ganesh kv : ஒட்டு மொத்தப் பார்சல்களுமே நேற்றைக்கு இரவு 9 -30 மணிக்கு ST கூரியர் லோடில் புறப்பட்டுவிட்டன என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட பின்னரே நம்மவர்கள் வீட்டுக்குப் புறப்பட்டனர் சார் ! நிச்சயம் உங்கள் ஏரியா HUB -ல் தான் கிடந்திருக்க வேண்டும் ! வருத்தமாக உள்ளது !!

      Delete
  60. தம்பி ஸ்டீல் க்ளா நலமா.
    இந்த உங்களது பெயருக்கு பின்னே உள்ள வரலாறை சொல்லவும்.
    பல மாதங்களாய் நான் கேட்க நினைத்த கேள்வி இது.

    ReplyDelete
  61. காலையில் சொல்ல மறந்த சங்கதி..!

    டெக்ஸ் வில்லர் ஒல்லி புக் வழக்கம்போல் சென்டர் பின் அடிக்கப்படாமல், சைடு பின் செய்யப்பட்டு மிக நேர்த்தியாக வந்திருக்கிறது.
    நீண்ட நாள் கோரிக்கைக்கு பலன் தந்ததற்கு நண்பர்கள் சார்பில் நன்றிகள் சார். .!

    ராமைய்யா கூப்பிட்டுகிட்டே இருக்காரு. இப்போதான் நேரம் கிடைச்சிருக்கு. ஒர்ர்ரே மூச்சுல பினிஷ் பண்ணிட்டு வந்திடுறேன்.!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : நன்றிகளுக்கு ஏது சார் அவசியம் ? இது தான் உங்களை ஈர்க்கிறதென்று தெரிந்த பின்னே அதை நடைமுறைப்படுத்தத் தயங்குவோமா ?

      Delete
    2. @ கோடையிடி ஸார்

      அடடே...சைடுபின் வந்துவிட்டதா..!!! அருமை..அருமை..ஆனா பாருங்க வந்த பார்சலில் ஜெரெமியா மட்டுமே வெளியே எடுத்தேன். மற்றவை [உண்மையாங்க] அட்டைபெட்டியில் அப்படியே உள்ளன.

      ஏனோ அந்த 'ராமையா' ஏற்படுத்திய பிரமிப்பு இன்னும் இம்மியளவு கூட குறையவேயில்லை. நேற்றுமுதல் செல்போனை கூட கையில் எடுக்கவேயில்லை. முக்கியமாக வாட்ஸ் ஆப் திறக்கவேயில்லை. லோடு மோரில் மேசேஜ்கள் நிற்கின்றன. மதியம் வரையில் வாட்ஸ் ஆப்பில் வரும் வாய்ப்பில்லை..ஹீ..ஹீ..!

      Delete
  62. Was Jeromiah sent in a separate parcel??? In my parcel there is no Jrleromiah.. Is it in some special subscription??? Please let me know..

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : ஜெரெமியா Super 6 சந்தாவின் இதழ் # 3 ! நீங்கள் சூப்பர் 6 சந்தாவில் உள்ளீர்களெனில், நம்மவர்கள் அனுப்ப மறந்துவிட்டார்கள் என்று அர்த்தம் ! ஒருக்கால் நீங்கள் Super 6 சந்தாவில் இணைந்திருக்கவில்லையெனில் - ஆன்லைனில் ஒரு ஆர்டரை தட்டி விட வேண்டிவரலாம் சார் !

      Delete
    2. Sir.. I already received Lucky special and Modesty.. I think I already paid Super six subscription in Chennai book fair.

      Delete
  63. Replies
    1. கடல்யாழ்9 : லாரி ஸ்ட்ரைக் காரணமாய் முகவர்களுக்கு புத்தகங்கள் செல்ல கொஞ்சம் தாமதமாகக் கூடுமே ரம்யா !!

      Delete
  64. ஆரம்பத்தில் எனக்கும் எஸ்.டி.கூரியருக்சும் ஏழாம் பொருத்தம்.! டெலிவரிக்கு ஆள் கிடைக்கவில்லை அல்லது டெலிவரி பாய் லீவு என்றால் அலுவலகத்திற்கு வந்த பார்சலை வரவில்லை என்று சாதித்து விடுவார்கள்.! இதற்காக பலமுறை பொறுப்பாளர்களிடம் சண்டை போட்டு உள்ளேன்.!நான் பொதுவாக வக்கீல் என்றே கூறுவது கிடையாது.வேறு வழி இல்லாமல் வக்கீல் என்று நான் கூறியதும்.அவர் சாந்தமாகி பின் நடபுடன் பேசினார்.அவருக்கு உள்ள பிரச்சினையை கூறினார்.அதாவது இந்த காலத்தில் கூரியர் பாய் கிடைப்பது கஷ்டமாக உள்ளது என்றும் ,சிலர் வீட்டுக்கே செல்லாமல் அவர் வீடு பூட்டியுள்ளதாக பொய் கூறிவிடுகிறார்கள் என்றும் கடிந்து கொண்டால் வேலையை விட்டு போய்விடுகிறார்கள் என்றும் வருத்தப்பட்டார்.அதன் பின் கூரியர் பாய்க்கு அவ்வப்போது பொங்கல் தீபாவளி அன்று அன்பளிப்பு கொடுத்து வருகிறேன்.! தற்போது முதல் போன் எனக்குதான் ,முதல் டெலிவரியும் எனக்கே.! இருந்தாலும் வேலையை பொறுத்து போன் மூலம் நானே நேரிஎடையாக வாங்கவும் செய்கிறேன்.இப்போ வேலை நல்லபடிய நடப்பதால் முதலாளியும் சந்தோசம் நானும் சந்தோஷம்,கொரியர் பாயும் சந்தோசம் எல்லோரும் சந்தோஷம் .ஸ்மூத்தாக செல்கிறது.எஸ்டி கொரியரை எடிட்டர் மாற்ற முயன்ற போது , நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

    தற்போது அனைவரும் ஹேப்பி அண்ணாச்சி.!

    எல்லாம் எங்கள் இளவரசியின் பாதை.! எது எப்படியானாலும் நமக்கு காரியம் ஆகவேண்டும்.!அதுதானே முக்கியம்.!!!

    ReplyDelete
  65. ராமையா மூன்று பாகமும் சட்டென்று முடிந்து விட்டதொரு உணர்வு ...
    அருமையான கதை தெளிவான வசனங்கள்,
    குழப்பமில்லா கதைகளம் , சித்திரத்தில் மட்டும் சிகப்பு வண்ணம் சற்று தூக்கலாக தொிகிறது..
    வன்முறையோ ,
    டமால் டூமில் என்று காரணமின்றி துப்பாக்கி முழக்கங்களோ இன்றி அருமையாக உள்ளது...

    ஆனாலும் ஒரு சந்தேகம் ??
    இதில் முழுக்க சாகசம் செய்வது கிாிக்தான் அப்படியிருக்க ராமையாவை ஏன் முன்னிலைபடுத்தினாா்கள் ??
    இனிமேல் வரும் கதைகளிலாவது நம் அம்மாஞ்சி கைப்புள்ள கதாநாயகன் ஏதாவது செய்வாரா ??
    முதல் கதையில வில்லன்கிட்ட மாட்டிக்கிறாா்.. இரண்டாம் பாகத்துல இராணுவத்துக்கிட்ட மாட்டிக்கிறாா்..
    வாண்ட்டடா வந்து வண்டியில ஏறி அடி வாங்கறத நினைச்சா பாவமா இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. sivakumar siva : இந்தத் தொடருக்கு அறிமுகமென முதல் அட்டையின் உட்பக்கத்திலேயே நான் எழுத நினைத்தது இது போன்ற சந்தேகங்களுக்கு பதிலாய் அமைந்திடட்டுமே என்ற எதிர்பார்ப்பில் தான் ! ஜெரெமியா ஒரு கிராமத்துக் குடியானவன் வீட்டுப் பிள்ளை மட்டுமே !! உலக அனுபவமில்லா அம்மாஞ்சி ! எதிர் துருவங்களே ஈர்க்கும் என்பதற்குச் சான்றாக கர்டியுடன் நட்பு துளிர் விடுகிறது ! அவனோ - ஊரை விற்று உலையில் போடத் தெரிந்த / துணிந்த கல்லுளிமங்கன் !

      இவர்களது (வாழ்க்கைப்) பயணம் தான் இந்தத் தொடரே !!

      போகப் போக இருவரும் நிறையவே பார்க்கவுள்ளனர் ; அனுபவிக்க உள்ளனர் !!

      Delete
    2. கர்டிய அடையாளம் தொியனும்கிறதுக்காக ஹெல்மெட் போட்டு ஷவர்பாத் எடுக்கிறதெல்லாம் கொஞ்சம் ஒவர் சாா்

      Delete
  66. எடிட்டர் சார்
    டெக்ஸ் கதையில் வரும் தாத்தா, பாட்டியை போல என் பள்ளிக்காலங்களின் போது எங்களது வீட்டருகே இருவர் வசித்து வந்தார்கள் சார்.தாத்தாவுக்கு என்பது வயது இருக்கும். பாட்டிக்கு எழுபது வயது இருக்கும். பிள்ளைகள் கிடையாது. பள்ளிக்கூட வாசலில் தாத்தாவும்,பாட்டியும் மண்ணில் அமர்ந்தபடி மிட்டாய், மாங்காய், இதுபோன்றவற்றை விற்று அவர்களை அவர்களே கவனித்துக் கொண்டனர். அந்த ஏழ்மையிலும் காசில்லாத மாணவர்களிடம் காசு வாங்காமலே மிட்டாயெல்லாம் தருவார்கள்.
    அந்த கிழவர் மனைவியை கூப்பிடுவதே ஏய் சனியனே, பன்னாடை, தரித்திரம் பிடித்த கிழவியே என்றுதான் அழைப்பார்.
    பாட்டியும் அவருக்கு சளைத்ததல்ல. பதிலுக்கு செவிட்டு பிசாசே, கிழக்கோட்டானே என்றுதான் அழைப்பார். விளையாட்டுக்குத்தான்.கோபமே வராத அதிசய மனிதர்கள் அவர்கள்.
    அந்த பாட்டி எந்நேரமும் சுருட்டு பிடித்துக் கொண்டு இருப்பார். சுருட்டை இரண்டு இழுப்பு இழத்துவிட்டு தரையில் தேய்த்து அணைத்து காதில் செருகிக் கொள்வார்.விடுமுறை நாட்களில் அவர்களை வேடிக்கை பார்ப்பது எனக்கு பொழுதுபோக்கு.
    தாத்தா எந்த வார்த்தை பேசினாலும் இழவு, சனியன் என்ற வார்த்தைகள் அதில் கண்டிப்பாக இருக்கும். இறக்கும் நாள் வரை ஒற்றுமையுடன் வாழ்ந்த அவர்கள் ஒருநாள் அந்த தாத்தா இரவு தூக்கத்திலேயே இறந்துவிட அந்த பாட்டி சரியாக ஒரே வாரம். கணவனை இழந்த சோகத்தில் பாட்டியும் இறந்துவிட்டார். அந்த சமயம் நானும் என் அண்ணனும் பள்ளிக்கூட நண்பர்கள் பலரும் அழுதது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.
    அந்த இருவரை நினைவு படுத்துகிறார்கள் டெக்ஸ் கதையில் வரும் தாத்தாவும் பாட்டியும் அவர்கள் வாயில் வந்து விழும் வார்த்தைகள் மூலம். பத்து பக்கங்கள் படித்தபின் மேற்கொண்டு தொடரமுடியாமல் பழைய நினைவுகள் மனதில் மையம் கொண்டுவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. AT Rajan : நிஜங்களின் பிரதிபலிப்பு தானே சார் கதைக்களங்களின் பெரும்பான்மை ?

      Delete
    2. ஏடி ஆர்.


      உண்மை.!! படித்தவுட்ன் மனசு கணத்தது.!!!

      Delete
  67. எப்படியாவது இன்று இம்மாத இதழ்களை ரசித்துவிட வேண்டும் என ஊரில் தங்கி,இங்கேயே புத்தகங்களை வரவழைத்தேன்.ST கூரியரின் சொதப்பல் மற்றும் சனிக்கிழமை தரித்திரம், என விதி விளையாடி விட்டது.இனி திங்களோ அல்லது புதனோ தான் நொண்டிகுதிரை வந்து சேரும்.அதற்குள் நான் பெங்களூர் சென்றுவிடுவேன்.அடுத்த மாதம் வரை புத்தகங்களை பார்க்க வாய்ப்பில்லை எனும் போது வெறுப்பாக உள்ளது.
    இனி சனிக்கிழமை அனுப்பி எரிச்சலை கிளப்பாதீர்கள் சார்...

    ReplyDelete
  68. டெக்ஸ் கதையில் வருகிற அந்த தாத்தா பாட்டி பேசிக்கிறத படிக்கிறப்போ மவுனராகம் படத்துல மொழி தொியாத ஒரு சா்தாா்ஐீக்கு நம்ம விகே சாா் கத்து கொடுத்ததுதான் நினைவுக்கு வந்திச்சு..

    ReplyDelete
  69. அன்பு ஆசிரியர்,

    நீண்ட நாட்களாக என் மனதில் ஓடிய எண்ணம் இது.

    தாங்கள் ஏன் ஒரு YouTube channel ஆரம்பிக்கக்கூடாது...!!??

    நமது தமிழ் காமிக்ஸ் உலகம் பற்றியும், உலக காமிக்ஸ் பற்றியும் ... உங்களை விட அதிகமாகத் தெரிந்தவர்களை, ஒரு கை விரல்களில் எண்ணிவிடலாம். It will be very informative, in the long run.... A good Advt for our தமிழ் காமிக்ஸ் too...

    தாங்கள் மிகவும் busy என்பதை அனைவரும் அறிவர்,....ஆனால் மாதம் ஒரு/இரு முறைகள் programme செய்வது, ஒரு நல்ல startஆக இருக்கும் என்பது என் எண்ணம்...

    I expect Junior editor, would know all the nitty gritty of opening an YouTube channel.... In the long run he can also contribute...

    ஒரு YouTube channel வெற்றி பெற, சில முக்கிய அம்சங்கள் தேவை...

    1. Content... காமிக்ஸ் கடல் போன்றது.... அள்ள அள்ள குறையாத அமுதம் அது...
    2. Dedicated Audience.... நமது காமிக்ஸ் காதலர்களை பற்றி நான் புதிதாக என்ன சொல்லப்போகிறேன்.... முதல் reply கொடுக்கும் ஆர்வத்திலிருந்து...நான் 10க்குள்ள வந்துட்டேன்... ஆத்தா நான் 100க்குள்ள வந்துட்டேன்.... நமது காதல் அளப்பரியாதது....
    3. Performer.... தங்கள் பலம் தங்களுக்கு தெரியாது..... You r the perfect person to do such a program...
    4. Wit and Wisdom.... நமது blogஐ regularஆக படிக்கும் அனைவரும் அறிந்தது... தங்களது comic timing.... மற்றும் காமிக்ஸ் காதல்...

    The drawbacks will be the doubts...

    Whether we can start such a program..!!??
    Where will i have the requiste time...!!??
    Will people like it....!!??
    What will be its impact on our sales and marketing...!!??

    Just remember.... You would've got the same set of doubts before starting this blog... ஆனால் இப்பொழுது... இதன் வெற்றியை நாம் கொண்டாடி வருகின்றோம்...

    நீங்கள் அறியாத விஷயமில்லை....
    உதாரணத்திற்கு The Urban Gentry என்று ஒரு channelஐப் பாருங்கள்..
    Watches பற்றிய channel அது.... ஒரு chairல் அமர்ந்து 1\2 மணி நேரம் கைகடிகாரங்களை பற்றி பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.... பலருக்கும் ஒரு dryஆன, not affordable, விஷயமே ஒரு லட்சம் subscribers கொண்டுள்ள போது... நமது காமிக்ஸ் channel வெற்றி என்பது ஒரு forgone conclusion...

    Try to give some thoughts, Sir...



    ReplyDelete
    Replies
    1. +1 Good Idea.

      I know editor mentioned he wanted to have enough time before jumping into anything new this applies to our Facebook page too.

      One more thing that i always wanted to see was "Adding reviews for each book in our online store" Similar to what we see in amazon or any other online store. In that way the reviews are there for ever so anyone trying to buy the books they can read the review and i believe that will increase he sales.

      Delete
  70. படிக்கும் முன்னர் ஒரு பார்வையில்....


    மாலை வீடு திரும்பியவுடன் கொரியர் பெட்டியை திறந்தவுடன் முதலில் இலவச இணைப்பை தேடி கைகள் துழாவ அந்த இணைப்பே கைகளில் சிக்க அழகு...பையனிடம் தேர்வு முடிந்து விடுமுறையில் அதனை கொடுத்து சிறப்பிக்க சொல்ல வேண்டும் என்பதால் இப்போது பத்திரமாக என் வசமே....

    அடுத்து சிறிய இதழ்களை பொறுமையாக வெளியே எடுக்க நமது டெக்ஸ் வெறியனின் தடத்தில் ...முன் அட்டைப்படம் அழகு...கொஞ்சம் புஷ்டியாகவே டெக்ஸை பார்த்து விட்டு இப்போது கைக்கு அடக்கமாக பாரக்கும் பொழுது இதுவும் ஒரு அழகு என்றே தோன்றியது...உள்ளே சித்திரங்களும் அழகுற... இம்முறை முதல் இதழாக டெக்ஸை தான் களமிறக்க வேண்டும் ...என்ற எண்ணத்துடன்....


    அடுத்த இதழாக கைக்கு வந்தது கொலைக்கரம்..அட்டைப்படம் சித்திரங்களை ரசித்துவிட்டு ...அப்படியே மீண்டும் ஒரு முறை சிங்கத்தின் சிறு வலையில் (வலையே தான் வலையே தான் ...வயதில் இல்லை செயலரே..:-( படித்து விட்டு அடுத்த இதழை கைகளில் ஏந்தினேன்...

    மிஸ் அட்டகாசம்...சிம்பிளான அட்டைப்படம் தான் ...ஆனால் சிம்ப்ளி சூப்பர் சார்...பின் அட்டை சித்திர முன்னோட்ட கதையை படித்தவுடன் இம்முறையும் பென்னி பட்டையை கிளப்புவார் என உறுதிபட தெரிகிறது..உள்ளே சித்திரங்களும் ...வண்ணங்களும் ..அச்சு தரமும் அழகோ அழகு....அதிலும் அடுத்த வெளியீடாக லார்கோ விளம்பரம் கண்டதும் மனதில் உடனடி உற்சாகம்....

    என் சித்தம் சாத்தானுக்கே என ஹாட்லைனில் தெரிவித்தாலும் அதன் விளம்பரங்கள் ஏதும் கண்ணில் படாதது ஏனோ...?

    இறுதியாக தான் என் கைகளில் அகப்பட்டார் ஜெரெமயா....அடேங்கப்பா ...இதழின் தரமும் ...அட்டைப்பட அழகும்..உட்பக்க சித்திரங்களும்..ஆசிரியரின் அறிமுகமும்..ஒவ்வொரு பாகத்திற்கும் முன்னரும் கதாசிரியரின் கருத்தும் ..வண்ண சேர்க்கைகளும் ...அட டா...அட டா...ரகம்...உட்பக்க சித்திரங்களை பார்க்கும் பொழுது கேப்டன் பிரின்ஸ் உடனடியாக நினைவுக்கு வருவது தவிர்க்க முடிய வில்லை...கெளபாய் நாயகர் எனவே நினைத்து இருந்தேன்...ஆனால் பின் அட்டையில் நாயகன் இரு சக்கர வாகனத்திலும் ..உங்கள் ஹாட்லைன் பக்கத்திலும் படித்தவுடன் "இவன் வேற மாதிரி" என்பது புரிபட தொடங்கியது...


    இவன் வேறு மாதிரி எப்படி மனதை கவர போகிறான் ..


    காத்திருக்கிறேன் ...

    ReplyDelete
  71. தலைவரே !

    முன்னோட்டம் விமர்சனமே பட்டையை கிளப்புது.!!!

    ReplyDelete
  72. எனக்கும் பொட்டி வரல

    ReplyDelete
  73. டெக்ஸ் வில்லரின் சாகஸம் முடித்தாகி விட்டது...கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என பலமுறை நிரூபித்தாலும் (டாக்டர்.டெக்ஸ் உட்பட..) இம்முறை காரம் கொஞ்சம் குறைவு போல் ஓர் எண்ணம்...

    டெக்ஸ் சோலோவாகவே ஆரம்ப பல பக்கங களில் தலை காட்ட கடைசி சில பக்கங்களில் தனது அதிரடியை காட்ட நடுவில் தூத்தெறி கிழவரின் சாகஸங்களே தென்பட ..ஒரு குறு முழு நீள டெக்ஸ் திருப்தி கொஞ்சம் குறைந்து விட்டது போல...

    சுமார்...பரவாயில்லை...நன்று ...சூப்பர் என்ற மதிப்பெண்ணில் இம்முறை டெக்ஸ் "பரவாயில்லை " ரகத்தை பெற்றாலும் அடுத்து மீண்டும் எப்பொழுது தலை காட்டுவார் என்ற எண்ணத்திலும் குறை வைக்க வில்லை....

    இனி பென்னியுடன் ....

    ReplyDelete
  74. எந்த விஷயம் நடக்கும் பயந்தேனோ அதுவே நடந்திருக்கு. சனிக்கிழமை office லிவு. திங்கள்கிழமை தான் book க பாக்கனும். பெடியன் பில்லி மாதிரி கட்டில்ல குப்புற ஆழறேன்.

    ReplyDelete
  75. First half of the post - refreshingly original take. expect more of this.

    ReplyDelete
  76. ஜெரேமியா முதல் பாகம் ஒரு பறவை படலம் சில குறிப்புகள்.!

    உள்அட்டையில் எடிட்டரின் ஒரு சின்னகுறிப்பு, 1978 -ல் முதல் கதை எழுத எது உந்து சக்தி என படைப்பாளி 'ஹெர்மன்' சொல்லிய ஒரு வரி குறிப்பு இதுதான் கதை நடக்கும் காலகட்டத்தை அறிவிக்கிறது.

    ஒரு அணு ஆயுதபோரின் பின்னால் நாடே சுடுகாடாய் மாறிப்போகிறது.அரசாங்கம் என்று ஒன்று இல்லாத சூழலில் கதை துவங்குகிறது..!

    இந்த குறிப்பை உள்வாங்காமல் கதைக்குள் போனால் கொஞ்சம் தடுமாறத்தான் வேண்டும். அரசாங்கம் என்ற ஒரு அமைப்பே கிடையாது, அதிகாரிகள்,சட்டம்,நிர்வாகம் என்பதுமட்டுமல்ல....எந்த பொருளின் உற்பத்தி என்பதும் கிடையாது. பெட்ரோல்,டீசல் என எரிபொருளே இல்லாத நிலையில் வாகனங்கள் வெறும் இரும்பு பெட்டிகளே.மின்சாரம் கூட கிடையாது என்னும்போது மொத்தமும் நாசம்.! வெளிச்சத்திற்கு நெருப்பு,பயணத்திற்கு குதிரைகள்,போருக்கு போக மீதமிருக்கும் கைக்கு கிடைத்த துப்பாக்கிகளே அவரவர்க்கு பாதுகாப்பு..!

    கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் பின்னோக்கிய நிலை. இவையெல்லாம் எழுதப்பட்டதல்ல....மாறாக வரையப்பட்ட சித்திரங்கள் பேசும் வரலாறு..!

    அடிமை சந்தை,!இப்படியொரு சந்தையை நம் வாழ்நாளில் பார்க்கவாய்ப்பில்லை என்றாலும்கூட...ஆங்கில,அரேபியகதைகளில் அந்த சந்தையை பார்த்திருப்போம்.!

    வீரபேரரசின் கற்பனை கதையான...conan the barbarian

    அரேபிய கற்பனை கதையான...sinbad

    ரோமியர்களின் கதையான...
    gladiator

    கொலம்பஸ் அமெரிக்காவில் கால்பதிப்பதற்கு முன்னால் அங்கு வாழ்ந்த பழங்குடியினர் கதையான...apocalypto

    இன்னும்..இன்னும்...பலபல படங்களில் அடிமைசந்தையை பார்த்திருப்போம். இந்த அடிமைசந்தையை ஒரு உண்மை வரலாற்று படம் முற்றுபுள்ளி வைத்து உலகெங்கும் சட்டமாக்கி, அந்த கொடூரமான சந்தையை அடியோடு இந்த பூமியில் இருந்து ஒழித்தது. அந்த படம்...amistad

    அடிமை சந்தைகென்று அப்பாவிகளை வேட்டையாடும் வியாபாரசந்தையை 1841-ல் அமெரிக்காவின் சுப்ரீம்கோர்ட் தடைசெய்து அதை நடைமுறைக்கு கொண்டுவந்து அப்பாவிமக்களை,முக்கியமாக கறுப்பினர்களை காப்பாற்றி உலகின் மூலைமுடுக்கெல்லாம் தேடிபிடித்து அந்த அடிமைசந்தையை இரும்புகரம் கொண்டு ஒழித்தது.!

    கிட்டதட்ட 170 ஆண்டுகளுக்கு முன் ஒழிக்கப்பட்ட அடிமை வேட்டை மீண்டும் அரங்கேற்றம் ஆகவேண்டுமானால்....

    இன்றைய நவநாகரிகம் வளர்ந்த சூழலில் அந்த அடிமை வேட்டை அரங்கேற வேண்டுமானால் எவ்வளவு பெரிய பிரளயம் ஏற்படவேண்டும்..???

    அந்த பிரளயம் நடந்தேறியதும் நடக்கும் அடிமை வேட்டைதான் கதையின் துவக்கம்.! இந்த விஷயத்தை உள்வாங்கி படித்தால் ரசிப்பின் கோணம் முற்றிலும் மாறிவிடுகிறது.

    முதல் பாகத்தில் அதீத ஈர்ப்பு இல்லையென்றாலும் கூட,ஆழமான கதாபாத்திரத்தின் அறிமுகமும்,நம்மை அந்த பிரளயத்திற்குள் அழைத்து செல்லும் வலிமையையும் உள்ளது. அந்த நம்பிக்கையை அள்ளி தருவது.... முடிவில் உள்ள பயனம்...துவங்குகிறது.!என்ற வரிகளே..!

    ReplyDelete
    Replies
    1. அடேங்கப்பா ....விமர்சனம் ...மாயாஜீ....


      அருமை....

      Delete
    2. மாயா சார். 😝 . நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களிடமிருந்து கதை தொடர்பாக மிக நேர்த்தியான பதிவு. இந்த மாதிரி உங்களிடம் நிறய எதிர்பார்ககிறோம். 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

      Delete
    3. சிவா சார்..!!உங்களின் அருமையான இந்த பதிவை நினைவில் நிறுத்திக்கொண்டு வாசிப்பேன்.
      புத்தகங்கள் ஊரிலும்,நான் பெங்களூரிலும் என ஆகிவிட்டது இம்முறை.
      அனேகமா அடுத்த மாதம் தான் வாய்ப்பு கிடைக்கும் போல..

      Delete
    4. @ பரணி ஸார்

      இது விமர்சனம் இல்லிங்கோ...ஸும்மா படிக்கிறதுக்கு முன்னாடி தெரிஞ்சிக்கவேண்டிய குறிப்பு மாட்டோமே.!

      புக்கே கிடைக்காம கடுப்புல இருக்குற டைம்ல விமர்சனமா கதையை ஏதும் எழுதினா செமத்தியா கிடக்கும்கிற விஷயம் அடியேன் அறியும்...! :D

      @ மகேந்திரன் ஸார்

      இரண்டாம் பாகம் படிச்சிட்டு இருக்கேன்,அந்த பாகத்தில் சொல்லும் ஒரு முக்கியமான குறிப்பு கட்டாயம் மனசுல ஆழமான உள்வாங்கிகனும். அதுபற்றி எழுதறேன்.

      இதோபோலவே...விண்வெளியின் பிள்ளைக்கு ஒரு மிகபெரிய தகவல்களை பதிவாகவே தயாரித்து பாதியில் நிற்கிறது..! அதன் ஸாரம்....

      இந்த பூமியில் ஏலியன்ஸ்களின் கால்தடமாக விஞ்ஞானமே ஒத்துக்கொள்ளும் தகவல்கள் பற்றிய மிகபெரிய அசரடிக்கும் அலசல்கள்.!

      @ பாஷா பாய்

      இதைபோலவே இன்னும் பல நண்பர்கள் பதிவிடுவார்கள் என எதிர்பார்கிறேன். அவ்வளவு நுணுக்கமாக ஓவியங்கள் பின்னப்பட்டுள்ளன.

      Delete
    5. ஜெரேமயா இரண்டாம் பாகம் ஒரு பாலைவன படலம் சில குறிப்புகள்.!

      இரண்டாம்பாகம் படிக்கும்போது அதில் வரும் இராணுவ வீரர்கள் உடை,குதிரை சக்தியில் உருளும் இரும்பு கேபின்...இன்னும் சில கட்டிட அமைப்புகள் இவற்றை பார்த்தபோது என் புரிதலில் ஏதோவொரு தவறு இருப்பதாக பட்டது.

      என் தவறான புரிதல்: எதிர்காலத்தில் ஒரு அணுஆயுதபோரின் பின்னால் அமெரிக்கஅரசு வீழ்ச்சி அடைந்தபின் அங்கு தாண்டவமாடும் சூழல் பற்றிய கதை என ஒரு முடிவில் இருந்தேன்.

      ஓவியர் ஹெர்மன் குறிப்பிட்ட Ashes, Ashes நாவல் பற்றி சின்னதாக ஒரு அலசல் குக்கிளில் தேடிபார்த்தேன். 1943-ம் René Barjavel என்னும் பிரஞ்சு கதாசிரியர் எழுதிய சைன்ஸ் பிக்ஷன் கதையான Ravage யின் ஆங்கில பதிப்புதான் Ashes, Ashes.

      2052-ல் பாரிஸ் நகரம் திடீர் என விஞ்ஞான வளர்ச்சியில் வீழ்ந்து...நகரம் இருண்டு, நாகரீகம் நசிந்து...நோய்தொற்று,பஞ்சம் என கடுமையாக தாக்க...மீதமிருக்கும் தப்பி பிழைத்தவர்கள் அடுத்த நகரத்திற்கு இடம் பெயர்வதுதான் கதை. இதன் தாக்கம்தான் 'ஜெரேமயா' வின் உருவாக்கம் என ஓவியர்&கதாசிரியரான ஹெர்மன் குறிப்பிட்டிருந்தார்.

      என்புரிதல் சரியாக இருக்குமானால்...இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கஅரசு அணுஆயுதத்தை பயன்படுத்தியதும் போர் முடிவுக்கு வந்தது. ஒருவேளை அப்படியே ரிவைஸ் ஆகி அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து...அவ்வளவு பெரியதேசம் கட்டுபாட்டை இழந்து...யாரும் யாரையும் கட்டுபடுத்தமுடியாத பலவீனம் கண்டிருந்தால்...

      ரோமானியர்கள்,எகிப்தியர்கள்,பாபிலோனியர்கள் சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி கண்டது போலவே அமெரிக்க பேரரசும் வீழ்ச்சி கண்டிருந்தால்...1950 களில் அந்த நாகரீகத்தின் முழங்கால் உடைத்து சரிந்திருந்தால்...

      பரவிக்கிடக்கும் பலதரப்பட்ட மக்கள் எப்படியெல்லாம் சூறையாடி தங்கள் வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ள போராடுவார்கள்..??? அந்த போராட்டத்தில் இருவேறுபட்ட மனநிலையில் உள்ள நாடோடிகள் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பார்கள்...??? என்பதாகவே இந்த கதையின் காலகட்டத்தை உணர்கிறேன்.! இதுபற்றிய கருத்தை நண்பர்களிடம் எதிர்பார்கிறேன். முக்கியமாக திரு செல்வம் அபிராமியிடம் "நான் புரிந்து கொண்டது சரிதானா ஸார்..?"

      Delete
    6. எதிர்காலகதை இது மாயாவிஜி !!!!
      நிறவெறி-அணு யுத்தம் ----உள்நாட்டு போர் என எளிமையாக எடிட்டரே எடுத்து சொல்லியிருக்கிறாரே.
      இரண்டாம் உலக போரில் அணு ஆயுதங்கள் பிரிமிட்டிவ் நிலையில் இருந்தன.
      அதை கணக்கில் எடுத்து கொள்ளவே வேண்டாம் .
      எதிர்காலத்தில் நடக்கும் இச்சம்பவம் அமெரிக்காவை சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு பின்னுக்கு கொண்டு வந்ததாக எடுத்து கொள்ளவேண்டும்.
      மொத்தமே பன்னிரண்டு மில்லியன் மக்களே அமெரிக்காவில் வாழ்வதாக கதையின் போக்கு சொல்கிறது.(கதை நடக்கும் காலகட்டத்தில் ).
      Jeremiah – comes clearly under’’post apocalyptic’’genre which itself indicates it’s futuristic. Ofcourse dystopian future.

      எனவே நீங்கள் பறவைப்படலம் குறித்து எழுதிய முன்னோட்டம்தான் சரியானது .(படிக்க மிக நன்றாக இருந்தது )


      Delete
    7. பாலைப்படலம் ......
      இப்பாகம் எழுதப்பட்டது 1980 –ஆக இருக்கலாம் என்பதையும் கணக்கில் எடுத்து கொள்ளவும்.
      அணுஆயுத பேரழிவு 2050-ல் நடப்பதாக வைத்து கொண்டாலும் அப்பேரழிவு மூன்று அல்லது நான்கு தலைமுறை வளர்ச்சியை விழுங்கி 1750 –களில் இருந்த நிலைக்கு அமெரிக்காவை கொண்டு வந்து நிறுத்தி விட்டதாக கருதலாம்.
      ஆனால் .......கதை நடக்கும் கால கட்டம் என்பதைவிட-கதையின் சூழல் புரிந்தபின்னர் ....
      நான் உயர்வாக கருதுவது
      நல்லது நடக்கும்: இந்த நிலைமை மாறும் ; நாம் நல்லதை செய்வோம் என்ற நம்பிக்கையு டன் வாழும் ஜெரெமயா
      மோசமான சூழ்நிலையிலும் ஜீவித்திருப்பதும் அதற்காக போராடுவதும் முக்கியம் என வாழும் கர்டி
      இவை இரண்டுமே இக்கதை கொண்டாடப்பட –அற்புத கதையோட்டம் ,கண்கவர் ஓவியங்கள் துணையோடு – முக்கிய காரணம் என தோன்றுகிறது

      Delete

    8. ஏன் 1950-ம் வருடம் என்ற சந்தேகம்...?

      WW2 நடந்த பின்னால் தான் உலகம் வளர்ச்சியில் இந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் விண்ணை தொட்டுவிட்டது. 1980 களில் வந்த ப்ளாஸ்கார்டன் சைன்ஸ் பிக்ஷன் காமிக்ஸ்கள் முதல் நம்மை அசரடித்த 'star wars' ஹாலிவுட் படங்கள், star trek டிவி தொடர்கள் வரையில் அதில் வரும்...

      ஆயுதங்கள்,
      தொலை தொடர்புகருவிகள்,
      பயன்படுத்தும் வாகனங்கள்,
      பயணிக்க, பறக்க தேவையான பாதைகள்,
      உடைகள்,காலணிகள் என நாகரீக வளர்ச்சி தெள்ள தெளிவாய் தெரியும்.!

      ஆனால் ஜெரேமியாவில் வரும் உடைகள்,
      காலணிகள்,
      தொப்பிகள்,
      பணம் வைக்கும் பெட்டி,
      கைத்துப்பாக்கி,
      சாலைகளின் [மண் சாலையே..தார்சாலையே காணம்]அமைப்புகள்,
      குறிபார்க்கும் ரைபிள்கள்,
      சிம்மினி விளக்குகள்,
      பைனாகுலர்கள்,
      வேகன்கள்,
      சைக்கிள்,
      தண்ணீர் குழாய்,
      பூட்டு,
      தண்ணீர் குடுவை,
      மண் வெட்டிகள்,
      இடுப்பு பெல்ட்,
      சூட்கேஸ்கள்,
      என எல்லாமே 1950-ம் வருடத்துடன்...அன்றைய பயன்பாட்டுடன் கனகச்சிதமாக பொறுந்துகின்றன.அன்று சாலைகள் அவ்வளவாக விரிவுபடுத்த்படவில்லை,கார்கள்,பைக்குள்,மின்சார பொருட்கள்,தொலைதொடர்பு வசதிகள் என எதுவுமே சாராசரி மக்களை சென்றடையவில்லை. ww2 பின்னர்தான் உலகம் வசதிக்கு உழைக்கும் பக்கம் திரும்பியது. ஒருவேளை ww2 தீவிரமடைந்து மொத்தமும் நாசமகியிருந்தால்....

      அட்சாரக பிசகாமல் 'ஜெரேமியா' அப்படியே பொறுந்துகிறது.

      இன்னும் நுட்பமாக சொல்லவேண்டுமானால்....அந்த இரும்பு கவசவண்டி [81-ம் பக்கம்] முன்னால் இரண்டு இருக்கைகள்,அதை குதிரைகள் கொண்டு இழுப்பதும்....பின்னால் ஒரு இராணுவ வீரன் துப்பாக்கியில் சுடும் சின்னஞ்சிறு பீரங்கி டைப் வாகனம் ww1 பயன்படுத்தியவை.

      மூன்றாம் பாகம் கடைசியில் தப்பித்து செல்லும் இரண்டு இருக்கை கொண்ட,இரும்புகவச பாதுகாப்பு பெட்டி இணைத்த குதிரை வாகனமும் அவ்வகையே.

      இன்னும் நுட்பமாக சொல்லவேண்டுமானால்...வண்டியின் சக்கரத்தில் உள்ள ஸ்போக்ஸ் கம்பி வகை வீல்கள் கொண்ட வரிபோட்ட டையர்கள் எல்லாம் துல்லியமாக 1950 ரகம் என திட்டவட்டமாய் தெரிவிக்கிறது.!1980 களில் முன்பே அலாய் வீல்கள் புழக்கத்தில் வந்துவிட்டன.

      X-மேன்ஸ்,கேப்டன் அமெரிக்கா,கிங்காங் முதல்...பல ராணுவப்படங்கள்,உலகப்போர் சம்பந்தபட்ட படங்கள் என 1950 வருட நாகரிக-வாகன-ஆயுத-உடைகள் பற்றி பார்த்து பார்த்து உள்வாங்கியதால்....

      1950-ல் நாகரீகத்தின் முழங்கால் உடைந்தால் மனிதர்களின் வாழ்க்கை சூழல் எப்படிமாறும் என்பதை என்னளவில் கற்பனை செய்துபார்க்க முடிகிறது,அது ஜெரேமியாவுக்கு சரியாக பொறுந்துகிறது என்பதே என் பார்வை..!

      Delete
    9. ww1 = முதல் உலகப்போர்
      ww2 = இரண்டாம் உலகப்போர்

      Delete
    10. இல்லை மாயாவிஜி!!!!

      இதை இப்படி பார்க்க விரும்புகிறேன்.............................
      ஒரு நவீன தலைமுறை சுமார் முந்நூறு ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்கிறது என்பதை மிகைப்படுத்தப்பட்ட அழகியல் இலக்கணம் ( HYPERBOLIC AESTHETICS) என்ற வகையில் ஒரு ஓவியருக்கே உரித்தான உரிமையில் –இதனை கையாண்டிருக்கிறார் என்றே சொல்ல தோன்றுகிறது.
      ஓவியங்களை இக்கதையை பொறுத்தவரை – கண் காணும்
      தோற்றங்களை வைத்து- ( MATERIALISTIC ) எடை போட மனம் தயங்குகிறது.
      உருவக தோற்றங்களாக (METAPHORICAL ) பார்த்தால் அதன் ஆழம் புரியும்.

      கமான்சே தொடரில் இருந்து அப்போதுதான் கிரேக்-கிடம் விடைபெற்று வந்த ஹெர்மன் அந்த கௌபாய் உலகில் இருந்து முழுமையாக விடுபடவில்லை என்பதும் கூடுதல் காரணமாக இருக்கலாம்.




      Delete
    11. @ செல்வம் அபிராமி

      ஒரு சின்ன திருத்தம்...
      ஓவியர் ஹெர்மன் கதாசிரியர் கிரேக்-கிடமிருந்து விடைபெறவில்லை. அதேபோல் 'காமன்சே' தொடரில் இருந்து விலகவும் இல்லை. மாறாக 'கேப்டன் பிரின்ஸ்' தொடரில் இருந்து விடை பெற்றார்.

      சைத்தான் துறைமுகம் தான் 'ஹெர்மன்' வரைந்த கடைசிகதை.!

      கேப்டன் பிரின்ஸ் என்றும் சரித்திரத்தில் இடம்பெற காரணமாக நான் கருதுவது...கதைகள் நிகழும் களம்,அதை தத்துரூபமாய்...தனித்துவம் மிக்க ஓவியங்கள் மூலமாக நம் கண்முன்னே கொண்டுவரும்படி சித்திரங்களே..!

      கதைகளை 'கிரேக்' பட்டைதீட்ட...காட்சிகளை 'ஹேர்மன்' பட்டைதீட்டினார். இந்த இருவரின் கூட்டணியில் வந்த படைப்புகள் நம்மிடம் பல பல சபாஷ்களை அள்ளிசென்றது.

      லயன் என்றால் 'டெக்ஸ்'
      முத்து என்றால் 'டைகர்'
      திகில் என்றால் 'பிரின்ஸ்'
      மினி என்றால் 'லக்கிலுக்'

      என பிரண்ட் ஆகவிட்டநிலையில்...கேப்டன் பிரின்ஸை அப்படியே பிரதிபலிக்கும் 'ஜெரேமியா' படிக்கும்போது ஏனோ...ஏதோவொன்று குறைகிறது.!

      அதுபற்றி மூறாம் பாக அலசலில்...

      விடுபட்ட குறிப்பு : கமான்சே முதல் பத்து பாகம் வரை ஓவியம் 'ஹேர்மன்'. ஜெரேமியா துவங்கி பின் ஐந்து ஆண்டுகள் வரை கூட்டணி தொடர்ந்தது...அதாவது 1983 வரையில்.!

      Delete
    12. சைத்தான் துறைமுகம் - ஆகஸ்ட் 1978
      ஜெரேமியா முதல் பாகம் - ஏப்ரல் 1979

      1978-ல் ஜெரேமியா தொடருக்கான பணிதுவங்கிய சமயம் என்பதே....எடிட்டர் அமைக்கவேண்டிய வாக்கியம்..!

      அதே போலவே 'நான் அந்த தருணத்தில் "கேப்டன் பிரின்ஸ்" தொடரில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.!' என்பதே சரி. வயோதிகம் காரணமாக ஏதேனும் ஒரு பேட்டியில் 'ஹேர்மன்' தவறாக குறிப்பிட்டிருக்க வாய்ப்புண்டு.

      வரலாறு நான் மேற்குறிய தகவலைதான் உறுதிசெய்கிறது..!

      Delete
    13. விடுபட்ட குறிப்பு : கமான்சே முதல் பத்து பாகம் வரை ஓவியம் ////'ஹேர்மன்'. ஜெரேமியா துவங்கி பின் ஐந்து ஆண்டுகள் வரை கூட்டணி தொடர்ந்தது...அதாவது 1983 வரையில்.!////

      உண்மைதான்!!!!

      மௌனராகம் ரேவதி மாதிரி 1978 -லேயே மனசால ஹெர்மன் பிரிஞ்சுட்டாருன்னு வச்சுக்குவோமே!!

      :-)

      கமான்சேவின் தாக்கம் ஜெரெமயாவில்

      வெளிப்படுகிறது என்ற கூற்றுக்கு பலம் இன்னும் அதிகரிக்கவே செய்கிறது.

      கிட்டதட்ட இதே கௌபாய் களப் பிண்ணனியில் உங்களை விட அல்லது உங்கள் அளவுக்கு என்னால் சிறப்பாக பணியாற்ற முடியும் என தனது காமிக்ஸ் உலக வழிகாட்டியான கிரெக்-க்கு விடுக்க முயன்ற செய்தியாகவும் இருக்கலாம்.

      Delete
  77. மிஸ் .அட்டகாசம்....

    கதையும் அட்டகாசம்...சித்திரங்களும் அட்டகாசம்....நகைச்சுவையான டிடெக்டிவ் கதை களமும் அட்டகாசம்....

    ஒரு நகைச்சுவையான களத்தில் அதுவும் ஒரு சிறு பொடியனை கொண்டு நகைச்சுவையுடன் ஒரு சீரியஸான துப்பறியும் கதை போல் செல்வது அவ்வளவு எளிதல்ல....ஆனால் பென்னியின் கதாசிரியர் அதை மிக திறம்பட செய்துள்ளதை போலவே நமது தமிழாக்க ஆசிரியரும்....


    பென்னி மீண்டும் வெற்றி கொடியை நாட்டி விட்டு செல்கிறான்....


    சுமார்...பரவாயில்லை....நன்று....சூப்பர் என்ற தரவரிசையில் பென்னி பெறுவது


    சூப்பர்.....!

    ReplyDelete
  78. தலைவரே !

    ஜெரோமையா பதிவு எப்போ.???



    தொணடர்கள் எல்லாம் உங்கள் ஒப்பீனியனுக்காக வெயிட்டிங்.!!!

    ReplyDelete
    Replies
    1. மா.வெ சார், வரும் ஆனா வராது..

      Delete
  79. இரண்டு சர்ப்ரைஸ் கிப்டுகளுடன் (நண்பர்கள் பொறாமை கொள்ள வேண்டாம். விடுபட்டுப்போன போனமாத கிப்டுடன் சேர்த்து!) இம்மாத இதழ்கள் கிடைத்தன. இன்னும் கதைகள் படிக்கவில்லை. ஜெரமயா இதழ்த் தயாரிப்பில் பிரமிப்பூட்டுகிறது.

    ReplyDelete
  80. ஏப்ரல் மாத புத்தகங்கள் இன்னமும் கிடைக்கப்பெறாத தோழர்கள் மன்னிக்கவும்.
    இனி--
    ஏப்ரல் இதழ்களில் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்பவர் நம்ம தம்பி ராமைய்யாதான்!
    அட்டகாசமான தோற்றத்துடன்,
    ஆளை அசரடிக்கும் ஓவியம்,வண்ணம் என்று தொட்டவுடன் "ஷாக்" அடிக்க வைக்கும் ரகளையான கதை வரிசையை ஆசிரியர் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்பதை தைரியமாக உரக்கச் சொல்லலாம்.கதையைப்பற்றி....
    "மூச்"......தோழர்கள் எல்லோரும் புத்தகத்தை கைப்பற்றிய பின்னரே விவாதிப்பது சரியாக இருக்கும். இல்லையெனில் சாமி கண்ணை குத்திவிடும். செம ரகளையான இதழ் என்பதை மட்டும் சொல்லிவிடலாம். தப்பில்லை.
    டெக்ஸ்....
    பெரிய எதிர்பார்ப்புகள் எதையும் வைத்துக் கொள்ளாமல் படித்தால் பிடிக்கும் இதழ் இது. டெக்ஸின் பயணத்தில் ஒரு சிறிய சம்பவமே இக்கதை. டெக்ஸூக்கு நிகரான வில்லன்களே கிடையாது.
    ஆனால்--
    தூத்தேறி..எழவு...பாடையில் கொண்டுபோக...என சதா புலம்பிக்கொண்டிருக்கும் தாத்தாவையும், பாட்டியையும் கண்டு ரசிக்கலாம். மொத்தத்தில்
    சராசரிக்கு மேலே. சூப்பருக்கு கீழே.
    பென்னி...
    மூன்றெழுத்து மந்திரச் சொல் தமக்கெல்லாம் நன்றாக ஒர்க்அவுட் ஆகும் என்பதை உணர வைப்பவன்..
    எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி,
    விஜய், அஜித் என்று திரையுலகில் நிருபிக்கப்பட்டதுபோல
    காமிக்ஸிலும் மாயாவி, டெக்ஸ், டைகர், பென்னி என்று கூறலாம்.
    " விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்பதை நமக்கு பென்னி உணரவைக்கிறான்.
    சிறியவர்களுக்கான கதை எனபதைவிட பெரியவர்களையும் சிறியவராக்கும் கதை இது.
    இதுபோன்ற கதைகள் சிறியவர்களை நம் காமிக்ஸ் பக்கம் இழுக்க வைக்க உதவும் தூண்டில் போன்றவை.நம்மை நம் வயது, பிரச்னைகள், கவலைகள் அத்தனையையும் மறந்து கதைக்குள் நுழைந்தால் பென்னியுடன் சற்று வாழ்ந்து பார்க்கலாம். திருப்தியான இதழ்.
    கொலைக்கரம்....
    பல ஆண்டுகளாக பலமுறை வாசிக்கப்பட்ட கதை.
    இப்போதும் பால்யத்தின் நினைவுகளை நம்முள் கிளர்ந்தெழுக்க செய்கிறது.
    கதையில் பழைமை நெடி அது இது என்று நோண்டாமல் தெளிவான ஓவியங்களுடன் 1970 களில் வெளியான ஆங்கிலப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்த திருப்தி என்னைப் போன்றோருக்கு கிடைக்கும். இதற்கெல்லாம் மார்க் போட எனக்கு மனது வராது.
    மொத்தத்தில் இம்மாத இதழ்கள் நமக்கு திருப்தியான அனுபவத்தை அளிக்கவல்ல வெவ்வேறுவித கதைக்களன்களை உள்ளடக்கியவை என்பதை ஆசிரியருக்கு நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  81. ஏன் இத்தனை அமைதி???

    ராமைய்யா வந்தாலும் வந்தாரு..!

    ஒரே கதையில அத்தனை பேரும் மெரண்டு போய் இருக்காங்கன்னு நினைக்கிறேன். .!! :-)

    ReplyDelete
  82. இந்த மாத நான்கு இதழ்களில் தர வரிசைப்படி இடம்பெறுவது...


    1...பென்னி...


    2...பென்னி...


    3...பென்னி...


    4..பென்னி..

    ReplyDelete
    Replies
    1. நான் நினைத்ததையே சொல்லிட்டிங்களே பரணி.

      Delete
    2. தலிவரே, அப்ப இந்தமாத டெக்ஸ் & ஜெரெமயா இரண்டுமே லிஸ்ட்லேயே வரலயே... என்ன கொடுமை தலிவா இது...

      Delete
    3. அச்சச்சோ!!
      தலீவருக்கு இம்மாத நான்கு புத்தகமும் பென்னியையே
      பார்சல் பண்ணியாச்சா?
      என்ன கொடுமை சார் இது?

      Delete
    4. ஏடிஆர் சார்....ஹாஹா...:-))))

      Delete
  83. ஹல்லோ...

    கூடுதல் வேலைப்பளு காரணமாக இங்கே தலைகாட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது!
    தவிர, இன்னும் புக் கிடைக்கவில்லை! ட்ராக்கிங் நம்பரை நம் ஆபீஸில் கேட்டுவாங்கி, பலகட்ட விசாரிப்புகளுக்குப் பின்னர் கொரியர் ஆபிஸிலேயே புத்தகங்கள் பத்திரமாக(!) இருப்பதைத் தெரிந்துகொண்டபின், இப்போது கொரியர் ஆபீஸுக்கு விரைந்துகொண்டிருக்கிறேன்! ஈரோட்டுக்கு வாய்த்த DTDC கொரியரின் சேவை அப்படி! ( அடுத்த மாசம் கொரியரையோ/அட்ரஸையோ மாத்திப்புடணும்)

    இந்தமாத இதழ்கள் பற்றிய நண்பர்களின் சிலாகிப்புகள் ஏக்கத்தை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டிருக்கிறது! புத்தகங்களை வாங்கி நாலு தடவு தடவியபின், எதை முதலில் படிப்பதென்று குட்டியாய் ஒரு மனப்போராட்டம் வேறு நடத்தவேண்டியிருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வழக்கமாக பூனைகள் நாவால் நக்கிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.
      இந்த பூனை அதிசய பூனையாகவல்லவா இருக்கிறது!
      புத்தகத்தை வாங்கி தடவப்போகிறதாம்.
      அதுவும் நான்கு முறை!!

      Delete
  84. பூனையாரே.!


    படித்துவிட்டு வாருங்கள்.!

    ReplyDelete
    Replies
    1. செயலாளர் விமர்சனத்திற்க்காக
      ஐ யம் வெயிட்டிங்

      Delete
  85. ஜெரெமயா - முதல் பாகம்

    பக்கம் 22

    முதல் இரண்டு வரிசைகளிலும் கட்டப்பட்டு தரையில் கிடக்கும் கர்டி மலாயை ஜெரெமயா துப்பாக்கி முனையில் வைத்திருக்கிறான்.

    அடுத்த மூன்றாவது வரிசையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஜெரெமயா குதிரையில் அமர்த்தப்பட்டு வருகிறான். துப்பாக்கி கர்டி வசம் இருக்கிறது.

    "என்னை போட்டுத்தள்ளும் வாய்ப்பிருந்தும் ஏன் விட்டுவிட்டாய் "என்று ஜெரெமயா கர்டியை கேட்கிறான்.

    இந்த மெடிகள் மிராக்கிள் அரங்கேறியது எவ்விதமென்று சொல்லுங்களேன் செனா அனா & வேதாளரே..!

    இது முதல் சந்தேகம் மட்டுமே. .! பின்னாடி நிறைய்ய இருக்கு..ஹிஹி..!!

    (இடைப்பட்ட சம்பவத்தை நீங்களாக கற்பனை செய்து கொள்ள வேண்டுமென்று சொல்லிவிடாதீர்கள். பிஞ்சு நெஞ்சு தாங்காது..)

    ReplyDelete
    Replies
    1. ஹலோ ! சேலம் விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரி மொபைல் கார்டியாக் கேர் யூனிட் ...நீங்கதான ..சரி ..சரி ..முப்பது நிமிஷம் முன்னாடி நான் சொன்ன மாதிரி மேச்சேரி உள்ற போய் ரெடியா இருக்கீங்களா????
      ஏதாவது பிரச்சினைன்னா அலர்ட்டா செயல்படுங்க ....
      ஏன்னா அது பிஞ்சு நெஞ்சு....
      ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
      கண்ணன் !!! அது நீங்க சொன்னமாதிரி நம்மதான் கற்பனை பண்ணிக்கணும்.
      துப்பாக்கியை கீழ வச்சுட்டு கர்டி –யின் கைக்கட்டை அவிழ்த்து விடும் ஜெரெமயாவின் அம்மாஞ்சித்தனமும்
      கைக்கட்டை ‘’ஜெ ‘’ அவிழ்த்து விட்டபின் கர்டியின் செயல்வேகமும் , ஜெ-கையை கட்டிவிட்டபின்னரே தன்தரப்பு நியாயத்தை எடுத்து சொல்ல முனையும் கர்டியின் பிராக்டிக்கல் முன்ஜாக்கிரதையும் நாமே யூகித்து கொள்ள வேண்டியதுதான்.
      ஜெ ‘’ வின் முகத்தில் தெரியும் கீறல்கள் கர்டியின் கைவண்ணமே...
      ரெண்டு பேரின் கேரக்டர் –ம் இதுல ஒளிஞ்சு நிக்குது...

      Delete
    2. @ இராமையா ஸார்

      செல்வம் அபிராமி அவர்கள் சொன்ன விளக்கமே போதுமானவை என நம்புகிறேன்..!கதை சட்டென்று அடுத்தகட்டத்திற்கு நகர்வதை நாம் இப்படிதான் உள்வாங்கி 'சபாஷ்' போட்டுக்கொண்டே நாமும் அதே உற்சாகத்தில் பயணிக்க வேண்டும்.! :D

      Delete
    3. க்க்கும்..!!

      இதே ரீதியில போனா, கொஞ்சநாள்ல 48 பக்கம் வெள்ளைக்காகிதங்களை கையில் கொடுத்துவிட்டு

      " இதுல ஒரு கதையும் நெறய்ய சித்திரங்களும் இருக்கு, நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க அய்யாக்களே "ன்னு சொல்லிடுவாங்களோன்னு பயம்மா இருக்குங்க..!! :-)

      Delete
  86. இந்த மாதம்...............

    ஜெரெமயா............ * * * * * * * * *

    பென்னி.............* * * * * * *

    டெக்ஸ்..........* * * *

    ReplyDelete