Powered By Blogger

Sunday, April 09, 2017

கரடுமுரடாய் ஒரு கவிதையும், ஒரு முடியா இரவும்..!!


நண்பர்களே,

வணக்கம். சக்கரங்கள் சுழல்வதை மலைப்போடு தான் சில வேளைகளில் பராக்குப் பார்க்க முடிகிறது ! புத்தாண்டும் - புத்தக விழாவும் (சென்னை) நேற்றைய நிகழ்வுகள் போலிருக்க - இதோ - தமிழ்ப் புத்தாண்டு கூப்பிடு தொலைவில் நிற்கிறது  ! ஆண்டிற்கு அட்டவணை போட்டது போன வாரம் போல தலைக்குள் பசுமையாக இருக்க - இதோ அடுத்த சில மாதங்களுக்குள் 2018-ன் கான்டிராக்டுகளை இறுதிப்படுத்தும் வேளை புலர்ந்திருக்கும் ! "ஏப்ரல் - ஜெரெமயா - MMS" என்று பெனாத்தித் திரிந்த ராப்பொழுதுகளை இப்போது லார்கோவும் - க்ளிப்டனும் ஆக்கிரமித்துத் திரிய - ‘தூத்தேறி‘ பாஷைகள், தூய்மையைத் தேடிப் புறப்பட்டிருக்கின்றன ! அட....அவ்வளவு ஏன் ? மெயின் பதிவு ; உபபதிவு என்று நான் நீட்டி முழக்கியே ரொம்ப காலம் ஆனது போலொரு பீலிங்கும் கூட - நாட்களின் ஓட்டத்தில் !

ஏப்ரலின் இதழ்களின் பக்கமாய்ப் பார்வைகளை ; அலசல்களை ஓடவிடுவதே இவ்வாரத்தின் focus ஆக இருப்பது சரியென்று  தோன்றியது !  எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பிலா genre கள் எனும்போது - அவை உருவாக்கியுள்ள அபிப்பிராயங்களுமே மாறுபட்டவைகளாக இருப்பதில் வியப்பில்லை தான் !! ஆரம்பிப்போமே நம்மாள் ராமையாவோடு ?

"ஜெரெமியா ஒரு அதிரடி வெற்றி ; அனைத்துத் தரப்பின் ஆதர்ஷத்தையும் ஈட்டிவிட்டுள்ள நாயகன்!" என்றெல்லாம் நான் செய்தி வாசிப்பின் அது முழுமையான உண்மையாக இராது ! நம்மில் நிறைய பேருக்கு  இந்தப் புது பாணியினை அணுகுவதில் சற்றே சிரமங்கள் இருப்பதில் இரகசியமில்லை ! ! இதழின் ஆக்கம்  ; சித்திர நேர்த்தி ; வண்ண பிரம்மாண்டம் ; புதிதான காலம் / களம் என்று முதல் பார்வையில் மெர்செலாகிப் போன நீங்கள் - கதைக்குள் மூழ்கிடும் போது லைட்டாக நெளியத் துவங்கியதை இங்கு நிலவிய அமைதி எனக்கு உணர்த்திடாதில்லை ! இந்தத் தொடரினில் நான் பணியாற்றத் தொடங்கிய ஆரம்பக்  கட்டத்தில் எனக்குமே உங்களது நிலைமை தான் ! ஒரு வழக்கமான பிரான்க்கோ-பெல்ஜிய சாகசத்தில் நாம் பார்த்துப் பழகி விட்டுள்ள அழுத்தமான plots இங்கே குறைவது போல் எனக்குமே தோன்றியது ! என்னதான் ஒரு படைப்புலக ஜாம்பவான் இதன் பின்னணியில் இருப்பினும் - நமக்கு ஒரு முழுமையான திருப்தி கிடைக்கக் காணோமே என்றே எனக்கும்பட்டது ! ஆனால் பொறுமையாய் இந்தத் தொடரின் பின்னணி  பற்றியும், ஹெர்மெனின் பேட்டிகளையும் ஆங்காங்கே  தேடிப் பிடித்துப் படிக்கத் துவங்கிய பொழுது - கொஞ்சமே கொஞ்சமாய் மனுஷனின் தலைக்குள் எட்டிப் பார்க்க முடிந்தது போல் உணர்ந்தேன் !

போன மாதம் ஐரோப்பிய விமான நிலையத்தில் 5 மணி நேரங்களை செலவழித்ததாகச் சொன்னேன் அல்லவா ? - அது லண்டன் விமான நிலையம் & என் கையில் சிக்கியது COMICS HEROES என்ற இதழ் ! அதனிலிருந்து ஹெர்மெனின் பேட்டி இது  :
------------------------------------------------------------------------------------------------------------
பேட்டியாளர்: காமிக்ஸ் உலகிற்குள் நீங்கள் நுழைந்தது எப்படி?

ஹெர்மன்: இன்டீரியர் டிசைனிங் மாணவன் நான் ! பீரோ; அலமாரிகளை உருவாக்கும் பணிகளில் இருந்தவன், பின்நாட்களில் எனது மச்சானாகவும், பிரபல Spirou பத்திரிகையின் தலைமை எடிட்டராகவும் மாறிடவிருந்த பிலிப் வாண்டூரனைச் சந்தித்த சமயம் என் வாழ்க்கையே மாறிடக் கண்டேன். நான் அவ்வப்போது கிறுக்கி வைக்கும் சித்திரங்களைப் பார்த்து விட்டு- “உனக்கு ஓவியத்தில் திறமையுள்ளது. நீ ஏன் காமிக்ஸ் வரைய முயற்சிக்க கூடாது?” என்று கேட்டார் ! அந்நேரம் அவர் பணியாற்றிக் கொண்டிருந்ததொரு சாரணர் பத்திரிகையில் ஒரு சிறுகதை வரையும் வாய்ப்பை வாங்கித் தந்தார். So எனது ஆரம்பப் புள்ளி 1964-ல்!

பேட்டியாளர்: பிரபல ஓவியரான ஜிஜே (ஜோசப் ஜில்லென்) வின் தாக்கம் உங்களிடம் இருக்கக் கண்டீர்களா?

ஹெர்மன்: யெஸ்... ஜிஜெவின் ஓவியங்கள் மீது எனக்கு எக்கச்சக்கமான மையல் இருந்தது நிஜமே ! அவருக்குக் காமிக்ஸ் மீதெல்லாம் அத்தனை ஆர்வம் கிடையாது தான் ; ஆனால் தனது குடும்பத்தைக் காப்பாற்ற அவருக்குக் கிட்டிய வாய்ப்பாகவே இதைப் பார்த்தார் ! “ஜெர்ரி ஸ்பிரிங்” என்ற அவரது கௌ-பாய் தொடரின் துவக்கம் அமர்க்களமானது !

பேட்டியாளர்: சிற்சிறு அறிவூட்டும் காமிக்ஸ் பக்கங்களை வரைவது தானே Spirou பத்திரிகையில் உங்களது துவக்கமாக இருந்தது ?

ஹெர்மன்: ஆமாம் ! மிஞ்சி மிஞ்சிப் போனால் ஆறு பக்கங்கள் கொண்ட தொடர் அது ! எனக்கோ அது யானைப் பசிக்கான சோளப் பொரியாகவே இருந்தது. காலைப் பொழுதுகளில் கட்டிடக்கலை நிபுணரின் அலுவலகத்தில் பணி புரிந்தவன், மதியங்களெல்லாம் புதுசு புதுசாய் ஏதேனும் படங்கள் வரைந்து பதிப்பகங்களிடம் காட்டிட முயற்சித்து வந்தேன். எதிர்காலத்தில் எனது கதாசிரியராகவிருந்த மிக்கெல் க்ரெக்கை அப்படியொரு சந்தர்ப்பத்தில் தான் சந்தித்தேன். கொஞ்ச காலத்திற்கு மட்டுமாவது தனது ஸ்டூடியோவில் பணியாற்றும்படி அழைப்பு விடுத்தார். நிறைய ஓவியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த அந்த ஸ்டூடியோவில் நான் இணைந்து கொண்ட போது எனது interior design வேலைக்கு முழுக்குப் போட்டேன் !

க்ரெக் ஒரு எழுத்தாளர் மட்டுமல்லாது, ஓவியருமே ! ஆகையால் படைப்பின் ஒவ்வொரு நிலைகளும் அவருக்கு அத்துப்படி ! ஆனால் மனுஷன் ரொம்பவே மோசமான ஆசான் ! மானத்தை கப்பலேற்றி விடுவார் ! அவருக்கு ஏற்பில்லாது போயின் - அந்தச் சித்திரங்களைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டும் விடுவார் ! “அட போங்கப்பா...!” என்று நான் மூட்டையைக் கட்டி இருப்பேன் ; அல்லது நடுமூக்கில் க்ரெக்கைக் குத்தியிருப்பேன் - அந்தத் தருணத்தில் ! ஒரு மாதிரியாய் சூடு தணிந்து க்ரெக் பணியாற்றத் தொடங்க - அடுத்த 18 ஆண்டுகளுக்கு எங்களது கூட்டணி தொடர்ந்தது !

பேட்டியாளர்: உங்களது கூட்டணி துவங்கியது Spirou பத்திரிகைக்குப் போட்டியாய் வெளியான Tintin பத்திரிகையில் 1966-ல் தான் ! “பெர்னார்ட் பிரின்ஸ்” என்ற இன்டர்போல் ஏஜெண்ட், பின்நாட்களில் கடல்களில் சாகஸம் செய்யும் வீரனாக பரிணாம மாற்றம் கண்டார் !

ஹெர்மன்: ஆரம்பத்தில் கேப்டன் பிரின்ஸ் ஒரு தங்கக் கம்பி ! படிய தலைவாரி ; நியாயமாய் சுற்றி வந்தவர் ! ஆனால் 1959-ல் பிரெஞ்சு காமிக்ஸ் உலகில் மாற்றத்தின் காற்று வீசத் துவங்கி இருந்தது !. Pilote என்றதொரு காமிக்ஸ் இதழில் – காலமாய் பழக்கப்பட்டிருந்த பல சம்பிரதாயங்களுக்கு முழுக்கு போட வழிகாட்டினார்கள். “ஹீரோக்கள்” என்றாலே நல்லதை மட்டுமே செய்யும் கட்டுப்பெட்டிகள் என்ற மரபுகளை கேப்டன் டைகர் (Lt. Blueberry) கதைகள் மூலமாக பின்னாட்களில்  சார்லியேவும், ஜிரோவும் உடைத்துக் காட்டிக் கொண்டிருந்தனர். So இயல்பாகவே நல்ல காமெடி உணர்வு கொண்ட க்ரெக், கேப்டன் பிரின்ஸ் தொடருக்கும் ஒரு திசை மாற்றம் தந்தார் – கரடுமுரடான பார்னேவை  இணைத்துக் கொண்டு ! டின்டினுக்குத் துணையாகக் கேப்டன் ஹேடாக் வலம் வந்தது போல பிரின்ஸின் துணைவன் – பார்னே  கோர்டன் ! ஒரு சைவமான ஹீரோ ; ஒரு அசைவமான துணை நாயகன் என்ற பார்முலா அழகாய் ஒர்க் அவுட் ஆனது ! 2010-ல் என் மகன் எழுதிய கதையோடு - ஒரு அட்டகாசமான கேப்டன் பிரின்ஸ் ஆல்பத்தை உருவாக்கினேன் ! க்ரெக்கின் கதைகளை விட இது எவ்விதத்திலும் சோடை போயிருக்கவில்லை ! ஆனால் விற்பனையில் உதை வாங்கியது. இந்தத் தொடரின் ஆயுட்காலம் முடிந்து விட்டதென்பது புரிகிறது !

பேட்டியாளர்: 1966-ல் TinTin பத்திரிகைக்கு க்ரெக் எடிட்டராகினார். கேப்டன் பிரின்ஸில் துவங்கி, சிலபல தொடர்களையும் நவீனமாக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்கு பத்திரிகையின் டைரக்டரும், Tintin கதைகளின் பிதாமகருமான ஹெர்ஜ் எவ்விதம் react செய்தார் ?

ஹெர்மன்: ஹெர்ஜிடம் தான் லகான்கள் இருந்தன என்றாலும், அவர் என்றைக்குமே ஒரு சர்வாதிகாரியாக இருந்ததில்லை ! மாற்றங்களின் அவசியங்களை ‘சட்‘டென்று புரிந்து கொள்ளும் சமர்த்தர் அவர். எனது சித்திர பாணி ரொம்பவே தடாலடியாய் இருப்பதாய் புகார்கள் வெளியிலிருந்தும்; பத்திரிகைக்கு உள்ளிருந்துமே புகார்க் குரல்கள் எழுந்து கொண்டிருந்தன. ஆனால் க்ரெக்கின் பராமரிப்பில் இதழின் விற்பனை உயரே செல்லச் செல்ல எதிர்ப்புக் குரல்கள் மாயமாகிப் போயின !

பேட்டியாளர்: 1972-ல் நீங்களும், க்ரெக்கும் genre மாற்றத்தோடு “கமான்சே” என்ற கௌபாய் தொடருக்குத் துவக்கம் தந்தீர்கள் ! பத்திரிகைக்கு அது கூடுதலானதொரு கரடுமுரட்டுத்தனம் வழங்கியது என்று சொல்லலாமா ?

ஹெர்மன்: யெஸ் ! கரடுமுரடான வன்மேற்கை நாசூக்காய் சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆகையால் உள்ளதை உள்ளபடிக்கே காட்டும் தொடராக கமான்சேவை இட்டுச் செல்ல ஆசைப்பட்டேன் ! அதன் நான்காவது ஆல்பத்தில் (ஓநாய் கணவாய்) வரும் கொலைகாரனைக் கைது செய்வது போல க்ரெக் கதை அமைத்திருந்தார். “தூத்தேறிப் பயலைப் போட்டுத் தள்ளி விடலாமே ! கதையை அதுபோல மாற்றுங்களேன் !” என்று க்ரெக்கை வற்புறுத்தியதன் பலனாக, குப்பைக் கூடைகளுக்கு மத்தியிலான சந்தில் ரெட் டஸ்ட் அவனை சுட்டுத் தள்ளினார் ! ஆனால் அடுத்த ஆல்பத்திலோ - அதற்குத் தண்டனை அனுபவித்தது போல் ரெட் டஸ்ட் ஜெயிலிலிருந்து வெளிவருவதாக க்ரெக் கதையெழுதியிருந்தார். எனக்கு இது போன்ற போலி நாகரீகங்களில் இஷ்டமே கிடையாது ! நிஜமான வன்மேற்கில் வாழ்க்கை நிச்சயம் இவ்விதம் இருந்திருக்காது ! ஒருவேளைச் சாப்பாட்டிற்கெல்லாம் ஒரு உயிரை எடுக்கத் தயங்காத நாட்களாச்சே அவை ?! மனிதனை ஆண்டவனின் அற்புதப் படைப்பு ; உன்னதத்தின் மறு உருவம் என்றெல்லாம் காட்டுவதில் எனக்கு உடன்பாடே கிடையாது. பசப்புவானேன் ? மொட்டையாய்ச் சொல்லியாக வேண்டிய விஷயங்களை மொட்டையாகவே சொல்லிப் போவோமே ?

பேட்டியாளர்: ”ஓவியர் மாத்திரமே” என்ற அடையாளத்தைத் துறந்து விட்டு- “கதாசிரியர் + ஓவியர்” என்ற அடையாளத்தை உங்களுக்கு வழங்கியது 1979-ன் ஜெரெமியா தொடரானது! வெற்றி கண்ட 2 தொடர்களைக் கைகழுவி விட்டு இதற்குள் புகுந்தீர்கள் ! அது பற்றி...?

ஹெர்மன்: யெஸ் ! ஒட்டுமொத்தச் சுதந்திரத்தை அனுபவித்தேன். க்ரெக்குடனான எனது நட்பு அத்தனை உறுதியானதாக இருக்கவில்லை ! நானாக அப்போது சின்னச் சின்னக் கதைகளை எழுதுவதுண்டு ! அவற்றைப் பார்த்த க்ரெக் - “ஒரு ஓவியனின்   சக்திக்கு  இவையெல்லாம் நல்ல கதைகளே ; ஆனால் ஒரு நிஜமான கதாசிரியரின் தரத்தை இவை ஒருபோதும் எட்டிப் பிடிக்காது !” என்றார் ! ஆக எனக்கு என்ன சாத்தியப்படும் ? என்று நானே தேடித் தெரிந்து கொள்ளத் தீர்மானித்தேன். ஒரு ஜெர்மானிய காமிக்ஸ் பத்திரிகை தந்த வாய்ப்பை இறுகப் பற்றிக் கொண்டு நானே முழுதாய் உருவாக்கிடப் போகும் தொடரை அதனில் வெளியிடத் திட்டமிட்டேன் ! ஜெரெமயா வெற்றி கண்ட பின்நாட்களில் “ஹெர்மன் ஒரு கதாசிரியராகவும் சாதித்துக் காட்டி விட்டான்!” என்று க்ரெக் அபிப்பிராயப்பட்டாராம் !

1943-ல் ரெனே பார்ஜாவெல் என்ற கதாசிரியர் உருவாக்கியிருந்ததொரு science fiction நாவல் தான் ஜெரெமயா தொடருக்கான துவக்கப்புள்ளி ! தொட்டு விடும் தூரத்திலிருக்கக் கூடிய எதிர்கால உலகமே அந்த நாவலின் களம் !! ஒரு அணுயுத்தம் உலகை துவம்சம் செய்திருக்க, அதனில் தப்பிப் பிழைத்தோரின் வாழ்க்கை அதனில் சொல்லப்பட்டிருக்கும் ! நான் ஜெரெமயாவுக்கும் அதையே பின்புலமாக்கினேன். நிறவெறியில் துண்டாடப்பட்ட அமெரிக்காவில் உள்நாட்டுக் கலகமும், ஒரு அணுஆயுத யுத்தமும் அரங்கேறிட- 300 ஆண்டுகள் பின்நோக்கிப் போய் விடுகிறது அந்த பூமி ! ஒரே இடத்தைச் சுற்றிக் கதை சுழன்று வரும் பட்சத்தில் போரடித்து விடக் கூடும் என்பதால் அதனை ஒரு பயணமாகவே அமைத்தேன் ! It’s a post–apocalyptic road movie of sorts ! அவர்களது தேடல் முடிவற்றது ! உங்களுக்கும், எனக்கும் கூட அதுவே தானே கதை ? முடிவில்லாத் தேடல் தானே இந்த வாழ்க்கையே ? அந்தப் பயணத்தில் நல்ல சமாச்சாரங்களுக்கும் பஞ்சமில்லை என்பதால் மனிதன் அதனை ஓயாது வாழ்ந்து அனுபவித்துப் பார்க்கிறான் ! 

எனது 34வது ஆல்பம் விரைவில் வெளியாகக் காத்துள்ளது. அதில் ஜெரெமயாவை சந்திக்கும் முன்னரான கர்டியின் ப்ளாஷ்பேக் பற்றிச் சொல்லவிருக்கிறேன் ! 2002 முதல் 2004 வரை அமெரிக்காவில் டி.வி. தொடராக ஜெரெமயாவை எடுத்தார்கள். எனக்கு அதைச் சகிக்க முடியவில்லை ; ஆனால் நிறையவே பணம் தந்தார்கள் ! கர்மம் எக்கேடோ கெடட்டும் என்று கைகழுவி விட்டேன் !"
-----------------------------------------------------------------------------------------------------------
இது ஹெர்மெனின் பல பேட்டிகளுள் ஒன்றே ; ஆனால் ரொம்பவே சமீபமானது என்பதால் அதனை உங்களோடு பகிர்ந்திட நினைத்தேன் ! 78 வயதாகும் இந்த “இளைஞர்” என்னமாதிரியான மனவோட்டத்தில் படைப்புகளை அணுகுகிறார் ; குறிப்பாக ஜெரெமயா பற்றிய அவரது சிந்தைகள் என்னவென்று இதோ- அவரது பிரத்யேக வலைத்தளத்திலுள்ள விவரிப்பு :

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் நிறவெறி உலகைப் புரட்டிப் போட, அணுஆயுத யுத்தத்தின் பலனாய் அமெரிக்கா கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்குப் பின்னே போவதாய் இந்தக் கதைக்களம் இருக்கும் ! ஒரு நாகரீக சமுதாயமென்பது ஒட்டுமொத்தமாய் நிர்மூலமாகிப் போய்க் கிடக்க, எஞ்சியிருக்கும் ஜனமானது சிற்சிறு கூட்டங்களாய் ; பிரிவுகளாய் ஒன்றிணைந்து, தங்களது வாழ்க்கைகளை மீட்டெடுக்க முயற்சிக்கிறார்கள் ! செய்த தவறுகளிலிருந்து பாடம் படிக்கும் பக்குவமின்றி திரும்பத் திரும்ப சொதப்பிடும் மனிதர்களையே இங்கே பார்க்கலாம் ! வன்மேற்கின் “பலமே ஜெயம்” என்ற ஃபார்முலா தான் இந்த எதிர்கால சிதில உலகிலும் நிலவிடும் ! சோக கீதங்களும், சென்டிமெண்டைப் பிழிந்தெடுக்கும் வயலின்களும் ஹெர்மெனுக்கு எட்டிக்காயாய் கசப்பன என்பதால் அந்தப் பக்கமாகவே கதைகள் பயணிக்காது ! உள்ளதை உள்ளபடிக்கு ; மிகைப்படுத்தலின்றி ; ஒரு கரடுமுரடான கவிதையாய் - பயணத் தொடராய் சொல்ல முற்படுவதே ஜெரெமயா ! பசியைப் போக்க உணவு ; பொழுதைப் போக்க கேளிக்கை - இவை தான் இங்கே உலவும் மனிதர்களின் தேடுதல்கள் !

1980-களின் துவக்கத்தில் ஒரு பேட்டியின் போது ஹெர்மென் சொன்ன சமாச்சாரத்தையும் இங்கே நினைவு கூர்வது பொருத்தமென்று சொல்வேன் ! “ஒரு குரூரமான கதையைச் சொல்லும் உத்வேகம் எனக்குள் ததும்பி நிற்கிறது ! மொள்ளமாறிகளையும், களவாணிகளையும் கூட நாசூக்காய்க் கையாள நினைக்கும் சமுதாயத்தின் மீது எனக்கு அளப்பரிய கோபமுண்டு ! சமூகத்தின் மீதான அந்த ரௌத்திரத்தை ஒரு இளம் ஹீரோவின் வாயிலாக உலகிற்குச் சொல்ல நினைத்தே ஜெரெமயாவை உருவாக்கினேன் !” ஆனால் அந்தக் கோபத்தை மட்டுமே சொல்ல நினைத்தால் காலம் தள்ள முடியாது என்பதை உணர்ந்தவர் சற்றே நிதானித்துக் கொண்டார் !

கதை பயணிக்கும் போதே, நாயகர்களும், ஹெர்மனுமே பக்குவப்படுகிறார்கள்! வானளாவிய கட்டிடங்கள் ஒரு பக்கம் ; கல்லுடைக்கும் மக்கள் இன்னொரு பக்கம் ; விலையுயர்ந்த வாகனங்கள் ஒரு திசையில் ; கழுதை மீதான  சவாரி மறு மார்க்கத்தில் என்று எதிரும் புதிருமான காட்சியமைப்புகள் இந்தத் தொடரில் ஒரு தொடர்கதையே ! முரண்கள்; எத்தனை காலமானாலும் மனிதர்களிடமிருந்து விட்டு விலகா வன்மங்கள் ; வக்கிரங்கள் என்று வாழ்க்கையை வார்னிஷ் அடிக்கா கண்களோடு ஒரு பயணமாய் சித்தரித்துக் காட்டுவதே ஜெரெமயா !

So இதைப் புரிந்தான பின்பே இதழின் முன்னட்டை இன்னரில் அழுத்தமாய் ஒரு முன்னோட்டமும், ஹாட்லைனிலும், இங்கே நமது பதிவிலும் சில hint-களும் தந்திருந்தேன் - என்ன எதிர்பார்த்திடலாமென்பதற்கு ! ஆனால் நம்மை அறியாமலே காலங்காலமாய் நாம் பார்த்து, படித்து, ரசித்துப் பழகிப் போயிருக்கும் பாணியைத் தேடிடும் மனதானது, ஜெரெமயாவிலும் அதையே தேடிடும் போது தான் நெருடல்கள் எழுந்திருக்குமென்பது புரிகிறது folks ! 25 மொழிகளில் சாதித்துக் காட்டியிருக்கும் இந்தத் தொடரை நாமுமே சிறிது பொறுமையோடும், பரிவோடும் புரிதலோடு அணுகிடும் பட்சத்தில் - ஹெர்மனின் பரட்டைத்தலை இளைஞர்கள் நமக்குமே ஆதர்ஷர்களாக மாறிடுவார்களோ - என்னவோ ? அடுத்த 3 பாகங்கள் அடங்கியதொரு தொகுப்பையும் தொடரும் மாதங்களில் பரிசீலித்து விட்டு - அதன் பின்பாய் நம் மத்தியில் இதன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்தல் சரியென்று பட்டது folks ! உங்கள் எண்ணங்கள் எப்படியோ ? சொல்லுங்கண்ணே சொல்லுங்க !!

Moving on, "வித்தியாச பாணிச் சமாச்சாரங்கள்" இன்னமும் ஓய்ந்திடவில்லை !!  நமது அரசியல் கூட ஏதேனுமொரு கட்டத்தில் போரடித்து விடக் கூடும் ; ஆனால் எல்லைகள் அறியா நமது காமிக்ஸ் தேடல்களில் விறுவிறுப்பு குறைந்திட வாய்ப்புகள் பூஜ்யம் என்பேன் ! இதோ நடப்பாண்டின் ஒரு புதுப் பரிமாணமான சந்தா E பக்கமாய் கடந்த 4 நாட்களாய் கவனத்தை ஓட விடும்போது மொத்தமாகவே ஒரு புது அனுபவம் கிட்டுகிறது !

Of course - கதைத் தேர்வுகளின் வேளையில் இந்தக் கதைகள் பக்கமாய் நிறையவே நேரம் செலவிட்டிருந்தேன் தான் ! ஆனால் கதைச் சுருக்கங்களை ; விமர்சனங்களை ; பிறமொழி வாசகர்களின் அபிப்பிராயங்களைப் பரிசீலிப்பதற்கும் - முழு மொழிபெயர்ப்போடு முழுக்கதையையும் படிப்பதற்கும் உலகளவு வித்தியாசம் உண்டு தானே ? “ஒரு முடியா இரவு” கதையினையும் சரி, “என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்” இதழையும் சரி - முழுசாய் படிக்க முடிந்தபோது எனது முதல் ரியாக்ஷன் பரட்டை மண்டை ஜெரெமியாவைப் போல் இப்படித் தானிருந்தது!
MMS இதழுக்கென முயற்சிக்கப்பட்ட டிசைன்களுள் ஒன்றிது ! ஆனால் கதை # 3 -ன் பிரத்யேக ராப்பர் மட்டுமே இது எனும் பொழுது - மூன்று  கதைகள் கொண்ட தொகுப்புக்கு இது வேண்டாமென படைப்பாளிகள் அபிப்பிராயப்பட்டனர் !! 
இவை  இரண்டுமே  பேய்-பிசாசு-ஆவி-அமானுஷ்யம்-திகில் என்ற பாணிக்  கதைகளல்ல ! மாறாக - படு வித்தியாசமான 2 knot-களைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கும் கதாசிரியர்களின் ஆக்கங்கள் !  கதை சொல்லும் யுக்திகளில் தான் எத்தனை- எத்தனை தினுசுகள்?!! கதாசிரியர்களின் கற்பனைகளுக்குத் தான் எத்தனை ஆயிரம் சிறகுகள் ?! ஒரு ஹீரோவை உருவாக்கி - கதைக்களம் இதுதானென்றும் ஸ்திரப்படுத்திய பின்னே, அதற்குள் வண்டியை ஓட்டுவது, வடதுருவத்து எஸ்கிமோக்களைப் போன்றதெனில் - ‘கதையே தான் ஹீரோ‘; இதனுள் உலா செல்லும் மாந்தர்கள் அனைவருமே இதனுள் உபபாத்திரங்கள் தான் ! என்று தைரியமாய்ப் பிரகடனப்படுத்தி விட்டு, அந்தச் சாலையில் விதவித கதைக்கருக்களோடு பயணிப்பது என்பது தென்துருவத்தின் பென்குவின்களைப் போன்றது என்பேன் ! யப்பாடி !!  என்னவொரு மாற்றம் - இந்த பாணியிலான கதைக்கருத் தேர்வுகளிலும், கதை சொல்லும் விதங்களிலும், நகர்த்தல்களிலும் ! And பயமே வேண்டாம் - இவை நிச்சயம் அழுகாச்சிகளும் அல்ல ; சித்திரங்களின் பலத்தில் மட்டுமே சவாரி செய்திடும் கதைகளுமல்ல !! ஒவ்வொன்றுமே ஒரு புது திசையில் பயணிக்கும் சுவாரஸ்யமான கதைகளே ! இதோ சந்தா E -வின் முதல் இதழின் அட்டைப்பட முதல்பார்வை !! 
இன்னமும் பூர்த்தியாகா ராப்பரே இது !!
Oh yes, அந்த அடர் சிகப்புச் சிங்கமும், அந்த புது லோகோவும் புருவங்களை உயரச் செய்கின்றனவா ? சில பல ஆண்டுகளுக்கு முன்பாய் ; "கி.நா." கதைகளுக்கென ஒரு தனித் தடம் தந்திடும் எண்ணத்தில் நண்பர்களை அதற்கான லோகோவை உருவாக்கக் கோரியிருந்தது மறந்திருக்காது தான் !! நிறைய அழகான மாதிரிகள் கிட்டியிருப்பினும், அன்றைக்கு அவற்றுள் எதையுமே உபயோகத்துக்கு கொணர முடிந்திருக்கவில்லை ! ஆனால் வாகான வேளையினில் அவற்றுள் ஒன்றை உபயோகித்தே தீர வேண்டுமென்ற ஆர்வம் என் மண்டைக்குள் ஒரு ஓரமாகவே குந்தியிருக்க - இந்தத் தருணத்தில் அவற்றைக் களமிறக்குவது சரியாக இருக்குமென்று பட்டது ! முதன்முறையாக காமிக்ஸ் பக்கம் வருகை தருமொரு casual reader அட்டைப்படங்களையும், நமது மாமூலான லோகோக்களையும் பார்த்துவிட்டு இதனை வாங்கிப் படிக்கும் பட்சத்தில் அவரது reactions எவ்விதம் இருக்குமென்று யூகிக்கத் தெரியவில்லை எனக்கு ! ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறே பதமென்று தீர்மானித்து விடக் கூடாதென்பதால்  சற்றே முதிர்ந்த ரசனைகளுக்கான இந்தக் கதைவரிசைகளை சற்றே வித்தியாசப்படுத்திக் காட்ட இவ்விதமொரு தனி லேபில் இருப்பின் நன்றென்றுபட்டது ! So - "லயன் கிராபிக் நாவல்" பிறந்த கதை இது தான் ! நண்பர் கார்த்திக் சோமலிங்கா உருவாக்கித் தந்த  கம்பீரமான லோகோவை பச்சக்கென்று முன்னட்டையில் பதித்து விட்டோம் !! Thanks கார்த்திக் !! இதழிலும் இதற்கொரு சிறு mention இருந்திடும் !

ஓங்கியடிச்சா ஒண்ணரை டன்‘ பாணி பன்ச்கள் எழுத அவசியமின்றி - நார்மலான மொழிபெயர்ப்பிலேயே கதைகள் மிளிரக்கூடிய சாத்தியங்கள் ‘பளிச்‘ என்று தெரிவதால் என்பாடு லேசு என்று பட்சி கூரை மேல் அமர்ந்து சொல்கிறது ! அதே போல "நாயகர்கள்" என இங்கே யாரும் கிடையாதென்பதால் ஒரு குறிப்பிட்ட விதத்தில் தான் மொழிநடை அமைந்திருக்க வேண்டுமென்ற கட்டாயங்கள் ஏதுமில்லை ! உதாரணம் சொல்வதெனில் இம்மாத டெக்ஸ் கதையைச் சொல்வேன் ! இதற்கு முன்பான, சமீபத்தைய மொழிபெயர்ப்புகள் சகலமுமே சுத்தமான தமிழில் இருந்து வருவதால் இம்முறையும் அதுவே தான் நமக்கிருந்த மார்க்கம் ! ஆனால் “பனியில் ஒரு கண்ணாமூச்சி” கதைக்கு சுத்தத் தமிழ் இல்லாது, பேச்சு வழக்குத் தமிழைக் கையாள முடிந்திருப்பின் கதையோட்டத்துக்கு இன்னமுமே உதவியிருக்குமென்று மனதுக்குப்பட்டது ! இது போன்ற சிற்சிறு கட்டாயங்களில்லாத்தன்மை இந்த one-shot கதைகளில் மிகுந்து கிடப்பது மனதை இலகுவாக்குகிறது !

இந்தக் கதைகள் “வெகுஜன ரசனை” என்ற அக்னிப் பரீட்சைகளைத் தாண்டுமா ? தாண்டாதா ? மடிப்பாக்கத்திலும், தாரமங்கலத்திலும், பெங்களுரிலும் சிலபல பயப்பந்துகள் அடிவயிற்றைக் கவ்வும் படலங்கள் தொடர்ந்திடுமா - தீர்ந்திடுமா ? என்றெல்லாம் எனக்கு விடை தெரியவில்லை இந்த கணத்தில்  ! ஆனால் மரத்தைச் சுற்றிப் பாட்டுப் பாடித் திரிவதைத் தாண்டியும் ஒரு படைப்புலகம் உள்ளது ; அதனை நம் வாசக வட்டத்துக்கு அறிமுகம் செய்யும் வாயில் கதவுகளுமே திறந்து தானுள்ளன என்றதொரு உணர்வே உள்ளத்தை நிறையச் செய்கிறது ! பரீட்சை எழுதத் தயாராகிறோம் - முடிவுகள்; தீர்ப்புகள் பற்றிப் பெரிதாய் எந்தச் சலனங்களுமின்றி ! Please wish us luck guys !

ஏப்ரல் இதழ்கள் சுடச்சுட உங்கள்வசம் உள்ள வேளைதனில்- வள-வளவென்று நிறைய எழுதி, ஒளிவட்டத்தை அந்த இதழ்களிலிருந்து விலக்கிட வேண்டாமென்பதால் - ‘முடியா இரவுக்குள்‘ மூழ்கப் புறப்படுகிறேன்! நமது இரவுகளில் ஏகப்பட்டவை துவங்குவது எப்போது ? நிறைவுறுவது எப்போது ? என்ற எல்லைக் கோடுகள் இல்லாதவைகளே எனும்போது - இந்தத் தலைப்பு சன்னமான புன்னகையைக் கொண்டு வருகிறது முகத்தில் ! அடுத்த மாதம் இதே வேளையில் இந்த சந்தா E இதழினைப் படித்த பின்னர் உங்கள் முகங்களிலும் இதே புன்னகை பிரதிபலிப்பின்- நமது பயணத்தின் இன்னொரு பரிமாணம் துவங்கியிருப்பது நிச்சயம் ! 

நிறைய பிரதிகள் அச்சிடப் போவதில்லை இதனில் ! சந்தா போக - maybe 250 பிரதிகள் மாத்திரமே கூடுதலாய் !! So இந்தக் கதைகள் அதற்கெனவுள்ள வாசகர்களோடு மட்டுமே சவாரி செய்திடவுள்ளன ! So வெளியான சற்றைக்கெல்லாமே இவை தீர்ந்திடும் வாய்ப்புகள் ஜாஸ்தி என்று இப்போதே சொல்லிவிடுகிறேன் guys ! கைவசம் ஸ்டாக் நிரம்பி வழியும் நிலையில் - we are really short of options !

Bye guys! See you around ! ஏப்ரல் இதழ்களைப் பற்றிய உங்களின் சிந்தனைகளோடு தொடருங்களேன் ! ஜாக்கி புகழ் ஜானியின் "கொலைக் கரம்" இதழை அலசுவோமா ? See you around !!

274 comments:

  1. Good morning to all, happy Sunday

    ReplyDelete
  2. First time in my life , comes in top 10

    ReplyDelete
  3. 3rd. எவ்ளோ பெரிய பதிவு. படிச்சிட்டு வாரேன்.

    ReplyDelete
    Replies
    1. Sankar C : சாயந்திரத்திலிருந்து நாக்குத் தொங்க உருவாக்கியதாச்சே !

      Delete
  4. 2018 டெக்ஸின் 70வது வருடம். பாத்து சூப்பரா எதுனா செய்யுங்க.

    ReplyDelete
    Replies
    1. Mahendran Paramasivam : "செஞ்சிடுவோம் !!"

      Delete
    2. //2018 டெக்ஸின் 70வது வருடம். பாத்து சூப்பரா எதுனா செய்யுங்க.//

      +111111111

      Delete
    3. ///:செஞ்சிடுவோம்:////

      கொஞ்சம் பயமா இருக்குது!

      Delete
  5. ஜெராமையா இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. உங்கள் விளக்கங்கள் எதிர்பார்ப்பை கொட்டிவிட்டன. காமிக்ஸ் படிக்கும் அனுபவமே தனிதான். எல்லா காலங்களுக்கும் படிக்க வித விதமான கதைகள். அதுவே நமது ஸ்பெஷல். தொடரட்டும் உங்கள் தேடல். வளரட்டும் நமது ரசனை.

    ReplyDelete
  6. பதிவு அருமை ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. செந்தில் சத்யா : அட..மெய்யாலுமே அதற்குள் முழுசையும் படித்து விட்டீர்களா சத்யா ?

      Delete
    2. உங்கள் பதிவை வெகு நேரமாக எதிர் பார்த்து காத்திருந்ததால் மெய்யாலுமே முழுசையும் படித்து விட்டேன் ஆசிரியரே

      Delete
  7. Kaanamal ponae editor kidaichutaru doooiiiii....

    ReplyDelete
    Replies
    1. Dasu Bala : அப்பப்போ "காணாது" போனால் தானே இதழ்களை உங்கள் கண்ணில் காட்ட முடியும் சார் ?

      Delete
  8. மிக நீண்ட ப தி வு .

    ReplyDelete
  9. ஹெர்மன்_ஜெரேமயா அடுத்தடுத்த பயணங்களின் நிகழ்வுகளின் கதைகளை இருவேறு குணாதியங்கள் கொண்ட பாத்திரங்கள் மூலம் உருவாக்கி;வெற்றிகரமான கதை சொல்லிகளுடைய வரிசையிலும்;அபாரமான ஓவியர்களுடைய வரிசையிலும் தன்னுடைய ஆற்றலை நிலைப்படுத்தியுள்ளார். 22ம் பக்கம் கர்டி மலாயை விடுவித்த பின்பு; ஜெரேமயாவை கர்டி மலாய் சிறை படுத்துவதையும். 32ம் பக்கம் லாங்டன் நகருக்குள் மஹானி' நார்ட்டனை கட்டிஅனுப்பும் காட்சிகளை அதிரடி சாகச காட்சிகளாக புனையாமல் வெகு எளிமையாக உணர்த்தும் விதம் அற்புதமான ஆக்கம். .27ம் பக்கம் சுண்டு விரலை உயர்த்தினாலே கபாலம் பொத்தல் விழும் சூழல். துப்பாக்கி விசையை இயக்கும் நோக்கில் சுட்டு விரலை உயரத்துவதை ஓவியர் விரலின் நிழல் மூலமாக காட்சிப்படுத்தியிருப்பார். பௌன்சரின்"கறுப்பு விதவை"யில் பௌன்சரை தன்னுடைய கைப்பாவையாக மாற்ற தன்னையே தருவதாக விலைபேசும்(57ம் பக்கம்)டீச்சரின் செய்கை;பௌன்சரின் சிந்தனையை எவ்விதம் ஆக்கிரமித்திருப்பதை62,63ம் பக்கத்து ஓவியங்களில் மறைமுகமாக(பிரான்சே போக்) விளக்கியிருப்பார். என் பெயர் லார்கோவில்(58ம்பக்கம்) எவரெவரிடம் இருந்து லார்கோவிற்கு கடிதங்கள் வந்துள்ளது.அதன் சாரம் எத்தகையது என்பதை இரு கைகளின் விரல் சைகைகளின் மூலம்(பிளிப் பிரான்கோ) உணர்த்தியிருப்பார். ஓவியக்கலையின் நுட்பங்களை மேதமையோடு காட்சிப்படுத்தும் திறன் பிரமிக்க செய்கிறது. ஹெர்மன் ஆகச் சிறந்த ஓவியராகவும்;கதை சொல்லும் ஆற்றலில் அபாரமானவராகவும் நிரூபித்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. @ ஸ்ரீராம்

      நீங்கள் குறிப்பிட்ட 22 பக்கத்தை நான் கவனிக்கவில்லை. அந்த ஆள்காட்டிவிரலின் நிழல்....விரல் உயருவதை அற்புதமான வரைந்துள்ளார். ஸுப்பர்..!!!

      அதேபோலவே என் பெயர் லார்கோவில்...காதுகேளாதவர்கள் பயன்படுத்தும் விரல் குறியீடை பயன்படுத்தும் அந்த பணிப்பெண் செய்கையை சுட்டிகாட்டலும் அருமை..!

      ஜெரேமியாவில் முதல் பாகத்திலேயே நான் கவனித்த சில கைஜாலங்கள் பற்றி ஒரு அப்டேட்ஸ்...

      பக்கம்-10 : இருவயோதிர்களின் உணர்வை பிரதிபலிக்கும், கைபிடித்து தவிப்பை பகிரும் படம்

      பக்கம்-11 : கோவேறு கழுதையை பிடிக்க கழுதைக்கு தெரியாமல் அதன் லகானை பிடிக்க அசையும் கைஅசைவுகள்

      பக்கம்-14 : மாடய் கர்டி காதில் புற்களை அடைத்துக்கொள்ள கைகள் பிசையும் ஓவியம்

      பக்கம்-17 : வேதனையுடன் சோர்ந்து கைகள் தளர்ந்து ஜெரேமியா தரைபார்த்து கைகள் தொங்க...அங்கு கழுகின் இறகும்...அதிர்ச்சியும்,கேள்வியும் குறியீட்டில் காட்டிய இடம்...
      அதே பக்கத்தில்...
      சுகமாய் சுருட்டு உறுஞ்சும் கர்டி தலைபொட்டில் துப்பாக்கி அழுத்த...அந்த சுருட்டை ஒரு முரட்டு கைபறிப்பதும்,அடுத்த காட்சியில் அது முரடன் உதட்டில் புகைப்பதுமான காட்சி

      பக்கம்-25 : கர்டி..ராமையாவிடம் நாணயம் சுண்டிவிடும் இடம்

      பக்கம்-26 : கர்டி பெண்வேடத்தில் வயோதிகனை அழைக்க...என்னைய என விரல் நீட்டுவதும், மீசையை முறுக்குவதுமான கை பாவங்கள்...

      பக்கம்-34 : தூக்குகயிறு உயர்ந்துவிட்டதை உணர்த்தும்படி...கால்கட்டை விரல்கள் அந்தரத்தில் துடிக்கும் அசைவுகள்...

      பக்கம்-36 : படிக்கட்டுகளில் உள்ள ஈரகால்தடத்தை பார்த்த காவலாளி...விரல் சொடுக்கி கையில் இரு என சைகை செய்தல்...

      தொடரும்...

      Delete
    2. பக்கம்-43 : கர்டி தொப்பி உடையுடன் இருளில் அமர்ந்திருக்க...கழுகுகள் கீச்சிடும் மயானஅமைதி...அடுத்தபக்கத்தில் தொப்பி,உடை மட்டுமே கரையில் இருக்கும்...கழுகுகள் கீச்சலின் சத்தத்தில் நீலமுகத்தான் தூங்க...[பேசும்படம் கமல் போலவே..கவனிக்க கோடையிடி ஸார்..;) ] தண்ணீரில் ஒரு பெட்டி நகர...

      நிர்வாணமாக நீந்திசென்று இரும்புகோட்டையின் வலிமையை நோட்டமிட...அதை கவனித்த காவலாளி துப்பாக்கியில் சுட...தண்ணிரில் குதித்து கர்டி கரையை அடைவது என ஓவியங்களே ஒரு மொத்த காட்சியும் பேசுவதை என்ன சொல்ல...

      பக்கம்-46 : தாகத்தில் ராமையா தவிக்க....நீலமுகன் பணியாள் கொடுத்த ஜுஸை பேசிக்கொண்டே கைகள் கிழே ஊற்றும்...

      பக்கம்-49 : நீலமுகன் 'பெண்போலவே நடந்துகொள்ளும் பேடி' என்பதை உணர்த்தும் பல கைஅசைவுகள்

      பக்கம்-50 : கர்டி கயிற்றில் தொங்க...அடியாளிடம் பேரம்பேசும்போது...'ஒன்றுமில்லையே' என்பதுபோல...வலதுகரத்தால்..இடது கன்னத்தை கட்டைவிரலால் தட்டிவிடும் பாவனை..

      பக்கம்-53 : முத்தாய்ப்பாய்...கர்டி கைகளில் நீலமுகனின் இரண்டு மோதிரங்களும் அழங்கறிக்க...நீலமுகன் போலவே பெண்கள் நளினத்துடன் லாகனை பிடித்திருப்பது என....

      அய்யோ...போதும் வேதாளரே..போதும்...ஜெரேமியா அருமையா இருக்குங்கோ..அருமையா இருக்கு...தயவு செஞ்சி முடிச்சிகங்க..வேதாளரே...முடிச்சிகங்க...!திரும்ப அந்த ராமையாவை எடுக்க வெச்சுடாதிங்க...

      நண்பர்கள் கெஞ்சலை தொடர்ந்து...வணக்கம்.!

      ஆங்..எனக்கொரு டவுட் மட்டும் சொல்ல முடியுமா செல்வம் அபிராமி ஸார்..???

      Delete
    3. //ஹெர்மன் ஆகச் சிறந்த ஓவியராகவும்;கதை சொல்லும் ஆற்றலில் அபாரமானவராகவும் நிரூபித்துள்ளார்.//
      +1

      Delete
  10. Dear editor
    I read jeremiah first story.
    It was discordant and artwork was jarring.Didnt feel good.
    I have loved green manor, irave irule , bouncer etc.jeremiah is a misfire.Over last few years all comics lovers are ready for alternative reading as proposed by you.but v need better stories.Even comanche stories are bland with no great emotion.Except bernard prince , i dont like herman works showcased by you.
    Regards
    Thanks
    Arvind

    ReplyDelete
  11. ஜெரமியா ஒரு அருமையான ,, வித்தியாசமான கதை.apocalyptic உலகில் நடந்திடும் எதிர்பாரா நிகழ்வுகளை, சம்பவங்களை ,adventure பாணியில் கதை நகர்கிறது. Hermann ஒரு வித்யாநசமான கதை சொல்லியாக, மிரட்டும் ஜாம்பவானாக திகழ்கிறார்
    கதையினை படிப்பதறகு முன்பாக ஒரு போரினால் சிதிலமடைந்த உலகினை கற்பனை செய்து கொண்டு தகுந்த mood and mindset உடன் படித்தால் ஒரு அருமையான அனுபவம் காத்துள்ளது.

    ReplyDelete
  12. விஜயன் சார், நமது அலுவலக நண்பர்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பங்குனி பொங்கல் வாழ்த்துக்கள்.

    தற்சமயம் விருதுநகரில் இருக்கிறேன், நாளை இரவுவரை இங்குதான்!

    கழுகு மலை கோட்டை முழுமையாக விற்று விட்டதால், தற்போது எல்லாம் டிஜிட்டல் மயம் என்பதால் அதனை புத்தக திருவிழா (ஈரோடு & சென்னை) நேரம்களில் மட்டும் அச்சிட முடியுமா! இதனை வாங்க துடிக்கும் மேலும் பலரை சென்று அடையும் என்பதால் இந்த (யோசனை) கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக வெகு நாட்களுக்கு பின் வெளியான பாக்கெட் சைஸ் இதழ் என்பதே இதன் மகத்துவம். இந்த இதழ் நம் பால்ய கால நினைவுகளை தூண்டி விடும். இந்த புத்தகத்தை தயவு செய்து எல்லாருக்கும் கிடைக்குமாறு
      ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு வெளியிடவும். ப்ளீஸ் சார்.

      Delete
    2. கம்பம் ஜெயகனேஷ் : சென்ற பதிவில் கேட்டிருந்த படி - அனைத்து மாடஸ்தி புத்தகம் கம்பத்துக்கு அனுப்புகிறேன் என் பாஸ் மூலம். உங்கள் முகவரியை இந்த id க்கு அனுப்பவும்

      comiclover.chennai@gmail.com


      I do not collect comics - so I am keeping it for you.

      Delete
    3. ஏன் பாஸ் எங்களுக்கெல்லாம் அனுப்ப மாட்டிங்களா

      Delete
    4. ஏன் பாஸ் எங்களுக்கெல்லாம் அனுப்ப மாட்டிங்களா

      Delete
    5. Senthil Sathya: கம்பம் ஜெய்கணேஷ் போன பதிவிலேயே கேட்டு விட்டார். அப்போதே அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டேன். என்னிடம் இருப்பது ஒரு பிரதி மட்டுமே.

      Delete
  13. Dear editor
    I dint find anything spl in jeromiah. If to tell d truth i donot like d ஓவியம which always open d mouth in a particular manner. More over most of d drawings r similar in nature with regard to face cut. Till d end i don't know who s d hero!!!.and also i dont know who his friend from d begining. Its better to select someother hero. Ter s no heroism in d story. And wher d story goes from d beginings till d end i can't understand. I cant find anything spl in dis edition except that opening of d mouth of d so called h(g)ero. Tnq

    ReplyDelete
  14. If you reduce the print run of some comics , it will encourage the black market sir ,

    ReplyDelete
  15. ஜெரோம்மியா இன்னும் படிக்கவில்லை. கொலைகரம் படிப்பது முதல் முறை அருமையான கதை. துத்தேறி பனிமலையில் கண்ணாமுச்சி டெக்ஸ் வில்லர் guest roleதான் ! பென்னி இன்று படிக்க போகிறேன் !

    ReplyDelete
  16. ///இதழின் ஆக்கம் ; சித்திர நேர்த்தி ; வண்ண பிரம்மாண்டம் ; புதிதான காலம் / களம் என்று முதல் பார்வையில் மெர்செலாகிப் போன நீங்கள் - கதைக்குள் மூழ்கிடும் போது லைட்டாக நெளியத் துவங்கியதை இங்கு நிலவிய அமைதி எனக்கு உணர்த்திடாதில்லை ! ///


    ராமைய்யா அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒஸ்தாவைய்யான்னு ஆட்டம் போட்டுவிட்டு, இதழை கையிலேந்திய தருணத்திலிருந்து ஆஹா! ஒருவழியா வந்துட்டாரேன்னு பிரமிச்சுப்போய் இருந்துவிட்டு, கதைக்குள் பத்து பதினைந்து பக்கங்கள் போனதும் ங்ஙேன்னு விழித்ததை தளத்தின் அமைதியிலேயே உணர்ந்துகொண்டீர்களே..!!நன்றி சார். .!:-)

    ட்யூராங்கோ வெளியான சமயம் தளமே அல்லோலகல்லோலப்பட்டது நினைவில் இருக்கிறது. மாறாக ராமைய்யா அப்படியே பொட்டில் அடித்து அமரவைத்துவிட்டார்.!

    அடுத்த முறை ராமைய்யா கலக்குவார் என்று எதிர்பார்க்கிறோம். .!

    ReplyDelete
  17. /// நமது அரசியல் கூட ஏதேனுமொரு கட்டத்தில் போரடித்து விடக் கூடும் ; ஆனால் எல்லைகள் அறியா நமது காமிக்ஸ் தேடல்களில் விறுவிறுப்பு குறைந்திட வாய்ப்புகள் பூஜ்யம் என்பேன் !///

    நூறுலட்சத்து நூற்றிலொரு வார்த்தை..! சந்தா E ன் வரவுக்காக நான்கு மாதங்களாக அண்ணந்தண்ணி ஆகாரம் ஏதுமின்றி ஆர்வங்கா வெய்ட்டிங்கு சார். .!

    ReplyDelete
    Replies
    1. //நான்கு மாதங்களாக அண்ணந்தண்ணி ஆகாரம் ஏதுமின்றி ஆர்வங்கா வெய்ட்டிங்கு சார். .!//என்னது அன்னந்தண்ணி இல்லாமலா? அப்படின்னா வெறும் சிக்கனும் மட்டனுமா சாப்பிட்டிரந்தீங்களா?

      Delete
    2. ///அப்படின்னா வெறும் சிக்கனும் மட்டனுமா சாப்பிட்டிரந்தீங்களா?///

      ஹிஹி. .!

      மீனும் முட்டையும் என்ன பாவம் செய்தன மஹி ஜி..! நீங்க குறிப்பிட்ட இருவரோடு இவர்களும் துணையிருந்தனர். .! :-)

      Delete
  18. லயன் கிராபிக் நாவல் என்னும் புதிய குழந்தைக்கு ஹேப்பி பர்த் டே..! அந்த லோகோ செம்ம மிரட்டலாக உள்ளது. (வாழ்த்துகள் கார்த்திக் சார்) .
    முன்னட்டையில் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு தினுசில் காட்சியளிப்பதும் ஒவ்வொரு பார்வையும் வெவ்வேறு தோரணையில் தோன்றுவதும் ஏதோ ஒரு புது உலகுக்கு நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டுமென்பதை நன்றாக புரியவைக்கின்றன.!

    முன்னட்டையை அப்படியே பின்னட்டையின் ஒரு பகுதியாக்கியிருப்பது வித்தியாசமான புதுப்பாணி . ரசிக்கும்படி இருக்கிறது சார். .!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN //ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு தினுசில் காட்சியளிப்பதும் ஒவ்வொரு பார்வையும் வெவ்வேறு தோரணையில் தோன்றுவதும் ஏதோ ஒரு புது உலகுக்கு நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டுமென்பதை நன்றாக புரியவைக்கின்றன.! //

      அட்டைப்பட ஓவியரின் எண்ணமும் அதுவே என்பேன் !!

      Delete
  19. வித்தியாசமான, செமையான பதிவு! ஓவியர் ஹெர்மனின் பிரத்யேகப் பேட்டியை 'தி இந்து' போன்ற தரமான நாளிதழில், தமிழில் படித்த திருப்தி கிடைக்கிறது!

    ஜெரமையா - முதல் பாகம் படித்துக் கொண்டிருக்கிறேன். முழுவதும் படித்த
    பிறகே ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று தோன்றுகிறது!

    சந்தா-Eக்காக ஆவலாய், ஆவலாய், ஆவலாய் வெய்ட்டிங்!

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு விஜய் : //ஜெரமையா - முதல் பாகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.//

      தலீவரின் வேகம் செயலரிடம் மிஸ்ஸிங் !

      Delete
    2. ////தலீவரின் வேகம் செயலரிடம் மிஸ்ஸிங் !////

      உண்மைதான் சார்! பதுங்கு குழியினுள் பாய்ந்து புகுந்துகொள்வதிலும்கூட தலீவரின் வேகம் அபாரமானது! ;)

      Delete
  20. ஒரு அற்புதமான கதை களத்தை அமைத்து;அசாதாரணமான கதை கருவோடு தடதடக்கும் வேகத்தில் கதையை நகர்த்தி செல்லும் அற்புதமான ஆற்றல் வெகு சிலருக்கே வாய்த்த வரம். லாங்டன் நகரில் உள்ள ஒரு அதிரடிபடையின் தலைவன் அருகில் உள்ள கிராமங்களை சூரையாடுகிறான்.மக்களை அடிமைகளாக விற்கும் அநீதியை;ஜிம் தலைமையில் இயங்கும் புரட்சி படையோடு அணி சேர்ந்து சொதப்பலான கதை நாயகனும்'கில்லாடியான வழித்துணையும் வீழ்த்துவது பறவைப் படலம். நகரங்ளுக்கிடையில் சரக்குகளை பரிவர்த்தனை செய்யும் வியாபாரிகளுக்கு ;பாதுகாப்புக்கு செல்லும் அமைப்பை சார்ந்த இருவரால் பெரும் மதிப்பிலான செல்வம் பலரின் உயிரிழப்புகளுக்கிடையில் திருடப்பட்டு புதைக்கப்படுகிறது.அவ்விருவரும் ஒரு கும்பலால் சிறை வைக்கப்பட்டு வதைபடுகிறார்கள்.அந்த பாலைவன கிராமத்தை கடக்கும் நமது கதா நாயகர்களுக்கு நேரிடும் அனுபவமே பாலைவனப் படலம். வேலைவாய்ப்பு தேடி செல்லும் ஒரு கிராமத்தில் தலைமை அதிகாரத்திற்காக மோதும் இரத்த பந்தங்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளும் பகைமையுமே வாரிசு படலம்.அந்த கிராமத்து தொழிலாளர்களுடன் அணி சேர்ந்து புரட்சி கரமாக அநீதியை வென்று அக்கிராமத்தின் அமைதியை நிலைநாட்டி தனதான ஹூரோயிசத்தை நிலை நிறுத்தும் முதல் படியில் ஜெரோமயா.அடுத்த பயணத்துக்காக மிகுந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. //ஜெரோமயா.அடுத்த பயணத்துக்காக மிகுந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறோம்.//
      +1

      Delete
  21. ///! 25 மொழிகளில் சாதித்துக் காட்டியிருக்கும் இந்தத் தொடரை நாமுமே சிறிது பொறுமையோடும், பரிவோடும் புரிதலோடு அணுகிடும் பட்சத்தில் - ஹெர்மனின் பரட்டைத்தலை இளைஞர்கள் நமக்குமே ஆதர்ஷர்களாக மாறிடுவார்களோ - என்னவோ ? அடுத்த 3 பாகங்கள் அடங்கியதொரு தொகுப்பையும் தொடரும் மாதங்களில் பரிசீலித்து விட்டு - அதன் பின்பாய் நம் மத்தியில் இதன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்தல் சரியென்று பட்டது folks ! உங்கள் எண்ணங்கள் எப்படியோ ? ///

    விளம்பரப்படுத்தியிருக்கும் அடுத்த மூன்று பாகங்களையும் பார்த்தான பின்னர் பெரும்பான்மை நண்பர்களின் கருத்துகளும் விற்பனையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முடிவு செய்யலாம் சார்.!
    இவ்வளவு பெரிய நிறுவனத்தில் இருந்தும், திறமையான ஓவியர்& கதாசிரியர் ஒருவரின் கைவண்ணத்தில் இருந்தும் வெளியாகி அத்தனை மொழிகளில் சாதித்த கதைத்தொடரை ஒரே இதழை வைத்து முடிவு செய்வது சரியில்லை என்றே எனக்கும் படுகிறது.!
    அடுத்த முறை ராமைய்யா நம் மனதில் இடம்பிடித்துவிடுவார் என்று நம்புவோமாக..!!

    ReplyDelete
  22. கடல்ல சிறு படகுல உலகம் சுற்றும் மாறுபட்ட குணங்களையுடைய ஒரு அணி.கழுதையில ஊர் சுத்தர ஒரு அணி.ஜெரோமையாவினுடைய ஆக்கத்திலேயும்;ஓவியங்களிலும் பெருமளவில் ப்ரின்ஸ்ஸினுடைய அதிர்வலைகளை உணர முடிகிறது.புத்தக ஆக்கமும்'கட்டமைப்பும் ஆத்மார்த்தமான உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இனி வரும் நாட்கள் இன்னலோ'இன்பமோ'சித்திரக் கதைகளின் மேல் உள்ள தீராக் காதலோடு பல இதயங்கள் இங்கு துடித்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Sri Ram : //கடல்ல சிறு படகுல உலகம் சுற்றும் மாறுபட்ட குணங்களையுடைய ஒரு அணி.கழுதையில ஊர் சுத்தர ஒரு அணி.ஜெரோமையாவினுடைய ஆக்கத்திலேயும்;ஓவியங்களிலும் பெருமளவில் ப்ரின்ஸ்ஸினுடைய அதிர்வலைகளை உணர முடிகிறது//

      Very true !

      Delete
  23. நண்பர்கள் அனைவருக்கும் தாழ்மையுடன்..... ஜெரேமையா மிக நிதானமாக ஆழமாக உள்வாங்கி படித்தால் அதிரடிக்கும்.மிக எளிதில் பிடிபடாத மாதிரி போக்குகாட்டி எழுதுவதுதான் பாரட்டுக்களை பெற்றுத்தரும் என்ற எண்ணங்கள் உடைய மேலை நாட்டவர்களின் படைப்புகளையும் எளிதில் செரிக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை ஜெராமையா மாடர்ன் ஆர்ட் வகையோ.. அறிவாளிங்க மட்டும்தான் புரிஞ்சிக்க முடியுமோ?!?

      Delete
    2. Sankar C : On the contrary - எல்லோருமே புரிந்து கொள்ளக்கூடிய கதை வரிசை இது ! அதனை அணுகும் முறையில் மெல்லியதொரு வேற்றுமை இருப்பின் நலம் என்பதே எனது எண்ணம் !

      Delete
  24. அனைவருக்கும் காலை வணக்கம்.
    ஆசிரியரே எவ்ளோ பெரிய மாத்ரே???

    ReplyDelete
  25. மாடஸ்டி பிளைசி

    ReplyDelete
  26. @ திரு விஜயன்

    சிறுவயதில் என்னை அசரடித்த ஓவியங்கள் இரண்டு....

    ஒன்று : XIII [வில்லியம் வான்ஸ்]
    ரெண்டு : பணிமண்டல கோட்டை[ ஹெர்மன்]

    ஓவியர் ஹெர்மன் அளித்த பேட்டியை இங்கு அழகாக தமிழில் [நீட்டமாக இருந்தாலும்கூட] மொழிபெயர்த்து பதிவிட்டது... உண்மையை ஒரு ஓவியர் மீது ஒரு மதிப்பையும்,ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்திய உணர்வு. பொறுமையாக அரைமணிநேரம் படித்தாலும்கூட...பேட்டி சட்டென்று முடிந்த மாதிரி ஒரு பீள் ஸார்..!

    நண்பர் ஸ்ரீராம் நிறையவே ராமையா பற்றி சிலாகிக்கிறார்..அவருடன் அதை மேலும் தொடர்கிறேனே..!

    ReplyDelete
    Replies
    1. mayavi.siva : //பேட்டி சட்டென்று முடிந்த மாதிரி ஒரு பீள் ஸார்..!//

      இதுக்கே நாக்குத் தள்ளிவிட்டது சார் டைப் அடிக்கும் முன் !!

      Delete
    2. @ திரு விஜயன்

      எனக்கு ரொம்பநாளாவே ஒரு சந்தேகம்...

      நீங்க எப்படி ஸார் டைப் செய்யறிங்க..???
      முறையா தமிழ் டைப் கத்துகிட்டு செய்றிங்களா..???
      இல்லை குகிள் தமிழில் டைப் செய்றிங்களா..???
      இல்லை இங்கிலிஷ் டைப் மூலமா தமிழுக்கு மாத்துறிங்களா..???
      டைபிங் சாப்டுவேர் ஏதும்..???
      ஒரே குயப்பாமா இருக்கு ஸார்....

      அடியேன் ரெண்டு விரலில் குகிள் தமிழ் டைப்புடு..ஆங்..! உங்க நீட்டத்துக்கு டைப்ப ரெண்டுநாள் எனக்கு ஆகும்ன்னு கணிக்கிறேன்..உஸ்ஸ்ஸ்ஸ்..!

      [முறையா டைப்கத்துகிட்ட என் மனைவி...நம்ம ரெண்டு விரல் டைப்பிங் பாத்து செமத்தியா கிண்டலடித்து, சிரிப்பாய் சிரிப்பாங்க..ஹீ..ஹீ..ஹீ...]

      Delete
  27. 3 பாகங்கள் அடங்கியதொரு தொகுப்பையும் தொடரும் மாதங்களில் பரிசீலித்து விட்டு - அதன் பின்பாய் நம் மத்தியில் இதன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்தல் சரியென்று பட்டது folks ! உங்கள் எண்ணங்கள் எப்படியோ

    ########

    அமைதியின் மூலமே "ஜெராமயோ " நிலவரத்தை தாங்கள் உணர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி சார்...

    அதே சமயம் இதற்காக உடனடியாக அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டாமே என்பதையும் ஏற்கிறோம் சார்...அடுத்த தொகுப்பின் மூலம் அவரின் மதிப்பை அறிவதில் உடன்பாடே....

    ( ஸமர்ப்....போல தாமத வெற்றி அடையும் சூழலும் ஜெராமியாவுக்கு நிகழலாம்...எனவே காத்திருக்கிறேன் ...)

    ReplyDelete
  28. லோகோ தேர்வின் போதே பலருடைய வரவேற்பை பெற்ற இந்த லோகோ சரியான சமயத்தில் ...சரியான இடத்தில் பகிர செய்த தங்களுக்கும்....சிறப்பான முறையில் வடிவமைத்த நண்பர் கா.சோமலிங்கம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ...வாழ்த்துக்கள்...சார்...



    சந்தா E ...

    லயன் கிராபிக் நாவல் என்ற பெயருடன் தான் வருகிறதா ...!


    மகிழ்ச்சி சார்...:-)

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : //நண்பர் கா.சோமலிங்கம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் .//

      புதிதாய்ப் பெயரிட்ட பெருமைக்கு உகந்தவரே.... இனி நீர் "பெயர் சூட்டும் பரணி" என்று தரணியெங்கும் அன்போடு அழைக்கப்படுவீராக !!

      Delete
    2. ///Paranitharan K : //நண்பர் கா.சோமலிங்கம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் .//

      புதிதாய்ப் பெயரிட்ட பெருமைக்கு உகந்தவரே.... இனி நீர் "பெயர் சூட்டும் பரணி" என்று தரணியெங்கும் அன்போடு அழைக்கப்படுவீராக !!///

      ஹா ஹா ஹா! :))))))))

      கா.சோ மட்டும் இதைப்படிச்சிருந்தா தலீவருக்காண்டி நாலஞ்சு LIC கட்டிடம் எழுப்பியிருப்பாரு!

      Delete
  29. கொலை கரம்....இதழை படித்தாயிற்று ....ஆசிரியர் சொன்னது போல அதிகம் புய்ப்பம் எல்லாம் எனக்கு சுற்றவில்லை...( நிம்பிள் பாக்காத புய்ப்பமா..:-) படித்த..,
    படிக்காத நண்பர்களுக்கு ஒரு அழகான டைம்பாஸ் கதை என வேண்டுமானால் சொல்லலாம்....என்னை கேட்டால் இம்முறை ஜெரோமயா வை விட ஜானி ஒன்றும் சோடை போகவில்லை என்பதே உண்மை...:-)

    ( ஏண்டா...பரணி இன்னுமாடா நீ வளரலை...!)

    ReplyDelete
    Replies
    1. ஜெரோமையாவை விட ஜானி சோடை போகவில்லை 100 ல ஒரு வார்த்தை
      இந்த மாத ஜானி படு சூப்பர்

      Delete
  30. 2018 டெக்ஸின் 70வது வருடம். பாத்து சூப்பரா எதுனா செய்யுங்க.
    காமிக்ஸ் தலைவா எங்கள் "" தல "" கதை வெயிட்டா வரனும்....
    ரூ1000/= இருந்தாலும் பரவாயில்லை....

    ReplyDelete
    Replies
    1. yazhisai selva : அரசாங்கமே ஆயிரம் ரூபாய் நோட்டு வேண்டாமெனத் தீர்மானித்து விட்ட பின்னே, நாம் அதனோடு மல்லுக்கு நிற்பானேன் நண்பரே ? கைக்கு அடக்கமாய் ஐநூறு ரூபாய் நோட்டுத் தான் உள்ளதே புழக்கத்தில் ?!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ///அரசாங்கமே ஆயிரம் ரூபாய் நோட்டு வேண்டாமெனத் தீர்மானித்து விட்ட பின்னே, நாம் அதனோடு மல்லுக்கு நிற்பானேன் நண்பரே ? கைக்கு அடக்கமாய் ஐநூறு ரூபாய் நோட்டுத் தான் உள்ளதே புழக்கத்தில் ?!///

      அரசாங்கமே ஆயிரம் ரூபாய் வேண்டாமெனத் தீர்மானித்து ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்டிருக்கிறதே..!!!??

      ஹிஹி..! சும்மா! ஒரு தகவலுக்காண்டி சொன்னேன். .!!

      Delete
    4. ///அரசாங்கமே ஆயிரம் ரூபாய் நோட்டு வேண்டாமெனத் தீர்மானித்து விட்ட பின்னே, நாம் அதனோடு மல்லுக்கு நிற்பானேன் நண்பரே ? கைக்கு அடக்கமாய் ஐநூறு ரூபாய் நோட்டுத் தான் உள்ளதே புழக்கத்தில் ?!///

      அப்படின்னா 2018ல் 500விலையில் தல தாண்டவம் ரெடியாயிடுச்சுன்னு சொல்லுங்க சார்!

      Delete
  31. ஜெரோமியா கதையின் வர்ணஜாலம் என்னை கவர்ந்தது, மெதுவாக ரசித்து படிக்கிறேன்...
    காமிக்ஸ் என்றாலே காதல்தான்.....

    ReplyDelete
  32. கொலைக் கரம் விமர்சனம் தேவையில்லை
    அது எப்போதுமே எவர் கிரீன் ஹிட்

    ReplyDelete
    Replies
    1. செந்தில் சத்யா : எவர்க்ரீன் புய்ப்பங்கள் !

      Delete
  33. //என்னை கேட்டால் இம்முறை ஜெரோமயா வை விட ஜானி ஒன்றும் சோடை போகவில்லை என்பதே உண்மை...:-)//

    +111

    ReplyDelete
  34. மீண்டும் " அதிரிபுதிரி" வெற்றி பெற்ற பென்னியை பற்றி தாங்கள் ஏதும் கூற வில்லையே சார்....!

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : தலீவரே ஆணித்தரமாய்த் தீர்ப்பெழுதிய பின்னே ஆலமரத்தைத் தேடுவானேன் - நானுமொரு நாட்டாமையாகித் தீர்ப்புச் சொல்ல ?

      Delete
  35. Mahendran Paramasivam : "செஞ்சிடுவோம் !!"

    #########



    ஆஹா...ஆஹா.....இன்ப தேன் பாயுது காதினிலே.....:-)))

    நல்ல்ல்லாஆஆஆஆஆ........குண்டாஆஆஆஆ.....செய்யுங்க சார்.....:-)

    ReplyDelete
  36. // பீரோ அலமாரி செய்தவரின் ஓவியத்திறமையை அவரது மச்சான்தான் உலகறியச்செய்தாரா.??//

    சூப்பர்.!


    அப்போ ," மச்சான் தயவுலதான் மலை ஏறியுள்ளார் "

    நம்ம பழமொழி பெல்ஜியம் வரை ஒர்க்அவுட் ஆகுதே.???

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்டி வெங்கடேஸ்வரன். : //நம்ம பழமொழி பெல்ஜியம் வரை ஒர்க்அவுட் ஆகுதே.???//

      அட..ஆமாம்லே ?!!

      Delete
  37. JEREMIAH கதைக்களத்தைப் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. இன்னொரு தொகுதி படித்தால் தான் ஹிட்டா இல்லையா என்று தெரியும். Hermann-ன் ஓவியங்களை பொறுத்த வரை அனைத்து பாத்திரங்களின் முக லட்சணங்களும் ஒரே மாதிரி இருக்கும் என்ற கருத்து எனக்கு உண்டு - பிரின்ஸ் படிக்கும் போதும் இந்த கருத்து உண்டு. எனக்கு இந்த புத்தகத்தில் பிடிக்காத சமாசாரம் ஒன்று உண்டெனில் அது கண்ணைப் பறிக்கும், டாலடிக்கும் கலர். வர்ணக்கலவைகள் சற்றே மிகைப்படுத்தப்பட்டு காட்சியளிக்கின்றன. But this true for several Franco-Belgian albums. நிஜமாகவே மிட்டாய்க் கடையை பார்த்த ஒரு பீலிங் :-)


    சென்ற மாத இதழ்களில் Benny அசத்தியது - எங்கள் வீட்டில் அனைவரும் இப்போ Benny fans.

    ReplyDelete
    Replies
    1. Raghavan : //கண்ணைப் பறிக்கும், டாலடிக்கும் கலர்.//

      ஹெர்மனின் கதைகள் எல்லாவற்றிற்குமே வர்ணக் கலவைகள் ஒரு மிடறு தூக்கலே !! பிரின்ஸ் ; கமான்சே ; தற்போது ஜெரெமியா என்று மூன்றிலுமே அதுவொரு common link !

      அப்புறம் பென்னியின் வெற்றி ரொம்பவே சந்தோஷம் கொள்ளச் செய்கிறது ! வழக்கமான ப்ளூ கோட் பட்டாளம் ; சிக் பில் ; க்ளிப்டன் போன்ற கார்ட்டூன்கள் எல்லாமே நம் ரசனைக்கு 75 % ; குட்டீஸ்களுக்கு 25 % என்ற ரீதியில் இருப்பது வழக்கம். So அவற்றுள் நாம் சுவாரஸ்யம் கொள்வதில் வியப்பில்லை ! ஆனால் பென்னியிலோ அப்படியே உல்டா !! அவ்விதம் இருப்பினும் பென்னியை நாமுமே ரசிக்க முடிவது ஒரு ஸ்பெஷல் moment என்பேன் !! ஒரு afterthought ஆகத் தான் இதன் உரிமைகளை வாங்கினோம் ; glad it worked !!

      Delete
  38. அனைவருக்கும் முதல்தேதியே கிடைத்த புத்தகபார்சல் எனக்கு 4ம் தேதிதான் கிடைத்தது - ஜெரெமயா இல்லாமல்.
    பின்னர் அலுவலகத்திற்கு போன் அழைப்புகள் வழியாக ஒரு வழியாக 9ம் தேதிதான் கிடைத்தது ஜெரெமயா.
    கடந்த சில மாத பில்டப்கள் காரணமாக 3 பாகங்களும் நேற்றிரவே படித்து முடித்தேன்.
    ஒரே வரியில் சொல்வதானால் - டப்பாவும் அல்ல; டாப்பும் அல்ல.
    ஆனால் இந்த கருத்தை வெளியே சொல்ல யோசித்துக் கொண்டிருந்தேன். (காரணம் தெரிந்ததுதானே...)
    ஆனால் எடிட்டரின் பதிவு சில கருத்துக்களை சொல்ல வைக்கிறது.
    லார்கோவும், ஷெல்டனும் அறிமுகம் ஆகும் போது இத்தனை முன்னெச்சரிகைகள் இல்லை. படிக்கத் துவங்கிய கணமே சுழற்றியடித்து விட்டார்கள். தவிர்க்க முடியாத நாயகர்களாகவும் பதிவாகிவிட்டார்கள்.

    ஆனால், ஆனால் ஜெரெமயாவை அந்த பட்டியலில் சேர்க்க முடியாது.

    லயனின் மீள்வருகையின் போது கதைத்தேர்வுகளில் எடிட்டருக்கு இருந்த கவனம் தொடரும் தற்போதைய இந்த சாஸ்வதமான நாட்களில் குறைந்து போய்விட்டதைப் போல் தெரிகிறது.

    ஒரு கதையை பிரசுரம் செய்து விட்டு, அதனை எப்படி ரசிக்க வேண்டும் என்று டியூசனும் எடுக்க நேர்ந்தால்....

    எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை...

    ReplyDelete
    Replies
    1. @ SVV

      யாரும் டியூசன் பீஸ் ஏதும் கேட்டாங்களா என்ன..???? :P

      Delete
    2. S.V.V : ரசனையில் 'தத்தி' என்று சொல்லுங்கள் ; அதை நிவர்த்திக்க முயற்சிக்கிறேன் ! காமிக்ஸ் ஞானம் பற்றாதென்று சொல்லுங்கள் - நிச்சயம் மேம்படுத்திக் கொள்ள முயல்வேன் ! ஆனால் அக்கறையில்லை ; கவனம் குறைந்துவிட்டது என்ற ரீதியிலான குற்றச்சாட்டுக்கள் ஜீரணிக்கச் சிரமம் தருகின்றன.

      என்றைக்கு மெய்யாகவே என்னுள் ஆர்வமும், அக்கறையும் குன்றுகிறதோ - அன்றைக்கு நான் இடத்தைக் காலி செய்து ஏகநேரமாகி விட்டிருக்கும் சார் !

      Delete
    3. /// என்றைக்கு மெய்யாகவே என்னுள் ஆர்வமும், அக்கறையும் குன்றுகிறதோ - அன்றைக்கு நான் இடத்தைக் காலி செய்து ஏகநேரமாகி விட்டிருக்கும் சார் !///

      ஆரம்பமே சரியா இல்லையே..! :(((

      Delete
    4. வேண்டாமே இந்த விபரீத கற்பனை

      Delete
    5. ///என்றைக்கு மெய்யாகவே என்னுள் ஆர்வமும், அக்கறையும் குன்றுகிறதோ - அன்றைக்கு நான் இடத்தைக் காலி செய்து ஏகநேரமாகி விட்டிருக்கும் சார் !///

      அப்படி ஒரு நாள் புலரவேக்கூடாதென வேண்டிக்கொள்கிறோம்..!!

      Delete
    6. குன்றா ஆர்வம் உங்களுள் நிரந்தரமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்

      Delete
    7. //லயனின் மீள்வருகையின் போது கதைத்தேர்வுகளில் எடிட்டருக்கு இருந்த கவனம் தொடரும் தற்போதைய இந்த சாஸ்வதமான நாட்களில் குறைந்து போய்விட்டதைப் போல் தெரிகிறது.
      //

      SVV : blanket statement புரியவில்லை, இந்தவருடம், போனவருடம் மிகசிரத்தையான தேர்வுகள்தானே இருந்தது ?

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
  39. விஜயன் சார்!
    ஜிஜெவின் “ஜெர்ரி ஸ்பிரிங்”?

    ReplyDelete
    Replies
    1. Boopathi Rajkumar : இல்லற சார் ; ரொம்பவே பழைய ஸ்டைல் ஓவியங்கள் அதனில் !

      Delete
  40. GMT+5:30
    ஜெரமையா கதையில் ஓவியமே பிரதானம். ட்ரோங்கோ மாதிரி எதிர்ப்பு இருந்ததால் முதல் பாகம் முடிந்த போது சற்று ஏமாற்றம். இரண்டாம் மூன்றாம் பாகம் ஏமாற்றமே தொடர்தது.

    ஆனால் இரண்டாம் தடவை ம்மறுபடியும் படித்த போது மூன்றாம் பாகத்தின் ஆக்கம் புரிய தொடங்கியது. ஓருவர் நல்லவர் என்று நம் நம்பி நமக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டால் அவர் கெடுதல் செய்தால் கூட அவரை அவ்வளவு எளிதாக நம் வெறுக்க மாட்டோம். இந்த எதார்த்த மான களத்தை தான் ஆசிரியர் கையாண்டு உள்ளார்.

    ஜெராமியாவில் மருந்து கூட மசாலா கிடையாது. இந்த கதையை படிக்க படிக்க தான் நமக்கு பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. Ganeshkumar Kumar : //ஜெராமியாவில் மருந்து கூட மசாலா கிடையாது. இந்த கதையை படிக்க படிக்க தான் நமக்கு பிடிக்கும்//

      நிஜம் தான் !

      Delete
    2. :) :): )

      //ஜெராமியாவில் மருந்து கூட மசாலா கிடையாது. இந்த கதையை படிக்க படிக்க தான் நமக்கு பிடிக்கும்
      //

      +1

      Delete
  41. ஜெரேமயா ஒரு அழகான அற்புதமான ஆக்கம்.ஹெர்மனின் ஓவியங்கள் மிரளவைக்கும் அசாத்திய அசத்தல்.நேர்கோடான கதை களத்தில் குறைந்த கதாபாத்திரங்களோடு ஜெரேமயா & கர்டி மலாய் இருவரோடும் படிக்கும் வாசகரும் வனாந்தர மேற்கில் தொண்டை வரள அலைந்த அனுபவம்.இந்த தொடர் இவ்வளவு அருமையாக இருக்கும் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை.இந்த பாலைவனப் பயணத்தின் அடுத்த இலக்கை அறிய ஆவல்.காத்திருக்கிறேன் ஏராளமான தாகத்தோடு...

    ஜெய் ஜெரேமயா...

    ReplyDelete
    Replies
    1. saint satan : 1979-ல் துவங்கி, இன்று வரைக்கும் 25 மொழிகளில் ஒரு தொடர் பயணிக்கிறதெனில் அதனில் நிச்சயம் சரக்கிருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது சார் ! மெதுமெதுவாக வண்டி சூடு பிடிக்குமென எதிர்பார்ப்போம் !

      Delete
  42. பென்னி...

    செம... மீண்டும் மீண்டும் படிக்கும் வகையைச் சேர்ந்த கதை.

    திரும்பத் திரும்ப படிக்க வைக்கும் கதைகளின் பட்டியலில் சமீபமாக சேர்ந்த புளுகோட்களுக்கு அப்புறம் பென்னியையும் சேர்த்து விட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. S.V.V : பென்னி கூட தற்போதைய நாட்களின் அறிமுகம் தான் சார் !

      :-)

      Delete
  43. ஜெரெமியா இரண்டாம் முறை படித்த போது கதை,ஆசிரியரின் சொல்லும் முறையும் நமக்கு பிடிபட ஆரம்பிக்கும்

    ReplyDelete
    Replies
    1. leom : புதுக் களங்களுக்குள் கால் பதிக்கும் போது லேசாய் ஒரு தயக்கமும், தடுமாற்றமும் இருப்பது இயல்பு தானே சார் ? அதன் பொருட்டே எனது சில guidelines !

      Delete
    2. //நமக்கு பிடிபட ஆரம்பிக்கும்//
      +1

      Delete
  44. போச்சி..போயேபோச்சி....என்னோட சேகரிப்பில் இருக்கவேண்டும் என மறைத்து வைத்த கலரிங் புக்...ஜெரேமியாவை தொடர்ந்து அடுத்து என்ன படிக்கலாம் என பெட்டியை எடுத்தபோது....

    பின்னால் பூனைபோல வந்த என் மகள் அந்த கலரிங் புக்கை "இது எனக்கு..." என பறிச்சிட்டு போய் அதற்கு அட்டைபோட..என் சேகரிப்பில் இருந்து ஆட்டை போட்ட கொடுமையை பார்க்க...இங்கே'கிளிக்' ;(((

    ReplyDelete
    Replies
    1. mayavi.siva : ஆட்டையைப் போட்டதே நீங்கள் தானே சார் ? முகப்பில் தான் தெளிவாய் "நம் அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு" என்று போட்டுள்ளோமே ?!!

      அந்த முகத்தில் தெரியும் சந்தோஷம் போதுமே - இந்தத் தம்மாத்துண்டு இணைப்பைத் தயாரித்த பலனை அனுபவிக்க !!

      Delete
    2. @ திரு விஜயன்

      ஞே...பல்புஆஆஆ..%&#$+?/}@!

      Delete
  45. அனைவருக்கும் காலை வணக்கம்.
    ஆசிரியரே எவ்ளோ பெரிய மாத்ரே???

    ReplyDelete
    Replies
    1. ganesh kv : சின்ன மாத்திரைகள் சுலபமாய் ஜீரணித்து விடுகின்றனவே ?

      Delete
  46. எடிட்டர் சார்,
    வணக்கம். ஜெரமையாவின் சித்திரத்தரம் மற்றும் புத்தகத்தின் தரம் இரண்டுமே அபாரம். கதைக்களத்தைப் பொருத்த வரையில் மற்றுமொரு வன்மேற்கில் நடக்கும் கதை என்ற அளவிலேயே வாசிக்க முடிந்தது. போஸ்ட் அபோகலிப்டிக் என்ற ஜானரில் வைத்துப் பார்க்க முடியவில்லை.கதை சூப்பரும் இல்லை. மோசமும் இல்லை. அடுத்து வரும் ஆல்பங்களை பார்த்து முடிவு செய்ய சொன்னது மிகச்சரியே.
    சந்தா E ன் முதல் புத்தகம் ஒரு முடியா இரவா அல்லது என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் கதையா??

    ReplyDelete
    Replies
    1. Mohammed Harris : //சந்தா E ன் முதல் புத்தகம் ஒரு முடியா இரவா அல்லது என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் கதையா??//

      முடியா இரவு சார் !

      Delete
  47. அரசாங்கமே ஆயிரம் ரூபாய் நோட்டு வேண்டாமெனத் தீர்மானித்து விட்ட பின்னே, நாம் அதனோடு மல்லுக்கு நிற்பானேன் நண்பரே ? கைக்கு அடக்கமாய் ஐநூறு ரூபாய் நோட்டுத் தான் உள்ளதே புழக்கத்தில் ?!
    காமிக்ஸ் தலைவா இரண்டு ஐநூறு சேர்ந்தால் ஆயிரம் தானே....
    அப்பமெகா தல புத்தகம் உண்டுனு சொல்றீங்க ஓகே காமிக்ஸ் தலைவரே....

    ReplyDelete
  48. ##அரசாங்கமே ஆயிரம் ரூபாய் நோட்டு வேண்டாமெனத் தீர்மானித்து விட்ட பின்னே, நாம் அதனோடு மல்லுக்கு நிற்பானேன் நண்பரே ? கைக்கு அடக்கமாய் ஐநூறு ரூபாய் நோட்டுத் தான் உள்ளதே புழக்கத்தில் ?!##

    காமிக்ஸ் தலைவா இரண்டு ஐநூறு சேர்ந்தால் ஆயிரம் தானே....
    அப்பமெகா தல புத்தகம் உண்டுனு சொல்றீங்க ஓகே காமிக்ஸ் தலைவரே....

    ReplyDelete
  49. ஆசிரியருக்கு,

    ஜெரேமியா எதிர்கால கதையா? அல்லது இறந்த கால கதையா? என்ற குழப்பமே வாசிப்பை தடை செய்கிறது என நினைக்கிறேன்.

    பேசாமல் நீங்கள் 'ஹெர்மன் படைப்பு'என்பதோடு வெளியிட்டிருந்தாலுமே அது எந்த வகையிலும் சோடை போக வாய்ப்பில்லையே!

    'எதிர் காலத்தில் இறந்த காலம்' என்ற சொற்பதமே,அதனை நம்மில் அநேகரும் 'உயிரைத்தேடி' லெவலில் கற்பனை செய்து கொண்டதே காரணம்.

    காலத்தை விட்டு களத்தினை மட்டும் உணர்ந்து கொண்டால் தீவிர தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்பது உண்மை.

    ஜெரேமையா குரலில்

    'என்னையெல்லாம் பாத்த உடனே புடிக்காது.
    பாக்க பாக்கதான் புடிக்கும்.'

    ReplyDelete
  50. ஜெரெமயா....
    பறவைப்படலம் ......
    ஒரு உற்று நோக்கு படலம்

    இருமுறை கதையை படித்தவுடன் முதலில் தோன்றிய கேள்வி
    ஏன் பறவைப்படலம் என தலைப்பு .????
    பிரெஞ்ச் –லிருந்து ஆங்கிலத்தில் NIGHT OF THE RAPTORS .
    நமது கதையில் பறவை –கழுகு .(இவை RAPTORS பிரிவை சேர்ந்தவை )
    கழுகு ............................
    இதன் மூலம் கதாசிரியர் சொல்ல வருவது என்ன ????
    கழுகுகள் வானத்தின் அரசர்கள் ...
    வளர்ந்த கழுகுகளுக்கு இயற்கை எதிரிகளே இல்லை ....
    கழுகுகள் பலத்தின் அடையாளமும் கூட..

    பலமுண்டு .எதிரிகள் இல்லை ...
    அப்படியாயின் அது சுதந்திரத்தின் அடையாளம் ...
    கடைசியில் அடைக்கப்பட்ட கழுகுகள் பறந்து போவது சுதந்திரம் என்பதை உணர்த்துகிறதா ????
    இப் பயண கதை தொடரின் முதல் செய்தி இதுதானா ?????
    சுதந்திரம் எல்லாவற்றிலும் மேன்மையானது என்பதா????


    மேலும் ..

    ReplyDelete
    Replies
    1. ம்ம்..ரோம பேரரசின் மன்னன் அமெரிக்கா தனது தேசிய சின்னமாக கழுகை தேர்ந்தெடுத்ததன் பின்னணி இதுதானே ...????????
      பலமும் சுதந்திரமும் அதன் அர்த்தம் ....

      பொறுங்கள் .......................

      வேறு என்ன அதைப்பற்றி போட்டு இருக்கிறார்கள் ?????

      தொன்மை ரோம பேரரசின் நினைவாக என்று இருக்கிறது ...

      ஆகா !!!!!

      நமது புத்தகத்தில் முதல் பக்கத்தில் ஜெரெமயா –வின் படம் யாரையோ நினைவுபடுத்தவில்லை ?????
      நீரோ?????
      அப்படியாயின் இது ஒரு குறியீடா ????
      ஜெரெமயா---நீரோ அல்ல ...
      அப்படியாயின் ....அப்படியாயின் ....
      பிர்மிங்காம் ?????
      நாடக கலைஞன் போல் முகத்தில் சாயபூச்சு ....
      ரோம பேரரசின் சரித்திரத்தில் தெருவில் இறங்கி பாடிய – தெரு நாடகத்தில் நடித்த –
      ஒரே பேரரசன்...
      கிளாடியேட்டர் விளையாட்டுகளை விட கலைகளுக்கும் விளையாட்டுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்த ஒரே மன்னன் .

      Delete
    2. பிர்மிங்ஹாம் தனது நகரம் பற்றி எரியும்போது மனிதர்கள் மடிந்து விழுகையில் தனது கழுகுகளுக்கு உணவில்லை என பதறுகிறான் ..

      ரோம் நகர் பற்றி எரிந்தபோது தெரு நாடக கலைஞன் போல் வேடமணிந்து நீரோ
      LYRE –என்ற இசைக்கருவியை வாசித்தபடி ட்ராய் நகர் பற்றிய பாடலை பாடியதாக
      வரலாறின் ஒரு பகுதி சொல்கிறது..
      இது ஒரு குறியீடா????
      தனது கழுகுகள் தன்னை ஒன்றும் செய்யாது என நம்பி உயிரை விடும் பிர்மிங்ஹாமின் செயல் தற்கொலைக்கு ஒப்பானது எனில் நீரோ –வும் தற்கொலை செய்தே –தனக்கு அரசியல் நெருக்கடி முற்றியது என்பதால் –உயிரை விட்டான் .

      (இறக்கும்போது கூறிய வரிகள் ‘’ எனக்குள் இருக்கும் கலைஞன் மடிகிறான் “”)

      இப்பயண கதை தொடரின் ஒவ்வொன்றிலும் குறியீடு அல்லது சம கால சமூக நிகழ்வை பரிகசிப்பதாக ஹெர்மன் உணர்த்தியிருக்கிறாரா?????
      வாரிசு படலத்தில் நீங்கள் ராய் மெக்கன்சி வாரிசாக வருவதை படித்தபோது ஹெர்மன்-ன் நையாண்டி சிரிப்பை கேட்க முடிந்ததா??????

      Delete
    3. @ செல்வம் அபிராமி

      ///இப்பயண கதை தொடரின் ஒவ்வொன்றிலும் குறியீடு அல்லது சம கால சமூக நிகழ்வை பரிகசிப்பதாக ஹெர்மன் உணர்த்தியிருக்கிறாரா?????///

      நிச்சயமாக..!

      நான் சொல்லாமா வேண்டாமா என யோசித்த சப்ஜெட்...! நீங்க தொட்டது சந்தோஷமோ சந்தோஷமே..!

      இரண்டாம் பாகத்தின் களம் பாலைவனம்.! பாலைவனம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது 'அரேபியர்கள்.அடிமைகள்,விசுவாசிகள்' தானே..! இவர்களை ஆடுவிக்கும் பெரும்பாலான மெஜாரட்டி நபர் ஒரு அழகிய ராணி என்பதே வரலாறு..!! இதை பற்றியும் அடிச்சு விளாசுங்க செல்வம் அபிராமி அவர்களே..!

      Delete
    4. விடுபட்ட ஆய்வு:

      முதல் பாகத்தில் வரும் இரும்பு வேகனை நானும் WW1 & WW2 என போரில் பயன்படுத்தி எல்லா மினி வேகனையும் [1850 to 1950] சரிபார்த்துவிட்டேன். அப்படி ஒரு வேகன் இல்லை.

      அந்த சாயலில் மருத்துவ வேகன் மட்டுமே உள்ளன. முன்னால் இருக்கை, பின்னால் சுடும் அமைப்பு கொண்ட மினி இழுவை டாங் மாடல் ஓவியரின் கற்பனை வாகனமே..!

      Delete
    5. //ஏன் பறவைப்படலம் என தலைப்பு .????//
      :)

      Delete
    6. இரண்டாம் பாகத்தின் களம் பாலைவனம்.! பாலைவனம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது 'அரேபியர்கள்.அடிமைகள்,விசுவாசிகள்' தானே..! இவர்களை ஆடுவிக்கும் பெரும்பாலான மெஜாரட்டி நபர் ஒரு அழகிய ராணி என்பதே வரலாறு..!! இதை பற்றியும் அடிச்சு விளாசுங்க செல்வம் அபிராமி அவர்களே..!

      Delete
    7. மன்னிக்க !!! மாயாவிஜி ...

      சிலசமயம் சில வரலாற்று ஆளுமைகளை கோடிட்டு காட்டுவதோடு விட்டு விடுவார் போல் தெரிகிறது .

      அவ்வகையில் ஷரிட்டா கிளியோபாட்ரா போல் தெரியவில்லை ?

      அந்த முகவெட்டு ,ஹெட் டிரெஸ்,உடை ஆகியன அதுபோல்தான் தெரிகிறது .

      அப்புறம் ஷரிட்டா என்றால் இளவரசி என பொருள் வருகிறது

      Delete
    8. அறையுனுள் தற்கொலை செய்து கிடப்பது கூட ....

      Delete
    9. @ செல்வம் அபிராமி

      சரியா பாயிண்டை பிடிச்சிட்டீங்க....இன்னும் கொஞ்சமே அலசினா அப்டேட் பண்ணிடலாம், டிரைபண்ணுங்க பாஸ்...ப்ளிஸ்...

      நான் வரவிருக்கும் பாகத்தில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் பெட்டியும், அது பாலத்தில் சக்கரமில்லாமல்...நடு காங்கிரீட் மேல் போகும் மாடலாக உள்ளது. அந்த ரயில் பற்றி தகவல் தேடிக்கொண்டு இருக்கிறேன்.!

      ஆனா பாருங்க கதை எழுதிய காலத்தில் அப்படி ஒரு ட்ரெயின் இருக்கறமாதிரி தெரியலை..!

      Delete
    10. மாயாவி சிவ பதிவுக்கு தயார் ஆகிறார் .... this story deserve it siva...

      Delete
    11. selvam abirami : //அப்புறம் ஷரிட்டா என்றால் இளவரசி என பொருள் வருகிறது//

      ஹெர்மென் எங்கெங்கே என்ன விஷயப் புதையல்களைப் புதைத்து வைத்திருப்பாரோ ? என்ற பயத்தோடே ஒவ்வொரு பக்கத்தையும் கூகிள் செய்து அலசிக் கொண்டே இந்த மொழிபெயர்ப்பைச் செய்தேன் சார் ! பெயர்களிலும் மாற்றம் தர நான் நினைக்காது போனதன் பிரதம காரணமும் இதுவே !

      Delete
    12. @ செல்வம் அபிராமி & mayavi.siva

      ///இப்பயண கதை தொடரின் ஒவ்வொன்றிலும் குறியீடு அல்லது சம கால சமூக நிகழ்வை பரிகசிப்பதாக ஹெர்மன் உணர்த்தியிருக்கிறாரா?????///

      நிறைய சமூக கோபம் புதைந்துள்ளது ஹெர்மெனின் உள்ளே என்பதை இன்னமுமொரு பேட்டியில் இன்றைக்குப் படித்த போது தெரிந்து கொள்ள முடிந்தது !

      அவரது வசிப்பிடத்துக்கு அருகிலிருந்த லீஜ் நகரில் ஒரு சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து, கொலையும் செய்த கொடூரனுக்கு "மனநிலை சரியில்லை" என்று சொல்லி விடுதலை தந்துள்ளது கோர்ட் ! கொஞ்ச காலம் மனநல மருத்துவமனையில் இருந்தவன் வெளியே வந்த அடுத்த வாரமே இன்னொரு மொட்டைச் சிதைத்துக் கொலை செய்திருக்கிறான் ! கொதித்துக் கொந்தளிக்கிறார் ஹெர்மென் !! "இது போன்ற சட்டங்களை மாற்றியே தீர வேண்டும் !" என்று !! அவரது தார்மீகக் கோபம் தொடரும் ஒரு ஆல்பத்தில் இந்தக் கருவோடு வெளிவந்துள்ளது ! சமூகத்தை தன பாணியில் விமர்சிக்கவும், பகடி பண்ணவும், தன பாணியிலான தண்டனைகளை நல்கவும் ஜெரெமியா தொடர் ஒரு மார்க்கம் என்பேன் !

      Delete
    13. //நிறைய சமூக கோபம் புதைந்துள்ளது ஹெர்மெனின் உள்ளே என்பதை இன்னமுமொரு பேட்டியில் இன்றைக்குப் படித்த போது தெரிந்து கொள்ள முடிந்தது !

      அவரது வசிப்பிடத்துக்கு அருகிலிருந்த லீஜ் நகரில் ஒரு சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து, கொலையும் செய்த கொடூரனுக்கு "மனநிலை சரியில்லை" என்று சொல்லி விடுதலை தந்துள்ளது கோர்ட் ! கொஞ்ச காலம் மனநல மருத்துவமனையில் இருந்தவன் வெளியே வந்த அடுத்த வாரமே இன்னொரு மொட்டைச் சிதைத்துக் கொலை செய்திருக்கிறான் ! கொதித்துக் கொந்தளிக்கிறார் ஹெர்மென் !! "இது போன்ற சட்டங்களை மாற்றியே தீர வேண்டும் !" என்று !! அவரது தார்மீகக் கோபம் தொடரும் ஒரு ஆல்பத்தில் இந்தக் கருவோடு வெளிவந்துள்ளது ! சமூகத்தை தன பாணியில் விமர்சிக்கவும், பகடி பண்ணவும், தன பாணியிலான தண்டனைகளை நல்கவும் ஜெரெமியா தொடர் ஒரு மார்க்கம் என்பேன் !


      //

      ஹெர்மான் எடுத்திருக்கும் புரட்சி,சமூக கோபம் subject sensitive ஆனா ஒன்று ஆனாலும் அதை நயமாக கையாண்டிருக்கிறார்... படைப்பு பெரும்பாலும் பொழுதுபோக்கும் விசயமாகும்போது,காமிக்ஸ்ஐ போகமாக மாற்றி வைத்திருக்கும் இத்தகைய காலத்தில், இத்தகைய முயற்சிவாயிலாக risk எடுத்திருகிறார் ஹெர்மான். capitalist mind set market சமூக கோபம்,புரட்சி போன்றவற்றை ஏற்றுக்கொண்டதே எனக்கு ஆச்சர்யம்.

      Delete
  51. ஹா.... செனா அனா!!

    ReplyDelete
  52. Vijayan sir, it's possible to print next month books with title as "kodai malar"

    ReplyDelete
    Replies
    1. @ PfB

      நல்ல ஆலோசனை!

      Delete
    2. அப்படி நேரமில்லைன்னா புதுசா ஒரு கோடை மலர் புக்கு கூட விடுங்க சார்....நாங்க தப்பா நினைக்க மாட்டோம்...:-)

      Delete
    3. Parani from Bangalore : துரதிர்ஷ்டவசமாக அட்டைப்படங்கள் எல்லாமே போன மாதமே பிரிண்ட் ஆகி விட்டன சார் !

      Delete
    4. எவ்ளோ ஸ்டிக்கர் ஒட்டி இருக்கோம் எடிட்டர் - ஒரு கோடை மலர் ஸ்டிக்கர் ஓட்டினால் போச்சு :-)

      Delete
  53. ஜெரெமையா நிச்சயம் தொடரவேண்டிய ஒன்று தான் சார்.
    சோர்வடையாதீர்கள்.
    எப்படி பார்த்தாலும் இந்த தரத்தில் ஒரு காமிக்ஸ் படைப்பு நிச்சயம் நம் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும் என நம்பலாம்.

    மற்றபடி...
    கி்.நா அறிவிப்பிற்கு என் Reaction

    எவ்வ்வளவோ பாத்துட்டோம்...இத பாக்க மாட்டோமா?

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் பாட்ஷா ஜி!

      Delete
    2. //ஜெரெமையா நிச்சயம் தொடரவேண்டிய ஒன்று தான் சார்.
      சோர்வடையாதீர்கள்.
      //

      +1

      Delete
    3. T.K. AHMEDBASHA : இந்தாண்டின் இறுதியில் "லயன் கிராபிக் நாவலுக்கு" மதிப்பெண் போடும் சமயம் நீங்கள் 90 க்கு மேலேயொரு நம்பரைத் தான் தேர்வு செய்வீர்கள் என்பதை நான் இப்போதே அடித்துச் சொல்லுகிறேன் சார் !! டிசம்பரில் இதனை ஞாபகப்படுத்திக் கொள்வோம் !!

      Delete
    4. //ஜெரெமையா நிச்சயம் தொடரவேண்டிய ஒன்று தான் சார்.//
      +1

      Delete
  54. ஜெரெமயா -

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹெர்மான் காவியம். முதல் மில்லியன் ஹிட்ஸ் இல் ஒரு ஓவிய களேபரம் காட்டிய நீங்கள் MMS இல் மில்லியன் ஹிட்ஸ் ட்ரெண்ட்ஐ அடுத்த லெவெலுக்கு கொண்டு சென்றிருக்கிறீர்கள், பெரும்பாலும் ஒரு ஒற்றை ரசனை வாய்ந்த சிறுகுழு வாக இருக்கும்போது அனைவரும் ஏற்கும் புத்தகங்களுக்கு அதிக வாய்ப்பு எதார்த்தம்தான் , அனால் அரிதாக கிடைத்த new genre வாய்ப்பை சரியான புத்தகத்திற்கு தந்திருக்கிறீர்கள் எடிட் சார், நிச்சயம் ஒரு நமது வெளியிட்டிற்கு மைல்கல் புத்தகம்.

    ஹெர்மான்னுக்கே இது ஒரு திருப்புமுனை புத்தகம் தான் நிச்சயம் இந்த புத்தகம் நிறைய புது வாசகர்களை கொண்டு வரும்.


    பறவை படலம் -

    ஜெரெமயா-உலகின் எதார்த்தம் தெரியாத ஒரு சாதாரணன், அவனை அரசியல் அறைகிறது குடியானவன், பரதேசி(தமிழ் /ஹிந்தி ) ஆக்கப்படுகிறான். இத்தகைய கட்டத்தில் எதார்த்த உலகில் நிச்சலடிக்கும் கார்டியை காலம் அவன் வாழி துணை ஆக்குகிறது. வன்மம் நிறைத்த அவர்களின் உலகின் survival நுணுக்கங்களை அறிந்தவனாக இருக்கிறான் கார்டி.

    இத்தகைய சூழலில் எதிர்பாராத விதமாக லோக்கல் human trade கும்பலின் பாதையில் நமது மாந்தர்கள், புலிவாலை பிடித்த கதையாக புலியை கொன்றாக வேண்டிய கட்டாயத்தில் அதகளமக முடிவுகளை கார்டியும் ஜெரெமயாவும் எடுக்கிறார்கள் புலி வென்றதா மாந்தர்கள் சமாளித்தார்களா என்பதே, கூட்டுக்குள் இருந்த ஜெரெமயா பறவையாகும் பாகம்.

    பறவை படலம் கார்டிக்கு புது சிறகுகளை தருகின்றது என்றுதான் சொல்லவேண்டும். ஜெரெமயாஇன் என்ட்ரி கார்டி வாழ்க்கையை beyond survival ஆக மாற்றுகிறது. நீரும் நெருப்பும் போல இவர்கள் தெரிந்தாலும் அவர்களின் இடையே ஆனா கலாச்சார வேறுபாட்டை, ஒருவர் மற்றவர் மீதுஏற்படுத்தும் தாக்கத்தை நுட்பமாக காட்டுகிறார் ஹெர்மான்.



    ஒரு பாலை படலம்

    முதல் இரண்டு பக்கங்களே நம்மை வறண்ட பாலைக்கு கூட்டி சென்றுவிட்டார் ஹெர்மான். வன்மமான வாழ்கை பாடத்தில் PHD வாங்கிய கார்டி ஜெரெமயாவை முழுமையாக கற்றுவிட்டான், ஒரு சார்ஜ்ன்ட்க்கு volunteerஆகா உதவப்போய் கன்னிவெடியின் மீது காலை வைக்கிறான் கார்டி, இந்தக்கதையிலும் வெகுளி வீரனாக தான் ஜெரெமயா இருக்கிறான். நேர்த்தியாக பின்னப்பட்ட சம்பவங்கள், கதைக்குள் நம்மையும் இழுத்துச்செல்லும் அருமையான ஓவியங்கள் என ஹெர்மான் ஸ்கோர் செய்கிறார். கதை பாணியில் பிரின்ஸ் சாகசங்களின் வாடை ஒரு பாலை படலதில் தெரிந்தது இருப்பினும் இந்த காளையர் கூட்டணி வித்யாசமான வாசிப்பு அனுபவம்தான்.

    வாரிசு படலம்

    முடியலை! இந்தப்படலத்தை படிக்கப்படிக்க ஹார்ட் பீட் ஏறுகிறது. இப்படியும் ஒரு கதையை, சித்திர நேர்த்தியாக கொடுக்க ஹெர்மான் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.


    கதை: நமது மாந்தர்கள் உணவு வேலை தேடி ஒரு பிரதேசத்தில் நுழைகிறார்கள் அந்த பகுதி முக்கிய அதிகார transition காலகட்டதில் இருக்கிறது, அந்தப்பகுதியே வன்முறையான அரசியல் சதுரங்கமேடை ஆகா மாற்றப்பட்டிருக்கிறதை நமது PHD கார்டி உணர்கிறான், வீரம் நிறைத்த ஜெரெமயாஇதை தனது படலமாக மாற்றுகிறான். யார் ஜொலிக்கிறார்கள் என்பதைத்தாண்டி இந்தக்கதை மிகவும் நுணுக்கமான அரசியல் சதுரங்கத்தை, புரட்சியை action அதகளத்துடன் விவரிப்பது mind blowing.

    இது காமிக்ஸ் உலகின் mad max fury. அரசியல், புரட்சி போன்ற குண்டுகளை தொடும்முன் capitalist உலக விஷயங்களை சார்ந்த ஹெர்மான் நிச்சயம் பல வரலாற்று விஷயங்களை படித்து ஆராய்ந்து reference எடுத்திருக்கக்கூடும், அவற்றை பூடக பத்திரமாக , பூடக நிகழ்வாக வடித்திருக்கிறார். Rouge revolutionகும் அறிவுசார் கொள்கை கொண்டவர் புரட்சியை உருவாக்குவதற்கும் நிறைய வேறுபாடுஉள்ளது ஹெர்மான் இந்தக்கதையில் கத்திமேல் நடனம் ஆடுகிறார்.

    நிச்சயம் ஒரு மில்லியன் வாசிப்பிற்கு உகந்த புத்தகம், இதை சாத்தியபடுத்திய எடிட் அவர்களுக்கு நன்றிகள்.


    ReplyDelete
    Replies
    1. @ சதிஷ் குமார்

      கதையை அனுபவித்து படித்து..படித்த நேரத்தில் பாதியை செலவழித்து விமர்சனத்தை எழுதியிருகிறிர்கள்...என் பாராட்டுகள் நண்பரே..!

      அதுவும் அந்த கடைசி பன்ச்...

      ///Rouge revolutionகும் அறிவுசார் கொள்கை கொண்டவர் புரட்சியை உருவாக்குவதற்கும் நிறைய வேறுபாடுஉள்ளது ஹெர்மான் இந்தக்கதையில் கத்திமேல் நடனம் ஆடுகிறார்.///

      சத்தியமான உண்மை.! அதை சொன்னவிதம் அழகோ அழகு..! சூப்ப்ர்..!!

      Delete
    2. @ சதீஷ்

      முழுவதுமாகப் புரியவில்லையெனினும் ( நான் கதையை முழுசாப் படிச்சா புரியுமோ என்னமோ!) நீங்கள் சிலாகித்து எழுதியிருக்கும் விதம் - பிரம்மிப்பூட்டுகிறது!

      சிலருக்கு ரொம்பவே சுமாராகத் தெரிவது, வேறு சிலருக்கு சூப்பராகத் தெரிவதில்தான் எத்தனை முரண்!

      க்ரேட்!

      Delete
    3. கதை சூப்பரோ ..சுமாரோ ....உங்கள் விமர்சனம் சூப்பர் நண்பரே....:-)

      Delete
    4. நன்றி நண்பர்களே


      EV dialog இந்தக்கதையில் crisp and sharp,கதையின் நான் சிலாய்த்த சாரம் சில டயலாக் முடிச்சுகுள் தான், எடிட்டர் இந்தமுறை பல முடிச்சுகளை நேர்த்தியாக மொழி பெயர்த்திருக்கிறார், அவைகளை கோர்த்தாலே போதுமே .

      Delete
    5. Satishkumar S : //எடிட்டர் இந்தமுறை பல முடிச்சுகளை நேர்த்தியாக மொழி பெயர்த்திருக்கிறார்//

      இங்கே சொல்லப்படா கதையொன்றும் உள்ளது !!

      பிரெஞ்சுக் கலாச்சார மையத்தின் மான்ய உதவியோடு வெளியாகியுள்ள இதழ் இது என்பதை நாமறிவோம் ! பிரதியுபகாரமாக அவர்கள் நம்மிடம் எதிர்பார்த்தது, தங்கள் மொழியிலான இந்தப் படைப்பினை தமிழுக்கு மாற்றம் செய்திடும் போது சிதைவுகளின்றிச் செய்திட வேண்டும் என்பது மாத்திரமே ! இதழ் வெளியான பின்னே அதனை வாசித்து ; அபிப்பிராயம் சொல்லவும் பிரெஞ்சில் புலமை கொண்டதொரு தமிழ் அதிகாரி சென்னையில் உள்ளார் !

      So ஒரிஜினலுக்கு ரொம்பவே விசுவாசமாய் இந்த 3 ஆல்பங்களின் மொழிபெயர்ப்பும் அமைந்ததாக வேண்டுமென்பதில் ரொம்பவே சிரத்தை எடுத்தேன்!

      சமீப மாதங்களில் நான் ரொம்பவே நேரம் தந்த project-களுள் இதற்குப் பிரதான இடமிருக்கும் !

      Delete
    6. //நிச்சயம் ஒரு மில்லியன் வாசிப்பிற்கு உகந்த புத்தகம்//

      Awesome statement !!

      Delete
    7. ////இதழ் வெளியான பின்னே அதனை வாசித்து ; அபிப்பிராயம் சொல்லவும் பிரெஞ்சில் புலமை கொண்டதொரு தமிழ் அதிகாரி சென்னையில் உள்ளார் ! ////
      ///சமீப மாதங்களில் நான் ரொம்பவே நேரம் தந்த project-களுள் இதற்குப் பிரதான இடமிருக்கும் !///

      சூப்பர் சாரே!

      Delete
    8. //So ஒரிஜினலுக்கு ரொம்பவே விசுவாசமாய் இந்த 3 ஆல்பங்களின் மொழிபெயர்ப்பும் அமைந்ததாக வேண்டுமென்பதில் ரொம்பவே சிரத்தை எடுத்தேன்!

      சமீப மாதங்களில் நான் ரொம்பவே நேரம் தந்த project-களுள் இதற்குப் பிரதான இடமிருக்கும் !
      //

      ;) wow

      Delete
  55. என்ன நடக்குது இங்க ...? எடிட் சார் இப்படி கேள்விகேட்டு நோகடிக்காதீங்க .... இந்த கதை மங்கா படிக்கும் current generation கைக்கு போனால் அது நமது பாதிப்பிற்கு எதிர்காலத்தை தரும் !

    ReplyDelete
    Replies
    1. @ சதிஷ் குமார்

      ///எடிட் சார் இப்படி கேள்விகேட்டு நோகடிக்காதீங்க ....///

      எடிட்டரின் மனம் நோக காரணம்..இங்கு கேட்கப்பட்டதன் எதிரொலி மட்டுமல்ல.மாறாக அவரவர்கள் முகநூலிலோ...ப்ளாகிலோ...அவர்களின் ரசனைக்கேற்ப்ப சாக்கடை நீரில் கூட சமைத்து பரிமாறலாம்.அதை யாரும் கேள்விகேக்க முடியாது. ஆனால் அப்படி சமைத்தவற்றை ஸ்டார் ஓட்டல் என்னும் தி இந்துவின் ஏப்ரல்,7 அன்று வந்த காமிக்ஸ் தில்லுமுல்லு என்ற பெயரில்...இளமை புதுமை பகுதியின் இன்சார்ஜ் டீமை சரிகட்டி...பறிமாறியதை பாருங்கள். அவரை நோகடித்த விஷயம் எதுவென்று புரிந்துவிடும்..!:(((

      முடிந்தால் தி இந்துவிற்கு ஒரு மெயில் தட்டிவிடுங்கள்..!

      Delete
    2. ஆனால், வார்த்தைகளை அள்ளிவீசி மனதை நோகடிப்பவர்களுக்கு தாம் அப்படியொரு தவறுசெய்கிறோம் என்ற பிரஞ்ஞையே இல்லாதிருப்பது ஆச்சர்யமளிக்கிறது! அவர்களுக்கு ஏதேனும் ஒரு இதழ் பிடிக்காமல்போய் ஓரிரு 100 ரூபாய் நோட்டுகள் வீணாகிவிட்டதாக உணர்ந்தால், உடனே 'நீயெல்லாம் உருப்படமாட்டே' என்று வசைமாரி பொழிய ஆரம்பித்துவிடுகிறார்கள்!

      'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று'னு வள்ளுவர் சொல்லியிருப்பதை, அவருடைய தீவிர சிஷ்யர்களே கடைபிடிக்காமலிருப்பது வேதனையளிக்கும் நகைச்சுவை!

      Delete
  56. //“ஹீரோக்கள்” என்றாலே நல்லதை மட்டுமே செய்யும் கட்டுப்பெட்டிகள் என்ற மரபுகளை கேப்டன் டைகர் (Lt. Blueberry) கதைகள் மூலமாக பின்னாட்களில் சார்லியேவும், ஜிரோவும் உடைத்துக் காட்டிக் கொண்டிருந்தனர்.//

    :):):)
    நீங்க வரம் பெற்றவர் எடிட் சில வரலாற்று சிறப்பு வாய்ந்த படைப்புகள் கூழாங்கற்களுடே மாணிக்கமமாக நீங்க அல்லும் கூடையில் விழுகிறது !

    ReplyDelete
    Replies
    1. Satishkumar S : கூடையும்,தேடலும் பெரிதாய் இருக்கும் வரை எல்லாமே சாத்தியம் போலும் !

      Delete
  57. //! So - "லயன் கிராபிக் நாவல்" பிறந்த கதை இது தான் ! நண்பர் கார்த்திக் சோமலிங்கா உருவாக்கித் தந்த கம்பீரமான லோகோவை பச்சக்கென்று முன்னட்டையில் பதித்து விட்டோம் !! Thanks கார்த்திக் !! இதழிலும் இதற்கொரு சிறு mention இருந்திடும் !//
    +1
    :)

    congrats karthik !

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கா.சோ'வுக்கு என் தரப்பு வாழ்த்துகளும்!

      செய்த முயற்சி என்றேனும் ஒருநாள் பலனளிக்கும் என்பது மறுபடியும் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது!

      Delete
    2. ஈரோடு விஜய் : இன்னமும் எஞ்சி இருக்கும் நண்பர்களது லோகோ உருவாக்கங்களைப் பார்க்கும் போது - அவற்றிற்காகவே கூட இன்னும் புதுசாய் இதழ்களை ரெடி பண்ணலாம் போல் தோன்றுகிறது !!

      Delete
    3. இத இத இதத்தான் எதிர்பார்த்து நாங்கள்
      காத்திருக்கிறோம்.
      மனசு மாறும் முன் அதிரடி அறிவிப்புகள்
      ப்ளீஸ்.ஈவி மாயாவி சிவா கருரார்
      சேலம் Tex ஆசிரியரை அப்படியே
      அமுக்கி அவர் சொன்னதை செய்ய
      தூண்டுங்கள்.

      Delete
  58. என்றைக்கு மெய்யாகவே என்னுள் ஆர்வமும், அக்கறையும் குன்றுகிறதோ - அன்றைக்கு நான் இடத்தைக் காலி செய்து ஏகநேரமாகி விட்டிருக்கும் சார் !


    ########

    வேதனையான வார்த்தைகள்....

    உலகம் முழுவதும் காமிக்ஸ் படைப்புகளும்...தமிழ் காமிக்ஸ் ரசிகர்களும் " காலி" ஆனால் இது நடக்கலாம் ...:-(

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : தலீவரே..இப்போதைக்கு வெத்தலை பெட்டியையும், ஆலமரத்தடியையும், அழுக்கு ஜமுக்காளத்தையும் உதறி விட்டுப் போகும் அபிப்பிராயமெல்லாம் லேது !!

      என்ன ஒரே சிக்கல் - நாட்டமைக்கு அள்ளி முடிய கூந்தல் அத்தியாவசியம் ; இங்கே வேணும்னா எண்ணி முடிஞ்சுக்கலாம் !!

      Delete
  59. அடுத்த மாதம் 4 புக்கா சார் .டெக்ஸ் இல்லையா சார்

    ReplyDelete
    Replies
    1. உண்டு நண்பரே....

      " கவரிமான்களின் கதை" என்ற சாகஸத்தில் அடுத்த மாதம் அசத்த வருவார்...வருவார்...வருவார்...:-)

      Delete
  60. சார் புத்தகத்துடனே அலைகிறேன்..படி்க்க நேரம் கிட்டலை...பதிவு அபாரம்...ஜெரமையாவுக்கு நீங்க ஏற்கனவே விட்ட அட்டை அருமை இதைவிட....ஈயின் அட்டயும் , கார்த்திக்கின் லோகோவுமருமை

    ReplyDelete
    Replies
    1. //சார் புத்தகத்துடனே அலைகிறேன்..படி்க்க நேரம் கிட்டலை...//
      all the best happy reading steel...
      நானும் சில குண்டுகளை பலமாதங்களாக தூக்கிக்கொண்டு அலைகிறேன் ஸ்டீல் ....

      Delete
    2. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : பட படவென்று உங்கள் பின்னூட்ட வேகத்திலேயே படித்தால் "லோகோ எருமை" என்பதாக வாசித்து திகைத்துப் போனேன் சாமி !!

      Delete
    3. ////லோகோ எருமை" என்பதாக வாசித்து திகைத்துப் போனேன் சாமி !!///

      :D :D

      Delete
  61. சார் அடுத்த மாத வெளியீடுகள பாத்ததும் ...ஈர்ப்பான விஷயம் ஏதுன்னு பாத்தா லார்கோ தெரியுது . இது வரை மாதாமாதம் பல அற்புதங்கள எதிர் பார்க்க செய்ததால லார்கோ நினைவுக்கே வரலங்றது ஆச்சரியந்தான் . ஆனா லார்கோ நினைவுகளுடன் ஹாட்லைன புரட்டுனா லார்கோ புரட்டலை இனிமயாக்குகிறார்..அப்ரம் அந்த சந்தா ஈயும் தான் ..லார்கோ சுமக்கும் மே மாதமே சீக்கிரம் வாராயோ..

    ReplyDelete
  62. Satishkumar : // blanket statement புரியவில்லை, இந்தவருடம், போனவருடம் மிகசிரத்தையான தேர்வுகள்தானே இருந்தது ? //

    மிகச்சிரத்தையான தேர்வுகளா? டெக்ஸ்வில்லரை தவிர்த்து விட்டு என்று வேண்டுமானால் சொல்லுங்கள் சதீஷ்.

    டெக்ஸ்வில்லரை விமர்சிக்காமல் இருக்க ஒரே காரணம் (என்னளவில்தான்...) அது விற்கிறதே என்ற எடிட்டர் கூறும் காரணம்தான். மற்றபடிக்கு, டைகர், லார்கோ, ஷெல்டன் கதைகள் ஞாபகத்தில் உள்ளதைப் போன்று டெக்ஸ் கதைகளை சொல்ல முடிவதில்லை.

    தற்போது நான் ஜெரமையாவைக் கூட குறை சொல்லவில்லை... இவ்வளவு பில்டப்கள் தேவைப்படும் ஒரு கதைத்தேர்வு ஏன் என்ற கேள்விதான்.

    ReplyDelete
    Replies
    1. S.V.V : ஒரு லார்கோவையோ, ஷெல்டனையோ தேர்வு செய்யவோ ; ரசிக்கவோ ஒரு பொதுவான பார்வைக் கோணம் போதுமானதாக இருக்கலாம் ! ஆனால் ஒரு புதுத் திக்கில் புறப்படும் தொடருக்கு ஒரு சிறு வழிகாட்டி இருப்பதில் தப்பில்லை என்று நினைத்தேன் ! பில்டப்கள் கதைக்கல்ல ; கதை பாணிக்கே என்பதை நீங்கள் உணரும் வேளையில், என் தேடல்களின் பின்னணியும் புரியும் சார் !

      And விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டோர் யாருமிலர் ; டெக்ஸ் வில்லரையும் சேர்த்தே தான் ! உங்களுக்குத் பிடிக்காது போயின் அதனை வெளிப்படுத்தத் தயங்குவானேன் ?

      Delete
    2. //டைகர், லார்கோ, ஷெல்டன் கதைகள் ஞாபகத்தில் உள்ளதைப் போன்று டெக்ஸ் கதைகளை சொல்ல முடிவதில்லை.//
      உண்மை ஆனா அது டெக்ஸ் ஸ்டைல் இல்லையே SVV . ஆக்ஷன், ஜனரஞ்சகம் என்ற இத்தகைய நேர்கோட்டு கதை FRAME தானே டெக்ஸ் களம் இங்கு பலரும் விருப்ப genre ஆகா கேட்ட ஒன்று தானே நேர்கோட்டு கதை FRAME? அதையும் தாண்டி டெக்ஸ் லார்கோ போன்ற சாகசத்தை கொண்ட கதை வந்தாலும் அது இயல்பாக இருக்குமா ?

      சில டெக்ஸ் கதைகள் negative விமர்சினத்திற்கு உகந்தவை தான், சில கோட்டைவிட்டது உண்மை. ஆனாலும் பொதுவாக டெக்ஸ் ஜெனரஞ்சமாக தான் காட்சிதருகிறார் போனமாத டெக்ஸ் கூட நன்றாக இருந்தது.

      இந்த இரண்டு வருடம் கதை தேர்வில்எடிட்டர் சிரத்தை எடுப்பதை மறுக்கமுடியதே, in-fact சில கதையே translation போது பிடிக்காமல் புத்தகத்தை மாற்றவும் செய்துஇருக்கிறார்(last year i guess) SVV சார்.

      டெக்ஸ் ஐ பொறுத்தவரை அது தான் நமது பெட்ரோல் என்று அனைவரும் அறிந்தவொன்று,
      எடிட். Rate for each டெக்ஸ் book போன்ற flat சர்வே விற்பனையைத்தாண்டி இத்தகைய நிலைப்பாடு பரவலானதா என்று எடுத்துரைக்கக்கூடும்.

      Delete
    3. Satishkumar S : "புக் வந்துடுச்சா ? " என்று போன் போட்டுக் கேட்பார்கள் சார் ; "வந்திடுச்சு" என்று சொன்ன பத்தாவது நிமிடம் ஆஜராகி, நேராக அந்த ரேக்குக்குப் போவார்கள் ! "அதை" மட்டும் எடுத்துக் கொண்டு பில் போட்டுவிட்டுக் கிளம்பி விடுவார்கள் !"

      மேற்கண்ட ஸ்டேட்மென்ட் பொள்ளாச்சியில் மையத்தில் உள்ள அழகான புத்தகக் கதையான BOOKS & BOOKS -ல் நானே கேட்டது !

      *"அதை" = டெக்ஸ் வில்லர் புக்குகள் !

      இது சின்னதொரு உதாரணமே ! நமது விற்பனை ரேங்கிங் பட்டியலின் TOP 3 இதோ - கடந்த 30 மாதங்களாய் :

      1 மறுபதிப்புகள்
      2.டெக்ஸ் வில்லர்
      3 .லக்கி லூக்

      Delete
    4. கொசுறுக் சேதி : விலை பாகுபாடின்றி ஒரே சீராய் விற்பனையாகும் only நாயகர் டெக்ஸ் தான் !

      மறுபதிப்புகளுக்குக் கூட "மாற்றமிலா ஒரே விலை" என்ற policy தொடர்கிறது ; ஆனால் TEX க்கு அட்டையின் விலைகள் ஒரு பொருட்டாவதில்லை !

      Delete
    5. ////பட்டியலின் TOP 3 இதோ - கடந்த 30 மாதங்களாய் :

      1 மறுபதிப்புகள்
      2.டெக்ஸ் வில்லர்
      3 .லக்கி லூக்
      ////
      மறுபதிப்புகளுக்குக் கூட "மாற்றமிலா ஒரே விலை" என்ற policy தொடர்கிறது ; ஆனால் TEX க்கு அட்டையின் விலைகள் ஒரு பொருட்டாவதில்லை !////


      தல... நீ கலக்கு தல!

      Delete
    6. விற்பனை தூள் எடிட் sir, SVV echoing இந்த மத டெக்ஸ் இன் பூடக ரிசல்ட். நம்ம SVV sir கார்சனின் கடந்தகாலம் போன்ற கதையை தேடுகிறார்னு நினைக்கிறன், இந்த மாணிக்கத்தை நீங்க அள்ளிக்கொண்டு வந்திருக்கும் டெக்ஸ் கூடையில் தேடி தாருங்களேன் ? கொண்டாட்டம் அதில் தானே இருக்கிறது.....

      Delete
  63. அடுத்தவருடம் சந்தா செலுத்தும் போது கவனித்து செலுத்த வேண்டும். வேண்டாத/பிடிக்காத கதைகள் இருந்தால் அந்த ட்ராக்கை தவிர்த்திடலாம். ஜெரமையா வேஸ்ட் சித்திரங்கள் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. Jegang Atq : இப்போதும் ஜெரெமியா ரெகுலர் சந்தாவில் இடம் பிடித்த இதழ் அல்லவே ? "விரும்பினால் வாங்கலாம்" என்ற வாய்ப்புடன் தானே SUPER 6 - ல் வந்துள்ளது ?

      Delete
    2. சந்தா செலுத்தல்பற்றி 'குறிப்பறிதல்' அதிகாரத்தில் வள்ளுவர் ஏதும் சொல்லியிருக்காரா நண்பர்களே?

      Delete
    3. @EV LOL. செம டைமிங். ஆமா DP வீட்டம்மா பூரிக் கட்டையோட முன்னாடி வந்த போது எடுத்ததா ?

      Delete
    4. //// வீட்டம்மா பூரிக் கட்டையோட முன்னாடி வந்த போது எடுத்ததா ?///

      முகத்தில் தெரியும் அந்த ஒளிப் பிரதிபலிப்பைக் கவனியுங்க M.P அவர்களே! லேப்டாப்பில் படம் பார்த்திக்கிட்டிருக்கும்போது எடுத்தது அது! அதுவொரு ஜேம்ஸ்பாண்ட் படம், ஹிஹி! ;)

      Delete
  64. ஆசிரியரே உங்கள் காமிக்ஸ் வகுப்பறையில் புத்திசாலி மாணவர்களுக்கு தேடல் நடத்தி வித்தியாசமான கதைகளை தருவதற்கு முன் உங்கள் வகுப்பின் கடைசி பெஞ்ச் மாணவனான என்னையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். ஜெரமையா பாடத்தில் தேர்வு வைத்தால் பிட் தான் கொண்டு போகனும் போல.உங்கள் விளக்கங்கள் யாவும் நமக்கு ஒன்றுமே தெரியாதோ என்ற பீதியை கிளப்புகின்றன

    ReplyDelete