Powered By Blogger

Sunday, February 19, 2012

"தலைவாங்கிக் குரங்கு" -- மீண்டும் !


நண்பர்களே,

"செய்வதைச் சொல்லுவோம்" என்ற புதிய பாணியை அமலாக்கும் விதத்தில் - இதோ ஒரு குட் நியூஸ் !

முந்தைய லயன் ; திகில் ; மினி-லயன் கதைகளை மறுபதிப்பு செய்வதற்கு உங்களின் அமோக ஆதரவு இருப்பது நிதர்சனமாய்த் தெரிந்திடுவதால் இனியும் ஏன் தாமதிக்கணுமெனத் தோன்றியது !

So - தமிழில் வந்திட்ட first ever டெக்ஸ் வில்லர் சாகசமான "தலைவாங்கிக் குரங்கு" காமிக்ஸ் க்ளாசிக்ஸில் மறுபதிப்பாக வரவிருக்கிறது ! அதுவும் வெகு விரைவிலேயே...இன்றிலிருந்து 3  வாரங்களுக்குள் இதழ் தயாராகி விடும் !


1985 அக்டோபரில் இந்த இதழைத் தயாரித்த போது இதன் வெற்றி பற்றி  எனக்கு சிறிதும் சந்தேகம் இருந்திடவில்லை ! ஒரு முழு நீளக் கௌபாய் கதை என்பது இன்றைக்கு நமக்கு no big deal என்ற போதிலும் அந்தப் பிராயத்தில் கௌபாய் கதைகளை ஊறுகாய் போலே ஓரமாய் மட்டுமே பரிமாறுவது வழக்கம் ! ஆனால் என்னைப் பொருத்தவரை டெக்ஸ் வில்லர் ஒரு தோற்க முடியா அசகாய சூரர் ! என் இள வயதுக் கற்பனைகளில் உலா வந்தது முகமூடி வேதாளனும் (Phantom ) ; டெக்ஸ் வில்லரும் மட்டுமே ! எனக்குப் பிடித்த டெக்ஸ் உங்களுக்கும் பிடிக்காமல் போக மாட்டாரென்ற ஒரு அசட்டுத் தைரியத்தில் தான் டெக்ஸ் வில்லரை அறிமுகம் செய்தேன் ..இன்று வரைக்கும் தோல்வி தெரியா நாயகராய் வலம் வந்து கொண்டிருக்கிறார் ! 



சூப்பர் ஹிட் கதைகளை மட்டுமே மறுபதிப்புச் செய்யவிருப்பதால் இந்தப் புத்தகங்களை என்றைக்கும் ரசிக்கும் தரத்தில் அமைத்திட வேண்டுமென்ற ஆசை எனக்குள் !  ஆகையால் முழுக்க முழுக்க அயல்நாட்டு ஆர்ட் பேப்பரில் ; கனமான அட்டையுடன் இதழ் Rs 25 விலையில் வந்திடும் ! 

சுமாரான பேப்பரில், வழக்கமான தரத்தில் இதே இதழை வெளியிட்டால் நிச்சயம் விலையினை குறைத்தே fix செய்திட முடியும் தான் ; but இனி வரும் இளைய தலைமுறைகளை சிறிதேனும் நம் பக்கம் இழுக்க நினைத்தால், அதற்குத் தரம் ஒரு அவசியத் தேவை என்று தோன்றுகிறது. ஆகையால் தரத்தில் compromise  வேண்டாமே என்று நினைத்தேன்....எனது எண்ணம் சரி தானா guys ?

அதுமட்டும் அல்லாது, தற்சமயம் நமது விற்பனை முறை முழுக்க முழுக்கவே நேரடியாக உங்களை சந்திக்கும் பாணி என்பதால், அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கை குறைவே ! So - விலையினை இதன் காரணமாயும் சற்றே அதிகமாகவே வைத்திட வேண்டியதொரு கட்டாயம்...!  

மார்ச் 10 -ல் இதழ் விற்பனைக்குக் கிடைக்கும். 

சந்தா Rs.620 செலுத்தியுள்ள நமது வாசகர்களுக்கும் ; நமது அயல்நாட்டு வாசகர்களுக்கும் இந்த இதழ் வழக்கம் போல் அனுப்பி வைக்கப்படும். நமது planning -ல் இல்லாத இதழ் இது என்ற போதிலும் இதற்கெனத் தனியாக மீண்டும் பணம் அனுப்பச் சொல்லி இப்போது தொந்தரவு செய்யப் போவது கிடையாது ; வருஷக் கடைசியில் நினைவூட்டி தேவையான பணத்தை அனுப்பிடச் சொல்லுவோம்.

சந்தாவில் இல்லாத நண்பர்கள் Rs.25 + postage Rs 5 - ஆக மொத்தம் Rs 30 அனுப்பிட வேண்டும். 

தலைவாங்கிக் குரங்கு மறுபதிப்பில் - reprint # 2 எந்தக் கதை என்ற அறிவிப்பும் இருந்திடும். Don't  miss out folks !

இன்னொரு வேண்டுகோள் கூட....நமது இதழ்கள் இப்போது அதிகமாய் கடைகளில் கிடைப்பது கிடையாதென்பதால், இந்த இன்டர்நெட் ; வலைப்பதிவுகளில் பரிச்சயம் இல்லாத வாசக நண்பர்களுக்கு நமது வெளியீடுகள் பற்றிச் சொல்லிட அதிகம் வழி இல்லை.  So - உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள காமிக்ஸ் ஆர்வலர்களிடம் முடிந்தளவுக்கு நீங்கள் சொல்லிடலாமே - ப்ளீஸ் ? !! 

117 comments:

  1. Vijayan sir,

    Sunday morning good news!

    I already have 2 copies of this book but still i like to have this new version! waiting!!!

    ReplyDelete
  2. super news vijayan sir, I am waiting for this book. very very thanks.

    ReplyDelete
  3. வண்ணத்தில்தானே?

    ReplyDelete
    Replies
    1. No..ஒரிஜினல் கதைகள் வண்ணத்தில் வெளி வந்திருக்கும் பட்சத்தில் அவற்றை நாம் மறுபதிப்பு செய்ய நேரிட்டால் நிச்சயம் கலரில் தான் வந்திடும் ! ஆனால் black &white -ல் உருவாக்கப்பட்ட கதைகளை (டெக்ஸ் வில்லர் போல) அதே பாணியிலேயே தான் நாமும் செய்திட முடியும் !

      Delete
  4. இந்த கதை வண்ணம்தீட்டி, மறுபதிப்பாக வந்துள்ளது. இதுவரை மொத்தம் 230+ கதைகள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.. "023 La valle della paura" இதுதான் இந்த கதை.... வண்ணத்தை ரொம்பவும் எதிர்பார்க்க கூடாது... கருப்பு வெள்ளையை, வண்ணம்தீட்டி வெளிவந்துள்ளது...

    ReplyDelete
    Replies
    1. யெஸ்.....கறுப்பு வெள்ளையில் வந்த ஒரிஜினல்களை பின்னாளில் வண்ணம் தீட்டி வெளியிட்டார்கள் ; ஆனால் அந்த பாணியில் உயிரோட்டம் குறைவாகவே இருந்திடும்.

      முன்பெல்லாம் தியேட்டர்களில் இடைவேளையின் போது கலரில் விளம்பர ஸ்லைடுகள் போடுவார்கள் ...!அவற்றிற்கு கலரிங் செய்திடும் பாணியில் தான் இது போன்ற கறுப்பு வெள்ளைச் சித்திரங்களை கலருக்கு மாற்றுவார்கள்...! இதில் ஒரு விதமான garish effect இருக்குமென்பது எனது அபிப்ராயம்.

      உருவாக்கப்பட்ட போதே வண்ணத்தை மனதில் கொண்டு வடிக்கப் படும் கதைகள் (Comeback ஸ்பெஷல்-ல் நாம் பார்த்த கேப்டன் பிரின்ஸ் ; லக்கி லூக் etc ) எப்போதுமே ரசிக்கும் விதத்தில் இருக்கும். So நாம் மீண்டும் கேப்டன் பிரின்ஸ் கதைகளையோ ; ப்ருனோ பிரேசில் கதைகளையோ மறுபதிப்பு செய்ய நேரிட்டால், நிச்சயம் வண்ணத்தில் தான் !

      Delete
    2. "So நாம் மீண்டும் கேப்டன் பிரின்ஸ் கதைகளையோ ; ப்ருனோ பிரேசில் கதைகளையோ மறுபதிப்பு செய்ய நேரிட்டால், நிச்சயம் வண்ணத்தில் தான் !"
      -Great decision sir! Please re-release any prince story soon!

      Delete
  5. Jony in
    irathak katteri marmam
    saithan veedu
    pisasuk kugai
    kathaikalai orea book la podunkalen!

    ReplyDelete
  6. உற்சாகம் தரும் செய்தி.

    'இரவுக் கழுகாரின்' இந்தப் புத்தகம் என்னிடம் இருக்கிறது. ஆனாலும் புதிய பதிப்புக்கான எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டுவிட்டது. மீள்பதிப்பிப்பதற்கு நன்றிகள்.

    இலங்கை வாசகர்கள் தொடர்பாக ஆசிரியருக்கு தனி மடல் ஒன்றை மூன்று தடவைகள் (?!) அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறேன், பதில் தருவார் என்ற நம்பிக்கையோடு.

    -Theeban (SL)

    ReplyDelete
  7. சூப்பர் நியூஸ் விஜயன் அவர்களே.... மினி லயன் கதைகளை மறந்து விடாதீர்கள். நான் மிகவும் எதிர்பார்ப்பது மினி லயன் கதைகளை தான்.

    ReplyDelete
  8. அப்பறம் Comment Moderation எடுத்து விடலாமே...

    ReplyDelete
    Replies
    1. Comment moderation எப்போதுமே enable செய்திடவில்லையே..

      Delete
    2. மன்னிக்கவும்......word verification for comments என்பதற்கு பதிலாக Comment moderation என கூறிவிட்டேன்

      Delete
    3. Hi Lucky Limat,
      "word verification for comments" option is a must, to prevent the phishing attack and spam in our forum. Do you remember what happened to our previous Lioncomics website's comment forum?

      Delete
  9. மன்னிக்கவும்......word verification for comments என்பதற்கு பதிலாக Comment moderation என கூறிவிட்டேன்

    ReplyDelete
  10. குட் நியூஸ் சார்.. புத்தகம் எந்த Sizeல் என கூற முடியுமா சார்..

    ReplyDelete
  11. dear vijayan sir
    Tex willer kadaikal regulara vandu kondu irukiradu. innum varadha pala kadaikal irukum podu tex kadaikal varuvadhu sariaka padavilai. prince jonny robort archie lucky luke chick bill pondra old comics reprint seidhal nanraga irukum. Nengal oru sila tex fans kaka tex kadaikalai adikadi varuvadhu nanraka illai enpadu enai pondra nedunall comics rasigarkaluku oru pudiragava irukiradu??????.

    ReplyDelete
    Replies
    1. thank to reprint தலைவாங்கி குரங்கு, how many pages are there in this book, i lost the book in my childhood days
      thanking u

      Delete
  12. Dear Anonymous: உங்கள் கருத்து முரணாகத் தோன்றவில்லையா ? (புதிய) பிரின்ஸ் ; ரிப்போர்ட்டர் ஜானி ; லக்கி லூக் ; சிக் பில் கதைகள் கூடத் தான் தற்சமயம் வந்து கொண்டுள்ளன..! அப்படி இருக்கையில் அவற்றை மறுபதிப்பு செய்திடும் அவசியமென்ன என்ற கேள்வி எழுப்பிடலாம் தானே ?

    கடந்த 27 + ஆண்டுகளில் எத்தனையோ ஹீரோக்களை நாம் சந்தித்துள்ளோம்..but இன்றைக்கும் நமது லயனின் flagship hero என்று சொல்வதானால் அது நிச்சயம் டெக்ஸ் வில்லர் தான். விற்பனையிலும் சரி..வாசகர்களின் அபிமானத்திலும் சரி.. இத்தனை காலமாய் consistent ஆக வெற்றி பெற்றிடும் ஒரு டாப் ஹீரோவின் கதையினை வெளியிடுவதற்கும் ஒரு காரணம் தேடித் தான் ஆகணுமா ?

    'டெக்ஸ் ரசிகர்களுக்காக இது';'லக்கி லூக் ரசிகர்களுக்காக இது' என்றெல்லாம் நான் எப்போதும் பிரித்துப் பார்த்தது இல்லை..! எல்லாமே நமது காமிக்ஸ் galaxy -ன் நட்சத்திரங்கள் தானே !!

    ReplyDelete
  13. thank to reprint தலைவாங்கி குரங்கு, how many pages are there in this book, i lost the book in my childhood days
    thanking u

    ReplyDelete
  14. பழைய புத்தகக்கடையில் எதிர்பாராமல் கையில் கிடைத்தது, பின்பு கைமாறி வேறு நண்பரிடம் சென்றுவிட்டது. என்னை பொறுத்தவரையில் வரவிருக்கும் இதுதான் மாஸ்டர் காப்பி! ரீப்ரின்ட்#2 - spider - ன் "சைத்தான் விஞ்ஞானி" தானே!

    ReplyDelete
  15. Good news. Hope you will revive many more out of print good stories like these.

    ReplyDelete
  16. Dear Editor,

    என்னுடைய ரீபிரின்ட் லிஸ்ட் (ரொம்ப நாள் முன்னாடியே) ரெடி. தலை வாங்கி குரங்கை நீங்கள் அறிவித்து விட்டதால், இதோ நான் விரும்பும் மற்ற புத்தகங்கள்:

    1.சதி வலை
    2.காணாமல் போன கடல்
    3.ஆப்பிரிக்க சதி
    4.மனித எரிமலை
    5.அதிரடி வீரர் ஹெர்குலஸ்
    6.டிராகன் நகரம்
    7.வாரிசு வேட்டை
    8.மந்திர ராணி
    9.எமனுக்கு எமன்
    10.கழுகு வேட்டை

    இந்த புத்தகங்களுக்கான செலக்ஷன் கமிட்டியின் ரிபோர்ட் இங்கே:தமிழ் காமிக்ஸ் உலகம் - ரீபிரின்ட் ரெக்வெஸ்ட்கள் 01: லயன் காமிக்ஸ்

    ReplyDelete
    Replies
    1. King Viswa : Offbeat-ஆன தேர்வுகள் என்று தான் சொல்ல வேண்டும்....!

      இன்டர்நெட் பரிச்சயம் இல்லாத நண்பர்களின் குரலினையும் கேட்டிட வேண்டியது அவசியமே!So வரவிருக்கும் நமது இதழ்களில் ஒரு மினி லிஸ்ட் கொடுத்து, அதிலிருந்து வாசகர்களைத் தேர்வு செய்திடச் சொல்ல நினைக்கிறன். அதற்காக ஒரு கூப்பனும் அடுத்த இதழ்களில் இருந்திடும்..

      உங்கள் பத்தில் - மினி-லிஸ்டில் இடம் பிடிப்பது 2 மட்டுமே .. !

      Delete
  17. Vijayan Sir,

    This forum is gearing up with your interesting announcements. I give a warm welcome to your decision of reprinting our lion, thigil comics. Even though I got the original print, i am eagerly waiting to see the reprint of Kolaikara Kurangu sorry Thalai Vangi Kurangu.

    Best Regards,
    Radja, France.

    ReplyDelete
  18. My reprint requests:

    1. Madalaya Marmam
    2. Kazhugu Malai Kottai
    3. Pathala nagaram (Mayavi)
    4. Panikadalil bayangara erimalai (Lawrence)
    5. vaanveli kollaiyar (lawrence)
    6. uraipani marmam
    7. beirutil johnny
    8. nayagaravil mayavi
    9. kadalil thoongiya bootham
    10. cid lawrence
    11. virus x
    12. malaikottai marmam
    13. All bernard prince stories

    Also all classics mayavi/lawrence/nero stories that came out in the comics classics can be reissued in larger size like kolaigara kalaignan.

    ReplyDelete
    Replies
    1. BN USA : Your choices are predominantly from Muthu Comics .... right now we are working on a reprint program for the Lion / Thihil / Junior Lion / Mini Lion titles !

      Delete
    2. Vijayan,

      That's good, but I hope that you will still continue to reissue these Muthu titles also. I hope you would not disappoint me on this.

      Unfortunately I am old and not much familiar with Lion and Thigil titles. Around 2004 I did buy all the back issues of Lion/thigil that you had in your godown storage and have been subscribing to all your new issues since 2002 and so I have some familiarity now with the Lion heroes.

      From your stock of back issues I got hold of all Blueberry issues including Minnum maranam. I also got a taste of good Tex stories like Carson's kadantha kalam etc. But you did not have stock of many captain prince stories, and so my request will be for those, and old good tex stories. You have already done a wonderful job of reissuing all XIII stories. Keep up the good work.

      Delete
  19. vanakam vijayan sir! Kadhula then vanthu paayura mathiri oru news solli irukeenga thank u very much sir! Ungalai polave naanum mugamoodi veerar maayavi(phantom) kathaikalal eerkappattavan. Neengal phantom story ya namathu muthu comics la podunga pls. -sakthi panruti.

    ReplyDelete
  20. Dear Mr. Vijayan,

    We are ready to pay even Rs.50-100 per book if they are printed in bigger size and good quality paper, if possible in the original Muthu Comics quality! Reducing the size of pictures (like the last Johnny Hazard story) to accommodate two stories in a book lowers the quality of the book and the beauty of the drawings is lost, thereby bringing down the comics-reading experience. Please bring out all the old Mayavi, L&D, Johnny Nero and Corrigan (Al Williamson illustrated only) in full size in good quality paper. We are ready to buy them at any price you are going to fix. I hope I am talking on behalf of everyone in this blog. Don't you agree guys?

    ReplyDelete
  21. வாவ் , திங்கள் காலையில் நமது பதிவை திறந்தவுடன் ஒரு கண் இனிக்கும் செய்தி.. That was really a great news Mr.Editor ;). இதே போல் டிராகன் நகரம் கதையினையும் consider செய்யவும். இரவுக்கழுகார் அதுவும் இவ்வளவு சீக்கிரம் வருவார் என்று நினைக்கும் பொழுது... Happy Happy Happy.

    ReplyDelete
  22. Dear Sir,

    Super News. We are waiting for the release.

    ReplyDelete
  23. Dear Vijayan Sir,

    //We are ready to buy them at any price you are going to fix. - By komixkreateFeb//

    I also agree with this.

    ReplyDelete
  24. wow..super..great news
    thousand thanks to editor vijayan sir
    already paid rs.500/-
    innum 500 anupanuma..na ready
    ayyo march 10 eppo varum...

    ReplyDelete
  25. இன்று தான் பதிவினை பார்க்கிறேன். நல்ல செய்தியுடன் இந்த வாரம் துவங்குகிறது. தலை வாங்கி குரங்கு கதையின் புதிய அட்டைப்படத்தினை காண ஆர்வமுடன் காத்துள்ளேன். அடுத்து மினி லயன் - திகில் கதைகளை எதிர்பார்க்கலாம் போல.

    //ப்ருனோ பிரேசில் கதைகளையோ மறுபதிப்பு செய்ய நேரிட்டால், நிச்சயம் வண்ணத்தில் தான்//

    இது ஒரு அட்டகாசமான செய்தி சார். அடுத்த காமிக்ஸ் கிளாஸிக் கண்டிப்பாக வண்ணத்தில் தான் வர வேண்டும்.

    ReplyDelete
  26. Ready to pay more. Please consider colour prints.

    ReplyDelete
    Replies
    1. Not a question of money....it is a completely different ball game when it comes to colour.

      Delete
  27. Dear VIJAYAN

    I called your office last week for Caption TIGER old copies but very sadly you have 2 - 3 stories only in your hand (2 parts only available in Rathapadalam series).

    Kindly I Request you to reprint All CAPTION TIGER stories OR make it as MUTHU's 40 NOT OUT SPECIAL (All Tiger stories in one book)

    Cost is no matter.

    I Hope you consider my application :)

    Regards
    NAGARAJAN S

    ReplyDelete
  28. Sir, unga athiradiyai thuvakki vitteergal. magilchi. Super star Tex Villerudan kandippaga intha payanam Ultra sonic Speedaga intha year pogapogirathu enru kattugirathu. Nanrigal Pala. Mikka Avaludan kathirukkirom. Koodave Mini Comicsgalai additionalaga sila pakkangalil inaitheergalanal superaga irukkum. vichu&kichuvirkku nan muthal adimai enbathai inge therivithu kolgiren. Vazthukkal!!

    ReplyDelete
  29. நிச்சயமாக இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் thalai! அப்புறம் ஒரு கேள்வி 007 கதைகளை நம்ம காமிக்ஸ்ல மீண்டும் கொண்டு வர முடியுமா? ப்ளீஸ் கொஞ்சம் கருணை காட்டுங்க. இல்லன்ன அது முடியாமல் irukka காரணம் சொல்லுங்க.

    ReplyDelete
    Replies
    1. john simon :ஜேம்ஸ் பாண்ட் 007 கதைகளில் பெரும்பான்மையை ராணி காமிக்ஸில் போட்டு விட்டார்கள் ; அவற்றைத் திரும்பவும் நாம் வெளியிடுவது நன்றாக இருக்காது.

      007 புதிய கதைகள் உள்ளன...சந்தர்ப்பம் அமைந்தால் அவற்றை முயற்சித்துப் பார்ப்போம்..

      Delete
  30. old rani comics urimangalai naam pera mudiyatha sir? arumaiyana kathai varisaigal irunthana. thina thanthi nirvagigalal mudiyamal niruthi vaithu vittanar. oo7, Tiger,phantom ivai thavira Sila cowboy comicsgal miga azhamana kathaigal allava? athuvum Madam spectra kumbalil 007 nigazthum athiradigal kalam thandi needippavai.

    ReplyDelete
  31. Dear VIJAYAN

    I called your office last week for Caption TIGER old copies but very sadly you have 2 - 3 stories only in your hand (2 parts only available in Rathapadalam series).

    Kindly I Request you to reprint All CAPTION TIGER stories OR make it as MUTHU's 40 NOT OUT SPECIAL (All Tiger stories in one book)

    Cost is no matter.

    I Hope you consider my application :)

    Regards
    NAGARAJAN S

    ReplyDelete
  32. அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும் டைகரின் "இரும்புக் கை எத்தன்" எப்போது தொடரும். எல்லா பகுதிகளையும் (ஏற்கனவே வெளிவந்தவை + வெளிவராதவை) தொகுத்து உயர் தர காகிதத்தில் ஒரே இதழாக வெளியிட்டீர்களேயானால் இன்னும் சிறப்பு. (கொஞ்சம் ஓவராகத்தான் ஆசப்படுறோமோ)

    ReplyDelete
    Replies
    1. SIV : ஆசையில்லையேல் கனவுகள் வந்திடாது...! கனவுகளின்றி சுவாரஸ்யமிராது ! So உங்களின் நியாயமான ஆசையில் தப்பில்லை தான் !!

      என் பதில் : பொறுமை please....நிச்சயம் disappoint ஆக மாட்டீர்கள்!!

      Delete
    2. Sure Mr. VIJAYAN but not too long :)

      NAGARAJAN S

      Delete
  33. என்ன கொடுமை சார் இது? (எனிவே, மீ தி 50வது கமென்ட்).

    அந்த மினி லிஸ்ட்'ஐ விரைவில் வெளியிடுங்களேன்?

    ReplyDelete
  34. Vijayan Sir,

    Wow, it's a great news.. Though we (fans) read most of the stories already, we lost those books. Getting those books again is really nice and getting them in a better print on quality papers is a jackpot.
    Thanks a lot. Eagerly waiting for March 10.
    We love Tex Willer. Whether it's in Black & White or Color Tex is always great.
    Bernard prince stories had a special pep and humanity.
    The books like கொலைகார கானகம் and another book where Prince and friends reach a wrecked ship and bring it back (even a doctor acts as a sailor in it)...
    Please do consider to repint Bernard prince stories those books.

    டிராகன் நகரம் is a wonderful story, I strongly believe it would in your reprint list :).

    Thanks again for bringing back nostalgic memories.

    Regards,
    Mahesh kumar

    ReplyDelete
  35. அட்டகாசம் சார். வாழ்த்துகள். புத்தகமும் லிஸ்டும் எப்ப வரும்னு இருக்கு. அப்புறம் இங்க நம்ம மக்கள் சொல்லி இருக்க ஐடியால பெஸ்ட் - டைகர் கலெக்‌ஷன். முயற்சி பண்ணிப் பாக்கலாமே?

    ReplyDelete
  36. He he.. Think I am the first to send subscription for தலைவாங்கிக் குரங்கு officially today, and imagined a minute as I am riding the horse instead of that monkey having the knife in my hand hoping to read that book on march 10 ;)...

    ReplyDelete
  37. சார்,

    நண்பர் ஜான் சைமனின் கருத்தும் என் விருப்பமும் ஒன்றே. ராணி காமிக்ஸ் உரிமைகளை நாம் வாங்கிடலாமே...இதனை காமிக்ஸ் காதலர்கள் பலரும் ஆமொதிப்பர் என்றே எண்ணுகின்றேன்.

    ஒர் வாசகனாக என் அவாவினை ஈசியாக பதிவு செய்து விட்டேன். இது நடைமுறைக்கு சாத்தியபடுமா... விளக்குங்களே Please

    ReplyDelete
    Replies
    1. nanri lax ji. 007 comics are if available in our lion its the time to reveal atleast in advertisements. 007 film vara romba late aguthuppa.

      Delete
  38. VIJAYAN SIR
    JHON MASTER, HERCULES, IRATHAI VATTIAR PONDRA MODU VIZHAA PETRA COMICS KALAI REPRINT SEITHAL NANRA IRUKKUM.

    ReplyDelete
  39. திரு விஜயன் சார் அவர்களே,

    நண்பர் ஜானின் கருத்துகளை நானும் வரவேற்கிறேன்... ராணி காமிக்ஸ் நிறுவனத்தார் மறுபதிப்பு செய்யும் எண்ணம் இல்லாத பட்சத்தில் தாங்கள் வெளியிடலாம்...

    ReplyDelete
    Replies
    1. thanks nanbar kid ordinn avargale! namma sir vasam irukkum anaithu books-m regulara vara thuvangiyathum avaraukku reminder thatti konde iruppen ena uruyhi koorugirom! Sir will done this year. we expect more and more like this special issue thalai vangi kurangu!!

      Delete
  40. Dear Vijayan Sir,

    I would like a CAPTAIN TIGER in Colour and as a single books like XIII or EVEN XIII in colour. As black white really spoils these beutiful arts.

    This is something everybody would like to see. I belive people gone to a extension of buying the original french or other language versions just to see the colour graphics.

    Hope our editor sees the great eagerness comic fans have to see these books in Colour.

    Suresh

    ReplyDelete
  41. நண்பர் ஷிவ் சொன்னது போலவே இரும்புக்கை எத்தன் புத்தகத்தை (ஐந்து கதைகளையும் ) ஒரே இதழாக நல்ல தரமான பேப்பரில் டைகர் ஸ்பெஷல் என்று வெளியிடலாமே சார்.

    ReplyDelete
  42. இங்கே பல நண்பர்கள் 007 கதைகளை ராணி காமிக்ஸிடமிருந்து வாங்கி வெளியிடலாமே என்று கேட்கிறார்கள்.

    நாலாவது பலி என்கிற ராணிகாமிக்ஸ் இதழிலிருந்து அவற்றைப் படித்தவன் என்கின்ற வகையில், ஆரம்பத்தில் வந்த 007 கதைகள் சிறப்பானவை, விறுவிறுப்பானவை. பின்னர் அவற்றின் பிரிண்டிங் தரமும் மொழிபெயர்ப்பும் சொதப்ப, பின்னர் வாசிப்பதை விட்டுவிட்டேன்.

    ராணி காமிக்ஸில் வெளிவந்த 007கதை ஒன்று நமது இதழிலும் (முத்து) வெளிவந்தது. (கேஸினோ ராயல்).

    ஆனால், லயன், முத்து - இவற்றின் வாசக ரசனை ஓட்டத்தோடு 007இன் கதைகள் ஒத்துப்போகுமா என்பது சந்தேகமே! எடிட்டர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

    -Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. ஆம், ராணி காமிக்ஸ் கொடுக்கும் அனுபவம் வேறு. அதே கதையினை லயனில் படிக்கும் போது கிடைத்திடும் அனுபவம் வேறு.
      என்னுடைய தனிப்பட்ட கருத்துப்படி எண்ணற்ற லயன்/முத்து இதழ்கள் மறுபதிப்பிற்காக உள்ள போது ராணி காமிக்ஸின் மறுபதிப்பு என்பது வினோதமாக தெரிகிறது.

      Delete
  43. SIV is cprrect in my view. So man good titles are there in lion and muthu comics. I like reprints of these.

    ReplyDelete
  44. அட்டகாசமான செய்தி. மிகவும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்.

    ReplyDelete
  45. anbulla editor sir! Pls publish phantom stories from rani comics! Mugamoodi veerar maayavi! What a hero he is without any super power! Consider my request pls! I am waiting good news from u sir! Phantom! Pls wake up!

    ReplyDelete
  46. i like also phantom stories frm our muthu'-lion comics!

    ReplyDelete
  47. Anonymous....சூப்பர் பவர் இல்லாத ஆசாமி Phantom மட்டுமல்ல...அடியேனும் கூட !!

    ஒரு கும்பகர்ணத் தூக்கத்துக்குப் பின்னே இப்போது தான் எழுந்து நடமாடத் தொடங்கியுள்ளோம்...
    'தடா புடா' வென எக்கச்சக்கமாய் இழுத்துப் போட்டுக் கொண்டு பின்னர் அசடு வழிவதற்குப் பதிலாக..ஓசையின்றிக் காரியம் சாதித்து விட்டுச் சொல்லுவோமே ? !

    உங்களின் ஆர்வமும், பொறுமையும் நிச்சயம் வீண் போகாது !!

    Phantom-ன் புதிய படைப்புகள் மிக சுமார் ரகம் என்பது எனது அபிப்ராயம் ; அப்படியே அவர் சாகசங்களை வெளியிடுவதாயின் ஆரம்ப காலத்துக் கதைகளே best! இன்னமும் 1970 -களில் வந்திட்ட இந்த்ரஜால் காமிக்ஸ் கதைகளை அடிச்சுக்க முடியாது !!

    ReplyDelete
    Replies
    1. இந்திரஜால் கதைகள் அற்புதம்தான்! ஆனாலும், முத்து வில் வந்த வேதாளர்கதைகளும் ஒன்றும் குறைந்தவையில்லை என்பது என் அபிப்பிராயம்.

      முத்து காமிக்ஸ்இல் வந்த பல வேதாளர் கதைகளை சேகரித்து வைத்திருந்த ஒரு அண்ணனிடம் இருந்து (அப்போ எனக்கு வயது 14-15 இருக்கும்) 1992- 93 ஆண்டுவாக்கில் ஒரு புத்தகம் எங்கள் நாட்டு மதிப்பில் 150 ரூபா கொடுத்து (அவற்றில் பலவற்றுக்கு முன் பின் அட்டைகள் கிடையாது) வாங்கியிருக்கிறேன்.

      அந்த நாள் முத்து காமிக்ஸ்களின் 'ஸைஸ்' சூப்பராக (ஏ5 ?) இருக்கும். பின் பக்கத்தில் வரும் 'மணியன்', இன்ஸ்பெக்டர் கருடா (கபீஷ்ம் வந்ததாக கொஞ்சம் நினைவு).... ஆஹா.. நினைக்கும்போதே சிலிர்க்கிறது.

      அழிந்துபோன டைனோஸர் இனமான ஸ்டெகோசரஸின் எஞ்சிய ஸ்டெகியை வேதாளர் ஈடனுக்குக் கொண்டுவரும் கதை... அப்பப்பா... இன்னுமொரு கதையில் தன்னுடைய காதலை டயானாவிடம் வேதாளர் வெளிப்படுத்தும் டொல்பின் சவாரியின்போது, ஒரிஜினல் படத்தை முத்துவின் ஸைசுக்கு லே-அவுட் செய்யும்போது ஆர்ட்டிஸ்ட் வேதாளரின் முகத்தை கொஞ்சூண்டு வரைந்துவிட்டிருப்பார். அதை வைத்துக்கொண்டு அவரது முகத்தைப் பார்த்துவிடுகிறேன் பார் என்று அப்படியும் இப்படியும் புரட்டிப் புரட்டிப் பார்த்த ஞாபகங்கள்....

      அடுத்த தலைமுறைக்கு இப்படியெல்லாம் ரசிக்க புத்தகங்கள் கிடைக்குமா? நேரந்தான் இருக்குமா? ம்...ஹ்..ம்...
      -Theeban (SL)

      Delete
  48. thank u very much for that nice reply about phantom comment sir! U r only the golden man to publish those golden phantom stories! Take time and select best 1970s phantom stories and puplish in our comics sir! We will wait for those stories. Once again thank u for that responsiple reply!

    ReplyDelete
  49. கழுகு மலைக்கோட்டை-ஒரு சிறப்பிதழாக வந்ததாக ஞாபகம்,அதிக பக்கங்களுடன். மிகவும் ரசித்து படித்த புத்தகம். மீண்டும் வெளியிடுவீர்களா?

    ReplyDelete
  50. சதி வலை
    காணாமல் போன கடல்
    ஆப்பிரிக்க சதி
    மனித எரிமலை
    அதிரடி வீரர் ஹெர்குலஸ்
    சுஸ்கீ & விஸ்கி
    அலிபாபா
    அங்கிள் scrooge

    போன்ற கதைகளை reprint podavum

    ReplyDelete
  51. ஆஹா… புக் படிக்கணும்னு இப்பவே ஆசையா இருக்கே… மார்ச் 10 வரை காத்திருக்கணும்…

    ReplyDelete
  52. Wow!! Great to hear!! I was complaining about Kolaikara kalainjan reprint.
    Editir sir responded with my evergreen TexWiller story. Thanks.

    ReplyDelete
  53. Vijayan sir,

    Like so many fans even I want to read a complete mega colour Captain tiger. Please come up with this.It would be a remarkable and unforgettable comics in our comics journey.

    ReplyDelete
  54. ஒன்றா............ ரெண்டா ..................ஆசைகள் ...........
    எல்லாம் சொல்லவே...................
    ஒரு நாள் போதுமா ..........(காக்க......காக்க........)
    மெதுவாய் போகலாம்.....sir

    ReplyDelete
  55. Hello MR.VIJAYAN

    We all are expecting "Muthu 40 - Not Out" special should be TIGER's special :)

    Regards
    Nagarajan S

    ReplyDelete
  56. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு.விஜயன் அவர்களுக்கு அன்பு வணக்கம்!

    சிறுவர் இலக்கிய உலகம் அடைந்துள்ள வீழ்ச்சி கண்டு உள்ளம் நொந்திருப்பவன் எனும் முறையில் 'லயன் காமிக்'சின் இந்த மறுபதிப்புகள் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை அளிக்கின்றன. நானும் எட்டு வயது வரை இத்தகைய சித்திரக்கதைகளைப் பேரார்வத்துடன் படித்து வந்தவன்தான். ஆனால் வாண்டுமாமா கதைகளைப் படிக்கத் தொடங்கிய பிறகு இவை எனக்குச் சுவைக்கவில்லை! ஒன்பது, பத்து வயதுக்கு மேலான எனது இளம் பிராயப் பொழுதுகள் பூந்தளிர், பார்வதி சித்திரக்கதைகள், கோகுலம் ஆகியவற்றாலேயே வண்ணமூட்டப்பட்டு வந்தன. எனவே எனக்கு அத்தகைய சித்திரக்கதைகள்தாம் பிடிக்கும். அவற்றை மறுபதிப்புச் செய்யும் எண்ணம் ஏதும் இல்லையா நண்பரே?!

    நீங்கள் நினைத்தால், திரு.வாண்டுமாமாவிடமே இசைவு பெற்று அவருடைய சித்திரக்கதைகள் அனைத்தையும் உங்கள் 'லயன் காமிக்ஸ்' நிறுவனத்தின் பெயராலேயே மீண்டும் மறுபதிப்புச் செய்யலாமே? யார் வாங்குவார்கள் என நினைக்கிறீர்களா? கண்டிப்பாக வாங்குவார்கள்!

    எப்படிச் சொல்கிறேன் என்றால், கடந்த ஆண்டு, வாண்டுமாமா அவர்களின் பல நூல்கள் இன்றும் வானதி பதிப்பகத்தில் இருப்பதாக நண்பர் கிங் விஸ்வா பதிவிட்டார் இல்லையா? அதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களுக்குள்ளாகவே நண்பர் அ.கொ.தீ.க வெளியிட்ட பதிவில், கிங் விஸ்வாவின் பதிவைக் கண்டவுடன் அவற்றில் பல நூல்கள் உடனே விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் மிச்சம் கொஞ்சம்தான் இருப்பதாகவும், ஆர்வம் உள்ளவர்கள் முந்திக் கொள்ளுமாறும் கூறி மிச்சமிருந்த நூல்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார். அப்படியானால் இன்றும் அத்தகைய நூல்களுக்கு எவ்வளவு வரவேற்பிருக்கிறது என்பதைத் தாங்கள் புரிந்து கொள்ளலாம்.

    அது மட்டுமில்லை, கிங் விஸ்வாவின் பதிவையும், அ.கொ.தீ.க அவர்களின் பதிவையும் வெகு தாமதமாகப் பார்த்த நான் உடனே வானதி பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டேன். அ.கொ.தீ.க பட்டியலிட்டிருந்த நூல்கள் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் என்னால் அவற்றை உடனே வாங்க முடியவில்லை. கடந்த வாரம்தான் தம்பியை அனுப்பினேன். ஆனால் எல்லாப் பொத்தகங்களும் அண்மையில் நடந்த பொத்தகக் கண்காட்சியில் விற்றுத் தீர்ந்து விட்டதாகக் கூறினார்கள். மூன்றுதான் கிடைத்தன! வாண்டுமாமா அவர்களுக்கு இன்றும் விசிறிகள் இருக்கிறார்கள் என்பதற்கு இஃது ஆணித்தரமான சான்று!

    இத்தனைக்கும், திரு.வாண்டுமாமா அவர்களின் மிகப் பழைய கதைகள்தாம் இன்று வானதியில் கிடைப்பவை. ஆனால் பார்வதி சித்திரக் கதைகள் மூலமாக அவர் வெளியிட்ட கதைகளும், பூந்தளிரில் எழுதிய தொடர்களும் அங்கு வெளியிடப்படவேயில்லை என நினைக்கிறேன். அவை தொண்ணூறுகளில் எழுதியவை. அவை வெளியிடப் பெற்றால் எப்பேர்ப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என நினைத்துப் பாருங்கள்!

    எனவே அன்னாரின் நூல்களையும் மறுபதிப்புக் கொண்டு வர தங்களைப் போன்ற ஆர்வலர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பது என் பணிவன்பான கோரிக்கை! செய்வீர்களா? ஏக்கத்துடன்...

    --இ.பு.ஞானப்பிரகாசன்

    ReplyDelete
  57. அன்பு நண்பரே!

    நமது பேரன்பிற்கும், தனிப்பெருமதிப்பிற்கும், ரசனைக்கும் உரிய திரு.வாண்டுமாமா அவர்களுக்கு ஃபேஸ்புக்கில் இதுவரை Fan page இல்லாமல் இருந்தது. எனவே அவருக்காக நான் புதிதாக ஒரு Fan page தொடங்கியுள்ளேன். நீங்கள் அங்கு வந்து உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும் (அதாவது அந்த page-க்கு Like கொடுக்க வேண்டும்) எனவும் உங்கள் வலைப்பூ, ஃபேஸ்புக் அக்கௌண்ட் முதலியவற்றின் மூலம் உங்கள் நண்பர்கள் விசிறிகள் என அனைவருக்கும் இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அன்புடன் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி! வணக்கம்!

    ReplyDelete
  58. வாண்டுமாமா பக்கத்துக்கு Like கொடுக்க Vaandumama என ஃபேஸ்புக்கில் தேடுங்கள்! அல்லது சொடுக்குக: http://www.facebook.com/#!/pages/Vaandumama-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/256135227797792

    ReplyDelete
  59. Vijayan Sir,

    We feel that the reprinted comics can be released in any time frame..it need not fit into a monthly/quarterly cycle. We can pay for it anytime..

    Since the story/rights etc is in place already, it should not be a problem I think..of course, I am not aware of other requirements for a re-print..you decide on it.we are ready to buy any number of reprinted comics in a month..

    Please look at the feasibility of this idea..

    You are doing a wonderful job in the tamil comics world..Hats off..

    -Srini V

    ReplyDelete
    Replies
    1. I also agrees with Srini. Reprinted books can be released as and when it is ready. We are ready to buy. Please....

      Delete
  60. Dear Friends,

    I want to subscribe for the Lion comics. Where should I send the mail? I have sent mail to lioncomics@yahoo.com. I did not get any reply. Please help me.

    Thanks,
    Krishna

    ReplyDelete
    Replies
    1. Mr.Krishna

      contact lion comics office
      Prakash Publishers Ph: 0456-2272649

      Delete
  61. HI Karthik,

    Thanks a lot!!

    I have spoken with them. I will send money for the latest books now then will pay Rs.620 for the one year sandha.

    Also i need to talk to them for getting all the old books.

    Thanks,
    Krishna

    ReplyDelete
    Replies
    1. Krishna : http://lion-muthucomics.blogspot.in/2012/02/blog-post_23.html

      Delete
  62. Thalaivangi Again!!!
    Editor Sir, consider reprinting Tex Willer's story which was published in Thigil (Oops.. Not able to remember the title) And, how about reprinting Super Circus?

    While re-printing Thalaivangi, do publish the page which contains the ad (err.. Info?!)with our young editor sir's photo! It will help us to rekindle those golden days. :-)

    ReplyDelete
    Replies
    1. //Prasanna. SFeb 23, 2012 04:22 AM

      Thalaivangi Again!!!
      Editor Sir, consider reprinting Tex Willer's story which was published in Thigil (Oops.. Not able to remember the title)//

      நண்பரே,
      திகில் காமிக்ஸில் வந்த அந்த டெக்ஸ் வில்லர் கதை "சைத்தான் சாம்ராஜ்யம்".

      இங்கே க்ளிக் செய்து அதன் அட்டைப்படத்தை பார்க்கவும்: சைத்தான் சாம்ராஜ்யம் முன் அட்டை

      சைத்தான் சாம்ராஜ்யம் பின் அட்டை

      Delete
    2. Viswa ji: Thank you. Would like to see this book as a reprint! Hope editor Sir is listening (err.. watching?!) :-)

      Delete
  63. அருமையான தகவல். மினி மற்றும் ஜீனியர் லயன் கதைகள் மீண்டு வரும் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  64. கைவசம் உள்ள பிரதிகள் எவை என்ற பட்டியல் இந்த தளத்தில் வெளியிட்டால் பெற ஏதுவாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Muthu Priyan : http://lion-muthucomics.blogspot.in/2012/02/blog-post_23.html

      Delete
  65. வரவேற்கிறேன்! இன்னும் பழைய கதைகளாக இருந்தாலும் சரிதான்! ரிபோர்ட்டர் ஜானியின் தலைமுறை எதிரி , காப்டன் பிரின்சின் பணிமலைத் தீவு (i may be correct), பிசாசுக் குரங்கு, போன்ற எவர்க்ரீன் ஸ்டோரீஸ்- ஐ உங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளவும்!

    ReplyDelete
  66. and 'buz sawer' stories also eligible for reprint!

    ReplyDelete
  67. Mr.Vijayan sir. Namathu captan tigar'n IRUMBUKKAI and EATHAN PAROLOGA PAATHAI'n iruthi paagangal eppothu varum sir?

    ReplyDelete
  68. Inimel varum namathu comics anaithum nalla tharamana pepparilum colourilum vanthal booksai pala varutathirku semithu vaithalum ontrum aagathu.

    ReplyDelete
  69. சச்சினால் முடியாதது நான் சாதித்து விட்டேன்... மீ தி 100

    ReplyDelete
  70. Hello Vijayan Sir,

    I am so happy to have lion com back special at my hand, I have the same Joy as when I have my baby at my hand first time. I started reading comics at the age of 7,Nan Tamil padika katru kondathe Lion, Muthu moolamagathan ;). Its been 24 years gone since I started reading out our Lion and Muthu. En pillow vin adiyil palivangum Bommai(Spider) vaithu paduthathu innum pasumaiyai nianaivil irugu.Sir Its my humble request, why don't you try to reprint all the Thigil and mini lion. Especially Bottle bootham(Spider), Vinveli Pisasu etc etc....You have done a remarkable job to reprint the Kolaikara kalingan but I believe this is 3rd time you reprinting it(I have all three, including the new one). No issues I am happy to buy even if you reprint once gain :).. Sir Please try to Reprint thigil comics as much as you can. I Love Lion, Muthu, thigil, Mini as much I love my daughter especially Vijayan sir. We have long ride to go....I have faith in god, surely he will help you to bring out some great achievements in future. Thanks a lot to continue your work as it is. Thanks thanks...

    With Love,

    Giri

    ReplyDelete
    Replies
    1. Heartfelt thanks for the very kind words ! God willing we still have miles & miles to go on together in this privileged journey !

      Delete
    2. We are always there for you to support to continue your hard work :).

      Delete
  71. வணக்கம் ,நான் நமது காமிக்ஸின் 16 வருட ரசிகன் .டெக்ஸ் வில்லரின் தலை வாங்கி குரங்கை எதிர்பார்க்கிறேன்.நமது இன்றைய இதழ் இந்திய காமிக்ஸ்களில் இல்லாத ஒன்று,முதன்முறையும் கூட .இதே பாணியையே தொடரவும் .நன்றிகள் பல .

    ReplyDelete
  72. Hi everybody,

    Been traveling since the last weekend ; haven't been able to login much ! Will make it up this Sunday ; have some very interesting news !

    ReplyDelete
  73. Anybody have full list of Thighil ; Junior Lion / Mini-Lion published so far ?
    Muthu, Madurai

    ReplyDelete
  74. 1. துப்பாக்கி முனையில்
    2. மரண சர்க்கஸ்
    3. கருப்பு பாதிரி மர்மம்
    4. கானக மோசடி
    5. சொர்க்கத்தின் சாவி
    6. ஆர்டிக் நரகம்
    7. கோப்ரா தீவில் ஸ்பைடர்
    8. ஸ்பைடர் படை
    9. விற்பனைக்கு ஒரு ஷெரீப்
    10. ஒரு கள்ளப்பருந்தின் கதை
    11. விசித்திர ஜோடி
    12. வெள்ளைப் பிசாசு
    13. ஒரு நாணயப் போராட்டம்
    14. சம்மர் ஸ்பெஷல்
    15. பயங்கரப் பயணம்
    16. மாயத்தீவில் அலிபாபா
    17. நீலப்பேய் மர்மம்
    18. புரட்சித் தீ
    19. ராஜா ராணி ஜாக்கி
    20. விண்வெளியில் ஒரு எலி
    21. பிசாசுப் பண்ணை
    22. ஹாலிடே ஸ்பெஷல்
    23. நடுக்கடலில் எலிகள்
    24. இரத்த வெளி
    25. பயங்கரப் பொடியன்
    26. தேவை ஒரு மொட்டை
    27. சிவப்பு மலை மர்மம்
    28. பயங்கரப் பாலம்
    29. காமெடி கர்னல்
    30. கொலைகார காதலி
    31. எழுந்து வந்த எலும்புக்கூடு
    32. விற்பனைக்கு ஒரு பேய்
    33. இரும்பு கௌபாய்
    34. கொள்ளைக்கார கார்
    35. அதிரடிப் பொடியன் 2
    36. வின்டர் ஸ்பெஷல்
    37. காசில்லா கோடீஸ்வரன்
    38. மாயாஜால மோசடி
    39. ஒரு காவலனின் கதை
    40. விசித்திர ஹீரோ

    ஜூனியர் லயன் காமிக்ஸ்

    1. சூப்பர் சர்க்கஸ்
    2. உலகம் சுற்றும் அலிபாபா
    3. அதிரடி மன்னன்
    4. புதிர் குகை

    ReplyDelete
    Replies
    1. thanks Mr. Anonymous. First time seeing the list of Mini-Lion

      Delete
    2. Siva, Mudhalai Pattlathaar had already released this list a couple of years back. I believe Mr. Anonymous would have sourced it from there. http://mudhalaipattalam.blogspot.com/2009/01/blog-post_27.html

      Delete
  75. Dear Mr. VIJAYAN

    Any update about this book? As you said release date should be March 10th which is already passed.

    Please update the status ...

    Regards
    NAGARAJAN S

    ReplyDelete
  76. முத்து விசிறி ,பதிப்பில் பார்த்தால் ஆம் .கலரிலும் சிறப்பாகவே உள்ளது .எனவே கலரில் வந்தால் மிக சிறப்பாக இருக்கும் .இல்லையா?

    விஜயன் சார் தயவு செய்து டெக்ஸ் கதைகளை கலரில் ஒன்று பிரிண்ட் செய்யுங்கள் .சரி இல்லையெனில் விட்டு விடலாம்.

    இவை அனைத்தும் நமது பொக்கிசங்கள். ஆங்கிலத்தில் கிடைக்கும்.ஆனால் உங்களது மொழி பெயர்ப்பை அடிக்க முடியாது.ஆகவே தயவு ,கருணை காட்டி இனிவரும் டெக்ஸ் கதைகளை கலரில் விடவும்.அணைத்து வாசகர்களும் இதனை ஏற்று கொண்டு உங்கள் கருத்துகளை வெளி விடவும் .


    கோயம்புதூரிளிருந்து ஸ்டீல் க்ளா

    ReplyDelete
  77. Wow nice content and we have more update video editing software. AVS is the most working editor software. AVS 7.1.4.264 is latest and newly updated video editor software. onlintech24 prove some category software such as animation software, free video editing software, free photo editing software, server software, antivirus, update browser and so on all category software 100% free. If you need update video editing software please click here

    ReplyDelete
  78. நம்ம ஸ்டீல் க்ளா வந்த முதல் பதிவு

    ReplyDelete